WFTW Body: 

ரோமர் 8-ம் அதிகாரத்தில், நாம் காண்பது “ஆவிக்குள்ளான ஜீவியம்!” நாம் பரிசுத்தாவிக்கு அடங்கியிருக்கும் ஜீவியத்திற்கு வந்து விட்டால், நம் பரமபிதா நம் ஜீவியத்தின் எல்லா சூழ்நிலைகளிலும் கிரியைச் செய்து, சகலமும் நம்முடைய நித்திய நன்மைக்கு ஏதுவாகவே செய்து முடிப்பார். மற்றவர்கள் நமக்கு தீங்கு செய்திட முயற்சித்தாலும், அதை நம்முடைய நன்மைக்காகவே தேவன் கிரியை செய்து மாற்றுவார், அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8:28). தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார் (ரோமர் 8:29). இந்த சுவிசேஷம், ஓர் ஆச்சரியமான சுவிசேஷம்! ரோமர் 8:28-ம் வசனம், புதிய ஏற்பாட்டிலுள்ள வாக்குதத்தங்களில் ஓர் மகா ஆச்சரியமானதொன்றாகும்! நாம் சந்திக்கிற ஒவ்வொரு சூழ்நிலையையும் இந்த வசனம் முழுவதுமாய் ஆட்கொள்கிறது. ஆகவே நீங்கள் ஆண்டவரிடத்தில் திரும்பி “ஆண்டவரே, இந்த பூமியில் நீர் வாழ்ந்ததைப்போலவே 'உம் சித்தம் செய்திடும் நோக்கத்தை அல்லாமல் வேறொரு நோக்கம் என் வாழ்வில் இல்லை!' நான் பணத்தையோ அல்லது கனத்தையோ அல்லது புகழையோ அல்லது எந்த சுகத்தையோ பின்பற்றி தொடரும் விருப்பம் எனக்கு இல்லை. எனக்காக ஒரு சிறிதானதொன்றும் இந்த பூமியில் நான் விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும், உம்மை பிரியப்படுத்தி வாழவே விரும்புகிறேன். இந்த விஷயத்தில் நான் உறுதியாய் இருக்கும்படி என்னை எப்போதும் உமக்கு முன்பாக சோதித்து நியாயந்தீர்த்து வாழ்வேன்!" என கூறுங்கள். அப்படியானால், சகலமும் உங்கள் நன்மைக்கு ஏதுவாக நடைபெறும். அந்த நன்மை ரோமர் 8:29-ம் வசனத்தில் குறிப்பிடப்பட்ட “இயேசுவைப்போல் மாறுவதே ஆகும்!” சர்வ வல்ல தேவன், உங்களிடம் செய்ய விரும்பும் நன்மை 'இதைவிட மேலானது என' ஒன்றுமில்லை!

எபேசியர் 1:4,5-ம் வசனங்களில் “தமது அன்பினால் நம்மை முன்னறிந்தார்” என காண்கிறோம். “முன்னறிந்தார்” என்ற வார்த்தை, தவறாய் புரிந்து கொள்ளப்பட்ட அநேக வார்த்தைகளில் ஒன்றாகும். எதற்காக தேவன் நம்மை முன்னறிந்தார்? பரலோகம் அல்லது நரகத்திற்குச் செல்லவா முன்னறிந்தார்? இல்லை! அவர், ஒருவரைக்கூட பரலோகமோ அல்லது நரகமோ செல்வதற்கு முன்னறியவில்லை. இங்கு நமக்கு கூறப்பட்டதெல்லாம் "தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி, நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய் அவருக்கு புத்திரர்களாய் இருக்கும்படியே முன் குறித்திருக்கிறார்” என வாசிக்கிறோம். நாம் குழந்தை கிறிஸ்தவர்களாக அல்ல, கிறிஸ்துவுக்குள் குமாரர்களாய் முதிர்ச்சிப் பெறவே நம்மை முன் குறித்துள்ளார். நீங்களோ 'உங்கள் பரம பிதாவின் அலுவல்களில்' ஆர்வமுடன் ஈடுபாடு கொண்ட ஓர் பொறுப்புள்ள மகனாய் இருக்க வேண்டும். ஆகவே ஒரு குமாரனுடைய பொறுப்புள்ள உணர்வோடு, தேவனுடைய காரியங்களில் நடந்து கொள்ளுங்கள்.

