WFTW Body: 

மனித உறவுகளில் கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவை. நேர்மையான விசுவாசிகளிடையே கூட அவை வரக்கூடும். கிறிஸ்தவர்களாகிய நாம், கடினமான காலங்களில் கூட கருத்தில் கொள்ளக் கூடாத சில விஷயங்கள் உண்டு. உதாரணமாக, நாம் வருத்தமாக இருக்கும் போது, ​​​​நம்முடைய எதிரியைக் கொலை செய்வதைப் பற்றி ஒருபோதும் சிந்திக்கக் கூட மாட்டோம். அப்படி செய்வது சாத்தியம் என்று நினைப்பது கூட வேடிக்கையாக இருக்கிறது. அதே போல, திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கு விவாகரத்தை ஒரு தெரிவாகக் (option) கூட கருதவேண்டாம். நண்பர்களுக்குள் வரும் வாக்குவாதத்தில் ஒருவரைக் கொலை செய்வது என்பது எவ்வாறு சிந்திக்க முடியாததோ, அது போல விவாகரத்து என்பது வாழ்க்கைத் துணைகளிடையே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.

என்ன செய்யக்கூடாது என்பதை அறிவதுடன், கடினமான காலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவது முக்கியம். ஆரோக்கியமான, ஆக்கப்பூர்வமான முறையில் நமது வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேட வேண்டும்.

எனது சொந்தத் திருமண வாழ்வில், பின்வரும் இரண்டு விஷயங்களை நினைவில் கொள்வது பெரிதும் உதவியது:

என் சுயத்திற்கு நானே முதலாவது மரிக்க வேண்டும்

ஒரு தரப்பினர் மீது மட்டும் 100% முழுவதுமாக குற்றம் இருக்கும் எனும் சூழ்நிலை இருப்பதில்லை. எந்தக் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், இரு தரப்பினருக்கும் சில பொறுப்புகள் உள்ளன. “குடும்பத் தலைவர்” என்ற முறையில், 99.9% பழி தன் மனைவி மீது இருப்பதாக உணர்ந்தாலும், புருஷன் அதைத் தன் மீது ஏற்றுக்கொண்டு முதலில் மன்னிப்புக் கேட்பதில் நடத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். (ஆனாலும், இந்த விகிதத்தில் தான் சம்பந்தப்பட்டவர்களின் பழி-பொறுப்பு இருக்கிறது என்பது யதார்த்தமாயிருக்க வாய்ப்பில்லை).

நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், திரும்ப மன்னிப்பு கேட்கத் தூண்டும் விதமான நம்பிக்கையினால் நான் மன்னிப்பு கேட்க கூடாது. என் மனைவி “திரும்பி மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்பது என் குறிக்கோளாக இருக்க கூடாது. மாறாக, உண்மையாக அறிக்கையிட்டு அதற்கு என் பொறுப்பை ஏற்க வேண்டும். என் மனைவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் விரும்பலாம், ஆனால் அது ஒரு மாம்ச ஆசை. இந்தக் காரியத்தில், எனது விருப்பத்திற்கும், எனது சுயத்திற்கும் நான் மரிக்க வேண்டும்; எனது சொந்தக் குறைகளுக்குப் பொறுப்பேற்று அக்கறையுள்ளவனாக மட்டுமே இருக்க நான் நாட வேண்டும்.

