WFTW Body: 

இயேசு, தான் இப்பூமிக்குத் திரும்ப வரப்போகும் நிகழ்ச்சியை மத்தேயு-24ம் அதிகாரத்தில் தன் சீஷர்களிடம் விவரித்துப் பேசினார். அவ்வாறு கூறும்போது “விழிப்புடன் ஜாக்கிரதையாய் இருங்கள்” என்ற புத்திமதியை இயேசு ஒரு தடவைக்கும் மேலாகவே கூறி வலியுறுத்தினார் (மத்தேயு 24:42,44; மத்தேயு 25:13). ஆகவே ஆவிக்குரிய விழிப்புடன் எந்த சமயத்திலும் ஆயத்தமாக இருப்பதே முக்கியம், தீர்க்கதரிசன வியாக்கியானங்களை அறிந்து கொள்வதில் மாத்திரம் எந்த மேன்மையும் இல்லை! இதைக் கருத்தில் கொண்டே மத்தேயு 24-ல், தான் திரும்ப வரப்போகும் நாட்களுக்குரிய தீர்க்கதரிசனங்களை இயேசு கூறி முடித்தவுடன், தொடர்ந்து மத்தேயு 25-ல் நாம் அவருடைய வருகைக்கு ஆயத்தமாகும்படியான மூன்று பகுதிகளை எடுத்துக்கூறினார்!

1. அந்தரங்க ஜீவியத்தில் உண்மையுள்ளவர்களாயிருத்தல்!

மத்தேயு 25:1-13 - இவ்வசனங்களில் பத்து கன்னிகைகளை உவமானமாக வைத்து இயேசு பேசினார். இவர்கள் அத்தனை பேருமே கன்னிகைகள்தான்! யாக்கோபு 4:4 தரும் விளக்கத்தின்படியான ஆவிக்குரிய வேசிகள் அல்ல இவர்கள்! ஆம், இந்த பத்து பேருமே கன்னிகைகள். அதாவது.... மனுஷருக்கு முன்பாக இந்த பத்து பேரும் நல்ல சாட்சியைப் பெற்றிருந்தார்கள். இயேசு குறிப்பிட்டபடி இவர்களுடைய வெளிச்சமாகிய நற்கிரியைகள் மனுஷருக்கு முன்பாக பிரகாசித்துக் கொண்டுதான் இருந்தது (மத்தேயு 5:16). இருப்பினும் இந்த பத்துக் கன்னிகைகளில் ஐந்து பேர் மாத்திரமே புத்தியுள்ளவர்களாயிருந்தனர்! இந்த உண்மை ஆரம்பத்தில் எல்லோருக்கும் தெரியாமலேதான் இருந்தது. ஏனெனில், இவர்களில் ஐந்து பேர் மாத்திரமே தங்கள் (மறைவான) பாத்திரங்களில் எண்ணெயை கொண்டு போனார்கள் (மத்தேயு 25:4).

இருளில் “அந்த 10 பேருடைய பிரகாசமான தீவட்டி வெளிச்சத்தை” தெளிவாகக் கண்டதுபோல புத்தியுள்ள ஸ்திரீகள் கொண்டு சென்ற பாத்திரத்திலிருந்த எண்ணெய், அந்த இருளில் மற்றவர்களால் காணக்கூடாததாகவே இருந்தது. எண்ணெயுடன் கூடிய இந்தப் பாத்திரம், தேவனுக்கு முன்பாக மாத்திரமே காணப்படும் நம்முடைய மறைவான ஜீவியத்தையே குறிப்பிடுகிறது! நாம் எல்லோருமே, நமக்குள் அவரவர் ஒரு பாத்திரத்தை வைத்திருக்கிறோம். ஆனால் அந்தப் பாத்திரத்தில் ஏதாகிலும் எண்ணெய் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பதே இப்போது கேள்வியாகும். முழு வேதாகமத்திலும், எண்ணெயானது பரிசுத்தாவியானவருக்கு அடையாளமாகவே கூறப்பட்டுள்ளது. அதாவது, பரிசுத்தாவியானவர் மூலமாய் நம்முடைய ஆவியில் பரிமாற்றம் செய்யப்படும் தேவனுடைய ஜீவனையே (திவ்விய சுபாவ வாழ்க்கையையே) இந்த எண்ணெய் குறிக்கிறது. ‘மனுஷர் காணும்படியான' பரிசுத்த ஜீவியமே தீவட்டியில் எரிந்து கொண்டிருக்கும் ஒளியாகும் (யோவான் 1:4). ஆனால், ஒருவன் தன் அந்தரங்க வாழ்க்கையில் பெற்றிருக்கும் மறைவான ஜீவியமே 'எண்ணெயாகும்'. காரியம் இவ்வாறாக இருக்க, இன்று அநேகர் தங்களின் வெளியரங்கமான சாட்சியில் மாத்திரமே திருப்தி கண்டுவிட்டார்களே! இவர்களையே புத்தியில்லாதவர்கள் என இயேசு கூறினார். பாடுகளின் மத்தியிலும், பரீட்சையின் மத்தியிலுமே தங்களிடமிருந்த வெளியரங்கமான வெளிச்சம் போதுமானதாக இல்லை என்ற அவலநிலையை இவர்கள் காண்கிறார்கள்! எனவே, நாம் தொடர்ச்சியான ஜெயஜீவியம் செய்வதற்கு அந்தரங்கத்தில் வாழும் ஓர் திவ்விய வாழ்க்கை மிகுந்த அவசியமாயிருக்கிறது.

