WFTW Body: 

தேவனுக்கு முன்பாக வாழும் ஜீவியமானாலும் அல்லது ஊழியமானாலும், "சுயத்தை மையமாகக் கொண்டு” வாழ்பவன் “சட்ட-திட்ட பிரமாணத்திற்குட்பட்ட ஆவியோடுதான் எப்போதும் இருப்பான். சுயத்தில் உள்ளவன் கூட தேவனுக்கு ஊழியம் செய்திட முடியும். சொல்லப் போனால், இன்னமும் அதிக சுறுசுறுப்போடும் அவன் ஊழியம் செய்திட முடியும்! ஆனால், அவனது அனைத்து ஊழியமும் "சட்ட திட்ட ஆவியின்படியேதான் இருக்கும்!! தேவனுக்கு அவன் செய்திட்ட எந்த ஊழியத்திலும் ஓர் பிரதிபலனை எப்போதும் தேடுகிறவனாகவும் இருப்பான்!! அந்த மூத்த குமாரன்' தன் தகப்பனைப் பார்த்து “இத்தனை ஆண்டுகளாய் நான் உமக்கு ஊழியம் செய்தேனே!'' என ஆரம்பித்து “ஆகிலும், நீரோ எனக்கு ஒரு ஆட்டுக் குட்டியை கூட தந்ததில்லையே!!" என வெதும்பினான். பார்த்தீர்களா? இத்தனை காலமும் இவன், தன் “தகப்பனிடமிருந்து பிரதிபலனைப் பெறுவோம்” என்ற நீண்ட எதிர்பார்ப்போடுதான் அவருக்கு ஊழியம் செய்திருக்கிறான். அந்த எதிர்பார்ப்பு அன்றுவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அந்த இக்கட்டான நேரத்தில், அவன் உள்ளத்தில் உறைந்து கிடந்த உண்மை இப்போது வெளிவந்துவிட்டது.

இவ்வாறு “சுயம்” கொண்ட மனிதன் தேவனுக்கு செய்திடும் ஊழியம் மனப்பூர்வமான இலவசமாய் இருப்பதில்லை! பொங்கி எழுந்த மகிழ்ச்சியில் செய்யப்படுவதும் இல்லை! மனமுவந்து ‘தானாகவே' செயல்படுவதும் இல்லை! இவைகளுக்குப் பதிலாக “தன் ஊழியத்திற்குரிய பிரதிபலனைப் பெறும் நம்பிக்கையோடு" மாத்திரமே செயல்படுகிறது. அந்த நம்பிக்கை, ஏதாகிலும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாகக் கூட' இருந்திட முடியும். இது போன்ற நோக்கங்களோடு செய்திடும் ஊழியங்கள் "சட்ட திட்ட பிரமாணத்திற்கு உட்பட்டவைகளுமாகும் தேவனால் அங்கீகரிக்கப்படக் கூடாதவைகளுமாய்" இருக்கிறது.

இத்தனை ஆண்டுகால தன் சேவைகளுக்கு எந்த பிரதிபலனையும் தராத தகப்பனை கடின நெஞ்சனாகவும், கொடிய கயவனுமாகவே இந்த 'மூத்த குமாரன்' கருதிவிட்டான். இந்த மூத்த குமாரன், இயேசு குறிப்பிட்ட 'ஒரு-தாலந்து' உடைய ஊழியனைப்போலவே இருந்தான். தன் ஒரு தாலந்தை ‘ஒரு சீலையில்' முடிந்து வைத்து விட்ட அவன், தன் எஜமானனைப் பார்த்து “நீர் தந்த இந்த தாலந்தை நான் வாணிபம் செய்யவில்லை! ஏனென்றால், அந்த வாணிபத்தின் பலனை அல்லது அதன் லாபத்தை நீர் என்னிடம் கேட்பீர் என்று அறிந்து பயந்திருந்தேன்! நீர் அத்தனை கடினமான எஜமான் என்பதை நான் அறிவேன்!!” (லூக்கா 19:20,21 - Living Bible) என்றே கூறிவிட்டான்! ஆம், "தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கை” கடினம் என்றே “சுயம்” எப்போதும் கருதுகிறது. ஆகவே, தன் சொந்த முயற்சியில் அதிக பிரயாசப்பட்டு தேவனுடைய ஊழியங்களைச் செய்கிறது. முடிவில், தன்னிடம் தேவன் வருத்தி வேலை வாங்குவதாகவும் இந்த “சுயம்” எண்ணிக் கொள்கிறது!!

