இன்று கிறிஸ்தவ ஐக்கிய சபை என அழைக்கப்படும் சபையானது, இந்திய தேசத்தின் பெங்களூரில் 1975 -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு சில குடும்பங்களை கொண்டு, சகோ. சகரியா பூணன், சகோ. இயன் ராப்சன் என்பவர்களால்; சபையாய் ஏற்படுத்தப்பட்டது. இவர்கள், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முதலாவது தங்களை சீஷர்களாய் ஒப்புவிக்க தீர்மானித்து; பின்பு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளுக்கு கீழ்படியும் (மத் 28:18-20) சீஷர்களை உருவாக்கதீர்மானித்தனர். அதிலே, மறுபடியும் பிறத்தல், உள்ளான ஜீவியத்தில் பரிசுத்தம் அடைதல், ஒருவரை ஒருவர் அன்பு கூறுதல், நீதிநெறியில் நடத்தல், பொருளாதாரத்தில் நேர்மையாய் (நாணயம்) இருத்தல், தேவனுடைய வார்த்தையாகிய சத்தியத்தை மற்றவர்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் தங்கள் ஜீவியத்தின் எல்லா அம்சங்களிலும் (சுழ்நிலைகளிலும்) தேவனுடைய வார்த்தையிலே பிழைக்கவும் வலியுறுத்தப்பட்டது.
ஒரு சிறுவீட்டிலே சபையாக ஆரம்பித்து புதுஉடன்படிக்கையின் ஆவியினால் உண்டாகும் ஜீவனால், தெளிவான அனுபவம் வாய்ந்த கிறிஸ்துவின் சரீரமாக, சீரான முறையாய் வளர்ந்தது. ஆரம்ப முதல் தெடங்கி, கடந்த 40 - ஆண்டுகளுக்கு மேலாக, மற்ற சபைகளிலிருந்து தெளிவான வேறுபாடு கொண்டதே அதின் முக்கிய அம்சமாக இருக்கிறது. ஆகவே, தாமதமின்றி எங்கள் சொந்த வாழ்க்கையை மறுரூபமாக்கிய இந்த அற்புதமான சத்தியத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க பாரம் கொண்டது. மாதாந்திர பத்திரிக்கை மூலமாக ஜெயம் பெறும் வாழ்க்கையில் தொடங்கி; கேசட்டு ஊழியமாகவும் மற்றும் ஒத்தமனதுடையவர்களுடன் கருத்தரங்குகள் (கான்பரன்ஸ்) என்றும் மாறினது. 1981 -ஆம் ஆண்டு சபை எண்ணிக்கையில் வளர்ந்து நெ: 40, டெகாஸ்டா ஸ்கொயர், பெங்களூர் வாளாகத்துக்கு இடம்பெயர்ந்தது. பின்பு 1982 -1989 வரை பட்டணங்கள் தோறும் மற்றும் இந்திய தேசத்தின் மற்ற மாநிலங்களிலும் சபைகள் ஸ்தாபிக்கப்பட ஆரம்பித்தது.
1989 -1995 -ம் ஆண்டு வரையில் சகோ.சகரியா பூணனின் புத்தக ஊழியம் (எழுத்துப்பணி) பேரளவில் பயனளித்தது. அது 1997 -ஆம் ஆண்டுக்குள்ளாக 20 -க்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை அச்சிட்டு வெளியிடவும், ஆடியோ கேசட்டுகள் மூலமாக பல தேசங்களை சென்றடையவும் செய்தது. 1999 -ஆம் ஆண்டில் தம்முடைய 60 -ஆம் வயதில் பெங்களுர் கிறிஸ்துவ ஐக்கிய சபையின் மூப்பர் ஸ்தானத்தை விட்டு தேவனுடைய வார்த்தையை பிறருக்கு பகிர்ந்தளிக்க பயணம் மேற்கொண்டார். 2003 -ம் ஆண்டில் தொடங்கிய இணைய தள ஊழியம் உலகின் பல்வேறு கண்டங்களிலும் சபைகள் ஸ்தாபிக்கப்பட உதவி செய்தது. 2014 -ஆம் ஆண்டில், பெரியதாக வளர்ந்த பெங்களூர் சபையானது; பழைய கட்டிட வாளாகத்தில் இடம் போதுமானதாக இல்லாத காரணத்தால், தற்போது பெங்களூர் பெளஹள்ளி, பாரடைஸ் என்கிலேவ் என்ற கட்டிட வளாகத்தில் இயங்கி வருகிறது.