கொலோசெயர் 1:28-ல் பவுல் கூறும்போது, கிறிஸ்துவின் பாடுகளில் பெற்ற அனுபவத்தை வைத்தே “கிறிஸ்துவை நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்தி சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணி, அதன் மூலமாய் எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தப் பிரயாசப்படுகிறோம்” என்றார். ஆம், இதுவே சகல ஞானத்தோடும் கூடிய தீர்க்கதரிசனமும், போதகமுமாயிருக்கிறது. “எந்த மனுஷனையும் கிறிஸ்துவுக்குள் தேறினவனாக நிறுத்துவதே” பவுலின் பிரதான நோக்கமாயிருந்தது. பவுலுடைய ஒரு சபையில் 100 பேர் இருந்தால், அங்குள்ள ஒவ்வொரு சகோதரனும் சகோதரியும், கிறிஸ்துவின் பூரணத்தை அடைய வேண்டும் என்ற நிச்சயத்திற்காகவே தன்னால் இயன்ற அனைத்து ஊழியங்களையும் செய்தார். அவர்களுக்குப் புத்தி கூறினார்! கடிந்து பேசினார்! போதனை செய்தார்! ஆகிய அனைத்தையும் எல்லா ஞானத்தோடும் செய்து, ஒருநாளில் அவர்களை தேவனிடத்தில் கொண்டு வந்து நிறுத்தவேண்டுமே என பாடுபட்டார்! வெகு குறைவான பாஸ்டர்களுக்கும், மேய்ப்பர்களுக்கும் மாத்திரமே இதுபோன்ற பாரம் உள்ளது. மற்றவர்கள், பிரசங்கிக்கிறார்கள். அவ்வளவுதான்! ஆனால் பவுலோ, 'ஒவ்வொரு நபரையும்' ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு கொண்டுவர அதிகபாரம் கொண்டிருந்தார். ஒரு சபைக்கு, ஒரு மூப்பராய் பொறுப்பெடுப்பதை சாதாரணமாய் நீங்கள் எண்ணிவிடமுடியாது. நான் பெங்களூர் சபையில் 25 ஆண்டுகளாய் மூப்பராயிருந்தபோது, 'ஒவ்வொரு வயது வந்த நபரிடமும்' உள்ள ஆவிக்குரிய நிலையை அறிந்து கொள்ள விரும்பினேன். அதன் மூலமாய், நான் அவர்களைத் திருத்தி, கடிந்து கொண்டு, ஞானத்தைப் போதித்து, தேற்றும் வார்த்தைகளைக் கூறி, கண்டிப்பான வார்த்தைகள் மூலமாயும் நான் ஊழியம் செய்து, அவர்களை ஒருநாளில் கிறிஸ்துவுக்குள் தேறினவர்களாக நிறுத்த பிரயாசப்பட்டேன். அவர்களில் ஒருவரிடம்கூட, யாதொன்றையும் நான் விரும்பவில்லை. அவர்களினிமித்தமும், கிறிஸ்துவின் சரீரத்தினிமித்தமும், என் தனிப்பட்ட ஜீவியத்தில் ‘ஏராளமான, நசுக்கப்படும்' பாடுகளுக்குள் நான் கடந்துச் சென்றேன். தேவன் என்னிடம், பல்வேறு வழிகளில் இடைப்பட்டு “கிறிஸ்துவின் நறுமணம்” என் மூலமாய் பரவி, மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி செய்தார். இதுவே, மெய்யான கிறிஸ்தவ ஊழியம்! கொலோசெயர் 1:29-ம் வசனத்தில் பவுல் கூறும்போது “இதற்காகவே, நான் போராடி பிரயாசப்படுகிறேன்” என்றார். எவ்வாறாக அவர் போராடினார்? “முதலாவதாக 'எனக்குள்ளே' வல்லமையான பரிசுத்தாவியின்படியும், அவர் எனக்குள் முதலாவதாக நடப்பித்த வல்லமையான கிரியையின்படியும்" போராடியதையே குறிப்பிட்டார். ஆம், தேவன் எப்போதும் நமக்குள்ளாகவே முதலாவதாக கிரியை செய்ய வேண்டியதாயிருக்கிறது! அதன் பிறகுதான் நம் மூலமாய் கிரியை நடப்பித்து, பிறரை ஆசீர்வதிக்கிறார்! சபையில் ஊழியம் செய்யும் ஒவ்வொருவரும் இந்த இரண்டு வசனங்களை உங்கள் இலக்காய் கொள்ளவேண்டும்:

1) எந்த மனுஷனையும் கிறிஸ்துவுக்குள் தேறினவர்களாக நிறுத்தவேண்டும் (கொலோசெயர் 1:28).

2) மேலும் பரிசுத்தாவியின் நிறைவை பெற்றவர்களாய், இந்த இலக்கை நாம் அடைய வேண்டும் (கொலோசெயர் 1:29).

எபேசியர் 4:13-ல் நாமோ கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து “கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்கு தக்க பூரண புருஷராக” ஓங்கி வளர வேண்டும், என வாசிக்கிறோம். நம்முடைய நோக்கமாய் இருக்கவேண்டியதெல்லாம், இந்த நிறைவான வளர்ச்சிக்கு நாமும் வளர்ந்து, மற்றவர்களையும் வளரச்செய்திட உதவுகிறவர்களாயிருக்க வேண்டும்! நாமோ “மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கு ஏதுவான தந்திரமுள்ள போதகமாகிய பலவிதகாற்றினாலே அலைகளைப்போல அடிப்பட்டு அலையும்” குழந்தைகளாய் தேங்கி நின்று விடக்கூடாது (எபேசியர் 4:14).

