WFTW Body: 

நீதிமொழிகள் 10:12 "அன்போ சகல பாவங்களையும் மூடும்". பேதுரு இதை தன் நிருபத்தில் மேற்கோள் காட்டுகிறார் (1 பேதுரு 4:8). நீங்கள் உண்மையில் ஒரு நபரை நேசிப்பீர்களானால், அவர்களுடைய பெலவீனங்களை நீங்கள் வெளியரங்கப்படுத்தாமல், அவைகளை மூடுவீர்கள். இப்படித்தான் தேவன் நம்மோடு இடைப்பட்டார். அவர் நம்முடைய கடந்தகால பாவங்களை ஒருவருக்கும் வெளியரங்கமாக்கவில்லை. தேவன் நம்மை நடத்திய பிரகாரம் நாம் மற்றவர்களை நடத்தவேண்டும். நீங்கள் ஞானியாய் இருக்க விரும்பினால், உங்கள் வாலிப நாட்களுக்கான ஒரு சிறு அறிவுரையை, நான் உங்களுக்குத் தருகிறேன். யாரைப் பற்றியாவது ஒரு கெட்ட நிகழ்வு உங்களுக்கு தெரிந்திருந்தால், அந்த நிகழ்வு உங்களோடு மறையட்டும். அதைத் தூற்றிக்கொண்டு திரியாதீர்கள். நீங்கள் அப்படிச் செய்தால், விஷேசமாக தம்முடைய பிள்ளைகளில் ஒருவரைப் பற்றிய கெட்ட நிகழ்வில் நீங்கள் அப்படிச் செய்தால், தேவன் உங்களைக் கனப்படுத்துவார். அவர் உங்களை விஷேசித்த விதமாக நேசிப்பார். ஒரு தகப்பனுடைய பிள்ளை ஏதேனும் ஒரு தவறு செய்திருக்கிறான் என்றும், அதைப்பற்றி எனக்குக் கொஞ்சம் தெரிந்திருக்கிறது என்றும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அவருடைய பிள்ளை என்ன செய்தான் என்பதை யாருக்கும் ஒருபோதும் நான் சொல்லவில்லை. இதற்காக அந்த தகப்பன் என்னை அதிகமாக நேசிப்பார் என்று நீங்கள் நினைப்பீர்கள் அல்லவா? நாம் அவருடைய பிள்ளைகளை அன்போடு நடத்துகிறதை அவர் பார்க்கும்போது, தேவனும் நம்மை அப்படியே நடத்துவார்.

நீதிமொழிகள் 11:24 "வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு". கிறிஸ்தவ வாழ்க்கையின் முரணிலைகளில் (paradoxes) இதுவும் ஒன்று, அது என்னவென்றால், கொடுக்கிறவன் அதிகமானவற்றைப் பெற்றுக்கொள்ளுகிறான். ஏனெனில் தேவன் அவனை ஆசீர்வதிக்கிறார். பிசினித்தனம்பண்ணுகிறவன் ஏழையாகிறான். ஒரு கஞ்சன் மனந்திரும்பும்போது, அவன் தயாளனாக மாறுகிறான். "இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்" (மத்தேயு 10:8) என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். தேவன் நமக்கு இலவசமாக அநேக காரியங்களைக் கொடுத்திருக்கிறார். நாமும் கூட மற்றவர்களுக்கு இலவசமாய்க் கொடுக்க வேண்டும். சுவிசேஷங்களில் காணப்படுகிற விதவை, இரண்டு காசை மட்டும் உடையவளாயிருந்தாள். தன்னிடத்தில் உள்ளதை, அவள் கொடுத்தாள். தேவன் அவளை கனம் பண்ணி, அவளுக்கு ஒரு குறையும் இருந்திருக்காதென்று நிச்சயித்திருக்கிறேன். "எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்" (நீதிமொழிகள் 11:25). தேவன் உங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சி, உங்களை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் மற்றவர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அநேக கிறிஸ்தவர்கள் ஏன் இவ்வளவு தேங்கி நிற்கும் நிலையிலும் (stale) வறட்சியோடும் இருக்கிறார்கள்? ஏனென்றால் தேவன் அவர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறதில்லை. தேவன் ஏன் அவர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறதில்லை? ஏனென்றால், அவர்கள் மற்றவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறதில்லை. மற்றவர்களுடைய தேவைகளைக் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்து, எப்படி நீங்கள் அவர்களை ஆசிர்வதிக்க முடியும் என்று பாருங்கள். அப்போது, தேவன் உங்களை பரிபூரணமாக ஆசிர்வதிக்கிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள்.

