எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை
WFTW Body: 

தானியேல் அவனுடைய சந்ததியில் தேவனால் வல்லமையாக உபயோகிக்கப்பட்டவனாவான். 17 வயது நிரம்பிய வாலிபனாய் இருந்த போது “தன்னைத் தீட்டுப்படுத்தாதபடிக்கு தன் இருதயத்தில் தீர்மானம்
எடுத்த" (தானியேல் 1:8) உத்தமனாய் இந்த தானியேல் விளங்கினான். இவ்வாறு கர்த்தருக்கு வைராக்கியமாய் நின்ற தானியேலின் வீரத்தைக்கண்ட அனனியா, மீஷாவேல், அசரியா என்ற மூன்று இளைஞர்கள் தாங்களும் அவ்விதமே கர்த்தருக்கென தைரியமாய் வாழ தீர்மானித்தார்கள்! (தானியேல் 1:11). இவர்கள் தாங்களாகவே கர்த்தருக்காக நின்றிட தைரியமற்றிருந்தார்கள். ஆனால் தானியேல் கர்த்தருக்காக நின்றதைக் கண்டவுடன் இவர்களும் தைரியம் பெற்றார்கள். கர்த்தருக்காக தனியாக நிற்கத் தைரியமற்ற அநேக கிறிஸ்தவர்கள் இன்று உலகத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் எங்கோ ஒரு தானியேல் கர்த்தருக்காக நிற்பதைக் காணும்பொழுது கூட சேர்ந்து கொள்கின்றனர். ஆகவே தேவன் இன்று தானியேல்களைத் தேடுகிறார். நீங்கள் கர்த்தருக்காக இப்படியொரு தானியேலாய் இருப்பீர்களா? நான் என்னைத் தீட்டுப்படுத்த மாட்டேன் என்று கூறுவீர்களா? எந்த ஒரு அரசனையோ அல்லது எந்த ஒரு அதிகாரியையோ அல்லது ஒரு பின்வாங்கிய மூத்த சகோதரனையோ, அல்லது அல்லது யாரையும் பிரியப்படுத்த பிரயாசப்படாமல், கர்த்தருடைய வார்த்தையில் சொல்லப்பட்டவைகளுக்கு 100% கர்த்தருக்காக நிற்பேன்” என்று கூறுவீர்களா? “தானியேல் ஊழியத்திற்கு” சகோதர சகோதரிகள் இன்றைய உலகில் அதிகமாக தேவைப்படுகிறார்கள். இந்த வசனம் (தானியேல் 12:3), பிரசங்கிமார்கள் நீதியைப்பற்றி பிரசங்கம் செய்வதைக் குறிப்பிடாமல், தங்கள் வார்த்தையினாலும், தங்கள் வாழ்க்கையினாலும் மற்றவர்களை நீதிக்குட்படுத்துகிற சாதாரண விசுவாசிகளைக் குறிப்பிடுகிறது.

இந்த தானியேலின் ஊழியத்திற்கு நேர்மாறான வேறொரு வழியத்தையும் வேதம் சுட்டிக்காட்டுகிறது. அந்த ஊழியத்திற்குப் பெயர் "லூசிபரின் ஊழியம்". தேவனுக்கு எதிராக முரட்டாட்டம் செய்த லூசிபர் தன்னோடுகூட பல்லாயிரக்கணக்கான தூதர்களை தனக்கு கீழ்ப்படுத்தி தன்னைப் பின்பற்றும்படி செய்துவிட்டான் (வெளி 12:4). அநேகம் தூதர்கள் வழிதப்பிப் போவதற்கு லூசிபரை தேவன் ஏன் அனுமதித்தார்? பரலோகத்தில் முரட்டாட்டமும், ஏதோ காரியத்திற்காக மனமடிவுகொண்ட தூதர்களின் பிடியிலிருந்து பரலோகத்தை சுத்திகரிப்பதற்கேயாகும்! முரட்டாட்டம் செய்துகொண்டிருந்த அநேக தேவதூதர்கள் மத்தியில் இந்த லூசிபர் எழும்பியிருக்காவிட்டால், அந்த திரளான தூதர்களின் பொல்லாத இருதயங்கள் வெளியரங்கமாக்கப்பட்டிருக்கவே முடியாது. இதுதான் லூசிபரின் ஊழியமாகும்!

