நம் மத்தியில் உபசரிப்பும் உதாரகுணமுமுள்ள ஜனங்கள் அநேகர் இருக்கிறதைக் காண்கிறபடியால், இந்தியாவில் அநேகர் நம் சபைகளில் சேர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். நாம் துரிதமாக இது போன்ற ஜனங்களைக் களை எடுத்து அகற்ற கவனம் கொள்ளவில்லையென்றால், வெகு சீக்கிரத்தில் இந்தியாவில் உள்ள ஏழை ஜனங்கள் நம்முடைய சபைகளோடு சேர்ந்து கொள்ள அதிகமாய் விரும்புவார்கள்! அவ்வாறு சம்பவிக்கும் போது ஓர் ஆச்சரியப்படத்தக்க “சபை வளர்ச்சி போல்” மற்றவர்களுடைய கண்களுக்கு காட்சி அளிக்கும்! நீதியின் மேல் விருப்பம் கொண்டவர்கள் அல்ல..... “மனம் மாறியவர்கள்” என்ற பெயரில், பணத்தின் மீது விருப்பம் கொண்டவர்களே நம்மத்தியில் காணப்படுவார்கள்.
இன்றும் நம் இந்தியாவிலுள்ள அநேகக் கிறிஸ்தவ ஊழியர்கள் 'கர்த்தருக்கு முழு நேரமாய் ஊழியம் செய்வதை’ சம்பாத்தியத்தின் அடிப்படையில் செய்கிறார்களே அன்றி, ‘அழைப்பின் ஆதாரம்' அவர்களிடத்தில் இல்லை. இன்று திரளான ஜனங்கள், சபையில் சேர்ந்து கொண்டு தங்கள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியிருக்கிறார்கள்! அவர்களது நீதியான வாழ்க்கையைக் கண்டு தேவன் கனம் செய்து பொருளாதார ஆசீர்வாதம் அவர்களுக்கு உண்டாகியிருந்தால் அது சரி! இதற்கு மாறாக, சபையில் சேர்ந்ததினிமித்தம் அவர்களுக்குக் கிட்டிய பணக்காரர்களின் தொடர்பு மூலமாய் பொருளாதார ஐசுவரியம் பெற்றிருந்தால்,...... அது போன்றவர்கள், தங்கள் ஜீவியத்தில் தேவனுடைய சித்தத்தை முற்றிலுமாய் இழந்து விட்டார்கள் என உறுதியாய் கூறலாம்!
சபையானது, ‘தியாகமும்’, ‘கொடுப்பதும்’ நிறைந்த ஸ்தலமாய் இருக்க வேண்டும்! அது அல்லாமல், அந்த ஸ்தலம், இலாபமும் ஆதாயமும் தேடுகிற ஸ்தலமாய் ஒருபோதும் இருக்கக்கூடாது! ஒரு துக்கமான உண்மை யாதெனில், இந்தியாவிலுள்ள இன்றைய திரளான 'கிறிஸ்தவ ஊழியர்கள்' அவர்கள் உலக அலுவல்களில் வாங்கும் சம்பாத்தியத்தைவிட 5 அல்லது 10 மடங்கு அதிகம் சம்பாதிக்கிறார்கள். இன்னும் திரளான கிறிஸ்தவ ஊழியர்கள், ஒரு நாள் கூட ஓர் உலக அலுவலில் ஈடுபட்டதில்லை. உலக அலுவல்கள் யாதொன்றும் செய்யாதவர்களை, தம் அப்போஸ்தலர்களாக, இயேசு ஒருவரையும் அழைத்ததில்லை. இன்று நம் இந்திய தேசத்தில் கிறிஸ்தவ ஊழியம், ஒரு சொல்லொண்ணா இலாபம் சம்பாதிக்கும் தொழிலாய் மாறிவிட்டது. இன்றுள்ள கிறிஸ்தவரல்லாதவர்கள் இவர்களைப் பார்த்து “பண ஆதாயத்திற்காக இந்த மனுஷன் ஒரு கிறிஸ்தவ ஊழியனாகிவிட்டான்” என்றே கூறுகிறார்கள். அவர்கள் கூறியதில் தவறில்லை. அவர்களின் வாயை எங்ஙனம் தடுத்து நிறுத்த முடியும்? இந்த கிறிஸ்தவ ஊழியர்கள், தாங்கள் கிறிஸ்தவ ஊழியங்களில் பெறுவதை விட, உலக அலுவல்களில் இருந்திருந்தால் அதிகம் பணம் சம்பாதித்திருக்க முடியும் என காண்பித்திருக்க முடியும் என்றால், அவர்களின் வாயை அடைத்திருக்க முடியும்.
