WFTW Body: 

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துவதற்காக நான்கு காரியங்களைச் செய்யும்படி தேவன் தன்னை அனுப்பியதாக யோவான் ஸ்நானகன் கூறினார் (லூக்கா 3:5):

(1) பள்ளங்களெல்லாம் நிரப்பப்பட வேண்டும்;

(2) மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்பட வேண்டும்;

(3) கோணலான பாதைகள் செவ்வையாக்கப்பட வேண்டும்;

(4) கரடானவை சமமாக்கப்பட வேண்டும்.

நம் வாழ்விலும் பரிசுத்த ஆவியானவர் இதையே செய்ய விரும்புகிறார்:

(1) கீழ்நிலையிலுள்ள பகுதிகளை அவர் மேலே உயர்த்த வேண்டும் - பாலுறவு, பணம், மனிதர் கனத்தையும், மரியாதையும் தேடுதல் ஆகிய இதுபோன்ற உலக காரியங்களால் நாம் ஆளுகை செய்யப்படுவதிலிருந்து உயர்த்த வேண்டும்.

(2) நம் பெருமை, அகந்தை, (நம் திறமையைக் குறித்த) ஆணவம் ஆகிய மலைகளிலிருந்து நம்மைக் கீழே இறக்க வேண்டும், மேலும் நம்மைக் குறித்த உயர்வான எண்ணங்கள் (உதாரணமாக நாம் ஏதோ ஒரு வேலையை சிறப்பாக செய்யும்போது உருவாகும் எண்ணங்கள்) என்னும் சிறிய குன்றுகளிலிருந்து கூட நம்மைக் கீழே இறக்க வேண்டும்.

(3) நமக்குள் இருக்கும் சகல கோணலான காரியத்தையும் கபட்டையும் அவர் நீக்க வேண்டும்.

(4) நம்முடைய கடினத்தன்மையையும், கடுமையையும், கரடுமுரடானவற்றையும் மிருதுவாக்க வேண்டும்.

அப்படியானால், எல்லாரும் தேவன் நம் வாழ்வில் செய்த இரட்சிப்பைக் காண்பார்கள் என்பதே வாக்குத்தத்தம் ஆகும் (லூக்கா 3:6); மேலும் நம் மாம்சத்தின் எல்லாப் பகுதியும் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்தும் (ஏசாயா 40:3-5-ஐ ஒத்துப்பார்க்கவும்). தேவன் தம்முடைய மகிமையானது, புல்வெளியில் பற்றிய தீயைப் போல நம்முடைய மாம்சத்தை கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியாக ஒவ்வொரு சின்ன பகுதியையும் அழித்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்.

கர்த்தருடைய வேலையை (இயேசுவை நம் மாம்சத்தில் எல்லா பகுதிகளிலும் ஆண்டவராக மாற்றும் வேலையை) அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் (தன் மாம்சத்தில் இச்சைகளோடு இரக்கமின்றி செயல்படுவதற்கு பதில் அதை மென்மையாய்க் கையாள்பவன்) சபிக்கப்பட்டவன் என எரேமியா 48:10 கூறுகிறது. மோவாப் ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாதிருப்பதால், அதின் வாசனை வேறுபடவில்லை என அடுத்த வசனம் கூறுகிறது.

ஜான் ஃபோலட் (John Follette) என்பவர், 'ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படுதல்' என்ற தனது கட்டுரையில், நமது வண்டல்கள் முழுவதுமாக அகற்றப்படும் படி தேவன் நம்மை மாற்றும் பல்வேறு பாத்திரங்களைக் குறித்துக் கூறுகிறார் - தவறாய் புரிந்து கொள்ளப்படும் பாத்திரம், பரிகசிக்கப்படும் பாத்திரம், குற்றம் சாட்டப்படும் பாத்திரம் மற்றும் இருளான சோதனைகள் போன்றவை. இந்த எல்லாப் பாத்திரங்களும் நம் வாழ்வில் எல்லா வண்டல்களையும் நீக்கும் ஓர் அற்புதமான வழியைக் கொண்டுள்ளது. அந்த திராட்சரசம் மட்டும் அசையாமல் இருந்துவிட்டால் (“ஓய்வில் இருந்தால்”), அந்த வண்டல்கள் சீக்கிரமாக அடியில் படிந்துவிடும். வண்டல்கள் ஒரு பாத்திரத்தின் அடியில் படிந்தவுடன் தேவன் நம்மை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடுவார். இவ்வாறாக நமது நறுமணம் இனிமை ஆகிக்கொண்டே போகும். ஆனால் நாம் இளைப்பாறுதலாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் - நம்மை ஒருபோதும் நியாயப்படுத்தவோ, தற்காத்துக்கொள்ளவோ கூடாது. இல்லாவிட்டால் தொடர்ச்சியான தொந்தரவுகள் மூலம் திராட்சரசமானது வண்டல்கள் இன்றித் தூய்மையாய் இராது. தேவனுடைய ஜனங்கள் தங்களைத் தாங்களே நியாயப்படுத்திக் கொண்டும், தங்கள் காரணங்கள் எல்லாவற்றையும் தேவனிடத்தில் ஒப்புவித்து அவரிடம் விட்டுவிடாதிருக்கிற படியால், அவர்களிடையே அநேகம் வீணடிக்கப்பட்ட பாடுகள் இருக்கும்.

சகரியா 2:13-இல் இவ்வாறாக வாசிக்கிறோம், “மாம்சமானவர்களே கர்த்தருக்கு முன்பாக மௌனமாக இருங்கள் (இளைப்பாறுதலாயிருங்கள்) ஏனெனில் அவர் பரலோகத்திலிருந்து வந்து நம் மத்தியில் வாசம் பண்ணுகிறார்” (வசனம் 10). எல்லா நேரங்களிலும் காரியம் நமக்குள்ளும் இவ்வாறாகவே இருக்க வேண்டும்.