பவுல் சொன்ன மிகவும் சவாலான விஷயங்களில் ஒன்று, "என் உயிரைக் குறித்து எனக்கு எந்த மதிப்பும் இல்லை..." (NIV) (அப்போஸ்தலர் 20:24). பவுலின் உதாரணம் நமக்கு எவ்வளவு பெரிய சவாலாக இருக்கிறது!
ஒருநாள் நான், மரித்துவிட்ட ஒரு பெண்ணின் ஆறுதல் கூடுகையைப் பார்த்தேன். அந்தப் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி அவளது குடும்பத்தினர் பேசினார்கள் - இளம் வயதில் கணவனை இழந்தது, தன் மகள்களை சரியான முறையில் வளர்க்க முயற்சித்தது, மற்ற காரியங்களின் மத்தியிலும் தன் பேரக் குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்தது போன்றவற்றைக் குறித்துப் பேசினார்கள். ஆனால் என்னை மிகவும் பாதித்தது என்னவென்றால் அந்தப் பெண்ணின் பேத்தி கூறியதுதான். அவள் அழுது கொண்டே, “நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் உங்களிடம் அதிகமாகக் கூறியிருக்க வேண்டும்” என்று கூறினாள். நம் வாழ்க்கையிலும் மரித்தவர்களைப் பற்றி நினைவுகூரும்போது, “ஓ, இன்னும் ஒரு நாள் மட்டும் எனக்குக் கிடைத்திருந்தால் நன்றாயிருக்குமே...” என்று நாம் பலமுறை நினைத்திருக்கக்கூடும்.
பின்னர் நான் வேறொரு முக்கியமான காரியத்தைக் குறித்து சிந்தித்தேன் - நம் அன்புக்குரியவர்களைக் குறித்தல்ல, மாறாக தேவனைக் குறித்து: தேவன் நமக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதைக் காட்டுவதற்கு நமக்கு இந்த ஒரு வாழ்க்கை மட்டுமே இருக்கிறது என்ற எண்ணமே அது.
இப்போது ஒரு கேள்வி: நான் மரிக்கும் நேரம் வரும்போது (அல்லது அதற்கு முன் தேவனுடைய வருகை இருந்தால்), "தேவன் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நான் இன்னும் அதிகமாகக் காட்டியிருந்திருக்கலாமே" என்று சொல்வேனோ?
நாம் இவ்விதம் சிந்தித்தால், எல்லாவற்றையும் குறித்த நம் கண்ணோட்டம் முற்றிலுமாய் மாறிவிடும். அப்பொழுது, பாவத்திற்கு விரோதமாக நாம் இன்னும் அதிகமாகப் போராடியிருக்க வேண்டுமென்றும், தேவனோடு சாதாரணமும் எளிமையுமான நேரத்தை இன்னும் அதிகமாய் செலவிட நாடியிருக்க வேண்டுமென்றும் எவ்வளவாய் விரும்புவோம்! தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் ஆன ஜெபங்களால் அல்ல, ஆனால் இரண்டு நண்பர்கள் ஒன்றாக இருப்பது போல், ‘இயேசுவும் நானும் மட்டும்’ என்று இருக்கும் நேரத்தை விரும்புவோமே! மற்றவர்களை நேசித்து, அவர்களுக்கு இரக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுப்பதன் மூலம் இயேசுவை நேசிக்க விரும்பிடுவோம்; அவர் நிமித்தம், அனைத்து சோதனைகளிலும் துன்பங்களிலும் திருப்தியாக இருக்கவும், அவையெல்லாவற்றிலும் தேவனைத் துதிக்கவும் விரும்பிடுவோம். மற்றவர்களின் இரட்சிப்புக்காக தேவனோடு சேர்ந்து பிரயாசப்பட்டு, அவர்களுக்காக தளராமல் ஜெபிக்கவும், எப்போதும் அவரது சமூகத்தை நாடி, அவரை எல்லாவற்றிற்கும் மேலான பொக்கிஷமாகப் பார்க்கவும், பூமிக்குரிய காரியங்களை உதாசீனம் செய்யவும், பூமிக்குரிய எல்லாவற்றையும் அவர் நிமித்தம் குப்பை என்று கருதவும், அவரை அறிந்து, அவரைப் பிரியப்படுத்தவும் அதிகமாய் வாஞ்சிக்கிறவர்களாயிருப்போம்.
இப்போது நமக்கிருப்பது என்னே ஓர் அருமையான வாய்ப்பு! ஆனால் அது நமக்கு இப்போது மட்டுமே இருக்கிறது. 2கொரிந்தியர் 6:2 "...இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்".
