WFTW Body: 

ஐந்து அப்பங்களைக் கொண்டு, ஒருமுறை இயேசு திரளான ஜனங்களைப் போஷித்திட பயன்படுத்தினார். அவர் முதலாவதாக அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் செய்தார்! அல்லது ஆசீர்வதித்தார்! ஆனால், அந்த ஐந்து அப்பங்களும் இன்னமும் ஐந்து அப்பங்களாகவே இருந்தது! திரளான ஜனங்கள் போஷிக்கப்படவில்லை! அந்த அப்பங்கள் “பிட்கப்பட்ட பிறகுதான்" (Broken), திரளான ஜனங்கள் போஷிக்கப்பட்டார்கள். ஆகவே, ஆவியின் ‘அபிஷேக ஆசீர்வாதத்தை’ பெற்றால் மாத்திரம் போதாது..... நாம் கர்த்தரால் நொறுக்கப்படவும் வேண்டும்! இவ்வாறாக, நம்முடைய முகத்தை புழுதியில் வைத்திருக்கும் நிலையிலிருந்துதான் “தேவனுடைய வல்லமை” நம் மூலமாய் யாதொரு தடையும் இல்லாமல் பாய்ந்தோட முடியும்!

மோசேயும், ஆரோனும் ஓரே சமயத்தில் தேவனுடைய ஜனத்திற்கு தலைவர்களாய் யாத்திராகமம் 4-ம் அதிகாரத்தில் நியமனம் செய்யப்பட்டார்கள். அதில் ஆரோன் நன்றாய் பேசத்தகுந்தவர்! ஆனால் மோசேயோ, அப்படி இருக்கவில்லை! (யாத்.4:10,14). இருப்பினும் தேவன் மோசேயைத்தான் பயன்படுத்தினார், ஆரோனை அல்ல! ஏனெனில், மோசே ஓர் நொறுங்குண்டவனாயிருந்தான்! ஆனால், ஆரோன் அப்படி இல்லை. வனாந்திரத்தில் 20 வருட கால ‘நொறுங்குதலுக்கு’ தேவன் மோசேயை நடத்தினார். தேவன் அவரை தாழ்த்தி, ஒரு அரண்மனையின் அதிபதியாய் இருப்பதிலிருந்து.... ஒரு பாலைவனத்தில் மேய்ப்பனாயிருக்கும் ஸ்தலம் வரை, அவரை தாழ்விடங்களுக்கு கொண்டு சென்றார். அங்கே அவருடைய மாமனாரோடு 40 வருடங்கள் தங்கியிருக்கச் செய்தது மாத்திரமல்லாமல், அங்கே அவருக்காக வேலையும் செய்தார்! இதுவே, அவரை தேவன் நொறுக்குவதற்கு முற்றிலும் போதுமானதாயிருந்தது. இதுபோன்ற நொறுங்கும் அனுபவத்தை ஆரோன் பெறவில்லை. ‘இந்த நொறுங்குதலே' இந்த இரண்டு மனிதர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஏற்படுத்தியது!

இவர்கள் இருவருக்கும் இடையிலான வலிமை வித்தியாசத்தை யாத்திராகமம் 32-ம் அதிகாரத்தில் காண்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் ‘ஒரு நொறுங்குண்ட மனிதன் மோசே' தங்களோடு இருக்கும்வரை கர்த்தரைப் பின்பற்றினார்கள். ஆனால், மோசே அவர்களை விட்டு வெறும் 40 நாட்கள் மாத்திரமே தூரம் சென்றபோது, ஆரோன் அவர்களின் தற்காலிக தலைவராய் இருந்த சமயத்தில்... அவர்கள் விக்கிரகாராதனைக்கு வழிவிலகி, ‘பொன் கன்றுகுட்டியை’ உடனடியாக ஆராதிக்க தொடங்கிவிட்டார்கள். ஆரோன் அழகுபட பேச வல்லமை கொண்டவன்! ஆனால் அவனோ, ஜனங்களை பிரியப்படுத்துகிறவனாய் இருந்தபடியால், தேவனுடைய ஜனத்தை பரிசுத்தமாய் பாதுகாக்க முடியவில்லை! “உடைபடாத மூப்பர்கள்” எப்போதும் தங்கள் சொந்த கனத்தை தேடி, தங்கள் சபையிலுள்ள ஜனங்களைப் பிரியப்படுத்த முயற்சிப்பார்கள். ஆகவேதான், அங்குள்ள ஜனங்கள் கர்த்தரை விட்டு தாறுமாறான வழியிலே செல்லுகிறார்கள்!

