உண்மையான கிறிஸ்தவ ஐக்கியம் வெளிச்சத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். வெளிச்சத்தில் நடக்க நாம் விருப்பமாக இருந்தால் மட்டுமே ஒருவருக்கொருவர் உண்மையான மற்றும் ஆழமான ஐக்கியத்துடன் நடக்க முடியும். அதற்கு நாம் ஒருவரோடு ஒருவர் நாமாக இருக்க வேண்டும் எல்லா போலித்தனத்தையும் மற்றும் மாய்மாலத்தையும் விட வேண்டும். கிறிஸ்தவர்கள் இவ்விதமாக ஒருவருக்கொருவர் நடக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆதிகால திருச்சபையில் தேவனால் பகிரங்கமாக நியாயந்தீர்க்கப்பட்ட முதல் பாவம் மாய்மாலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் (அப்போஸ்தலர் 5:1-14 இல் பதிவுசெய்யப்பட்ட அனனியா மற்றும் சப்பீராளின் கதையைப் பார்க்கவும்).
பாவத்தின் தாக்கத்தால் நம்முடைய ஒருவருக்கொருவர் உள்ள உறவுகளில் முகக்கவசம் அணிவது நடைமுறையாகிவிட்டது. நாம் உண்மையில் யார் என்பதை தெரிந்து கொள்ள நாம் வெட்கம் மற்றும் பயம் கொள்ளுகிறோம. நாம் முகக்கவசம் அணிந்த மக்கள் நிறைந்த உலகில் வாழ்கிறோம், நாம் மனம் மாறும்போதும் நம்முடைய முககவசத்தை எடுப்பதில்லை .அவர்கள் முகக்கவசம் அணிந்து கூட்டங்களுக்குச் செல்கிறார்கள், மற்றும் மற்ற மக்களை சந்திக்கிறார்கள் - அதை ஐக்கியம் என்றும் அழைக்கிறார்கள். ஆனால் அத்தகைய ஐக்கியம் ஒரு நகைப்புக்குரியது. ஆனாலும் பிசாசு பெரும்பாலான கிறிஸ்தவர்களை அதில் திருப்தி அடைய செய்துள்ளான்.
நம்முடைய முகக்கவசங்களை முழுமையாக அகற்றுவது எவராலும் இயலாது என்பது உண்மைதான். பாவம் நிறைந்த உலகில் வாழ்ந்து, குறையுள்ள சபையில் ஐக்கியம் செய்து , நம்முடைய சுயதால் பிணைக்கப்பட்டு, மற்றவர்களுடன் முற்றிலும் நேர்மையாக இருப்பது சாத்தியமில்லை அல்லது விரும்பத்தக்கது அல்ல. நம்மை நாமே முழுமையாக நிதானிக்க முடியாததால் முழுமையான நேர்மையாக இருப்பது சாத்தியமில்லை. அதுவும் நல்லதல்ல ஏனென்றால் அது மற்றவர்களுக்கு தடங்கலாக இருக்கக்கூடும்.
நமக்கு நேர்மையாய் இருப்பதற்கு ஞானம் தேவை. ஆனால் நாம் எப்போதும் இல்லாத ஒருவரைப் போல் நடிக்க கூடாது. அது மாய்மாலம் - மாய்மாலம் இயேசுவால் முற்றிலும் கண்டிக்கப்பட்டது.
சுய-நீதியுள்ள, பரிசேய மனப்பான்மையே பல கிறிஸ்தவர்களை மற்றவர்களுக்கு உதவி மற்றும் ஊக்கமளிக்கும் பாதையாக இருப்பதைத் தடுக்கிறது. நமது மனப்பான்மை நமது சகவிசுவாசிகளும் மற்றவர்களும் தயங்காமல் நம்மிடம் வந்து தங்கள் எண்ணங்களையும் கவலைகளையும் தயக்கமின்றி பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு இருக்க வேண்டும். அவர்களின் அறியாமை அல்லது கடந்த கால தோல்விகளுக்காக அவர்கள் நிந்திக்கப்படுவதற்கு பதிலாக அவர்கள் மீது இரக்கம் மற்றும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
உலகம் தனிமையான, பதற்றமான, பயம் மற்றும் நரம்பு தளர்ச்சி நிறைந்த மக்களால் நிறைந்துள்ளது. அவர்களுடைய பிரச்சனைகளுக்கு கிறிஸ்துவிடம் பதில் இருக்கிறது, ஆனாலும் அந்த பதில் அவருடைய சரீரமான திருச்சபையின் மூலம் அவர்களுக்கு வர வேண்டும். ஆனால் ஐயோ, பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சுயநீதியுள்ளவர்களாகவும், உண்மையற்றவர்களாகவும் இருப்பதால், உதவி தேவைப்படுகிறவர்கள் விரட்டப்படுகிறார்கள்.
கீத் மில்லர்(Keith Miller), தி டேஸ்ட் ஆஃப் நியூ ஒயின்(The Taste of New Wine) என்ற புத்தகத்தில், "நமது நவீன சபைகள் இப்படிப்பட்ட மக்களால் நிறைந்துள்ளது. அவர்கள் தூய்மையான வெளி தோற்றத்தையும், சத்தியங்களையும் பேசி, தங்கள் உள்ளான வாழ்வில் தோற்கடிக்கப்பட்ட பலவீனமான விரக்தி அடைந்த உண்மையற்ற மக்கள். உலக நண்பர்கள், 'என் பிரச்சினைகளை இவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள்' என்று நினைக்கிறார்கள்; அல்லது சமூக ரீதியாகவோ அல்லது தொழில் ரீதியாகவோ நம்மை அறிந்த புறஜாதியார், கிறிஸ்தவர்கள் முற்றிலும் அப்பாவியாகவும் மற்றும் மனித நிலைமையைப் பற்றி அறியாமை கொண்டவர்கள் அல்லது சொந்தப் போராட்டங்களைப் பற்றி நேர்மையற்றவர்கள் என்று உணர்கிறார்கள்” என்று கூறுகிறார்.
தனிப்பட்ட அளவில் மற்றவர்களுடன் நேர்மையான உறவு வைத்திருப்பது என்ன என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் – இதை நாம் அனைவரும் ஒரு நபருடன் தொடங்கலாம்.