மேற்கண்டது போன்ற ஊழியத்தையா தேவன் நம்மில் எதிர்பார்க்கிறார்? இல்லவே இல்லை! தேவனோ, “உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்திலேயே பிரியமாயிருக்கிறார்!” (2கொரிந்தியர் 9:7). தனக்கு ஊழியம் செய்வதில்கூட, ஒருவன் விசனமாயோ அல்லது கட்டாயமாயோ அல்லாமல், அதை மிகுந்த உற்சாகத்தோடு செய்திடவே தேவன் எப்போதும் விரும்புகிறார்! அதேபோல், தன் ஊழியத்தை 'அசதியாய்' ஒருவன் செய்வதைவிட, அதைச் செய்யாமல் இருக்கவே தேவன் விரும்புகிறார்! ஏனெனில், ஒருவன் பிரதிபலன் எதிர்நோக்கி ஊழியம் செய்பவனாயிருந்தால், அதைக் கொஞ்சகாலம் செய்துவிட்டுப் பின்பு “தேவன் தன்னைப் போதுமான அளவு ஆசீர்வதிக்கவில்லை!” என வெகு சீக்கிரத்தில் தேவனை குறைகூறி பின்தங்கிவிடுவான்! மேலும், தன்னைப்போல் ஊழியம் செய்த ஒருவன், அதிக ஆசீர்வாதங்களைப் பெற்றதை இவன் கண்டுவிட்டால், அவன் நிலைமை இன்னமும் பின்தங்கி மோசமாகிவிடும்!!

நாமும் இவ்வாறே நம் ஊழியத்தையும், நாம் பெற்ற ஆசீர்வாதத்தையும் மற்றவர்கள் பெற்றிருப்பவைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறவர்களாய் இருக்கிறோமா? ஒப்பிட்டுப் பார்த்து செய்திடும் எந்த ஊழியமும் "சட்ட-திட்ட பிரமாணத்திற்கு" உட்பட்ட ஊழியமாகவே எப்போதும் இருக்கும். ஒரு எஜமான், தன் வேலைக்காரர்கள் சிலரை வெவ்வேறு மணிநேரங்களில் நியமனம் செய்த உவமானத்தை இயேசு ஒரு சமயம் கூறினார். ஆகிலும், வெவ்வேறு மணி நேரங்களில் பணிபுரிந்த அனைத்து வேலைக்காரர்களுக்கும் அந்த எஜமானனோ ஒரேவிதமாய் 'ஒரு வெள்ளிப் பணத்தையே" வேலை முடிவில் கொடுத்தான். ஆகவே, அதிக நேரங்கள் பணிபுரிந்த வேலையாட்கள் அந்த எஜமானிடம் வந்து, “நீர் எப்படி குறைவான நேரத்தில் வந்து வேலை செய்தவர்களுக்கும் எங்களைப்போலவே சம்பளம் தரலாம்? நாங்கள் அதிக சம்பளம் பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள்!'' என குறை கூறினார்கள். யார் இவர்கள்? சம்பளத்திற்காக ஊழியம் செய்தவர்கள்! அந்த சம்பளத்தை ஒத்துக்கொண்டுதான் இவர்கள் வேலைக்கு வந்தபோதிலும், மற்றவர்களுக்கோ தங்களைப்போலவே சம்பளம் தரக்கூடாது என முறையீடு செய்தவர்கள்!! (மத்தேயு 20: 1-16). இதே மனோபாவத்தையே இந்த மூத்த குமாரனும் பெற்றிருந்தான்!

“இந்த அனைத்து வசதிகளையும் இந்த இளையகுமாரனுக்கு நீர் எப்படித்தரலாம்? அவனல்ல, நானே உமக்கு இத்தனை காலமும் உண்மையாய் ஊழியம் செய்தவன்!” என்றே மூத்த குமாரன் தன் தகப்பனிடம் முறுமுறுப்போடு கூறினான்.

இவ்வாறாகவே இஸ்ரவேலர்களும் முறுமுறுப்போடு தேவனை சேவித்தபடியால், தேவன் அவர்களை சிறையிருப்பின் நுகத்திற்குள் அனுப்பிவிட்டார்! அதை அவர்களிடம் அவர் கூறும்போது “நீ மகழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம்.. நீயோ உன் சத்துருக்களைச் சேவிப்பாய்” (உபாகமம் 28:47,48) என்றே கூறினார். இவ்வாறு ஒரு பிரமாணத்திற்கு உட்பட்டவரையறைக்குள் ஊழியம் செய்பவர்கள் மீது தேவன் எக்காலமும் பிரியமாய் இருந்ததே இல்லை!!

