WFTW Body: 

உண்மையான சபை, “இயேசுவைப்போலவே” எல்லாவற்றையும் சபைக்காய் இழந்துவிட ஆயத்தமானவர்களைக் கொண்டே கட்டப்பட முடியும்.

கிறிஸ்து சபையில் அன்புகூர்ந்து தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” (எபேசியர் 5:25). இன்றும், சபையை கட்ட விரும்பும் ஒவ்வொருவரும் “நம் சுய ஜீவியத்தின் முழுமையையும் தினசரி காணிக்கையாக்கிடும்” அதே விலைக்கிரயத்தைதான் நாமும் செலுத்த வேண்டும்! கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டுவதற்கு, வேறொரு எளிதான வழி இல்லை! இதே கோட்பாடுதான், ஆதி மானிட சரித்திரம் துவங்கி காணப்படுகிறது.

காயீன் கர்த்தருக்கு “ஒரு காணிக்கையை” கொண்டு வந்தான்! அதை தேவன் அங்கீகரிக்கவில்லை. ஆனால் ஆபேலோ “தன் மந்தையின் தலையீற்றுகளிலும், அவைகளில் கொழுமையானவைகளை (very best)" கொண்டு வந்தான்! அதை தேவன் அங்கீகரித்தார் (ஆதியாகமம் 4:3-5), இந்த காயீன், ஒரு மதவாத கிறிஸ்தவர்களையே அடையாளம் காட்டுகிறான். அவர்கள், தேவனுக்கு கொண்டுவரும் காணிக்கைகளில் 'வெகு குறைவானதோ' அல்லது 'யாதொரு விலைக்கிரயமும் இல்லாததாகவோ' காணப்படுகிறது. ஆனால் ஆபேலோ, 'ஆவிக்குரிய விசுவாசிகளையே அடையாளம் காட்டுகிறான்'. இவர்களோ, தேவனுக்கு ‘மிகுந்த விலைக்கிரயம் கொண்ட சிறந்தவைகளையே' காணிக்கையாக கொண்டு வருகிறார்கள்!

ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கை மோரியா மலையின் பலிபீடத்தில் கொடுத்திட தேவன் அழைத்தபோது, அவன் தேவனுக்கு தரக்கூடிய வேறு எதைக்காட்டிலும் இந்த தியாகமே' அதிக விலைக்கிரயமாயிருந்தது. அவனும், ஆபேலின் அடிச்சுவடுகளையே பின்பற்றினான்! (ஆதியாகமம் 22).

சுமார் 1000 வருடங்களுக்குப் பிறகு, தாவீது தேவனுக்கு ஒரு பலியை இதே மோரியா மலையில் (அர்வனாவின்களத்தில்) செலுத்தினான். அச்சமயத்தில் தன்னை முழு அர்ப்பணமாய் தந்துவிட்ட வார்த்தைகளைக் தாவீது கூறினான், “எனக்கு விலைக்கிரயம் இல்லாத யாதொன்றையும் தேவனாகிய கர்த்தருக்குப் பலி செலுத்தமாட்டான்” என்பதேயாகும். (2சாமுவேல் 24:24).

ஆபிரகாமும் தாவீதும் “விலைக்கிரயமான பலி செலுத்திய” அந்த ஸ்தலத்திலேயே தம்முடைய ஆலயத்தைக் கட்டும்படி சாலமோனுக்கு தேவன் கட்டளையிட்டார். அது, மோரியா மலையிலுள்ள அர்வனாவின் களமேயாகும் (2 நாளாகமம் 3:1),

இவ்வாறாக, தம்முடைய வீடானது “இந்த முழு தியாக ஆவி" கொண்ட ஜனங்களைக் கொண்டு மாத்திரமே கட்டப்படமுடியும் என்பதை தேவன் காண்பித்துள்ளார். அவர்கள் மாத்திரமே “கிறிஸ்துவின் மணவாட்டியாகிய எருசலேமை” கட்டமுடியும் (வெளி 21:2). மற்ற எல்லா கிறிஸ்தவர்களும் “பாபிலோனாகிய வேசியைக்” கட்டுவார்கள் (வெளி 17,18).

