எதிர்காலத்தை நோக்கியிருக்கும் நாம், கடந்து சென்ற எல்லா வருடங்களையும் விட அது மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் நாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் பற்றிக்கொண்டால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும். நாம் எதை விசுவாசிக்கிறோமோ அதை நம் வாயினால் அறிக்கை செய்ய வேண்டும் - ஆனால் நம்முடைய அறிக்கையானது தேவனுடைய வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் (ரோமர் 10:8,9-ஐப் பார்க்கவும்).
(மனிதரின் பார்வையில்) நிறைவேற முடியாததாகத் தோன்றிய ஒரு வாக்குத்தத்தத்தை தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்தபோது, அவன் என்ன செய்தான்? “அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறு வயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான்.” (ரோமர் 4:19-21).
ஆகையால், தேவன் வாக்குத்தத்தம் செய்ததின்மேல் விசுவாசத்தோடு, நாம் பின்வரும் எட்டு அறிக்கைகளைச் செய்வோமாக. இவைகளை உங்கள் இருதயத்திலிருந்து உங்களுக்கும், சாத்தானுக்கும் அடிக்கடி சொல்லுங்கள்:
– ஆகவே நான் எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பேன் (யோவான் 17:23).
– ஆகவே நான் ஒருபோதும் குற்ற உணர்வுடன் வாழ மாட்டேன் (1யோவான் 1:9, எபிரெயர் 8:12).
– ஆகவே நான் எப்பணியைச் செய்யவும் எப்பொழுதும் பலம் பொருந்தியவனாய்த் திகழ்வேன் (லூக்கா 11:13).
– ஆகவே நான் எப்பொழுதும் மனரம்மியமாய் வாழ்வேன் (அப்போஸ்தலர் 17:26, எபிரெயர் 13:5).
– ஆகவே நான் தேவனுடைய கற்பனைகள் அனைத்துக்கும் எப்பொழுதும் கீழ்ப்படிய விரும்புகிறேன் (1யோவான் 5:3, உபாகமம் 10:13).
– ஆகவே நான் எப்பொழுதும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவேன் (ரோமர் 8:28).
– ஆகவே நான் ஒருபோதும் எதற்கும் பயப்படமாட்டேன் (எபிரெயர் 2:14,15; எபிரெயர் 13:6).
– ஆகவே நான் எப்பொழுதும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்பேன் (ஆதியாகமம் 12:2, கலாத்தியர் 3:14).
“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்” (எபிரெயர் 11:6).