தன் சுயத்தை மையமாய் கொண்டு வாழும் கிறிஸ்தவர்கள் செய்திடும் ஊழியங்கள், மற்றவர்களுடைய கண்களுக்கு முன்பாகத் தங்கள் ஆவிக்குரிய மேன்மையை முத்திரை பதிப்பதற்காகவே ஊழியம் செய்கிறவர்களாய் இருக்கிறார்கள். கிறிஸ்தவ ஊழியத்தில் இவர்கள் காட்டும் சுறுசுறுப்பு, தூய்மையானதும் அல்ல! கிறிஸ்துவின் மீது கொண்ட ஊக்கமான அன்பினால் தூண்டப்பட்டதும் அல்ல! மாறாக, தாங்கள் இவ்வித சுறுசுறுப்பான ஊழியம் செய்யாவிடில், எங்கே மற்றவர்கள் தங்களை “இவன் ஆவிக்குரியவனே அல்ல!” என சொல்லி விடுவார்களோ என்ற அச்சமே காரணமாகும்!! இதுபோன்றவர்கள், தங்கள் ஊழியப்பாதை தாங்கள் விரும்பியபடியே இலகுவாயும், பொருளாதார ஆதாயமும் உடையதாய் இருப்பதைக் கண்டுவிட்டால் "இந்த ஊழியத்திற்கு தேவனே என்னை கரம்பிடித்து நடத்தியிருக்கிறார்!” எனக் கூறி அதிக பிரயாசம் எடுத்து மற்றவர்களைக் கவர்ச்சிப்பதற்கு நாடுவார்கள்!! இவ்வாறெல்லாம் தங்கள் ஊழியத்தை நியாயப்படுத்துவதற்கு யாதொரு அவசியமும் இல்லையே! அப்படியிருக்க இவர்களோ "எங்கே, தன் ஆவிக்குரிய தன்மையை மற்றவர்கள் குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ!" என்ற அவர்களுக்குள் இருக்கும் அச்சமே அவ்வாறெல்லாம் கூறி கடும்பிரயாசப்பட அவர்களைத் தூண்டுகிறது! இவ்வித மனப்பான்மையோடு கர்த்தருக்கு ஊழியம் செய்வது எத்தனை சிரமும், அடிமைத்தனம் கொண்டதுமாய் இருக்கிறது!!

இதற்கு மாறாக, கிறிஸ்துவின் மீது கொண்ட பேரன்பில் பொங்கிவரும் ஊழியத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி! எத்தனை சுயாதீனமான விடுதலை!! நம் ஜீவிய சக்கரத்திற்கு, 'அன்பானது' ஓர் எண்ணையைப்போலவே கிரியை செய்கிறது… அதுபோன்ற சக்கரத்தின் சுழற்சியில் யாதொரு சிக்குவதுபோன்ற உராய்வோ அல்லது குறை சொல்லுதலோ இருப்பதே இல்லை!! ராகேலை அடைவதற்கு யாக்கோபு ஏழு வருடங்கள் கடுமையாய் வேலை செய்தான். ஆனால் அந்த கடுமையான ஏழு வருடங்களை வேதம் எவ்வாறு குறிப்பிடுகிறது தெரியுமா? “அவள்பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த ஏழு வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது!” (ஆதியாகமம் 29:20). இதைப்போலவேதான், ஆண்டவர் மீது கொண்ட பேரன்பில் பொங்கிவரும் ஊழியமும் நமக்கு இருக்கும்!! அதில் எந்த கஷ்டமான பிரயாசமும், முறுமுறுப்பும் இருப்பதில்லை!!

தன் சபையின் மீது கிறிஸ்து கொண்டிருக்கும் உறவு, ஒரு கணவன் தன் மனைவியிடம் கொண்ட உறவுக்கு ஒப்பானது என்றே வேதம் நமக்குப் போதிக்கிறது. ஒரு கணவன் தன் மனைவியிடம் பிரதானமாய் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு என்ன? அவளுடைய பணிவிடை அல்ல! தனக்கு உணவு சமைக்க வேண்டும்... துணிகளைத் துவைக்க வேண்டும் என்பதைப் பிரதானமாய் கொண்டு அவன் அவளைத் திருமணம் செய்யவில்லை. ஆம், அவனுடைய பிரதான விருப்பமாய் இருந்ததெல்லாம் அவளுடைய அன்பே" ஆகும். அது இல்லாமல், மற்ற அனைத்தும் யாதொரு மதிப்பும் அற்றவைகளேயாகும். இதே போன்றுதான், தேவனும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்!!