நீதிமொழிகள் 24:10-ம் வசனம், “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால் உன் பெலன் குறுகியது” என கூறி எச்சரிக்கிறது. 'ஆபத்துகளைப் போன்று' நம் ஜீவியத்தில் தோன்றும் சோதனைகளும் பாடுகளுமே, நாம் எவ்வளவு பெலன் உடையவர்களாயிருக்கிறோம் அல்லது எவ்வளவு பெலவீனமாயிருக்கிறோம் என்ற உண்மைநிலையை வெட்ட வெளிச்சமாக்குகிறது! பத்து கன்னிகைகளின் உவமானத்தில் "மணவாளன் வரத் தாமதித்ததே” ஆபத்தின் நேரம் அல்லது சோதனையின் நேரமாகும். இவ்வாறு நம்முடைய உண்மையான ஆவிக்குரிய தன்மையை “காலமே” பதில் சொல்ல வேண்டியதாயிருக்கிறது! ஆம், தன் விசுவாசத்தில் முடிவுபரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான்! மேலும் ஒருவன் தன் அந்தரங்கத்தின் எண்ணெயாகிய திவ்விய வாழ்க்கையை சேகரித்திருக்கிறானா? அல்லது இல்லையா? என்பதையும் “காலமே” அம்பலப்படுத்துகிறது! இன்று அநேகர், விதைப்பவனின் உவமானத்தில் வரும் அதிக மண்ணில்லாத இடத்தில் விதைக்கப்பட்டவர்கள் போலவே இருக்கிறார்கள். இவர்கள் வசனத்தைக் கேட்டவுடன் துரிதமாய் முளைத்துவிடுகிறார்கள். ஆனால் இவர்கள் ஆழமான மண்ணில்லாதவர்களாய் அல்லது அந்தரங்கத்தில் ஜீவனில்லாதவர்களாய் காணப்படுகிறார்கள் (மாற்கு 4:5). இதினிமித்தமே ஆரம்ப விசுவாசிகள்' ஆவிக்குரியவர்கள்தானா? அல்லது முழு இருதயம் கொண்டவர்கள்தானா? என்பதை மதிப்பிடுவது மிகவும் கடினமாயிருக்கிறது! நாம் சற்றே பொறுமையுடன் காத்திருந்தால் “காலம்" ஒவ்வொன்றையும் வெளியரங்கமாக்கிவிடும்! ஆகவே நம்மைச் சுற்றியுள்ள மனுஷர்கள் காணமுடியாத நம் அந்தரங்க வாழ்க்கையாகிய சிந்தைகள்; மனோபாவங்கள்; நோக்கங்களில் காணும் உள்ளான பரிசுத்த ஜீவியமும், தேவனுடைய பார்வைக்கு முன்பாக வாழும் ஓர் உண்மையான ஜீவியமுமே கிறிஸ்துவின் வருகைக்கு நாம் ஆயத்தமாவதற்குரிய சரியான வழியாகும்! பாத்திரத்திலிருக்கும் எண்ணெயைப் போன்ற, ஒப்பற்ற இந்த அந்தரங்க ஜீவியம் உங்களில் காணப்படவில்லையென்றால், நீங்கள் எவ்வளவுதான் “நானும் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாயிருக்கிறேன்!" எனச் சொல்லிக் கொண்டாலும், அது உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதேயாகும்!

2. தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஊழியத்தில் உண்மையுள்ளவர்களாயிருத்தல்!

