WFTW Body: 

இயேசு தனது குழந்தைப் பருவத்திலிருந்தே ஞானத்தில் வளர்ந்தார் என்று லூக்கா 2:40,52-ல் வாசிக்கிறோம். தனது இளமையினிமித்தம், வாலிபர்கள் புத்தியீனமான காரியங்களைச் செய்வார்கள் என்றாலும், இயேசு தனது இளமையில் ஒருபோதும் புத்தியீனமான எதையும் செய்யவில்லை. இயேசுவை நம்முடைய முன்மாதிரியாக வைப்போமெனில், நம்முடைய இளமை பருவத்தில் பல புத்தியீனமான செயல்களைச் செய்வதிலிருந்து நாம் இரட்சிக்கப்படுவோம்.

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். ஆவிக்குரிய மரணத்திலிருந்து இரட்சிக்கப்படும்படி இயேசு ஜெபித்தார் - மேலும் அவர் "தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார்" (எபிரேயர் 5:7). இயேசுவை நேசித்ததுபோலவே தேவன் நம்மையும் நேசிக்கிறார். ஆகவே, இயேசுவைப் போலவே நாமும் தேவனுக்கு பயப்படுவோமெனில் நம்முடைய ஜெபங்களும் கேட்கப்படும்.

ஆதியாகமம் 22:12-ல், தனது ஏகசுதனை பலியிடத் தயாரானபோது "நீ தேவனுக்கு பயப்படுகிறவன் என்று இப்போழுது அறிந்திருக்கிறேன்" என்று தேவன் ஆபிரகாமைக்குறித்து நற்சாட்சிக் கொடுத்தார். அன்றையதினம் மலையுச்சியிலே ஆபிரகாம் அவனாகவே தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். தேவன் மாத்திரமே தனது கீழ்ப்படிதலைக் காண வேண்டும் என்று விரும்பினான். ஆபிரகாம் தனியாக இருந்தபோது ஒரு இரவில் தேவன் அவனோடு பேசியிருந்தார் (ஆதியாகமம் 22:1,2). தேவன் அவனிடம் பேசியிருந்ததை வேறு யாரும் அறியவில்லை. மேலும் தனிமையிலே ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். தனிமையில் செய்யும் காரியங்களில்தான் (என்ன செய்கிறோம் என்பது வேறு யாருக்கும் தெரியாதபோது) நாம் தேவனுக்குப் பயப்படுகிறோமா அல்லது இல்லையா என்பதைக் கண்டுபிடிப்போம்.

யோபு தேவனுக்குப் பயந்தவன் என்று தேவன் சாத்தானிடம் நற்சாட்சிக் கொடுத்தார் (யோபு 1:8). தேவன் நம்மைப் பற்றியும் சாத்தானிடம் பெருமையாக கூறினால் நல்லது - ஏனெனில் சாத்தான் இன்றும் உலகம் முழுவதும் சுற்றித்திரிந்தும், நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் முழுமையாய் அறிந்திருக்கிறான். ஒரு பெண்ணை தன் கண்களால் ஒருபோதும் காமத்துடன் பார்ப்பதில்லை என்று யோபு உடன்படிக்கை செய்திருந்தான் (யோபு 31:1). நியாயப்பிரமாணம் வழங்கப்படுவதற்கு முன்பும், புதிய உடன்படிக்கை நிறுவப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பேயும் வாழ்ந்த ஒருவர், வேதாகமம் இல்லாமல், பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், ஊக்குவிக்கவோ அல்லது சவாலிடவோ மற்ற சகோதரர்கள் இல்லாத ஒருவர், அத்தகைய முடிவை எடுக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது! நியாயத்தீர்ப்பு நாளில் யோபு எழுந்து, இந்த தலைமுறையை அதன் காமத்திற்காகவும், அதன் பாவத்திற்காகவும் குற்றம் சாட்டுவான்.

நாம் பின்பற்றக்கூடிய மற்றொரு சிறந்த உதாரணம் யோசேப்பு. அவன் தன் பெற்றோரிடமிருந்து வெகு தொலைவில் வாழ்ந்து வந்த இளைஞன். ஆயினும், அவன் நாளுக்கு நாள் ஒரு பாவமுள்ள ஸ்திரியால் சோதிக்கப்பட்டபோது, அவன் அவளைத் தொடர்ந்து எதிர்த்து, தேவனுக்குப் பயந்தபடியினால் அவளைவிட்டு ஓடிப்போனான் (ஆதியாகமம் 39:9).

பாலியல் இச்சை மற்றும் விபச்சாரம் என்ற கொடூரமான பாவத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க தேவபயம் மட்டுமே போதுமானது என்பதை யோபு மற்றும் யோசேப்பின் எடுத்துக்காட்டுகள் நமக்குக் காட்டுகின்றன. கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.

நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு” (1தீமோத்தேயு 4:15,16).