"ஒரு மனிதன் நாள்முழுதும் எதைப் பற்றிச் சிந்திக்கிறானோ அதுவாகவே அவன் இருக்கிறான்" என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். என் வாழ்வில் உள்ள இலக்குகளில் ஒன்று என்னவென்றால், கவனச்சிதறல்களிலிருந்து என் கவனத்தை மெதுவாகத் திருப்பி, அதை நாள் முழுவதும் அவரது சமூகத்திற்கு நேராகத் திரும்பும் தொடர்ச்சியான பழக்கத்தை ஏற்படுத்துவதாகும். 'மற்ற கவலைகள்' மீது என் பார்வையை நிலைநிறுத்தக்கூடாது. அது எளிதானது அல்ல. பல கிறிஸ்தவர்கள் தேவனுடன் அத்தகைய நெருக்கத்தை ஒருபோதும் அடைகிறதில்லை என்று நினைக்கிறேன். ஆனால் கர்த்தர் இத்தகைய வாழ்வுக்கான ஆசையை என் இருதயத்தில் வைத்திருக்கிறார். தேவன்மீது கவனம் வைக்கும் வாழ்க்கையே அவரது அன்புக்கும் மகிமைக்கும் ஏதுவாக சகலத்தையும் செய்வதற்கான வழி என்று நான் விசுவாசிக்கிறேன் (1கொரிந்தியர் 10:31) - எபிரெயர் 12:2-ன் படி, அதுவே இயேசுவை என் பார்வையிலும் என் இருதயத்திலும் வைத்துக்கொண்டு, என் சிலுவையை சுமப்பதற்கான வழியாகும். அப்படியில்லாவிட்டால், வழக்கமாக சமையல் செய்து வீட்டை சுத்தம் செய்தும் தனது கணவன் மீது எந்த ஆசையும் இல்லாமல், அவரை நேசிப்பதற்கும் அவரோடு இருப்பதற்கும் எந்த ஆசையும் இல்லாமல் வாழும் ஒரு மனைவியைப் போல இருக்கும். அது ஓர் உயிரற்ற கிறிஸ்தவமாக இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் பிதாவையும் இயேசுவையும் என் இருதயத்தில் வைத்திருக்க வேண்டும். சரியான ஒரு நோக்கத்துடன் கூடிய அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை எனக்குத் தேவை.
ஒருசமயம் ஓர் உதாரணத்தை தேவன் எனக்கு சித்தரித்தார்: நான் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாத்திரத்தில்(use & throw cup) காபி அருந்துகிறேன். அந்தக் காபியை நான் குடித்து மகிழ்கிறேன். ஆனால் அந்தக் பாத்திரமோ(cup), சிறிது நேரம் காபியை வைத்திருக்கும் செயலைத் தவிர அதற்கு வேறொரு உபயோகமோ மதிப்போ இல்லை. காபி குடித்தபிறகு அந்தக் பாத்திரத்தை(cup) நான் வீசி எறிந்து விடுகிறேன். நம் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது என்று கண்டேன்: அதாவது, என் உயிருக்கும் ஒருமுறை மட்டுமே பயன்பாடு இருக்கிறது என்று உணர்ந்தேன். “நான் என் இயேசு எனக்குக் கொடுத்த பணியை செய்துமுடித்தால் போதும், அதைத் தவிர என் பிராணனுக்கு எவ்வித மதிப்பும் இல்லை” (அப்போஸ்தலர் 20:24) என்று பவுல் சொன்னதன் அர்த்தம் இதுதான். இவ்வாழ்க்கைக் கொண்டிருக்கும் ஒரே மதிப்பு, நாம் இங்கு இருக்கும் இந்த கொஞ்ச காலத்துக்கு இயேசுவை எவ்வளவு கொண்டிருக்க முடியும் என்பதுதான். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு பின்னர் தூக்கியெறியப்படும் ஒரு வாழ்க்கை. ஒரு குறுகிய காலத்திற்கு இங்கு இருக்கும்போது பொக்கிஷங்களால் நிரம்பியிருக்கலாம்; ஆனால் அதன் பிறகு அது வெளியே தூக்கி எறியப்படும்.
அல்லது ஒருமுறை மாத்திரமே பயன்படக்கூடிய பாத்திரத்தைப் போன்ற நம்முடைய வாழ்க்கையானது கிறிஸ்துவின் மீது தேவ பக்தி நிறைந்த பாத்திரமாக இருக்கக்கூடும் - கிறிஸ்துவே எனக்கு எல்லாம் என்பதே அத்தகைய தேவ பக்தியின் அர்த்தம். அந்த தேவ பக்தி ஒன்றே நம்முடைய வாழ்க்கையில் (ஒருமுறை மாத்திரமே பயன்படக்கூடிய பாத்திரத்தைப் போன்ற வாழ்க்கையில்) வைத்திருக்கக்கூடிய மதிப்புமிக்க ஒன்றாகும்.
