WFTW Body: 

எபிரேயர் 3:7,8-ம் வசனம் நம்மை எச்சரித்து “இன்று அவருடைய சத்தத்தை கேட்பீர்களாகில், உங்கள் இருதயங்களை கடினப்படுத்தாதிருங்கள்” எனக் கூறுகிறது. அதற்குப் பிறகு எபிரேயர் 3:12-ம் வசனம் “சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கு ஏதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” எனவும் கூறுகிறது. இந்தப் புத்தகத்தை எழுதிய பரிசுத்தவான் எச்சரிப்பதைப்பாருங்கள்: “பரிசுத்த சகோதரரே” “பரம அழைப்பிற்கு பங்கானவர்களே” உங்களில் ஒருவராகிலும் பொல்லாதவர்களாய் போய்விடாதபடிக்கு அவிசுவாசமுள்ள இருதயம் உங்களுக்கு வேண்டாம். இதுவே, இயேசு நம்மைப்போலவே வந்தார் என்ற மாபெரும் சத்தியத்தை நம்பாத அவிசுவாசம்! நீங்கள் தோல்வியின் ஜீவியத்தில் சலிப்படைந்தவர்களாய் மாறிய பின்பே “இயேசு உங்களைப் போலவே வந்து, உங்களுக்கு மாதிரியாய் மாறினார்” என்ற வெளிச்சத்தை உங்களுக்கு தேவன் தருவார். நானும் ஒரு காலத்தில், முற்றிலும் தோற்கடிக்கப்பட்ட கிறிஸ்தவனாயிருந்தேன். ஆனால், என்னுடைய தோல்வியின் ஜீவியத்தால் மனசலிப்புற்றேன். நான் இரவும் பகலும் தேவனை நோக்கி "கர்த்தாவே, என் தோல்விக்கு விடையை நான் காணமுடியவில்லை. நான் ஒரு பிரசங்கி, ஆனால் நானோ என் உள்ளான ஜீவியத்தில், பாவத்தில் தோல்வியடைந்து வாழ்கிறேன். என் சிந்தையிலும், என் வார்த்தையிலும், என் குடும்ப ஜீவியத்திலும் தோல்வி! நான் மறுபடியும் பிறந்து, தண்ணீர் ஞானஸ்நானம் பெற்றிருக்கிறேன், ஆகிலும் தோல்வி! நான் அறிந்து கொள்ள வேண்டிய பகுதியை எனக்கு காண்பித்தருளும்” என ஜெபித்தேன். அப்போது கர்த்தர், தேவபக்தியின் இரகசியமாகிய “கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார்! என்னைப்போலவே எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டார்! ஆகிலும், ஓர் பரிசுத்த ஜீவியத்தை வாழ்ந்தார்!" இந்த சத்தியத்தை என் முழு இருதயமாய் விசுவாசித்தேன்.... இதுவே என் ஜீவியத்தை மாற்றியது. ஆனால் நமக்குள் "அவிசுவாசமான இருதயம்" இருக்குமென்றால், நாம் நிச்சயமாய் ஜீவனுள்ள தேவனை விட்டு விலகிச் சென்று விடுவோம் (எபிரேயர் 3:12).

இவ்வாறு நீங்கள் வீழ்ச்சி அடைவதற்குப் பதிலாக, அடுத்தவசனம் வேறொரு விடையைத் தருகிறது. அது என்னவெனில் “இன்று என்னப்படுமளவும், நாள்தோறும் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லுங்கள்” (எபிரேயர் 3:13), நாளை என்ன நடைபெறும் என்று நமக்குத் தெரியாது. ஆகவே 'இன்று' எதையாகிலும் நாம் செய்யக்கடவோம். இன்று யாராகிலும் ஒருவரை ஊக்குவிக்கக்கடவோம். இன்று யாராவது ஒருவருக்கு புத்தி சொல்லக்கடவோம். இந்த அதிகாரத்தின் பொருள்படி, யாராகிலும் சிலரை “நம்மைப் போலவே வந்த இயேசுவை கவனித்துப் பார்க்கும்படி' உற்சாகப்படுத்தக்கடவோம்.

