நாங்கள் விசுவாசிப்பது


Christian Fellowship Church, Bangalore - 2015
Christian Fellowship Church, Bangalore - 2015
  1. வேதாகமானது 66 புத்தகங்களை கொண்டதும், தேவ ஆவியினால் ஏவப்பட்டதும், ஒருபோதும் தவறாகி விடமுடியாத தேவனுடைய வார்த்தையாகும்! நம் முழு பூலோக வாழ்விற்கும் அது போதுமானதாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது!
  2. தேவன் ஒருவரே! அவரே, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியென்னும் மூன்றுநபர்களாய் அநாதியாய் என்றென்றைக்கும் இருக்கிறவர்!
  3. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவத்துவத்திலும், அவர் கன்னிகையினிடத்தில் பிறந்ததையும், அவருடைய மனிததன்மையையும், பாவமேயில்லாத அவருடைய பூரண வாழ்க்கையையும், நம் பாவத்திற்கு பதிலாளாய், பரிகாரியாகி மரித்ததையும், அவருடைய சரீர உயிர்தெழுதலிலும், பரமேறி பிதாவினிடத்திற்கு சென்றதையும் தம்முடைய பரிசுத்தவான்களுக்காய் மீண்டும் பூலோகத்துக்கு திரும்ப வருவார் என்பதையும் விசுவாசிக்கிறோம்.
  4. எல்லா மனிதர்களும் பாவத்தில் மரித்து, முற்றிலுமாய் தொலைந்து (காணாமல்) போனதால், மனந்திரும்பி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மரணம், மற்றும் உயிர்த்தெழுதலில் வைக்கும் விசுவாசமே அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான ஒரே வழி என்பதையும்,
  5. பரிசுத்த ஆவியின் புதிதாக்குதலின்படியே (மறுஜென்ம முழுக்கினால்) ஒரு மனிதன் மறுபடியும் பிறந்து தேவனுடைய பிள்ளையாகிடமுடியும் என்பதையும்,
  6. கிறிஸ்துவினிடத்தில் வைக்கும் விசுவாசத்தினாலே மாத்திரம் நீதிமானாக்கப்படுவோம் என்றும், அதற்குரிய நிரூபணம் தேவனை மகிமைப்படுத்துகிற நற்கிரியைகளினாலே விளங்கும் என்பதையும்,
  7. மறுபடியும் பிறந்தவுடன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால், தண்ணீரில் முழ்கி ஞானஸ்நானம் பெறுவதையும்,
  8. நம் ஜீவியத்திலும், வார்த்தையிலும் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருப்பதற்கு; தொடர்ச்சியாய் பரிசுத்த ஆவியின் வல்லமையிலே நிறைந்திருப்பது அவசியம் என்பதையும்,
  9. நித்திய ஜீவனுக்கேதுவான, நீதிமான்களின் உயிர்தெழுதலையும், நித்திய ஆக்கினைக்கேதுவான அநீதிமான்களின் உயிர்தெழுதலையும் விசுவாசிக்கிறோம்!
"நாங்கள் விசுவாசிப்பது" என்ற முழுமையான அறிக்கையை வாசிக்க - கிளிக் செய்க