WFTW Body: 

யோசுவா 1:1-2, “கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக்கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்… என்றார்” என்று கூறுகிறது. தேவன் தாமே யோசுவாவை உயர்த்தி, அவனை மோசேக்கு அடுத்த தலைவனாக நியமித்தார். தேவனே நம்மை அந்த நிலைக்கு நியமிக்கவில்லை என்றால், தலைமைத்துவத்தை திறம்பட செய்ய முடியாது. அவனது காலடி மிதிக்கும் எவ்விடமும் அவனுக்குக் கொடுக்கப்படும் (யோசுவா 1:3) என்றும் அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் அவனுக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை (யோசுவா 1:5) என்றும் ஆண்டவர் யோசுவாவிடம் கூறினார். “நீங்கள் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” என்று ரோமர் 6:14-ல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள புதிய ஏற்பாட்டு வாக்குத்தத்தத்தின் அடையாளமாக இது இருக்கிறது. கானான் தேசம் கடந்த காலத்தில் பல ராட்சதர்களால் ஆளப்பட்டுவந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் தோற்கடிக்கப்படுவார்கள். ஒரு பாவம் கூட (எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருந்தாலும்) நம்மை மேற்கொள்ள முடியாது. அதுவே நம்மைக்குறித்த தேவனுடைய சித்தம். ஆனால், யோசுவா உண்மையில் தனது கால்களை தேசத்தின் ஒரு பகுதியில் வைத்து அதை கர்த்தருடைய நாமத்தில் உரிமைகோர வேண்டியிருந்தது. அப்போதுதான் அது அவனுடையதாகும். நமக்கும்கூட அப்படியேதான். விசுவாசத்தினால் நம் சுதந்தரத்தை நாம் உரிமை கோர வேண்டும். தேவனுடைய வாக்குத்தத்தங்களை நம்முடையது என்று நாம் பற்றிப் பிடிக்கவில்லை என்றால், அவை நம் வாழ்வில் ஒருபோதும் நிறைவேறாது.

இயேசுவின் நாமத்தினால் பவுல் சுவிசேஷத்திலுள்ள தனது உரிமைகளைக் கோரினார், இதன் விளைவாக அவர் ஒரு மகிமையான வாழ்க்கைக்குள் வந்தார். 2கொரிந்தியர் 2:14-ல், “கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று அவர் கூறுகிறார். "எப்போதும் வெற்றியில்" என்பது பவுலின் வெற்றிப் பாடலாயிருந்தது - அது நம்முடைய பாடலாகவும் இருக்கமுடியும். ஆனால், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த வெற்றி வாழ்க்கைக்குள் ஒருபோதும் நுழைவதில்லை. 6,00,000 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து வெளியே வந்தார்கள்; ஆனால் அவர்களில் இருவர் மட்டுமே - யோசுவா மற்றும் காலேப் - கானானுக்குள் நுழைந்தார்கள். இன்றும் கிட்டத்தட்ட அதே விகிதத்தில் தான் (6,00,000-த்தில் 2 பேர்) கிறிஸ்தவர்கள் வெற்றி வாழ்க்கைக்குள் நுழைகின்றனர். "தேவன் தேசத்தை சுதந்தரிக்கச் சொல்லியிருப்பாரென்றால், நாம் அதைச் செய்யக் கூடும்" என்ற மனப்பான்மை கொண்டிருந்ததாலேயே, யோசுவாவும் காலேப்பும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைந்தார்கள். அதுதான் விசுவாசம். விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்தங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்கிறது, ஒருபோதும் நாம் எதிர்கொள்ளும் சிரமங்களை அல்ல. மற்ற இஸ்ரவேலர்கள், “இது சாத்தியமற்றது. ராட்சதர்கள் மிகவும் பெரியவர்கள், சக்திவாய்ந்தவர்கள்” என்றார்கள். இன்றும் கிறிஸ்தவர்கள் கோபத்தையும், கண்களின் இச்சையையும் வெல்ல முடியாது என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் இந்த இச்சைகள் மிகவும் சக்திவாய்ந்தவை என்றும், அவை இவ்வளவு காலம் தங்களை ஆட்சி செய்தன என்றும் எண்ணுகின்றனர். அத்தகைய விசுவாசிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தோற்கடிக்கப்படுகிறார்கள்; மேலும் (ஆவிக்குரிய விதத்தில் சொல்லுவோமானால்) வனாந்தரத்தில் அழிந்து போகிறார்கள்.

