WFTW Body: 

நம்பிக்கை

இரக்கம்”, “சாந்தகுணம்”, “ஆவியில் எளிமை”, “ஜெயம்(பாவத்தின் மேல்)”... போன்ற வார்த்தைகளை போலவே “நம்பிக்கையும்” ஓர் புதிய உடன்படிக்கை வார்த்தை. மிகவும் சொற்ப விசுவாசிகளே நம்பிக்கையைக் குறித்து அதிகமாக யோசித்திருக்கிறார்கள். ஆனால், இது விளக்கவுரையில் கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நல்ல வார்த்தையே.

ரோமர் 5:2-4, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம், என்று கூறுகிறது. அப்படிப்பட்ட உபத்திரவங்களிலே நிலைத்திருந்து பரீட்சிக்கப்படுகிறதினால் நாம் உபத்திரவங்களில் மகிழ்கிறோம். அது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. அதன் பொருள் என்னவெனில், நம்முடைய கடந்த வாழ்க்கையிலிருந்து தேவன் நம்மை எவ்வாறு மாற்றினார் என்பதை நாம் காண்பதினால் நம்மில் இனி வரும் நாட்களிலும் தேவனால் காரியம் நிறைவுப்படுத்தப்படும் என்பதில் நமக்கு நம்பிக்கை உள்ளது.

வருங்காலத்திற்கான நம்பிக்கையினால் நம்மை நிரப்ப தேவன் விரும்புகிறார். நம்மை சுற்றியிருக்கிறவர்களைப்போல் கலக்கத்தோடும் சோர்வோடும் நாமும் வருங்காலத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை. நம்மில் நற்கிரியையைத் தொடங்கினவர் இயேசுகிறிஸ்துவின் நாள் பரியந்தம் அதை முடிய நடத்திவருவாரென்று நம்பி(பிலிப்பியர் 1:5), மிகுந்த நம்பிக்கையோடே நாம் முன்னோக்குகிறோம். ஊக்கமின்மைக்கும் மந்தமான மனநிலைக்கும் உறுதியான மாற்றுமருந்து நம்பிக்கையே.

நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்(எபிரேயர் 10:23). இதன் அர்த்தம், இப்போழுது நாம் தோற்கடிக்கப்பட்டவர்களாயும் இருந்தால் கூட, தேவன் நமக்கு வெற்றியை தருவார் என்றும், அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை நம்மிலே நிறைவேற்றுவார் என்றும் நம் வாயினால் தைரியமாய் அறிக்கையிட வேண்டும். நம்பிக்கையில் நாம் சந்தோஷம் கொள்ள வேண்டும். தேவன் தங்களுக்கு செய்தவற்றிற்காக, தேவனுக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்பது விசுவாசிகளுக்குள் பொதுவானதே. ஆனால், தேவன் நமக்கு செய்யப்போகிறதின் மேலுள்ள நம்பிக்கையிலும் நிச்சயம் சந்தோஷப்படவேண்டும்.

சங்கீதம் 1:3ல் உள்ள வாக்குத்தத்தம், “அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”. நம்முடைய வாழ்க்கைக்கு இதுவே தேவனுடைய சித்தமாயிருக்கிறது, மேலும், கிறிஸ்துவில், நம் பிறப்புரிமையாக இதை நாம் சுதந்தரிக்க வேண்டும்.

சந்தோஷம்

தேவனுடைய சமூகத்தில் நாம் இருக்கிறோம் என்பதை அறிந்துக்கொள்ள ஒரு வழி, நிரம்பி வழிகிற சந்தோஷம் - ஏனெனில், “அவருடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தம்”(சங்கீதம் 16:11) என்று எழுதியிருக்கிறது. தேவனுடைய ராஜ்யம் நம்முடைய இருதயங்களில் வந்திருக்கிறது என்று இவ்வாறும் நாம் அறிகிறோம் - ஏனெனில், “தேவனுடைய ராஜ்யம் நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறதே”(ரோமர் 14:17). பாவத்தை வெறுத்து நீதியை நேசிப்பதன் மூலமே இந்த சந்தோஷம் நமக்குச் சொந்தமாகும் - ஏனெனில், “நீதியை விரும்பி அக்கிரமத்தை வெறுக்கிறவர்களே”(எபிரேயர் 1:9) ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் பண்ணப்படுவார்கள். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே எல்லா நேரங்களிலும் உங்களுக்கு பெலனாய் இருப்பதாக(நெகேமியா 8:10). சந்தோஷம், உங்கள் சோதனைக்கு எதிரான போராட்டத்தை மிக இலகுவாக்கும்.

இரண்டு காரணங்களுக்காக நாம் எதிர்கொள்ளும் சோதனைகளில் சந்தோஷப்படவேண்டும் என்று யாக்கோபு கூறுகிறார்(யாக்கோபு 1:1-4). (1) நம்முடைய விசுவாசம் உண்மையானதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும் (அதாவது, ஏழையாய் இருக்கும்போதே நாம் ஐஸ்வரியவான் என்று நம்மை நாமே முட்டாளாக்கிக்கொள்ளாமலிருக்க, நம்மிடம் உள்ள தங்கம் சொக்கத்தங்கமா இல்லையா என்பதை கண்டறிவதைப்போல்). (2) நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது.

உபத்திரவங்களை நாம் களிப்போடு கடந்து வருவதின் விளைவுகள் ஆச்சரியமானவைகள். விசுவாசிகளுக்குள் வீணாக்கப்பட்ட உபத்திரவம் அநேகம் உண்டு. அப்படிப்பட்டவர்கள் தங்கள் உபத்திரவத்தினால் உண்டாகும் பலனை அடைவதில்லை, ஏனெனில் சந்தோஷப்படுவதற்குப் பதிலாக அவர்கள் குறைக்கூறிக்கொண்டும் முறுமுறுத்தபடியும் இருந்தார்கள்.