WFTW Body: 

ஜனங்கள் மூன்று வித ஸ்தானத்தில் ஜீவிப்பதை பவுல் 1 கொரிந்தியர் 6:12 -ல் எடுத்துக் கூறினார்.

“எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது” (ரோமர் 6:12). தேவன் அனுமதிக்காத அநீதியான தரத்தில் திரளான அவிசுவாசிகள் ஜீவிக்கிறார்கள். ஒரு விசுவாசியும், இதுபோன்ற தரத்திற்கு இறங்கி வந்துவிடக் கூடாது. ஆகிலும், சில விசுவாசிகள் இவ்வித தாழ்ந்த தரத்திற்குள் இறங்கி விடுகிறார்கள். அந்த தரத்திலேயே, அவர்கள் தொடர்ந்து வாழ்ந்தால், தங்கள் இரட்சிப்பை நிச்சயமாய் இழந்துவிடுவார்கள். இதைவிட சற்று உயர்ந்த தரமே 'தேவன் அனுமதித்த' அல்லது நியாயபூர்வமான தரமாகும்! ஆனால், இதைவிட உயர்ந்த தரமான “தகுதியுள்ள ஜீவியம்” என்பதை நாம் அடைய வேண்டும். 100 விஷயங்களில் 70 விஷயங்கள் ‘தேவனுடைய அதிகாரம் பெறாதவைகள்'. ஆகவே, நாம் அவைகளில் யாதொன்றையும் செய்து விடக்கூடாது. ஆனால், மீதியுள்ள 30 விஷயங்களுக்கு ‘தேவனுடைய அதிகாரம் இருக்கிறபடியால்' அதை நாம் செய்யலாம். இருப்பினும் அந்த மீதியான 30 விஷயங்களில், 10 விஷயங்கள் மாத்திரமே "ஆவிக்குரிய ரீதியில் தகுதியுள்ளவைகள்!” ஒரு முழு இருதயம் கொண்ட கிறிஸ்தவன், இந்த 10 விஷயங்களை மாத்திரமே செய்வான்!

முழு இருதயம் இல்லாத அரை-குறை மனம் கொண்ட கிறிஸ்தவர்களோ இந்த 'நியாயப்படி அதிகாரம் உள்ள' 30 விஷயங்களில் ஏதாவது ஒன்றை தெரிந்து கொண்டு ஜீவிப்பார்கள்! நீங்கள் முழு இருதயம் கொண்ட சகோதரனாயும், வலிமையான தேவனுடைய ஊழியனாயும் இருக்க விரும்பினால், 'நியாயமான அதிகாரத்துக்குட்பட்டவைகளிலிருந்து' ‘தகுதியானவைகளை' மாத்திரமே தெரிந்து கொள்வீர்கள்!

உதாரணமாக நம் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளில் 24 மணி நேரங்கள் உள்ளன. அதில் பாதி நேரத்தை அசுசியான திரைப்படங்களைப் பார்ப்பதிலும் அல்லது அருவருப்பான புத்தகங்களைப் படிப்பதிலும் செலவழித்தால், அது உங்கள் நேரத்தை, ‘நியாயமற்ற, தேவனுடைய அதிகாரத்திற்கு உட்படாதவைகளை' செய்தவர்களாய் நீங்கள் மாறுவீர்கள். இதற்கு நேர்மாறாக எத்தனையோ நியாயப்பூர்வமான வழியில் ‘அந்த நாளை' நீங்கள் செலவு செய்திடவும் முடியும். அவைகளில் சில, அவசியமாய் இருக்கிறபடியால், நாம் அவைகளை செய்திட வேண்டியதாயிருக்கிறது. ஆகிலும், அதிக மணி நேரங்கள் நீங்கள் செய்திதாளை வாசித்துக் கொண்டிருந்தால், அது ‘நியாயமான அதிகாரத்திற்கு' உட்பட்டதாய் இருந்தாலும், அந்த நாளை அதிக தகுதியுள்ளதாய் நீங்கள் செலவழிக்கவில்லை!

நீங்கள் தேவனுக்குப் பயனுள்ள ஊழியனாய் மாற விரும்பினால், உங்களை கட்டுப்படுத்தி தேவையில்லாத விஷயங்கள் சிலவற்றை உதறி விட்டு தேவனுடைய காரியங்களுக்கு நீங்கள் அதிகநேரம் செலவழித்திட வேண்டும்! உங்கள் இணைய தளத்தில் நீங்கள் அதிக நேரங்கள், நல்ல வலைதளங்களை பார்த்திட நேரத்தை செலவு செய்கிறவர்களாய் இருக்கக்கூடும் அல்லது அநேக கிறிஸ்தவ T.V நிகழ்ச்சிகளைப் பார்த்துவிட்டு, வேதத்தை தியானிப்பதற்கோ கொஞ்சநேரத்தை மட்டுமே வைத்திருக்கிறவர்களாய் இருக்கக்கூடும். இதற்கு நேர்மாறாக, உலக செய்திகளையோ அல்லது நல்ல இணையதளத்தையோ பார்ப்பதற்கு சிறிது நேரம் செலவழித்துவிட்டு, அதிக நேரத்தை வேதத்தை தியானித்திட முடியும்! நீங்கள் சுமார் இரண்டு மணி நேரங்கள் நல்ல T.V புரோகிராமையோ அல்லது கறைபடாத வலைதளங்களையோ பார்த்திட நேரத்தை செலவழித்திடலாம்! ஆனால், நீங்கள் தேவனுடைய வார்த்தையை தியானித்திடும் தகுதியை ஒப்பிடும்போது, அல்லது பிறருக்கு உதவி செய்திடும் ஊழியத்தை ஒப்பிடும்போது நீங்கள் கவனித்த நியாயமான நிகழ்ச்சி நேரங்கள் வீணான நேரங்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்!

அதுபோலவே 'அதிகாரத்திற்குட்படாத நியாயமற்ற வழிகளில்' உங்கள் பணத்தை செலவு செய்திட முடியும் அல்லது நியாயபூர்வமாய் செலவழித்திடவும் முடியும்! அல்லது தகுதியானவைகளுக்காக மாத்திரமே செலவு செய்திட முடியும். ஒரு மனப்பூர்வமான கிறிஸ்தவன், தன்னுடைய நேரத்தையும், பணத்தையும் தகுதியானவைகளுக்கு மாத்திரமே செலவு செய்வான். ஆகவே நம்முடைய தெரிந்து கொள்ளுதல் சரியானதாய் இருக்க நாம் கற்று கொள்ள வேண்டும்.

தேவபக்தியான ஜீவியத்தின் இரகசியம், நாம் தெரிந்து கொள்வதை வைத்தே இருக்கிறது. நியாயபூர்வமான அதிகாரத்துடன் நம்முடைய நேரத்தை செலவு செய்திட அநேக காரியங்கள் இருந்தாலும், அவைகளில் சிறந்தவைகளையே நாம் தெரிந்து கொள்ளவேண்டும். அது போலவே நியாயமான வழிகளில் நம் பணத்தை செலவழிக்கும் விதத்தில், நாமும் சிறந்த வழிகளை தெரிந்து கொண்டே செலவு செய்திட வேண்டும். அதுபோன்ற ஒரு மனிதனே, தேவன் காணும் தகுதியுள்ள மனிதன்!