சகோ. சகரியா பூணனைப் பற்றி


Zac Poonen
சகரியா பூணன்

இந்திய கப்பற்படை அதிகாரியாக பணியாற்றிய சகோ. சகரியா பூணன் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக விவிலிய போதகராகவும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல சபைகளுக்கு பொறுப்பாளராகவும் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவுக்கு ஊழியம் செய்து வருகிறார்.

இவர் 25 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் ஆங்கில மொழியில் எழுதியுள்ளார். அவைகள் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் கொடுத்த செய்திகள் ஒலி, ஒளி நாடாக்களில் (ஆடியோ CDக்கள் மற்றும் வீடியோ DVDகள்) கிடைக்கப்பெறுகின்றன.

மற்ற மூப்பர்கள் போல சகோ. சகரியா பூணன் அவர்களும் அவருடைய ஊழியத்திற்கு சம்பளம் பெற்றுக்கொள்வதில்லை. பெங்களூர் கிறிஸ்தவ ஐக்கிய சபை மூலமாக வெளியிடப்படும் புத்தகங்களுக்கும் உரிமைத்தொகை பெற்றுக் கொள்வதும் இல்லை. 'கூடாரம் செய்தல்' தொழில் மூலம் தனது குடும்பதிற்கு உதவி செய்து வருகிறார்.

சகரியா பூணனின் தனிப்பட்ட வாழ்கை சரிதையை "அந்த நாள் அற்ப ஆரம்பங்கள்'' புத்தாக்கத்தின் மூலம் முழுமையாக அறிந்துகொள்ளலாம்.