WFTW Body: 

1. தேவன் இயேசுவை நேசித்தது போலவே நம்மையும் நேசிக்கிறார்.
நீர் என்னில் அன்பாயிருந்ததுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும்” (யோவான் 17:23).
2. தேவன் நேர்மையுள்ளவர்களிடத்தில் பிரியமாயிருக்கிறார்.
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்” (1யோவான் 1:7).
3. தேவன் உற்சாகமாய்க் கொடுக்கிறவர்களிடத்தில் பிரியமாயிருக்கிறார்.
உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2கொரிந்தியர் 9:7).
4. இயேசுவை நோக்கிப் பார்ப்பதினால் பரிசுத்தம் உண்டாகிறது.
இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரெயர் 12:1,2).
5. நாம் இடைவிடாமல் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.
ஆவியினால் நிறைந்து…” (எபேசியர் 5:18).
6. சிலுவையின் வழியே ஜீவ வழி.
நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்” (2தீமோத்தேயு 2:11).
7. மனுஷருடைய கருத்துக்கள் (அபிப்பிராயங்கள்) நம்மை மனமடிவாக்கக் கூடாது.
நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்” (ஏசாயா 2:22).
8. உலகம் மதிப்பதை தேவன் வெறுக்கிறார்.
மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது” (லூக்கா 16:15). “பணத்தை நேசித்து ஐசுவரியவான்களாகும்படி நாடுகிறவர்கள் (1) சோதனையில் விழுகிறார்கள்; (2) கண்ணியில் விழுகிறார்கள்; (3) மதிகேடான இச்சைகளில் விழுகிறார்கள்; (4) கேடு நிறைந்த இச்சைகளில் விழுகிறார்கள்; (5) அழிவில் விழுகிறார்கள்; (6) சேதத்தில் விழுகிறார்கள்; (7) விசுவாசத்தை விட்டு வழுவிப் போகிறார்கள்; (8) அநேக வேதனைகளாலே தங்களை உருவாக்கி குத்திக்கொண்டிருக்கிறார்கள்” (1தீமோத்தேயு 6:9,10).
9. நாம் நாமே தவிர, வேறு யாரும் நமக்குத் தீங்கு செய்ய முடியாது.
நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?” (1பேதுரு 3:13).
10. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் தேவன் ஒரு பரிபூரணமான திட்டத்தை வைத்திருக்கிறார்.
நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” (எபேசியர் 2:10).
11. தேவனை நெருக்கமாய் அறிந்துகொள்வதே வலிமையாயிருப்பதற்கான இரகசியம்.
தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள்” (தானியேல் 11:32).
12. புதிய உடன்படிக்கை பழைய உடன்படிக்கையை விட மிகவும் மேன்மையானது.
"இயேசு விசேஷித்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராயிருக்கிறார்” (எபிரெயர் 8:6).
13. நாம் தேவபக்தியாய் ஜீவித்தால் துன்புறுத்தப்படுவோம்.
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” (2தீமோத்தேயு 3:12).
14. தேவன் ஏற்றுக்கொண்ட அனைவரையும் நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தேவன் தம்முடைய சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார்... சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல்…” (1கொரிந்தியர் 12:18,25).
15. ஒவ்வொரு நபரையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.
தேவனுடைய சாயலாக உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது” (யாக்கோபு 3:9,10).
16. நமது எல்லாத் தேவைகளுக்கும் நாம் தேவனையே நம்பியிருக்க வேண்டும்.
தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலிப்பியர் 4:19).

குறிப்பு: முழுநேர ஊழியர்கள் பண விஷயத்தில் “ஒருபோதும் செய்யக்கூடாத” 10 காரியங்கள்:
1. ஒருபோதும், தேவனைத் தவிர வேறு யாரிடமும் உங்கள் நிதித் தேவைகளைத் தெரிவிக்காதீர்கள் (பிலிப்பியர் 4:19).
2. ஒருபோதும், அவிசுவாசிகளிடமிருந்து பணம் வாங்காதீர்கள் (3யோவான் 1:7).
3. ஒருபோதும், யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்க்காதீர்கள் (சங்கீதம் 62:5).
4. ஒருபோதும், பணம் கொடுப்பதன் மூலம் உங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது உங்கள் ஊழியத்தை ஆதிக்கப்படுத்தவோ யாரையும் அனுமதிக்காதீர்கள்.
5. ஒருபோதும், உங்கள் ஊழியத்தை ஏற்காதவர்களிடமிருந்து பணம் வாங்காதீர்கள்.
6. ஒருபோதும், உங்கள் தனிப்பட்ட அல்லது குடும்பத் தேவைகளுக்காக உங்களைவிட ஏழையானவர்களிடமிருந்து பணம் வாங்காதீர்கள்.
7. ஒருபோதும், உங்கள் நிதித் தேவைகளுக்காக எந்த மனிதனையும் சார்ந்திராதீர்கள்.
8. ஒருபோதும், மற்றவர்கள் சந்தேகிக்கும் வகையில் தேவனுடைய பணத்தைக் கையாளாதீர்கள் (2கொரிந்தியர் 8:20,21).
9. ஒருபோதும், பணம் கிடைக்கும்போது அதைக் கண்டு உற்சாகமடையாதீர்கள்.
10. ஒருபோதும், பணத்தை இழக்கும்போது அதைக் கண்டு சோர்ந்து போகாதீர்கள்.