WFTW Body: 

மத்தேயு 1 ஆம் அதிகாரம் இயேசு கிறிஸ்துவினுடைய வம்ச வரலாற்றை கூறுகிறது. யூதர்கள் தங்கள் வம்ச வரலாற்றில் ஆண்களின் பெயரை மாத்திரமே குறிப்பிடுவார்கள். இருப்பினும் நாம், இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நான்கு ஸ்திரீகளின் பெயர்களைக் காண்கையில், யூதராலும், அந்நிய சமுதாயத்தாலும் ஸ்திரீகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த தாழ்ந்த நிலையை மேலே உயர்த்தும்படிக்கு இயேசு வந்தார் என்பதையே இது போதிக்கிறது!. அதுமாத்திரமல்ல, இந்த நான்கு ஸ்திரீகளுக்கும் பாவம் நிறைந்த பின்னணி இருந்தது. இது இயேசு சீர்கெட்ட பாவிகளை இரட்சிக்க வந்தார் என்பதை போதிக்கிறது.

முதலில் குறிக்கப்பட்ட ஸ்திரீ தாமார் (மத்தேயு1:3). தாமார் யூதாவினுடைய மருமகள், அவளிடத்திலிருந்து இயேசுவின் தாயாகிய மரியாளின் மூதாதையரான பாரேசை பெற்றான். இயேசு பரலோகத்திலிருக்கையில் இந்த முறைகேடான உறவை கண்டு அப்படிப்பட்ட வம்சத்தை தன் பூமிக்குரிய வம்சவழியாக தெரிந்துக்கொண்டார். நம்மில் எத்தனை பேர் இப்பேற்பட்ட மோசமான பாவ குடும்ப வரிசையை தேர்தெடுத்து, நம்முடைய வாழ்க்கை சரித்திரத்தின் முதல் பக்கத்திலேயே முறைகேடான உறவை குறிப்பிடுவோம்?

இங்கே குறிக்கபட்ட இரண்டாவது ஸ்திரீ ராகாப் (மத்தேயு1:5), இவள் எரிகோ பட்டணத்தில் "சிகப்பு விளக்கு" பகுதியின் ஒரு பெயர்பெற்ற விபசாரி (யோசுவா 2:1). ஒரு யூத மனிதனாகிய சல்மோன் இந்த அந்நிய ஸ்திரீயை விவாகம் பண்ணினான். இந்த யூதன், புறஜாதியாகிய அந்த விபசாரியை திருமணம் செய்வதை இயேசு பரலோகத்திலிருந்து பார்த்தார் - இந்த குடும்ப வரிசையில்தான் பூமிக்கு வர தீர்மானித்தார்.

மூன்றாவது ஸ்திரீ ரூத் (மத்தேயு1:5). ரூத் ஒரு மோவாபிய ஸ்திரீயாய் இருந்தாள். இவளுடைய மூதாதையனாகிய மோவாப், லோத்து தன் மகளிடம் விபச்சாரம் செய்ததால் பிறந்தவன் (ஆதியாகமம் 19:30-37). மீண்டும் ஒருமுறையாக, இயேசு இந்த முறைகேடான உறவை பரலோகத்திலிருந்து பார்த்தார், இந்த முறைகேட்டின் வழியாக ரூத் பிறந்ததை பார்த்து, இந்த குடும்ப வரிசையில் வர தீர்மானித்தார்.

நான்காவது ஸ்திரீ பத்சேபாள் - உரியாவின் மனைவி (மத்தேயு1:6). இந்த ஸ்திரீயினிடத்தில் தான் தாவீது விபச்சாரஞ் செய்து பிறகு அவளை திருமணம் செய்துகொண்டான். மீண்டும் ஒருமுறையாக, தன் வாழ்க்கையில் பாவத்தினால் நிறைந்த ஒரு ஸ்திரீயை பார்கிறோம். இந்த ஸ்திரீ, முந்தைய மூன்று ஸ்திரீகளை போல மரியாளுடைய மூதாட்டி இல்லை. இவள் யோசேப்பினுடைய மூதாட்டி. ( இந்த வம்சவரலாற்றோடு லூக்கா 3 ஆம் அதிகாரத்தில் வருகிற மரியாளுடைய வம்சவரலாற்றை ஒப்பிடுகையில் இதை நாம் பார்க்கலாம்). யோசேப்பு தாவீதினுடைய ராஜரீக வம்சவழி வந்தவன், மத்தேயு இந்த வம்சவரலாற்றின் மூலமாக இயேசுவே அதிகாரப் பூர்வமான இஸ்ரவேலின் மெய்யான ராஜா என்று நிருபித்தான்.

ஏன் இயேசு இப்படிப்பட்ட பாவம் நிறைந்த குடும்ப வழியை தெரிந்தெடுத்தார்? தன்னை பாவம் நிறைந்த மனுவர்க்கத்தினூடே அடையாளப்படுத்திக்கொண்டதை காண்பிப்பதற்காகவும், நீதிமான்களையல்ல பாவிகளையே மனந்திரும்புவதற்கு அழைக்கவந்தேன் என்பதை வெளிப்படுத்தவுமே அப்படிச் செய்தார்.