இன்றும்கூட, சில சகோதர சகோதரிகள் லூசிபரின் ஊழியத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தேவன் அனுமதிக்கிறார்!. இவர்கள் வீடு வீடாகச் சென்று புறங்கூறவும், குற்றம்சாட்டவும், பொய் சொல்லவும், தீமையானவைகளைப் பேசவும் தேவன் அனுமதித்து, அதன்மூலமாய் முரட்டாட்டமும் லௌகீகமுமான விசுவாசிகளை வெளியரங்கப் படுத்தி...... ஒன்று திரட்டி.... திரட்டி..... சபையைவிட்டுப் போகும்படிச் செய்கிறார். இப்போது என்ன நடந்துவிட்டது? கிறிஸ்துவின் சரீரம் தூய்மையாக்கப்பட்டுவிட்டது! அவ்வளவுதான்!! இருப்பினும் இதுபோன்ற லூசிபரின் ஊழியம் தொடர்ந்து சபையில் இருந்துகொண்டேயிருப்பதற்கு தேவன் அனுமதிக்காமல், பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு லூசிபரை பரலோகத்திலிருந்து தள்ளி விட்டதைப் போலவே சபையிலும் ஒருநாள் செய்வார்! அது அவருக்கே உரிய திவ்விய ஞானமாகும்.

நாம் ஒருநாளும் சகோதர சகோதரிகளிடம் யுத்தம் செய்யும்படி களத்தில் இறங்காதிருக்கக்கடவோம். சபையை பாதுகாக்கும் பணியை தேவனே செய்துவிடுவார். ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார் (1கொரிந்தியர் 3:17). ஆனால் தேவன் யாரையும் கெடுக்க விரும்புவதில்லை. நாமும்கூட அப்படி யாரையும் கெடுக்க விரும்புவதில்லை. ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, கர்த்தர் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து, அநேக ஆண்டுகள் நியாயத்தீர்ப்பை தாமதிக்கிறார். நாமும் அப்படியே எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்புகிறோம்.நோவாவின் நாட்களில் தேவன் 120 வருடங்கள் காத்திருந்தார். ஆனால் தேவன் நியாயந்தீர்க்கும்போது, அவருடைய தீர்ப்பு கடுமையாக இருக்கும்.எங்கள் சபையில் பிளவு ஏற்பட்டதேயில்லை எனக்கூறி மேன்மை பாராட்டுவது மதியீனமாகும். நாம் ஏற்கனவே பார்த்ததுபோல, ஆதி நாட்களிலேயே பரலோகத்தில் தூதர்கள் மத்தியில் இந்தப் பிளவு உண்டானது. இப்படிப்பட்ட பிளவு அவசியமானதேயாகும். ஏனெனில், “உங்களில் உத்தமர்கள் (கர்த்தரால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்) இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் (பிளவுகளும்) உங்களுக்குள்ளே (சபையிலே) உண்டாயிருக்கவேண்டியதே” (1கொரிந்தியர் 11:19) எனப் பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார்.. ஆம், ஒளியிலிருந்து இருள் பிரிக்கப்படத்தான் வேண்டும். அது பிரிவினையல்ல....... அது, சுத்திகரிப்பேயாகும்! இந்தசுத்திகரிப்பு இல்லாத பட்சத்தில் இப்பூமியில் தேவனுடையதூய்மையான சாட்சி கறைபட்டுவிடும்.

நாமெல்லாரும் தானியேலின் ஊழியத்தையோ (சபையில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் கட்டும் ஊழியம்) அல்லது லூசிபரின் ஊழியத்தையோ (பிரிவினையை விதைக்கும் ஊழியம்) கொண்டிருக்ககூடும். பிரிவினையை விதைக்கிறவர்களைக் (சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுகிறவர்களை) கர்த்தர் வெறுக்கிறார் (நீதிமொழிகள் 6:16-19). இந்த காரியத்தில் நடுநிலையாயிருக்க முடியாது. ஏனென்றால் “என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்” என இயேசு கூறினார். சபையிலே இரண்டு ஊழியங்கள் மாத்திரமே உண்டு – சேர்ப்பது அல்லது சிதறடிப்பது (மத்தேயு 12:30).

தேவனுடைய மகிமைக்காக இந்த கடைசி நாட்களில், தேவன் விரும்புகிற விதமாக வாழவும், எல்லா இடங்களிலும் சுத்தமான சாட்சியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபையை கட்டியெழுப்பவும் தேவன் நமக்கு கிருபையையும் ஞானத்தையும் தருவாராக.