“ஓரு நொறுங்குண்ட மனிதன் மோசே” 2-மில்லியன் ஜனங்களை தேவனுடைய வழியில் வைத்து, அந்த வனாந்திரத்தில் 40 வருடங்கள் நடத்த முடிந்தது! இவ்வாறாகவே, சபையின் சரித்திரத்தில் நூற்றாண்டு காலங்களாய் நடந்து வருகிறது. “நொறுங்குண்ட மனிதர்களையே” கர்த்தருடைய சபையை, அவருடைய வழியில் பாதுகாப்பதற்கு, தேவன் பயன்படுத்தி வருகிறார்!

நம்முடைய மூப்பர்களுக்கு அடங்கியிருக்கும்படிச் செய்து தேவன் நம்மை நொறுக்குகிறார். “ஒரு தேவமனிதனுக்கு அடங்கியிருப்பது, அநேக மதியீனமானவைகளை நாம் செய்திடாதிருப்பதற்கு நம்மை பாதுகாப்பதுமல்லாமல், அவரிடமிருந்து ஏராளமான ஞானத்தை கற்றுக்கொள்ளவும் வகைச் செய்கிறது. அவர், “நாம் அறியாத அபாயங்களை” சந்தித்தபடியால், நம்மை அவர் எச்சரித்திட முடியும்! ஆகவே ஆவிக்குரிய அதிகாரத்திற்கு அடங்கியிருப்பது ‘பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களுக்கு கீழாக அடங்கியிருக்கும்’ பாதுகாப்பிற்கு சமமாகும்! 1 பேதுரு.5:5-ம் வசனத்தில், வாலிபர்கள் தங்கள் மூப்பர்களுக்கு கீழ்ப்படிந்திருக்க வேண்டுமென்றும், ஏனெனில் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நின்று தாழ்மையுள்ளவர்களுக்கே கிருபையைத் தருகிறார்! என வாசிக்கிறோம். இங்குதான் நாம், தேவனிடமிருந்து ‘ஆவிக்குரிய அதிகாரத்தை’ பெற்றுக் கொள்வதற்குரிய மிகப்பெரும் இரகசியத்தைக் காண்கிறோம். நான் சில அருமையான சகோதரர்களை கண்டிருக்கிறேன். அவர்களுக்கு தேவன் ‘ஆவிக்குரிய அதிகாரத்தை’ கொடுக்காதிருந்ததற்கு ஒரே காரணம்: தங்கள் முழு ஜீவியத்திலும் ஒருவருக்குக்கூட அவர்கள் அடங்கிவாழ கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான்! இதனிமித்தமாய் “அவர்களின் வலிமையான சித்தம்” ஒருபோதும் உடைபடவில்லை. உடைபடாத ஒரு மனிதனின் கையில் அதிகாரம் இருப்பது மிகப்பெரும் அபாயமாகும். நீங்கள் முதலாவது நொறுங்குண்டு வாழாமல், அதிகாரத்தை ஜனங்கள் மீது அப்பியாசிக்க முயற்சித்தால், நீங்கள் அவர்களை சீரழிப்பது மாத்திரமல்லாமல், காலா வட்டத்தில் உங்களையே கெடுத்துக் கொள்வீர்கள். ஆகவேதான், ‘நம்முடைய பெருமையின் வலிமையை’ முதலாவதாக உடைத்த பிறகே, யாரிடத்திலும் தன்னுடைய ஆவிக்குரிய அதிகாரத்தை ஒப்புக்கொடுப்பார்.

