எங்களின் நிதி கொள்கை


Our Financial Policy

தேவனுடய உண்மையான, போலியல்லாத எந்த ஒரு ஊழியமும் பணத்தை உபயோகிக்க கூடியதாக இருக்கலாம். ஆனால், அது தேவனுடைய பரிசுத்தாவியின் வல்லமையை சார்ந்து இருக்குமேயல்லாமல், ஒருபோதும் பணத்தை சார்ந்ததாக இருக்காது. அதுப்போல, எந்த ஒரு ஊழியம் பணத்தை சார்ந்ததாக இருக்குமோ?. அது உண்மையான அல்லது போலியல்லாத ஊழியமாக இருக்கவே முடியாது..

இயேசுவின் முழு ஊழியமும் பரிசுத்தாவியானவரையே சார்ந்ததாக இருந்தது. ஆம், அவர் தம் ஊழியத்திற்காக தம்மை பின்பற்றுவோர்கள் மூலமாக கணிக்கைகளை ஏற்று கொண்டார் (லூக். 8:2,3). ஆனால், ஒருபோதும் ஒருவரிடத்திலும் காணிக்கை கேட்டதுமில்லை, தன்னுடைய பணத்தேவையை குறித்து தன் பிதாவை தவிர ஒருவருக்கும் தெரியப்படுத்தினதும் இல்லை. தேவனை கனப்படுத்தும் எந்த ஒரு ஊழியமும் இந்த அடிப்படையை கொண்டே இன்றைக்கும் செயல்படுகிறது.

அன்றைக்கு, இயேசுவே முதல் சரீரப்பிரகாரமான "கிறிஸ்துவின் சரீரம்" ஆக, இந்த பூமியில் இருந்தார். இன்றைக்கு சபையில் இருக்கும் நாமெல்லாம், ஆவிக்குரிய "கிறிஸ்துவின் சரீரம்" என்று அழைக்கப்படுகிறோம். ஆகவே, தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையிலே பணம் தேவை சம்பந்தப்பட்ட காரியத்திலே நமக்கு முன் வைக்கப்பட்ட அவருடைய மாதிரியின்படியே, நாங்களும் பின்பற்ற நாடுகிறோம்.

அதினிமித்தமே, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக (1975 -லிருந்து) சபையாக இயங்கிவருகிற நாங்கள் ஒருபோதும் ஒருவரிடத்திலும் எங்களுக்கு பணம் தேவையென்றோ; அல்லது ஜெபக்குறிப்பு என்கிற பெயரில் எங்கள் தேவையை குறிப்பிடும் விதத்தில் எழுதினதோ கிடையாது. மற்றும் பெங்களூரில் இருக்கும் எங்கள் சபையோ அல்லது தேவன் எங்களைக் கொண்டு ஸ்தாபித்த இந்தியாவின் மற்ற சபைகளிலோ அல்லது வெளிநாடுகளிலோ ஒருபோதும் காணிக்கை வசுலித்தது கிடையாது. எங்கள் சபை கூட்டங்களில் மாத்திரம் தேவனுடைய ஊழியதிற்கென்று அந்தரங்கமாகவும், கட்டாயமில்லாமலும் மனப்பூரவமாக கொடுப்பவர்களுக்கு மாத்திரம் ஒரு காணிக்கைப்பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் வருடந்தோறும் இந்தியாவில் நடக்கும் மூன்றுநாள் கருத்தரங்கு (conference) கூட்டங்களுக்கு இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து கலந்துக்கொள்ள வரும் ஒவ்வொருவருக்கும் இலவச உணவு மற்றும் தங்குமிடம் அளிக்கப்படுகிறது. எங்கள் சபையை நடத்தும் மூப்பர்களும் அப்போஸ்தலனாகிய பவுலைப்போல, தங்கள் தேவைகளுக்காய் சொந்தகைகளாலே வேலை செய்து, அவர்களில் ஒருவரும் சபைகளின் மூலமாய் எந்த உதவியும் பெற்றுக்கொள்ளாமலும் ஊழியம் செய்கிறார்கள். எங்கள் இணைய தளத்தில் இருக்கும் புத்தகங்கள், ஆடியோ, வீடியோ செய்திகள் அனைத்தும் உலகமெங்கும் இருக்கிறவர்கள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும் மற்றவர்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கவும் உதவுகிறது. இலவசமாக தேவனிடத்திலிருந்து பெற்றுகொண்ட நாங்கள் மற்றவர்களுக்கும் அதை இலவசமாக அளிக்கிறோம்.

