WFTW Body: 

தம் சீஷர்களுக்கு கற்றுக் கொடுத்த ஜெபத்தில் முதல் விண்ணப்பமாக “உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக” என்றே ஜெபித்திட இயேசு கற்றுக் கொடுத்தார். இதுவே, இயேசுவின் பிரதான தவிப்பாயிருந்தது! சிலுவை மரணம் பிதாவுக்கு மகிமை கொண்டுவருவதாய் இருந்த படியால்தான், “பிதாவே உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்” என்று கூறி, அவர் சிலுவைப் பாதையைத் தெரிந்துகொண்டார் (யோவான் 12:27,28). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை ஆளுகை செய்த அவரது முதல்தரமான ஆசை என்னவென்றால் “பிதா மகிமைப்பட வேண்டும்!" என்பதுதான்.

அவர் செய்த யாவும் பிதாவின் மகிமைக்காகவே இருந்தது. அவருடைய வாழ்க்கையில் தெய்வீகம், லௌகீகம் என்று இரண்டு பிரிவினைகள் இருந்ததில்லை. எல்லாமே தெய்வீகம்தான்! அவர் பிரசங்கித்ததும், வியாதியஸ்தர்களை சுகமாக்கினதும், தேவனுடைய மகிமைக்காக இருந்தது போலவே, அவர் மேஜைகளையும் நாற்காலிகளையும் தேவனுடைய மகிமைக்காகவே செய்தார். ஒவ்வொருநாளும் அவருக்கு தெய்வீக நாளாகவே இருந்தது. தேவ பணிக்கென்றும் ஏழைகளுக்கும் கொடுக்கும் பணத்தைப் போலவே அனுதின தேவைகளுக்காக செலவிடப்பட்ட பணமும் பரிசுத்தமானதாகவே இருந்தது.

பிதாவின் மகிமையை மாத்திரமே இயேசு தேடி, பிதாவின் அங்கீகாரத்தில் மாத்திரமே அக்கறை கொண்டபடியினால், எல்லா நேரங்களிலும், தம் இருதயத்தில் பூரண இளைப்பாறுதல் கொண்டவராய் இருந்தார்! பிதாவின் முகத்திற்கு முன்பாக மாத்திரமே வாழ்ந்திருந்து... மனுஷருடைய கனத்திற்கோ, புகழ்ச்சிக்கோ இயேசு கவலையற்றிருந்தார். 'சுயமாய் பேசுகிறவன், தன் சுய மகிமையைத் தேடுகிறான்' என்றே இயேசு சொன்னார் (யோவான் 7:18).

ஆத்தும கிறிஸ்துவன், தான் தேவனுடைய மகிமையைத் தேடுவதாக எவ்வளவுதான் நடித்து வேஷம் போட்டாலும், மெய்யாகவே தன் அடித்தளத்தில் சொந்த மகிமையில் அக்கறை கொண்டவனாகவே இருப்பான். இயேசுவோ, தமக்கான மகிமையைத் தேடவே இல்லை!

"கிறிஸ்துவின் குணாதிசயங்களைப் பற்றியும், தேவ காரியங்களைப் பற்றியும்கூட" ஆத்தும சம்பந்தப்பட்ட வைராக்கியங்கள் உண்டு! இந்த வைராக்கியம் மனிதர்களுக்கு முன்பாகவே காணப்படும். மனிதர்களுடைய கனம் கிடைக்காதபோது தளர்ந்துவிடும்!

மனித புத்தி சாதுரியத்தில் தோன்றி, மனித தாலந்துகளினாலும் திறமைகளினாலும் நடப்பிக்கப்பட்ட காரியங்கள் எப்பொழுதுமே கடைசியில் மனிதனையே மகிமைப்படுத்துவதாய் இருக்கும். ஆத்துமத்தில் தோன்றும் காரியமானது சிருஷ்டிக்கப்பட்ட வஸ்துவையே மகிமைப்படுத்தும்.

நித்தியத்தில், பரலோகத்தில் இருக்கிற எதுவும்! பூமியில் இருக்கப்போகிற எதுவும்! ஒரு மனிதனுக்கும் கனத்தையோ, மகிமையையோ கொண்டுவராது.

காலத்தால் நிலைப்பட்டு, நித்தியத்தின் வாசலுக்குள் பிரவேசிக்கப்போகிற ஒவ்வொன்றும் தேவனிடத்திலிருந்து வந்ததும் தேவன் மூலமாய் கிரியை நடப்பித்து தேவனுடைய மகிமைக்காகவுமே இருக்கும்!!

தேவனைப் பொருத்தவரையிலும், ஒரு செயலுக்கு உள்ள மதிப்பும் தகுதியும் அந்த செயலுக்குப் பின்னால் காணும் உள்நோக்கத்தைப் (Motive) பொருத்ததாய் இருக்கிறது.

நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியம்தான். ஆனால் ஏன் அதைச் செய்கிறோம்' என்பது அதிகமுக்கியமானதாகும்!!

இயேசுகிறிஸ்து, தம் பிதாவின் சமூகத்தில் காத்திருந்து, அவருடைய திட்டத்தை பெற்று, அதைச் செய்வதற்கான பெலனையும் பெற்று, பிதாவின் வல்லமையினால் அவருடைய எல்லா சித்தத்தையும் செய்து முடித்தார்!! அதோடு மட்டுமல்ல, முந்திய அத்தியாயத்தில் நாம் பார்த்ததுபோல, தம் மகத்தான சாதனைகளுக்குப் பிறகு தம் பிதாவிற்கு மகிமையைச் செலுத்தும்படியே ஜெபிக்கச் சென்றார்!! தம் பிரயாசத்தின் பலனை, தம் பிதாவிற்கே பலியாகச் செலுத்தினார். தாமாகவே தமக்கு மகிமையை அவர் தேடவும் இல்லை... அது, தமக்குக் கொடுக்கப்பட்ட போதும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை! (யோவான் 5:41, யோவான் 8:50). அவருடைய புகழ் வெகுவாய்ப் பரவியபோது, மலைக்கு தனித்துச் சென்று பிதாவையே மகிமைப்படுத்தினார் (லூக்கா 5:15,16), தம் பிதாவுக்குரிய மகிமையை ஒருபோதும் தொடக்கூடாது என்றே தீர்மானித்திருந்தார்.

அப்படிப்பட்ட அவருடைய நிலையான மனோபாவத்தின் விளைவு என்னவென்றால், அவருடைய வாழ்க்கையின் இறுதியில் "பிதாவே, பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்” என்று அவர் நேர்மையாய் சொல்ல முடிந்தது (யோவான் 17:4).

ஒரு மனிதன் என்கிற முறையில் பிதாவை மகிமைப்படுத்தவே அவர் இந்த பூமிக்கு வந்திருந்தார்! ஒவ்வொரு நாளும் அதையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தார். எவ்வித கிரயம் செலுத்திவயாவது, பிதா மட்டுமே மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தீவிரமாக ஜெபித்தார். பிதாவின் நாமம் பரலோகத்தில் உயர்த்தப்பட்டு, கனப்படுத்தப்பட்டு, மகிமைப்படுகிறது போலவே, பூமியிலும் மகிமைப் படும்படியாக இயேசு வாழ்ந்து, இறுதியாக மரித்தார்!!

ஆம், “நான் தேவனுடைய மகிமைக்காக மாத்திரமே ஜீவித்து ஊழியம் செய்கிறேனா?” என்ற கேள்வியை உங்களுக்கு முன் வைத்து உங்களை சோதித்தறியுங்கள்!!