நான் உன்னுடனே இருப்பேன்” என்று கர்த்தர் யோசுவாவுக்கு வாக்களித்தார். இதனால்தான் எந்த ஒரு மனிதனும் யோசுவாவுக்கு முன்பாக நிற்க முடியவில்லை. சில கோட்பாடுகளை நம்புவதன் மூலமோ அல்லது சில அனுபவங்களின் மூலமோ நாம் பாவத்தை வெல்ல மாட்டோம். இல்லை. அவருடைய ஆவியின் மூலமாக, தொடர்ச்சியாக அவருடைய பிரசன்னம் நம்மிடத்தில் இருப்பது மாத்திரமே ஜெயம்கொள்ள உதவும். அவர்களுடைய இருதயங்கள் சுத்தமாயிருப்பதினிமித்தம் தாம் ஆதரித்து அங்கீகரிக்கக்கூடிய அத்தகைய தலைவர்களை கிறிஸ்தவத்தில் தேவன் இன்று தேடுகிறார். கர்த்தர் யோசுவாவிடம், “பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்” (யோசுவா 1:6) என்று கூறினார். எந்த பாவத்திற்கும் நாம் பயப்படக்கூடாது. நாம் வெளியே சென்று, பல ஆண்டுகளாகப் பாவத்தால் ஆளப்பட்டுவந்த தங்கள் சரீரத்திலுள்ள பாவத்தை வெல்ல தேவஜனங்களுக்கு உதவ வேண்டும். அவர்களை விசுவாசத்திற்கும் இரண்டு ஞானஸ்நானங்களுக்கும் கொண்டு வருவது மட்டும் போதாது - இரத்தத்தை கதவுகளில் பூசுவதும், செங்கடலைக் கடப்பதும் மற்றும் மேகத்தினால் மூடப்பட்டிருப்பதும். அது ஓர் ஆரம்பம் தான். அது பாலர்பள்ளிப் பாடம் மட்டுமே. பாலர்பள்ளி வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் நம்முடைய குழந்தைகளின் கல்வியை நாம் நிறுத்துகிறோமா? இல்லை, ஆனால் இன்று கிறிஸ்தவத்தில் அதுதான் நடக்கிறது.

மேகஸ்தம்பம், அதாவது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம், வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அவர்களை வழிநடத்தும்படி வந்தது. அவர்கள் 2 ஆண்டுகளில் பிரவேசித்திருக்க வேண்டும், ஆனால் அவர்களுடைய தலைவர்கள் விசுவாசியாதபடியினால் அவர்கள் 40 ஆண்டுகளாக பிரவேசிக்கவில்லை. "விசுவாசம் கேள்வியினால் (கேட்பதன் மூலம்) வருகிறது" (ரோமர் 10:17). சபை கூட்டங்களில் விசுவாசிகளுக்கு இந்த உண்மைகள் கற்பிக்கப்படாவிட்டால், அவர்கள் எப்படி விசுவாசிக்க முடியும்? அப்படியானால், அவர்கள் எவ்வாறு பாவத்தை வெல்ல முடியும்?

கர்த்தர் யோசுவாவிடம்: “என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக” (யோசுவா 1:7) என்றார். தேவனுடைய வார்த்தை, “பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” (ரோமர் 6:14) என்று சொன்னால், அதை விசுவாசித்து, அறிக்கைசெய்யுங்கள். வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இதன் பொருள்: அந்த வாக்குத்தத்தத்தின் அகலத்தைக் குறைக்க வேண்டாம். சில பாவங்களுக்கு மட்டுமே அந்த வாக்குத்தத்தம் பொருந்தும் என்பதாக எண்ணி அதைக் குறைக்க வேண்டாம். அதே சமயம், வாக்குத்தத்தம் சொல்வதை விட அதிகமாக அர்த்தப்படுத்த வேண்டாம். இந்த பூமியில் கிறிஸ்துவைப் போலவே நாம் பரிபூரணராக இருக்க முடியும் என்று சொல்லாதீர்கள். இந்த பூமியில் நாம் பாவமில்லாத-பரிபூரணராக இருக்க முடியாது. அந்த வாக்குத்தத்தம் அப்படிச் சொல்லவில்லை. இது பாவம் (தன்னுணர்வுள்ள பாவம்) என்று நமக்குத் தெரிந்திருப்பவற்றை வெல்வதை மட்டுமே குறிக்கிறது. கிறிஸ்து திரும்பி வரும்போது தான் நாம் முற்றிலும் அவரைப் போல இருக்க முடியும். 1யோவான் 3:2 இதை மிகத் தெளிவாகக் கூறுகிறது. ஆகவே, நாம் வேதத்திற்கு அப்பால் செல்லக்கூடாது, வேதம் வாக்களித்ததைவிட குறைவாக விசுவாசிக்கக்கூடாது.