மத்தேயு 25:14-30 - அந்தரங்க ஜீவியத்தில் ஆயத்தமாயிருக்கும்படி பத்து கன்னிகைகளின் உவமையை கூறி முடித்தபின், இயேசு இந்த இரண்டாவது உவமையைக் கூறினார். தேவன் நம் ஒவ்வொருவருக்கும் தந்த தாலந்துகளை உண்மையுள்ளவர்களாய் உபயோகிக்க வேண்டும் என வலியுறுத்தவே இந்த இரண்டாவது உவமையை இயேசு கூறினார். இந்த தாலந்துகள் யாதெனில்: நமக்குச் சொந்தமான உடைமைகள், பணம், சுபாவமான திறமை, வாழ்க்கையில் கிட்டும் சந்தர்ப்பங்கள், நேரங்கள் மற்றும் ஆவிக்குரிய வரங்கள்.... போன்றவைகளேயாகும். நாம் எல்லோரும் தாலந்துகளை ஒரே சமமாகப் பெற்றிருக்கவில்லை! எப்படியெனில் இந்த உவமையில் ஒருவன் ஐந்து தாலந்துகளையும், மற்றொருவன் இரண்டு தாலந்துகளையும், வேறொருவன் ஒரு தாலந்தையும் உடையவர்களாய் இருந்தனர். இருப்பினும் வித்தியாசமான தாலந்துகளைப் பெற்ற இவர்கள், கிடைக்கும் சந்தர்ப்பத்தை உபயோகிப்பதில் சரிசமமான நிலையிலேயே இருந்தனர்! எவரிடம் அதிகம் கொடுக்கப்பட்டதோ, அவரிடம் மாத்திரமே அதிகம் கேட்கப்பட்டது. எனவேதான் தன்னுடைய இரண்டு தாலந்தை நான்காகப் பெருக்கியவன், ஐந்து தாலந்துகளைப் பத்தாகப் பெருக்கிக் கொண்ட மனிதன் பெற்ற அதே பலனைப் பெற்றான்! காரியம் இவ்வாறாக இருந்ததினிமித்தமே, ஒரு தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தவன் மீது ஆக்கினைத்தீர்ப்பு வந்தது (மத்தேயு 25:18). இவன் தன்னுடைய தாலந்தை தேவனுக்காக உபயோகிக்காமல் “நிலத்தில்' அதாவது, இப்பூமிக்குரியவைகளுக்காகவே செலவழித்தான்! நம்மில் ஒருவர்கூட, “தேவன் எனக்கு ஒரு தாலந்தும் தரவில்லை!" எனக் கூறவே முடியாது. ஏனெனில் நாம் எல்லோருமே தேவனிடத்திலிருந்து ஏதாகிலும் சில தாலந்துகளைப் பெற்றிருக்கத்தான் செய்கிறோம்! இப்போது நம்மை அண்டிவரும் கேள்வியெல்லாம், “இந்த தாலந்துகளை நாம் எதற்காக உபயோகப்படுத்தப்போகிறோம்?” என்பதுதான். நாம் நமக்கென இவ்வுலகத்திற்காகவே உபயோகிப்பது, பூமியில் தாலந்தை புதைப்பதற்கு ஒப்பாகும்! தேவனுடைய மகிமைக்கென உபயோகிக்கப்பட்ட தாலந்துகள் மாத்திரமே நித்தியத்தில் ஆதாயமாகக் கணக்கிடப்படும்! இந்தத் தரத்தின்படி சீர்தூக்கிப் பார்க்கும்போது, இன்றைய அநேக விசுவாசிகள் ‘மகா தரித்திரத்தில்' இருப்பதையே காண்கிறோம். “எல்லாம் தேவனுக்கே! எனக்கென்று எதுவும் வேண்டாம்!” என்பதே நம் வாழ்வின் இலட்சியமாக இருக்கவேண்டும். அப்படி நீங்கள் இருப்பீர்களென்றால், கிறிஸ்துவின் வருகைக்கு நீங்கள் ஆயத்தத்துடன் இருக்கிறீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமே கிடையாது! ஆம், நமக்குண்டான யாவையும் வெறுக்காத பட்சத்தில் நாம் ஒருபோதும் இயேசுவின் சீஷனாய் இருந்திடவே முடியாது. தேவன் தனக்குத் தந்த எல்லா உடைமைகளையும், தாலந்துகளையும் ஆண்டவருக்காகவே உபயோகிக்காமல் இருந்துகொண்டு, “நானும் கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாய்தான் இருக்கிறேன்!" எனக்கூறுவானென்றால் அவன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டவனேயாவான்! நாம் விழிப்புடன் இருக்கக்கடவோம்!