எனவே, எந்த ஒரு மனுஷனோ / மனுஷியோ தன்னுடைய குடும்ப வழியை குறித்து வெட்கப்படத்தேவையில்லை. இந்தியாவிலே, மக்கள் தங்கள் பரம்பரையைக் குறித்து பெருமைபாராட்டுகிறார்கள். ஒரு கிறிஸ்தவன் அதை செய்யும்போது, தான் கிறிஸ்துவின் ஆவியை கொஞ்சமும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காண்பிக்கிறான். யோசேப்பு மரியாள் கர்ப்பவதியானாள் என்று கேள்விப்பட்டபோது, அவளுடைய கர்பப்பையிலே இயற்கைக்கப்பாற்பட்டு தேவன் கிரியை செய்தார் என்று அறியாமல், அவன் நீதிமானாய் இருந்ததினால் அவளை அவமானப்படுத்த மனதில்லாமல் அவளுடைய பாவம் என்று தான் நினைத்ததை மூட விரும்பினான் (மத்தேயு1:19).

இங்கே, நாம் எல்லோருமே நீதியை குறித்து சில காரியத்தை கற்றுக்கொள்ளலாம். செய்தியாதெனில், அநீதியான மனுஷன் நீதிமானாக மாறுவது இன்றியமையாதது என்பதே சுவிஷேசத்தின் செய்தியாகும். புதிய ஏற்பாட்டில் நீதிமான் என்று அழைக்கப்பட்ட முதல் நபர் யோசேப்பு. இந்த அவனுடைய நீதியானது மற்றவனுடைய பாவத்திற்காக அவர்களை அவமானப்படுத்த மனதில்லாமல் அதை மூடவே விரும்பினான் என்பதோடு தொடர்புபடுத்தியே கூறியிருக்கிறது. இதுவே மெய்யான நீதிமானுடைய ஆவியாய் இருக்கிறது.

யாராவது ஒருவர் பாவம் செய்தார் என்று கேள்விப்படும்போது, உன்னுடைய உடனடியான எதிர்வினை செயல் எப்படியாக இருக்கிறது? நீ ஒரு நீதிமானாய் இருந்தால், நீ அதை மூட விரும்புவாய். நீ ஒரு அநீதிமானாய் இருந்தால், மற்றவர்களிடத்தில் அதை பேசவிரும்புவாய். அங்கே நாம் பார்க்கிறோம் யோசேப்பு பரிசுத்த ஆவியை பெறாமல், புது உடன்படிக்கையின் கீழ் இல்லாமலேயே, தங்களை மறுபடியும் பிறந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பல லட்சக்கணக்கான விசுவாசிகளைவிட மிக மேன்மையான நீதிமானாயிருந்தான். யோசேப்பு தான் பாவம் என்று நினைத்ததை மறைக்க தீர்மானித்தான். மரியாளை அவன் பழித்து பேசாததினால் தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். அவன் அப்படி செய்திருந்தால், அவள் 100% சுத்தமாகவும் குற்றமற்றவளாகவும் இருந்த உண்மையை அவன் அறியும்போது எவ்வளவு வருத்தத்தையும் மனவுளைச்சலையும் அடைந்திருப்பான் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா!! இவைகள் நமக்கு போதனைகளாக எழுதப்பட்டிருக்கிறது.

நீங்கள் மற்றவர்களை குறித்த செய்தியை பரப்பியபின் அவை தவறு என்று அறிந்தால் எப்படி திரும்ப எடுக்க முடியும். உன்னிடத்தில் கேட்டவர்கள் இன்னும் பத்து பேருக்கு பரப்பியிருப்பார்கள், அவர்கள் யாவரும் இன்னும் அதிகமானோருக்கு பரப்பியிருப்பார்கள். எனவே, புதிய ஏற்பாட்டின் முதல் பாடத்திலேயே ஒரு எச்சரிப்பும் ஒரு மாதிரியும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுடைய பாவங்களை மூடுங்கள். யோசேப்பினுடைய மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அன்பு திரளான பாவங்களை மூடும்.

மத்தேயு 1:21 இல், "அவர் தம்முடைய ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்" என்ற புதிய ஏற்பாட்டின் முதல் வாக்குத்தத்ததை வாசிக்கிறோம். "இயேசு" என்ற பெயருக்கு இதுவே அர்த்தமாகும். இது இயேசு நம்முடைய பாவங்களை மன்னிப்பார் என்றல்ல, ஆனால் அவர் நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை இரட்சிப்பார் என்ற வாக்குத்தத்தம். பாவமன்னிப்பானது நம்முடைய கடந்தகால பாவத்தின் குற்றமனப்பான்மையை மட்டும் தான் நீக்குகிறது. ஆனால் நாம் இரட்சிக்க படுவதென்றால் கோபம், கண்களின் இச்சை, பொருளாசை, கசப்பு, பொறாமை முதலிய இவைகளிருந்து இரட்சிக்கப்படுவதாகும். பாவத்திற்கு அடிமையாவதிலிருந்து நம்மை இரட்சிப்பார் என்பதே இதன் பொருளாகும்.

புதிய ஏற்பாட்டின் இரண்டாவது வாக்குத்தத்தம் மத்தேயு 3:11 இல் காணப்படுகிறது. அது : அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.

புதிய ஏற்பாட்டின் முதல் இரண்டு வாக்குத்தத்தங்கள் இவைகளே - இவைகளில், சுவிசேஷத்தின் செய்தி சுருக்கமாக சொல்லப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலையும் நாம் அனுபவிக்க வேண்டும். நாம் பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவதும், பரிசுத்தாவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் பண்ணப்படுவதும் அவசியமாக இருக்கிறது.