உண்மையாகவே, இப்படிப்பட்ட எல்லா ஊழியங்களுக்கும் ஏராளமான பணம் தேவைப்படுகிறது. அப்படி உதவி செய்யவும் எங்களுடைய எந்த சபைகளிலும் யாரும் கோட்டீஸ்வரர்களாகவும் இல்லை. இந்தியா ஓர் ஏழ்மையான தேசமாக இருக்கலாம். ஆனால், தேவனுடைய இராஜ்ஜியத்தையே முதலாவதாக தேடும் எங்களுக்கு எப்போதும், எங்கள் தேவைகளை தேவனே பூர்த்தி செய்கிறவராகயிருக்கிறார். ஆகவே, ஊழியம் துவங்கிய அந்தநாளிலிருந்து இந்தநாள்வரைக்கும் கடன்பட்டதேயில்லை. எங்கள் சபைக் கட்டிடங்களை கட்டவும் வங்கி கடனையோ அல்லது அடைமான கடனையோ நாங்கள் வாங்கினதில்லை. அதேசமயம் இப்படிப்பட்ட விஷயத்தில் எங்களைகாட்டிலும் வித்தியாசமான விதத்தில் செய்பவர்களை நாங்கள் நியாந்தீர்க்கவுமில்லை. இவ்விதமான பாதையில்தான் தேவன் எங்களை நடத்தினார். இவை எல்லாவற்றிலும் முதன்முதலில் பூமிக்குவந்த 'கிறிஸ்துவின் சரீரம்' ஆகிய இயேசுவையே பின்பற்ற நாடுகிறோம்.

கொடுப்பதற்கு முன்பு சரிப்பார்க்கவும்:

1.நீங்கள் மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளைதானா?

2.உங்கள் குடும்பத்தேவைக்கு போதுமான அளவு பணம் உங்களிடத்தில் உள்ளதா?

3.நீங்கள் உங்கள் கடன்களிலிருந்து விடுதலையாகி இருக்கிறீர்களா? (வீட்டுக்கடன் தவிர).

4.எல்லா மனிதரோடும் ஒப்புரவாகியிருக்கிறீர்களா?

5.நீங்கள் மனப்பூர்வமாக கொடுக்கிறீர்களா?

ஆகவே, இப்படிப்பட்ட எங்களுடைய ஊழியங்களுக்கு நாங்களும் உதவி செய்யலாமா? என்று கேட்கிறவர்களுக்கு, நாங்கள் சொல்லும் கீழ்க்கண்ட சரிப்பார்க்கும் பட்டியல் உதவிசெய்யும்.

1. நீங்கள் தேவனால் மறுபடியும் பிறந்தவர்கள்தானா?. இந்த பூமியிலே தேவனுடைய ஊழியத்திற்கு உதவி செய்வது என்பது, மிகப்பெரிய கனமும் சிலாக்கியமானதுதான். ஆனால், இந்த சிலாக்கியம் தேவனால் மறுபடியும் பிறந்த அவருடைய பிள்ளைகளுக்கு மாத்திரமே கிடைக்கும் (3 யோவான் 7-வது வசனம்).

2. உங்கள் குடும்பத்தேவைக்கென்று போதுமான அளவு பணம் இருக்கிறதா? நீங்கள் தேவனுக்கு கொடுப்பதின் மூலம் உங்கள் பொருளாதாரத்தில் பிரச்சனை உண்டாகுமா? முதாலாவது நீங்கள் உங்கள் சொந்த குடும்பத்தை விசாரிப்பவர்களாக இருக்கவேண்டும் (மாற்கு 7:9-13, 1தீமோ 5:8). நம் பரலோக பிதா மிகவும் ஐசுவரியவானாக இருக்கிறார் (ஒரு பூமிக்குரிய தகப்பன் போல). தன்னுடைய ஊழியத்திற்கு உதவியதன் மூலம் ஒரு பிள்ளையையும் ஒருவிதத்திலும் பட்டினியாகவும் அல்லது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும் விரும்பமாட்டார்.

3. நீங்கள் திரும்ப செலுத்தக்கூடிய பெரிய கடன் பிரச்சனை உங்களுக்கு இருக்குமானால், முதலாவதாக அதை செலுத்தித்தீருங்கள். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு இளைப்பாறுதல் நிறைந்த வாழ்க்கையை விரும்புகிறார். எல்லாவித கடனிலுமிருந்து விடுதலை அடையவேண்டும் என்றும் விரும்புகிறார். தேவனுக்கு நாம் எதையாவது கொடுப்பதற்கு முன்பு, இராயனுக்குரியதை இராயனுக்கு நீங்கள் செலுத்தவே விரும்புகிறார். ஏனெனில், இராயனுக்குரியதிலிருந்தோ அல்லது வேறொருவருக்குரியதிலிருந்தோ எடுத்து நாம் தேவனுக்கு கொடுப்பதை அவர் விரும்புவதே கிடையாது (மத் 22:21, ரோ 13:8). (உங்கள் வீட்டை கட்டும்படி வாங்கும் கடன் கடனல்ல (இந்த வசனங்களின் அர்த்தம்). ஏனென்றால், கட்டி வைத்திருக்கும் வீடு உங்கள் சொத்து அது நீங்கள் வாங்கின வங்கி கடனுக்கு நிகரான (சமமான மதிப்பு) உடையதாக இருக்கிறது. அதைப்போலவே, நீங்கள் வாங்கின ஸ்கூட்டர் (வாகனங்கள்) கடனும் இருக்கிறது. அதுவும் கடனல்ல. ஏனென்றால், வாகனகாப்பீட்டு திட்டத்தில் அதற்குரிய மதிப்பு வாங்கின கடனுக்கு சமமாகவே இருக்கும்).