எபேசியர் 4:15-ல் “அன்புடன் சத்தியத்தைக்கைக்கொண்டு நாம் வளர வேண்டும்” என வாசிக்கிறோம். இங்கு, சத்தியத்திற்கும் அன்பிற்கும் இடையிலான சமநிலையைப் பாருங்கள். நாம் சத்தியத்தை பேச வேண்டுமா? ஆம், எப்போதும் பேச வேண்டும்! ஆனால், அந்த சத்தியதை நாம் விரும்புகிறபடியெல்லாம் பேசுவதற்கு அனுமதி உண்டா? இல்லை! நாம் சத்தியத்தை அன்புடன் பேச வேண்டும். நீங்கள் சத்தியத்தை அன்புடன் பேச முடியவில்லையென்றால், ஜனங்ளிடம் சத்தியத்தை பேசுவதற்கு போதுமான அன்பை பெறும் வரைக்கும் நீங்கள் காத்திருக்க வேண்டும். அன்பு என்ற பலகையில்தான், சத்தியம் என்னும் பேனாவை பயன்படுத்த முடியும். பலகை ஏதுமில்லாமல், நீங்கள் சத்தியத்தை எழுத முயற்சித்தால், அதை நீங்கள் காற்றில்தான் எழுத முடியும்! அவ்வாறு நீங்கள் எழுதுவதை ஒருவர்கூட புரிந்து கொள்ள இயலாது. நாம் அன்புடன் சத்தியத்தை பிரசங்க மேடையிலோ அல்லது தனிப்பட்ட சம்பாஷணையிலோ பேசினால் மாத்திரமே "தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும் நாம் வளருகிறவர்களாய்” மாறிட முடியும்!

எபிரேயர் 6:1-3-ம் வசனங்களில் பூரண வளர்ச்சி நோக்கி முன்னேறும்படி இந்த புத்தக ஆக்கியோன் வலியுறுத்துகிறார். 5-ம் அதிகாரத்தில் பாலை உண்கிறவர்கள்! ஆகாரத்தை சாப்பிடுகிறவர்கள்! போன்ற உவமானங்களைக் குறிப்பிட்டார். இந்த அதிகாரத்திலோ இன்னும் இரண்டு திருஷ்டாந்தங்களை குறிப்பிடுகிறார். முதலாவதாக, ஆரம்பநிலை போதகங்கள், வளர்ச்சிக்குரிய போதகங்கள்! எனவும், பின்பு கட்டிடத்தின் அஸ்திபாரம், அதின்மேல் கட்டப்படும் கட்டிடம்! என்ற உதாரணத்தையும் கூறுகிறார். இவ்வித வார்த்தைகளைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கும், முதிர்ச்சியில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள வித்தியாசங்களை எடுத்துரைக்கிறார். இந்த இரண்டு பேர்களிடத்திலுள்ள வித்தியாசம் “சோதனை நேரங்களில்” தெளிவாக வெளிப்படுகிறது. முதிர்ச்சி பெறும் பரிசுத்தவான்கள் 'கிறிஸ்துவைப் போன்ற' பிரதிபலிப்பையும், குழந்தைகளாய் இருப்பவர்கள் மனுஷனுக்குரிய பிரதிபலிப்பையும தங்கள் சோதனைகளில் வெளிப்படுத்துகிறார்கள்! மற்றொரு உதாரணத்தையும் கேளுங்கள்: நீங்கள் 10,000 மீட்டர் மலை உச்சிக்கு செல்லும் முதிர்ச்சி நோக்கி முன்னேறிச் செல்பவர்களாக எண்ணிக் கொள்ளுங்கள். அந்த உச்ச ஸ்தலத்திற்கு ஏற்கெனவே இயேசு சென்றுவிட்டார். நாம் மறுபடியும் பிறந்தபோது, அந்த மலையின் அடிவாரத்திலிருந்தே துவங்கினோம். நம்முடைய இலக்கோ, உயரம் எவ்வளவாய் இருந்தாலும், இயேசுவை பின்பற்றி மலை உச்சியை அடையும் ஒரே நோக்கமேயாகும்! இவ்வாறு முன்னேறிச் செல்கின்ற நாம், நம்முடைய இளைய சகோதரர்களையும் சகோதரிகளையும் பார்த்து “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, என்னைப் பின்பற்றுங்கள்” என நீங்கள், இப்போது 100 மீட்டர்தான் உயர ஏறி இருந்தாலும், மற்றவர்களுக்கு தாராளமாக அழைப்பு தரலாம் (1கொரிந்தியர் 11:1).