“என்னுடைய சொந்த அனுபவத்தை இங்கு நான் சுருக்கமாய் கூறுகிறேன்: என்னுடைய 20 முதல் 30 வயது பத்து வருட ஜீவியத்தில், என் ஊழியத்தில் பொறாமை கொண்ட மூப்பர்களால் பல வருடங்கள் கீழே தள்ளப்பட்டு, பகிரங்கமாய் ஒரு சபையின் மேலான இடங்களில் இருந்து தாழ்த்தப்பட தேவன் அனுமதித்தார்! இந்த எல்லா சமயங்களிலும், என்னுடைய வாயை மூடிக்கொண்டு, யாதொரு கேள்வியும் கேட்காமல் அந்த மூப்பர்களுக்கு அடங்கியிருக்க ஆண்டவர் கூறினார். அவ்வாறு செய்ததினிமித்தம், அவர்களோடு சபையிலிருந்த நாட்களில் ஒர் நல்ல உறவை வைத்துக்கொண்டது மாத்திரமல்லாமல், அவர்களின் சபையை விட்டு வெளியே வந்த பிறகும், அவர்களோடு சீரான உறவை வைத்திருந்தேன். அந்த வருடங்களில் என் எதிர்காலத்திற்குரிய ‘தேவ ஊழியம்’ என்னதென்று நான் அறியாதிருந்தேன். ஆகிலும், பல வருடங்களாய் தேவன் என்னை உடைபடச்செய்து, அதன்மூலம் ‘ஆவிக்குரிய அதிகாரத்தை’ நான் செயல்படுத்திட தேவன் என்னை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அப்படி தேவன் என்னை நொறுக்குவதற்குரிய செயல் இன்னமும் முடியவில்லை! கடந்த சில வருடங்களாய், தேவன் என்னை, இதுவரை நான் அனுபவித்திராத புதிய துன்பங்களுக்கு என்னை நடத்தினார்... மார்க்க தலைவர்களால் பொய்யாய் குற்றம் சாட்டப்பட்டு, சுமார் 10 வருடங்கள் நான் வழக்கு மன்றத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டேன். இவை எல்லா நிகழ்ச்சியிலும், என் ஜீவியத்தின் மீது தேவன் ஒரே ஒரு நோக்கத்தையே வைத்திருந்தார்: என்னை “இன்னமும் அதிகமாய் உடைத்து” அதன்மூலம், அதிகமான அவருடைய ஜீவனையும், அவருடைய அதிகாரத்தையும் எனக்கு ஒப்புவிக்கும்படி அவ்வாறு செய்தார்!

“நம்முடைய சுய பெலனையும் பெருமையையும், நம் தலைவர்கள் மூலமாய் தேவன் உடைக்கிறார். கிட்டதட்ட ‘எல்லா விசுவாசிகளும்’ திருத்துதலை ஏற்றுக்கொள்ள அதிகம் கஷ்டப்படுகிறார்கள். ஓர் இரண்டு வயது பிள்ளைகூட திருத்துதலை எளிதாய் ஏற்றுக்கொள்வதில்லை... அதுவும் குறிப்பாய் ‘பகிரங்கமாய் திருத்தும்போது’ ஏற்றுக்கொள்வதில்லை! நீங்கள் எப்போது கடைசியாய் பகிரங்கமான திருத்துதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டீர்கள்? அப்படி ஒரு திருத்துதலை, உங்கள் ஜீவியத்தில் ஒருமுறையாவது ஏற்றுக்கொண்டதுண்டா? அப்படி இல்லையென்றால், “உங்களிடத்தில் ஆவிக்குரிய அதிகாரம் காணப்படவில்லை” என்பதற்கு, யாதொரு வியப்பும் இல்லை. “நொறுக்கப்படாத ஜனங்கள், தனிமையான ஜனங்களாகவே இருந்திட விரும்புவார்கள்! அவர்கள் யாருக்கும் அடங்கியிருப்பதில்லை. அவர்கள் எங்கே செல்ல விரும்புகிறார்களோ, அங்கே செல்வார்கள்! எதைச் செய்ய விரும்புவார்களோ, அதைச் செய்வார்கள்! அதுபோன்ற உடைபடாத விசுவாசிகள் ‘தங்களுக்குள்ளாக கீழ்ப்படிகிறவர்களோடும், தாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்பவர்களோடும் மாத்திரமே’ ஊழியம் செய்து கொள்வார்கள். இதுபோன்ற “தனித்து நிற்கும்” விசுவாசிகளுக்கு தேவன் தம்முடைய ஆவிக்குரிய அதிகாரத்தை ஒருபோதும் தந்திட இயலாது! ஏனெனில், தேவன் “ஒரு சரீரத்தை” கட்டிக்கொண்டிருக்கிறாரே அல்லாமல் “தன் இஷ்டம் கொண்ட தனிமை விசுவாசிகளின் கூட்டத்தை அல்ல!”