4. உங்களுக்கு ஒரு சுத்த மனச்சாட்சி உண்டா? உங்களால் முடிந்தமட்டும் எவ்விதத்திலாகிலும் உங்களால் மனம் புண்பட்ட எல்லா மனிதர்களோடும் ஒப்புரவாகி இருக்கிறீர்களா? தான் மனம் புண்படுத்திய மனிதர்களிடத்தில் காரியத்தை சரிசெய்யாமலும், மன்னிப்பு கேளாமலும் இருக்கிற எந்தஒரு மனிதனிடத்திலும் தேவன் தனக்கென்று காணிக்கையை ஏற்றுக்கொள்ளுவதே இல்லை (மத் 5:23, 24).

5. எந்த ஓர் மனிதனுடய கட்டாயத்தினாலோ அல்லது உங்கள் சொந்த மனசாட்சி உறுத்தலினாலோ (அழுத்தத்தினாலோ) அல்லாமல் விடுதலையாகவும் (இலவசமாக) மன உற்சாகமுடனும் நீங்கள் காணிக்கை கொடுக்கிறீர்களா? உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறாரேயல்லாமல், கொடுப்பதற்காக தயக்கமடைகிறவனிடத்தில் அவர் பிரியமாய் இருப்பதில்லை மாறாக அழுத்தத்தின் காரணமாகவோ, அல்லது கொடுத்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்தினாலோ அல்லது அவ்வப்போது தங்களை உறுத்தும் மனசாட்சியை இலகுவாக்கி கொள்ளுவதற்காகவோ அல்லது தேவனுக்கு காணிக்கை கொடுப்பதின்மூலம் தனக்கு பிரதிபலன் திரும்ப கிடைக்கும் என்றும் செலுத்தப்படுகிற எந்தவித காணிக்கையின் மேலும் தேவன் விருப்பப்படுவதில்லை.

உங்கள் நிலையை சரிபார்க்கும் இந்தப்பட்டியலினூடக உங்களை கடந்துவர செய்தமைக்காக எங்களை பொறுத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட எல்லா பண விஷயத்திலும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் மாதிரியையும் அவருடைய போதனையையுமே நாங்கள் பின்பற்ற நாடுவதே அதற்கு காரணம்.

கிறிஸ்துவ ஐக்கிய சபைக்கு காணிக்கை அளிக்க;-

மேலே கூறப்பட்ட அனைத்து காரியங்களையும் மிகுந்த கவனத்துடன் படித்த (பார்த்த) பின்பும் நீங்கள் இந்த ஊழியத்தை தாங்கி உதவி செய்ய வேண்டும் என்று உணர்ந்தால், அதை கீழ்கண்ட ஏதாவது ஒரு வழிகளில் செலுத்தலாம்.

உங்கள் காணிக்கையை அனுப்பவேண்டிய வழிகள்:-

பணம்மாற்று (Money Transfer):-

கிறிஸ்துவ ஐக்கிய சபைக்கு உங்கள் காணிக்கையை பணமாக அளிக்க, மின் அஞ்சல் செய்யவும் - [email protected]

காசோலையாக [Cheque (check)] அனுப்ப:-

நீங்கள் "Chiristian Fellowship Center" என்ற பெயரில் உங்கள் காசோலையை அனுப்பலாம். தயவு செய்து கீழ்கண்ட முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக அனுப்புங்கள்.

முகவரி:-

Christian Fellowship Church

#69-71, Paradise Enclave, Bellahalli

(Behind Supertech Micasa Apartment)

Kannur Post

Bangalore Urban

Bangalore - 562149

Karnataka

India

முக்கியகுறிப்பு:

உங்கள் காசோலைகளை "Christian Fellowship Church" என்ற பெயரில் அனுப்பாமல், "Christian Fellowship Centre" என்ற பெயரில் அனுப்புங்கள்.

இதை வாசித்ததற்காக நன்றி! நம்முடைய கர்த்தர் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில்; தேவனுக்கு கொடுப்பதிலே உங்களை வழிநடத்துவாராக!