இன்றைய கிறிஸ்தவ உலகில் கணவர் ஓர் “ஆவிக்குரிய தலைவன்” என்பதாக நிறைய கூறப்படுகிறது. புதிதாகத் திருமணமான சகோதரர்களிடம் நான் அடிக்கடி கூறுவது போல, “சுயத்திற்கு மரிக்கும் முதல் நபர் நீங்களாய்த் தான் இருக்கிறீர்கள் என்பதுதான் நீங்கள் ஆவிக்குரிய தலைமை கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்”. புருஷன் ஒரு தலைவனாக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி சகலவித உலகப்பிரகாரமான கருத்துகளும் கிறிஸ்தவத்தில் இருக்கிறது: மரியாதை தரப்பட வேண்டும் என்று கட்டளையிடுதல், மற்றவர்களைக் கீழ்ப்படியப் பண்ணுதல், வீட்டின் அதிகாரியாக இருப்பது போன்றவைகளாகும். இவை அனைத்தும் தவறான கருத்துக்கள். உண்மையான ஆவிக்குரிய தலைமை என்றால் என்ன என்பதை அறிய, நாம் இயேசு கிறிஸ்துவை நமது ஆவிக்குரிய தலைவராகவும், அவருடைய திருச்சபையின் கணவராகவும் பார்க்க வேண்டும். நம்முடைய தலையாகிய அவரையே பார்த்து, அவருடைய சபையை அவர் எவ்வாறு ஆவிக்குரிய ரீதியில் வழிநடத்தினார் என்பதைப் பார்க்கும் போது, ​​இயேசுவின் ஆவிக்குரிய தலைமை ஒவ்வொரு நாளும் அவருடைய சொந்த விருப்பத்தை வெறுத்து, சுயத்திற்கு மரித்து, தம் பிதாவை நோக்கி, பரிசுத்த ஆவியைச் சார்ந்துகொண்டு, அவருடைய சிலுவையைச் சுமந்து, ஊழியத்திலும், அன்பிலும் நமக்குக் கீழே வருவதைக் காண்கிறோம். அவர் ஒருபோதும் கட்டாய மரியாதையை விரும்பவில்லை, அல்லது கட்டாயக் கீழ்ப்படிதலை விரும்பவில்லை, மாறாக பிதாவாகிய தேவனுடைய விருப்பத்திற்குத் தாழ்மையாக அடங்கிக் கீழ்ப்படிவதற்கு ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தினார்.

நம்முடைய தலைமைத்துவத்தின் ஒரு கிரியையாக, தாழ்மையான கீழ்ப்படிதலுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். இதையே புருஷர்களாகிய நாம் நம் குடும்பங்களிலும் நடப்பிக்க வேண்டும்.

முதலாவது தேவனுடனான உறவைப் புதுப்பிக்க நாடுங்கள்

எனது சொந்தத் திருமண வாழ்வில் உள்ள முரண்பாடுகளை / கருத்து வேறுபாடுகளைவத் தீர்ப்பது பற்றி சிந்திக்கும் போது, கைகளில் பியானோ வாசிப்பது போன்ற ஒரு சித்திரம் எனக்கு உதவியது. இந்தக் கைகளை ஒரு திருமண வாழ்க்கை வாழும் கணவன், மனைவியுடன் ஒப்பிடலாம். ஒரு பியானோ வாசிப்பவர் கைகள் அழகாக வாசிப்பதை நினைத்துப் பாருங்கள். அந்த கைகள் தங்கள் சொந்த முயற்சிகள், ஒன்றாக செலவழித்த நேரம் போன்றவற்றின் மூலம் ஒருங்கிணைக்க படவில்லை, மாறாக அந்த கைகள் இரண்டும் வாசிப்பவரின் தலையுடன் சரியாக இணைக்கப்பட்டிருப்பதால் ஒன்றாக செயல்பட முடிகிறது.

திருமண வாழ்வில், “ஒரே மனமாய் இருப்பதற்கு” நிறைய நீண்ட-உரையாடல்கள் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்; இது உண்மையில் கைகள் “அதிக நேரத்தை ஒன்றாகச் செலவிடுவதற்கு” மட்டுமே சமம்; அது உண்மையில் நம்மை இசைவாக வைப்பதில்லை! ஒற்றுமை என்பது ஒருங்கிணைப்பு மற்றும் உரையாடல்கள் என்று நான் தவறாக நினைத்தேன், ஆனால் அதிக ஒருங்கிணைப்பும் உரையாடல்களும் ஒற்றுமையை ஏற்படுத்த வில்லை; பெரும்பாலும், எனது சொந்த முயற்சிகள் அதிக ஒற்றுமையின்மையையே ஏற்படுத்தியது.