- கிறிஸ்துவின் சாயலினால் நிறைந்த ஒரு வாழ்க்கை, வெளிப்புறமாக மாத்திரமல்ல தூய்மையான அன்பும் நோக்கங்களும் உள்ளத்திலிருந்து கடந்து வருகிறதானக் கர்த்தரைப் பிரியப்படுத்துகிற ஒரு வாழ்க்கை
- மனத்தாழ்மை நிறைந்த ஒரு வாழ்க்கை, பிதாவையும் இயேசுவையும் உயர்த்தி, கிறிஸ்து பெருகுவதால் கீழாக தாழ்த்தி சிறுகுவதில் மகிழ்ச்சியடையும் ஒரு வாழ்க்கை
- நம்பிக்கையும் விசுவாசமும் நிறைந்த ஒரு வாழ்க்கை, மிகுந்த வேதனையின் மத்தியிலும் அநேக வருட கால துன்பங்களின் மத்தியிலும், தேவனுடைய ஞானத்திற்கும் அன்பிற்கும் அடிபணிந்து, எல்லாவற்றிலும் அவருடைய சித்தம் செய்ய மனரம்மியமாக அவருடைய கரத்தில் நம்மை அர்ப்பணிக்கிற ஒரு வாழ்க்கை.
நாம் நித்தியத்திற்குள் செல்லும் வரை, நம் ஒருமுறைப் பயன்படுத்தக்கூடிய பாத்திரம் சிறிது நேரம் வைத்திருக்கக்கூடிய நித்திய மதிப்பு இதுதான்.
(உங்கள் ஜீவன்) சிறிது நேரம் தோன்றி பின் காணாமல் பூக்கும் புகையைப்போலிருக்கிறதே, என்று யாக்கோபு 4:14 சொல்கிறது.
ஆகவே, எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பதும், ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் கூட - எது முக்கியமாக இருக்கும் என்பதை தியானிப்பது ஆவிக்குரிய வாழ்வில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பத்தில் இத்தகைய சிந்தனை எனக்கு உதவியது. இப்போது என் குழந்தைகளுக்கு இதைப் பற்றி கற்பிக்க முயற்சி செய்கிறேன்.
நான் இளைஞனாக இருந்தபோது தேவனுக்காக மிகவும் தீவிரமாக வாழவும், மேலானவைகளையே நாடவும் (கொலோசெயர் 3:2) எனக்கு சவாலாக இருந்த ஒரு கவிதை இங்கே உள்ளது.
இன்றிலிருந்து நூறு ஆண்டுகள்:
இது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது,
நண்பனே,
இன்றிலிருந்து நூறு ஆண்டுகள்,
நீங்கள் ஒரு அழகான மாளிகையில் வசித்தாலும்
அல்லது ஒரு மிதக்கும் ஆற்றுப் படகில் இருந்தாலும்;
நீங்கள் அணியும் ஆடைகள் தையல்காரர்கள் செய்திருந்தாலும்
அல்லது எப்படியோ ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தாலும்,
நீங்கள் பெரிய மாமிசம் சாப்பிட்டாலும்
அல்லது பீன்சையும்(beans) கேக்கையும்(cake) சாப்பிட்டாலும்
இன்றிலிருந்து நூறு ஆண்டுகள்..
அது உங்கள் வங்கிக் கணக்கைப் பற்றி கவலைப்படாது
அல்லது நீங்கள் ஓட்டும் வாகனத்தின் தயாரிப்பைப் பற்றியும் கவலைப்படாது,
ஏனென்றால், உங்கள் செல்வத்தையும் புகழையும் கல்லறை உரிமை கோரும்
நீங்கள் போராடி பெறுபவைகளையும் கல்லறை உரிமை கோரும்
நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய காலக்கெடு உள்ளது
அங்கே யாரும் தாமதமாக வர மாட்டார்கள்,
நீங்கள் சென்ற இடங்கள் அனைத்தும் அப்போது பொருட்டாகாது
ஒவ்வொருவரும் அந்தத் தேதியை கடைப்பிடிப்பார்கள்.
பூமியில் நாம் எவைகளை விட்டுவிட்டோமோ
அவைகள் நமக்கு நித்தியத்திலே கொண்டிருப்போம்,
நாம் கல்லறைக்குச் செல்லும்போது
நித்திய மதிப்புள்ளவைகளை மட்டுமே சேர்த்து வைக்க முடியும்
சில மனிதர்கள் எப்போதும் தலை வணங்கும் பூமிக்குரிய ஆதாயத்தால்
பிரயோஜனமொன்றும் இல்லை நண்பனே!
உன் விதி முத்திரையிடப்படும், பார்ப்பாய்
இன்றிலிருந்து நூறு ஆண்டுகளில்..