காயீனும் ஆபேலும் இரண்டு சந்ததிக்கு வழி வகுத்தார்கள்: 1) மதவாத ஜனங்கள் 2)ஆவிக்குரிய ஜனங்கள். பிற்காலங்களில் இந்த இரண்டு சந்ததியினர் ‘கள்ளதீர்க்கதரிசிகளும் உண்மை தீர்க்கதரிசிகளும்' என இஸ்ரவேல் சரித்திரத்திலும்! பரிசேயர்கள்.... இயேசு! என புதிய உடன்படிக்கையிலும், முடிவில், ‘பாபிலோன்.... எருசலேம்!' எனவும் முற்றுப்பெருகிறது (வெளி 17,18,21).

அநேக விசுவாசிகள், தூதர்களின் தரிசனத்தையும், சரீர ரூபத்தில் தோன்றும் இயேசுவின் தரிசனத்தையும் காணவிரும்புகிறார்கள். நம்முடைய தீராத ஏக்கமெல்லாம், இயேசு தன் மகிமையான ஜீவியத்தை, இந்த பூமியில் எவ்விதத்தில் வாழ்ந்தார்? என்பதைக் காணவே வாஞ்சிக்கிறோம். அதுவே, நாம் பின்பற்ற உகந்த மாதிரியாயிருக்கிறது!

பவுல் கூறும்போது “என்னுடைய மாம்சத்தில் நன்மை ஏதும் வாசமாயில்லை... நிர்ப்பந்தமான மனுஷன் நான்!” என கூறினார் (ரோமர் 7:18,24). இவ்வாறு தன்னை கண்டதினிமித்தம், தன்னை முற்றிலுமாய், சுத்திகரித்துக்கொள்ள ஓர் தகிக்கும் பேரார்வம்' பெற்றிருந்தார். அவரைப்போலவே 'நம்முடைய மாம்சத்தில் குடிகொண்டிருக்கும் கறைகளைக் காண்பதற்கு' நாமும் வெளிப்பாடு பெற வேண்டும். அப்போது மாத்திரமே “நம்முடைய மாம்சத்திலுள்ள எல்லா அசுசியும் நீங்க சுத்திகரித்து, தேவபயத்தோடு பரிசுத்தத்தில் பூரணமாக முடியும்”. இவ்வாறாகவே, சபையானது பரிசுத்தத்தில் காக்கப்படுகிறது (2கொரிந்தியர் 7:1).

நாம் விசுவாசித்து பிரசங்கிக்கும் இந்த தூய்மையான உபதேசங்கள், நாளாவட்டத்தில் பெலனிழந்த தேவபக்தியின் வேஷமாய், தரங்குறைந்து ‘வெறும் உபதேசங்களாய்' எளிதில் மாறிவிட முடியும். எனவே, இந்த சத்தியங்கள் நமக்கு வெறும் உபதேசங்களைவிட மேலானதாயிருக்க வேண்டும். ஆம், அவைகள் நமக்கு வெளிப்பாடாய்' மாறவேண்டும்! அந்த வெளிப்பாடு, நம் ஜீவியத்தில் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கவேண்டும். நாம் எவ்வளவு உத்தமமாய், நம் ஜீவியத்தின் பல்வேறு சோதனைகளில் போரிடுகிறோமோ, அந்த அளவிற்கே ஆவியின் வெளிப்பாட்டை நாம் அதிகமாய் பெற முடியும்! அந்த வெளிப்பாடோ, நம்மிடமிருந்து கழுவிக்கொள்ளும்படியான 'கிறிஸ்துவைப்போல் இல்லாத நம் உள்ளான ஜீவியத்தில்’ நாம் பெறும் வெளிப்பாடாயிருக்கும்.

இதுபோன்ற தொடர்ச்சியான வெளிப்பாடு இல்லாமல், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையைக் கட்டுவது ஒருக்காலும் முடியாது. இவ்வாறு நம் மாம்சத்திலுள்ள அசுசிகளைக் குறித்த வெளிப்பாடு இல்லாமல் பெற்றிடும் “பரிசுத்தம்” பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் கொண்ட நியாயப்பிரமாணத்தின் வெளித்தோற்றமான நீதியாகவே இருக்கும்! அதைக்கொண்டு நம் சக விசுவாசிகளிடம் ஓர் மதிப்பை நாம் பெற்றுவிடலாம்.... ஆனால், அது “தேவனுடைய பார்வையில் பூரணமானதாய்”(வெளி 3:1,2) ஒருபோதும் இருப்பதில்லை. சோதனை நேரங்களில் நாம் இயேசுவை நம் மாதிரியாக "காணவில்லையென்றால்", நம்மை பின்மாற்றக்காரர்கள் என்றே விளங்கிக்கொள்ள வேண்டும்!