WFTW Body: 

நாம் ஞானஸ்நானம் எடுக்கும்போது, நம்மைத் தண்ணீருக்குள் முழுக்கும் நபர் நம்மை அப்படியே தண்ணீருக்குள் மூழ்கச் செய்துவிடாமல், நம்மைத் தண்ணீரில் இருந்து மேலே தூக்குவார் என்கிற நம்பிக்கையை நாம் கொண்டிருக்கிறோம். இப்படித்தான் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் நாம் தேவன் மீது விசுவாசம் (நம்பிக்கை) கொண்டிருக்கவேண்டும். நாம் சுயத்திற்கு மரிக்க வேண்டிய, அல்லது பிறரால் நாம் சிலுவையில் அறையப்படுகிற ஒரு சூழ்நிலையை அவர் உருவாக்கும்போது, அவர் பயன்படுத்தும் மனிதக் கருவிகளுக்கு (human instruments) அப்பால் தேவனையே நாம் பார்க்க வேண்டும்.

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் - எந்த மனிதக் கருவிகளையும் அல்ல - தேவனை மட்டுமே தரிசிப்பார்கள் (மத்தேயு 5:8) என்று இயேசு கூறினார். நம்மைச் சிலுவையில் அறையும் மனிதர்களை மட்டுமே நாம் பார்ப்போம் என்றால், நம் இருதயம் சுத்தமுள்ளதாக இல்லை என்பதையே அது குறிக்கிறது. அப்போது அந்த நபர்களுக்கு எதிராக நம்மிடத்தில் குறை சொல்லுதல் இருக்கும்.

ஆனால் நம்முடைய இதயங்கள் சுத்தமுள்ளதாக இருக்கும் போது, நாம் தேவனை மட்டுமே காண்போம். அப்பொழுது, நம்மை மரணத்தில் மூழ்குவதற்கு அனுமதிப்பவர் (தண்ணீர் ஞானஸ்நானத்தில் இருப்பது போலவே) நம்மை மறுபடியும் மேலே எழும்பவும் செய்வார் என்கிற நம்பிக்கையுடன் நாம் இருக்க முடியும். "நாம் அவரோடேகூட மரித்தோமானால், கிறிஸ்து பிழைத்திருக்கிறது போல, நாமும் அவரோடேகூடப் பிழைத்திருப்போம்" (2தீமோத்தேயு 2:11). அப்பொழுது, நாம் (தேவன் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையில்) விசுவாசத்தோடு மரிக்கிறோம். அப்பொழுது, நாம் ஒரு மகிமையான உயிர்த்தெழுதலின்-வாழ்க்கைக்குள் நுழைய முடியும். இல்லையெனில் நாம் முன்னெப்பொழுதும் ஜீவித்த அதே பழைய தோற்கடிக்கப்பட்ட ஆதாமின் வாழ்க்கையையே இனி எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்போம். நாம் சுயத்திற்கு மரிக்க மறுக்கும்போது, அது நம்மிடத்தில் தேவன் மீதான விசுவாசம் (நம்பிக்கை) இல்லை என்பதையே குறிக்கிறது.

யாக்கோபு 1:6-8-ல் வாசிப்பது போல, விசுவாசமுள்ள மனிதன் ஒரே சிந்தை கொண்ட (single-minded) மனிதனாக இருப்பான். அத்தகைய மனிதனுக்கு வாழ்க்கையில், "தேவனைப் பிரியப்படுத்த வேண்டும், அவரை மகிமைப்படுத்த வேண்டும்" என்ற ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட மனிதன் மட்டுமே விசுவாசத்தில் வாழ்கிறான் என்று நாம் கூறமுடியும் - ஏனெனில் அவன், காணக்கூடாதவைகளுக்கு மட்டுமே நித்திய மதிப்பு உண்டு என்பதை உணர்ந்து வாழ்கிறான். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனுடைய வார்த்தை சொல்வதை அவன் நம்புகிறான்.

அநேக "விசுவாசிகள்" தாங்கள் நரகத்திற்குப் போய்விடக்கூடாது என்பதற்காக மாத்திரமே இயேசுவினிடத்தில் நம்பிக்கை வைக்கிறார்கள். ஆனால், அவர்கள் விசுவாசத்தில் வாழ்கிறது இல்லை. தேவன் தம்முடைய வார்த்தையில் கூறுவது முற்றிலும் உண்மை என்று அவர்கள் நம்புகிறதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த, பேசிய அனைத்திற்கும் தேவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறதில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே பிரியப்படுத்தவும், இந்த உலகத்தின் இன்பங்களை அனுபவிக்கவும், பணத்தைத் தேடுவதற்காகவும் வாழ்ந்தால், அவர்கள் இந்த உலகத்தை விட்டுக் கடந்து சென்றபிறகு நித்தியநித்தியமாக வருத்தமடைவார்கள் என்று நம்புவதில்லை.

மரித்து நரகத்திற்குச் சென்ற (இயேசு குறிப்பிட்ட) அந்த ஐசுவரியவான், தான் மரித்தவுடனேயே வருந்தினான். அவனது மண்ணுலக வாழ்வில் அனுதினமும் மனந்திரும்பாமல் வாழ்ந்த வாழ்க்கை என்ற, தான் செய்த அதே தவறைச் செய்யாதீர்கள் என்று யாராவது தன் சகோதரர்களிடம் சென்று சொல்லவேண்டுமென்று விரும்பினான் (லூக்கா 16:28,30). நாம் யாவரும் இங்கே பூமியில் ஒரு புகுநிலைத் தேர்வைப் (probation) போன்றதொரு வாழ்க்கையைப் பெற்றிருக்கிறோம். அதில் நாம் விலங்குகளைப் போல பூமியின் மண்ணுக்காக வாழ்வோமா, அல்லது தேவனுடைய பிள்ளைகளாக நித்திய மதிப்புள்ள காரியங்களுக்காக, அதாவது, நன்மை, அன்பு, முழுமையான தூய்மை மற்றும் மனத்தாழ்மை போன்றவற்றால் அடையாளப்படுத்தப்படும் வாழ்க்கையை வாழ்வோமா என்று தேவன் நம்மைச் சோதித்தறிகிறார்.

நித்திய மதிப்பு கொண்ட காரியங்களுக்காக நீங்கள் வாழ்ந்திட ஆண்டவர் உங்களுக்குக் கிருபை அருள்வாராக.