நீதிமொழிகள் 15:13: "மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்". இருதயத்திலிருக்கிற மகிழ்ச்சி தான் நம்முடைய முகங்களின் மேல் பிரகாசத்தைக் கொண்டுவரும். "மனரம்மியமோ நித்திய விருந்து" (நீதிமொழிகள் 15:15). நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெற்றிருப்பதை குறித்து நீதிமொழிகளில் அதிகமாக வலியுறுத்தப்பட்டிருக்கிறது. "மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்" (நீதிமொழிகள் 17:22). எனவே, மகிழ்ச்சி நம்மை ஆரோக்கியமாகவும் மாற்றும். தேவனுடைய ராஜ்யம் வெறும் நீதி மட்டுமல்ல, அது பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷத்தோடுக்கூடிய நீதியாய் இருக்கிறது. பழைய ஏற்பாட்டில் சந்தோஷமற்ற நீதியை உடையவர்களாயிருந்தார்கள். இப்போது சந்தோஷத்தோடுக்கூடிய நீதியை உடையவர்களாயிருக்கிறோம். நாம் இயேசுவைப் பின்பற்றும்போது, நம்முடைய நடையில் ஒரு துள்ளுதலும், நம்முடைய இருதயங்களில் ஒரு பாடலும், நம்முடைய முகங்களில் ஒரு பிரகாசமும் இருக்கும்.

நீதிமொழிகள் 18:16: "ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்". தேவன் நமக்குக் கொடுக்கும் வரத்தின் மூலமாகத் தான், சபையில் நாம் ஊழியம் செய்ய இடத்தை ஆயத்தம் செய்கிறார். இன்று சபையில் தேவன் அருளிய வரங்களைப் பெறாத அநேகர், ஸ்தலத்தையும் கனத்தையும் தேடி, சண்டையிடுவதைக் காண்பது பரிதாபமாக உள்ளது. "ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்" (1 கொரிந்தியர் 14:1) என்று புத்திசொல்லப்பட்டிருக்கிறோம். தேவனுடைய வார்த்தையை சவாலும், உணர்த்துவிக்குதலும், ஆறுதலும், புத்தியும் (ஊக்குவித்தலும்), பக்திவிருத்தியும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறதே தீர்க்கதரிசனம் சொல்கிறதாகும் (1 கொரிந்தியர் 14:3). தேவன் தம்முடைய வரங்களை மதிக்காதவர்களுக்கு அதை கொடுப்பதில்லை. தேவனிடத்திலிருந்து ஒரு செய்தியைப் பெற்ற மனிதனுடைய வார்த்தையைக் கேட்க, ஜனங்கள் நூற்றுக்கணக்கான மைல்கள் பிரயாணம் பண்ணி வருவார்கள். யோவான்ஸ்நானன் வனாந்தரத்தில் இருந்தான். யூதேயா தேசம் முழுவதிலுமிருந்து ஜனங்கள் அவனுடைய வார்த்தையைக் கேட்க அவனிடத்தில் சென்றார்கள், ஏனெனில் அவன் பரத்திலிருந்து ஒரு செய்தியை உடையவனாய் இருந்தான்.

நீதிமொழிகள் 18:21: "மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்". பெந்தேகோஸ்தே நாளிலே, அக்கினிமயமான நாவுகள் சீஷர்கள் மேல் வந்து அமர்ந்தது. தேவன், பரிசுத்த ஆவியானவரின் அக்கினியினால் அவர்களுடைய நாவுகளை கொளுத்த விரும்புகிறார் என்பதைக் காண்பிக்கவே அப்படி செய்தார். நாவு, நரக அக்கினியினாலும் கொளுத்தப்பட முடியும் என்று யாக்கோபு 3:6 சொல்கிறது. நம்முடைய மாம்சத்தின் சீர்கேட்டை கருத்தில் கொண்டு, பரிசுத்த ஆவியானவரால் நம்முடைய நாவு கட்டுப்படுத்தப்பட்டால் மாத்திரமே, நம்முடைய நாவுகளினால் மரணத்தைப் பரப்புவதிலிருந்து தப்புவிக்கப்படுவோம்.

நீதிமொழிகள் 22:4 "தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்". ஆவிக்குரிய ஐசுவரியமும், ஆவிக்குரிய மகிமையும், ஆவிக்குரிய ஜீவனும் தேவனிடத்திலிருந்து வருகிறது. மனிதனிடத்திலிருந்து அவர் எதிர்பார்க்கிற இரண்டு குணங்களின் அடிப்படையில் அவை கொடுக்கப்படுகிறது: தாழ்மையும், கர்த்தருக்குப் பயப்படுதலும். சபையிலே, தலைமைத்துவ ஸ்தானத்திற்கு யாரையாவது பரிசீலிக்கும் பொழுது, இப்படிப்பட்ட முக்கிய குண நலன்களை அவர்களில் காண்பது அவசியம்.