கைகள் ஒன்றாக ஒருங்கிணைக்கப் படவில்லை என்றால், அந்தக் கைகள் வாசிப்பவரின் தலையிலிருந்து முடங்கிவிட்டதாக இருக்க வேண்டும் என்று நான் பார்த்தபோது, ​​​​அது அர்த்தமுள்ளதாக இருந்தது! முடங்கிவிட்ட கை என்பது பக்கவாதம் போன்றதாகும். கை முடங்கிய பியானோ கலைஞர் அழகாக வாசிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. அதேபோல், திருமண வாழ்வில், முடங்கிவிட்ட உறுப்பினர்களாக நாம் அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியமில்லை; நம் தலையுடன் சரியான தொடர்பை புதுப்பிக்க நாம் முயல வேண்டும்!

முதலில் தேவனை தனித்தனியாகத் தேடுவதும், என் இருதயத்தை ஆராய்வதும் (என் இதயத்தை ஆராய்ந்து அதில் ஏதேனும் குற்றங்கள் இருக்கிறதா என்று அவரிடம் கேட்பதும்), அவர் எனக்கு வெளிப்படுத்தும் எதையும் சரியாகச் செய்ய ஆவலுடன் தீர்மானிப்பதாகும். இதுவே பூமிக்குரிய உறவை மீட்டெடுப்பதற்கு மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் சிறந்த வழியாகும் என்ற வெளிப்பாட்டைப் பெற்றேன். ஒரு விவாதத்தில் பல்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் தந்திரோபாயங்களைக் கையாளுவதைக் காட்டிலும் அதுவே சிறந்தது என்றுணர்ந்தேன்.

நாங்கள் இதைச் செய்ததால், பல கருத்து வேறுபாடுகள் முற்றிலும் மறைந்துவிட்டன, மேலும் விவாதம் செய்ய அங்கே இடமில்லை. மேலும் உரையாட விரும்பும்போது, ​​முழுமையாக செயல்படும் ஆரோக்கியமான கைகளாக, ஆரோக்கியத்திற்கு மீட்டெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக, நாம் பயனுள்ள வகையில் உரையாட முடியும்.

சகோதரர் சகரியா பூணன் சிலுவையின் படத்தைப் பயன்படுத்தி கூறும்போது, நமது மனித உறவுகள் அனைத்தையும் “கிடைமட்ட கட்டைகள்” எனவும் தேவனுடன் நாம் கொண்டுள்ள உறவு “செங்குத்தான கட்டை” என்றும் விவரிக்கிறார். இந்த படம் திருமண-வாழ்க்கையின் காரியத்தில் உண்மையாக இருக்கும்: எந்தக் கிடைமட்டமும் உடைந்த செங்குத்தான கட்டையில் இருக்க முடியாது; மற்றும் கிட்டத்தட்ட அனைத்து உடைந்த கிடைமட்டங்களுக்கும் உண்மையில் ஒரு உடைந்த செங்குத்து கட்டையே காரணமாக அமைகிறது.

நம் திருமணங்களுக்கான தேவனுடைய விருப்பம் என்னவென்றால், அவர் நம்மை மீட்டெடுக்கும் அன்பின் அற்புதத்தை வெளிப்படுத்துதல், அவருடன் பூரண ஐக்கியத்திற்கு நம்மை ஒப்புரவாக்குதல் என்பவை ஆகும் (எபேசியர் 5:31-32). இவ்விரண்டு வழிகள் மூலம், திருமணங்களைப் பிரிக்கும் கருத்து வேறுபாடுகளில் நாம் தனிப்பட்ட முறையில் அவருடைய அன்பைப் பிரதிபலிக்க முற்படலாம்.