அப்போஸ்தலர் 5-ம் அதிகாரத்தில், எல்லோரும் தங்கள் ஆஸ்திகளை விற்று, அப்போஸ்தலரிடம் ஒப்படைத்து, ஏழைகளின் தேவைகளுக்கு அவர்கள் பகிர்ந்து கொடுக்க ஒவ்வொருவரும் முன்வந்த வேளையில், அனனியாவும் சப்பீராளும் வேறு விதமாய் சிந்தித்தார்கள்: அவர்கள் “நம் பணத்தை தொடர்ந்து நம்மிடமே வைத்துக்கொண்டு, அதே வேளையில் நம்மை ஆவிக்குரியவர்களாக எப்படிக் காண்பிக்கலாம்?” என சிந்தித்தார்கள். ஆகவேதான் அவர்கள் தங்கள் காணியாட்சியை விற்ற பணம் முழுவதையும் அப்போஸ்தலர்களிடம் கொண்டு வரவில்லை! அவர்களுடைய பாவம், தங்கள் முழு பணத்தையும் கொண்டு வந்து தரவில்லை என்பதல்ல! மகிழ்ச்சியோடு கொடுப்பதையே தேவன் விரும்புகிறாரேயல்லாமல் எவருடைய பணமும் அவருக்குத் தேவையில்லை. அதுவே, அவர்கள் 'தேவனிடம் முழு இருதயமாய்' இல்லை என்பதைக் காட்டியது! பேதுரு அனனியாவைப் பார்த்து கூறும்போது “அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாய் இருக்கவில்லையோ? அதை விற்றபின்பும், அதின் கிரயம் உன் வசத்தில் இருக்கவில்லையோ?..... அப்படியிருக்க, நீ தேவனிடத்தில் ஏன் பொய் சொன்னாய்?" எனக்கேட்டார் (அப் 5:4). ஆகவே, அனனியா சப்பீராளின் பாவம், தங்களை முழு இருதயமாய் இருப்பதைப்போல் பாசாங்கு செய்த மாய்மாலமே ஆகும். ஒருவேளை அனனியா பேதுருவினிடத்தில் “நாங்கள் எங்கள் காணியாட்சியை 50000 ரூபாய்க்கு விற்றோம். ஆகிலும் இந்த தொகையில் 20% மாத்திரமே கொடுப்பதற்கு ஏவப்பட்டோம். மீதியுள்ள பணத்தை, எங்களுடைய செலவுக்காக வைத்துக்கொண்டோம். எனவே, நாங்கள் மனப்பூர்வமாய் 10000 ரூபாய் மனமுவந்து சமர்ப்பிக்கிறோம்!" எனக் கூறியிருந்தால் அனனியாவை பேதுரு கண்டிப்பாய் ஆசீர்வதித்திருப்பார். அவரும் அவருடைய மனைவியும் சபையில் நீடித்த சுகமாய் இருந்திருப்பார்கள். ஆனால் அனனியாவோ யாதொன்றும் கூறவில்லை. சகலத்தையும் ஒப்படைத்த முழு இருதயம் கொண்ட ஜனங்களுக்கு பின்பாக அவர்களும் அதே வரிசையில் நின்றார்கள். இவ்வாறாக வாய் திறந்து பேசாமலே "ஒரு பொய்யை” சொல்லி விட்டார்கள். ஆனால் பேதுருவோ பகுத்தறியும் ஞானத்தை உடைய மனுஷராய் இருந்தபடியால், அனனியா சப்பீராள் ஆகிய இருவரின் நிலையும் வெளியரங்கமாக்கப்பட்டு, தங்கள் மாய்மாலத்தில் மரித்துப்போனார்கள்!
இதேபோல, இன்று தேவன் ஏன் கிரியை செய்வதில்லை? அப்படிச் செய்தால், இன்றுள்ள சபைகளில் வெகு கொஞ்சமான ஜனங்களே உயிரோடு இருப்பார்கள். அன்று அனனியா சப்பீராள் வெகு தூய்மையான வல்லமை நிறைந்த ஒரு சபையின் நடுவில் இருந்தபடியால், அவர்கள் மரித்துப் போனார்கள். அதற்கு மாறாக, மரித்த நிலை கொண்ட கொரிந்திய சபை போன்ற மாம்சீகமான சபையில் அவர்கள் இருந்திருந்தால், அவர்கள் மூப்பர்களாய் கூட மாறி இருப்பார்கள்! நீங்கள் ஒரு மாய்மாலக்காரனாகவும், பெருமை கொண்டவராகவும் இருந்தால் பூரணத்தை வாஞ்சித்து முன் செல்லும் ஒரு சபையில் நீங்கள் போய் சேர்ந்து கொள்வது 'வெகு அபாயம்' என்பதை அறிந்து கொள்ளுங்கள். அப்படிச் சேர்ந்து கொண்டால் தேவன் உங்களை அடித்து, அவர்கள் நடுவிலிருந்து ஏதாகிலும் ஒரு வகையில் உங்களை அகற்றி விடுவார்! ஆனால் துரதிருஷ்டவசமாய், இன்றைய நாட்களில், அதுபோன்ற தூய்மையும் வலிமையும் நிறைந்த சபைகள் நம் மத்தியில் அதிகமாய் காணப்படவில்லை! இதனிமித்தமாய், இன்றைய சபைகளில் இதுபோன்ற தரம் கெட்டவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்! எனவே, நீங்கள் பெருமையும் மாய்மாலமும் உடையவர்களாய் இருந்து கொண்டே தொடர்ந்து உயிரோடு வாழ வேண்டுமென்றால் 'ஒரு செத்த சபையைத் தெரிந்து கொண்டு அங்கு செல்லுங்கள்!