3. தங்கள் சகவிசுவாசிகளுக்கு ஊழியம் செய்வதில் உண்மையுள்ளவர்களாயிருத்தல்!

மத்தேயு 25:31-46 - கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாயிருப்பதற்கு இயேசு இந்த கடைசிப் பகுதியைக் கூறினார். இந்நிகழ்ச்சியில் நம் சகவிசுவாசிகளின் தேவைக்கு நாம் எங்ஙனம் ஊழியம் செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைத்தார். அந்த தேவை ஆவிக்குரிய தேவையாகவோ அல்லது சரீரப்பிரகாரமான தேவையாகவோகூட இருக்கலாம். இந்த உவமையில் வரும் ஊழியர்களில் சிலர் மாத்திரமே ராஜ்ஜியத்தை சுதந்தரித்தார்கள் என காண்கிறோம். ஏனெனில் இவர்கள் மாத்திரமே தங்கள் சகவிசுவாசிகளுக்கு “கர்த்தரைச் சேவிப்பதைப் போல” ஊழியம் செய்து பணிவிடைபுரிந்தார்கள். இவ்வித அவர்களுடைய அக்கறை மிகுந்த பணிவிடை ஊழியம், வலது கை செய்ததை இடது கை அறியமுடியாத அளவிற்கு அவ்வளவாய் இரகசியமாய் இருந்தது! (மத்தேயு 6:3). எனவேதான் அவர்கள் செய்த நன்மையான நல்ல ஊழியங்களை ஆண்டவர் நினைவுபடுத்திய போது, அவர்களோ தாங்கள் “எப்போது செய்தோம்?” எனக் கூறும் அளவிற்கு செய்த ஊழியப்பணிகளை மறந்தே போய்விட்டார்கள்! (மத்தேயு 25:38). இந்கழ்ச்சியை இயேசு தொடர்ந்து விவரிக்கும் போது, “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் என்ன பணிவிடை ஊழியம் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்” என்ற சத்தியத்தை எடுத்துரைத்தார் (மத்தேயு 25:40). இங்கே இயேசு “மிகவும் சிறியவராகிய என் சகோதரர்கள்” எனக்குறிப்பிட்டதைப் பாருங்கள். அது ஏனெனில், நாம் மிகவும் முக்கியமான விசுவாசிகளுக்கே ஊழியம் செய்துவிட்டு ஏழ்மையானவர்களையும், அந்தஸ்து இல்லாதவர்களையும் அலட்சியப்படுத்தும் மனப்பாங்கு நம் யாரிடத்திலும் உள்ளது! “மிகவும் சிறியவராகிய” நம் சகவிசுவாசிகளுக்கு பணிவிடை ஊழியம் செய்திட கவனம் கொண்டிருப்போமாக! தங்கள் சகவிசுவாசிகளுக்கு எவ்வித நன்மைகளை பணிவிடையாகச் செய்தோம் என்பதையே மறந்துவிட்ட இந்தக் குழுவினருக்கு நேர் எதிர்ப்பதமாக மற்றொரு குழுவினரைப்பற்றி இன்னொரு இடத்தில் இயேசு குறிப்பிட்டார். இவர்களோ, ஆண்டவருடைய நாமத்தில் இன்ன இன்ன ஊழியங்களைச் செய்தோமென்பதை கொஞ்சமும் மறக்காமல் இயேசுவிடம் பட்டியல் போட்டு கூறினார்கள்! முதலில் நாம் கண்ட குழுவினரைப்போலவே இவர்களும் கிறிஸ்துவின் நியாயாஸ்தனத்திற்கு முன்பாகவே நின்றார்கள். அங்கே நின்று கொண்டு, “நாங்கள் இயேசுவின் நாமத்தில் பிசாசுகளைத் துரத்தினோம்.... வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கினோம்...” என்றெல்லாம் வரிசையாக ஆண்டவருக்கே ஞாபகப்படுத்தி கூறத் துவங்கி விட்டார்கள். ஆனால் அவர்களோ ஆண்டவரால் புறக்கணிக்கப்பட்டார்கள்! ஏனெனில், இப்படியெல்லாம் இவர்கள் ஊழியம் செய்திருந்தாலும், முதல் தேவையான தேவனுக்கு முன்பாக வாழும் ஓர் மறைவான பரிசுத்த வாழ்க்கையை இவர்கள் வாழவில்லை! இவர்கள் தாங்கள் பெற்ற மேலான வரத்தில் ஈர்க்கப்பட்டுத் தேங்கி விட்டார்கள்!!