நம் யாவருடைய அழைப்பும் 'ஒவ்வொரு நாளும்' இயேசுவை உயர்த்தி காண்பிப்பதேயாகும்! நம்முடைய நடக்கையும் நம்முடைய வார்த்தைகளும் எப்போதுமே “இயேசுவை நோக்கிப்பாருங்கள்! அவர் எவ்வளவு ஆச்சரியமான இரட்சகர்! அவர் என் பாவங்களை மன்னிப்பவர் மாத்திரமல்ல, என் ஜீவியத்தையே மாற்றியவர்! என் குடும்ப வாழ்க்கையை மாற்றியவர்! கர்த்தருடைய சந்தோஷத்தினால் என்னை நிரப்பி, நான் எப்பொழுதும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்கும்படிச் செய்தவர்! என்னிடமிருந்த மரணபயத்தை அகற்றியவர்! இந்த இயேசுவை கவனித்துப் பாருங்கள்” என பிறரை ஊக்குவிப்பதாய் இருக்க வேண்டும். இவ்வாறாக, நம்முடைய ஜீவியம் மற்றவர்களுக்கு 'ஒவ்வொரு நாளும்' சவால் நிறைந்ததும், உற்சாகப்படுத்துவதாயும் இருக்க வேண்டும். ஜனங்கள் உங்கள் முகத்தைப் பார்க்கும்போது, தேவனுடைய மகிமையின் சிறிதளவு சாரத்தையாவது பார்த்து விடவேண்டும்!

நாம் ஒரு பின்மாற்றக்காரனாய் முற்றுப்பெறுவதற்கு 24 மணிநேரங்களில்' அந்த சோகம் நிகழ்ந்து விட முடியும் என எபிரேயர் 3:13-ம் வசனம் எச்சரிக்கிறது. எனவேதான் நாம் ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லவும் உற்சாகப்படுத்தவும் வேண்டும். கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் 'ஒருவருக்கொருவர்' பொறுப்புடையவர்களாயிருக்கிறோம். காயீன் கூறும்போது “நான் என் சகோதரனுக்கு காவலாளியா?" எனக் கேட்டான். ஆனால், கிறிஸ்துவின் சரீரத்தில் நாம், நம் சகோதரர்களுக்கு காவலாளியாகவும்! நம் சகோதரிகளுக்கு காவலாளியாகவும்! இருக்கிறோம். யாரோ சிலர், வழுகிப்போவதைப்போல் நீங்கள் கண்டால் நீங்கள் தூக்கி எடுத்து உற்சாகப்படுத்துங்கள்!

உங்களை உற்சாகப்படுத்தவும் அல்லது உங்களுக்கு புத்தி சொல்லவும் யாரும் இல்லையென்றால்.... அந்த பகுதியை செய்திட, பரிசுத்தாவியும் வேதாகமமும் எப்போதும் துணையாய் நிற்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல், எத்தனையோ நாட்களில், என்னை உற்சாகப்படுத்தி, வேதாக மத்திலுள்ள அவருடைய வார்த்தைகளால் புத்தி சொல்லியிருக்கிறார். அது போலவே பேதுருவும், யாக்கோபும், யோவானும் எனக்கு புத்தி சொல்லி என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். அநேக சமயங்களில் எனக்கு புத்திகூறும்படி சகோதரர்கள் அருகில் இல்லாத பட்சத்தில், இந்த அப்போஸ்தலர்கள் வேதாகம பக்கங்களிலிருந்து தோன்றி என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வாறு, நம் எல்லோருக்குமே பேதுருவும் பவுலும் யோவானும் நம் அறைகளில் நம்மோடுகூட இருந்து, நம்மை ஒவ்வொரு நாளும் உற்சாகப்படுத்துவது ஆச்சரியமல்லவா. இவ்வாறாக அவர்கள் உங்களை ஊக்குவித்திட நீங்கள் ஏன் அனுமதிக்கக்கூடாது? நீங்கள் அவர்களை உங்கள் வேத புத்தகத்திலேயே வைத்து பூட்டிவைப்பது சரிதானா?

நீங்கள் நேரடியாக வேதாகமத்தையே வாசியுங்கள்! வேதாகமத்தைப் பற்றியுள்ள புத்தகங்களைவாசிப்பதைவிட 'வேதாகமத்தை வாசிப்பது நல்லது! வேதாகமவல்லுனர்கள் பேதுரு, பவுல், யோவான் நிருபங்களில் என்ன எழுதி வைத்திருக்கிறார்கள் என கூறுவதைக் கேட்பதற்கு நான் விரும்புவதில்லை. நான் அப்போஸ்தலர்களிடம் நேரடியாகவே கேட்க விரும்புகிறேன். ஆகவே ‘வேதாகமத்தை பற்றிய' புத்தகங்களை அல்ல, நான் வேதாகமத்தையே வாசிக்க விரும்புகிறேன்!