WFTW Body: 

“சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறது போல சாத்தான் உன்னைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக் கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என இயேசு எச்சரித்துக் கூறினார் என்று லூக்கா 22:31-32 நாம் வாசிக்கிறோம்.

பேதுரு வீழ்ச்சியடைய தேவன் அனுமதித்ததற்கு இதுவே அவரின் நோக்கமாகும். அதாவது, பேதுரு “புடைக்கப்பட வேண்டும்! உண்மையில் சாத்தான், பேதுருவை அழித்திடவே விரும்பினான். ஆனால், அதற்கு தேவன் அனுமதிதரவேயில்லை. நம் திராணிக்கு மேலாக சோதிக்கப்படுவதற்கும், பரீட்சிக்கப்படுவதற்கும் தேவன் ஒருபோதும் இடங்கொடார்!! பேதுருவை புடைத்திட மாத்திரமே சாத்தான் அனுமதி பெற்றான். இந்தத் தோல்வியென்னும் “படைப்பில்” பேதுருவின் ஜீவியத்திலிருந்த ஏராளமான “பதருகள்" அகற்றப்பட்டு, அவன் சுத்திகரிக்கப்பட்டான்! ஆம், தாம் தோல்வியடைய தேவன் அனுமதிப்பதற்கு மெய்யான நோக்கம் இதுவேயாகும்!! இவ்வாறு பதருகள் நம் ஜீவியத்திலிருந்து அகற்றப்படுவது நல்லது தானே? நிச்சயமாய் நல்லதுதான், இதிலென்ன சந்தேகம்!? ஒரு விவசாயி தன் நிலத்தில் கோதுமை அறுவடை முடிந்தவுடன், அக்கோதுமை மணிகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக அதை அவன் கண்டிப்பாய் புடைக்க வேண்டும். அப்போதுதான் “பதருகள்” அக்கோதுமை மணிகளிடமிருந்து பிரிக்கப்பட முடியும்!

இவ்வாறாகவே, நம் ஜீவியத்திலிருக்கும் பதருகளைப் போக்குவதற்கும் ஆண்டவர் இந்த சாத்தானையே உபயோகிக்கிறார். இந்த நோக்கத்தை, நம்மைத் திரும்பத்திரும்ப வீழ்ச்சியடையச் செய்வதின் மூலம் தேவன் நிறைவேற்றுகிறார் என்பதை நாம் அறிந்துகொள்வது, நமக்கு மிகுந்த ஆச்சரியத்தையே தருகிறது. பேதுருவில் இந்த நோக்கம் நிறைவேறுவதற்குத் தேவன் சாத்தானை உபயோகித்தார் .... இப்போது நம் ஜீவியத்தில் அவரது நோக்கம் நிறைவேறுவதற்கும் இந்த சாத்தானையே உபயோகிக்கிறார். நம் எல்லோரிடமும் பெருமையின் பதர்;சுய-நம்பிக்கையின் பதர்; சுய-நீதியின் பதர் என ஏராளமான பதருகள் இருக்கின்றன. இந்தப் பதருகள் அனைத்தையும் முற்றிலுமாய் அகற்றி நம்மைச் சுத்திகரிப்பதற்குத் தேவன் சாத்தானைப் பயன்படுத்தி, நாம் திரும்பத் திரும்பத் தோல்வியடையும்படி செய்கிறார்!

தம்முடைய இந்த நோக்கத்தை உங்கள் ஜீவியத்தில் நிறைவேற்றுவதில் ஆண்டவர் சித்திபெற்றரா? இல்லையா? என்பது உங்களுக்கு மாத்திரமே தெரியும்! ஆனால், பதருகள் உங்களிடம் அகற்றப்பட்டுக் கொண்டேயிருந்தால், நீங்கள் மெய்யாகவே அதிகமதிகமாய் தாழ்மையுள்ளவர்களாயும், வெகு குறைவாய் சுய-நீதியுடையவர்களாயும் மாறுவீர்கள். ஆம், தோல்வியடையும் மற்றவர்களையோ நீங்கள் ஒரு போதும் அற்பமாய் எண்ணவேமாட்டீர்கள். மேலும், உங்களை ஒருபோதும் மற்றவர்களைவிட மேன்மையாகவும் எண்ணமாட்டீர்கள்!

நாம் திரும்பத் திரும்ப தோல்வியடைய தேவன் அனுமதித்து, நம்மிடமுள்ள பதருகளைச் சாத்தான் புடைத்து அவைகளை அகற்றும்படியே செய்கிறார். ஆகவே நீங்கள் தோல்வியடைந்ததனிமித்தம் ஒருபோதும் சோர்ந்துபோகவே வேண்டாம்! நீங்கள் தொடர்ந்து தேவனுடைய கரத்தில்தான் இருக்கிறீர்கள். உங்களுடைய தொடர்ச்சியான தோல்விகளில் தேவனுடைய மகிமையான நோக்கம் உங்களுக்குள் நிறைவேறிக்கொண்டு இருக்கிறது!! ஆனால், இதுபோன்ற நேரங்களில், உங்கள்மீது தேவன் வைத்திருக்கும் அன்பில் கொண்ட உங்கள் விசுவாசம் மாத்திரம் ஒருபோதும் ஒழிந்து போகாதிருக்கக்கடவது! அதற்காகத்தான் இயேசு பேதுருவுக்காக ஜெபித்தார்... இன்று “அதற்காகவே” அவர் நமக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். ஆம், நாம் ஒருபோதும் வீழ்ச்சியே அடையக்கூடாது என அவர் ஜெபிக்காமல், பாறையின் பாதாளத்தில் போய் விழுந்தாலும் தேவனுடைய அன்பில் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை தளர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஜெபிக்கிறார்,

இவ்வாறு, ஏராளமான வீழ்ச்சியின் அனுபவங்கள் வழியாகவே நாம் கடைசியில் “பூஜ்ஜிய நிலைக்கு” வந்து, அங்கு மெய்யாகவே நொறுங்குகிறோம்! இந்த நிலையை பேதுரு அடைந்த பிறகுதான், அவனுக்குள் அந்த “இரண்டாவது மனந்திரும்புதல்” உண்டானது (லூக்கா 22:32), ஆம், அவன் “முற்றிலுமாய் திரும்பிவிட்டான்.” இவ்வாறு, பேதுருகுன்றின் பாதாளத்தில் வீழ்ச்சியடைந்தவுடன் “முற்றிலுமாய் திரும்பியதே” (TURNED AROUND), இயேசு பேதுருவுக்காக ஜெபித்த ஜெபத்திற்குப் பதில் கிடைத்ததின் நிரூபணமாயிருக்கிறது. பேதுரு, அந்த வீழ்ச்சியில் உழன்று மனம் சோர்ந்து விடவில்லை. தன் விசுவாசத்தையும் இழந்துவிடவில்லை. அவன் மீண்டும் குதித்து எழுந்து நின்றான்! வீழ்ச்சியின் நீண்ட தூரத்திற்கு பேதுரு செல்லும்படி தேவன் அனுமதித்தார் . -- ஆனால், பேதுரு அந்த நீண்ட கயிற்றின் கடைசி முனைக்குச் சென்ற அடுத்த கணமே, தேவன் அக்கயிற்றை இழுத்து அவனைத் தன்னிடம் சேர்த்துக்கொண்டார்!

நாம் தேவனுடைய பிள்ளையாய் இருப்பது, நாம் பெற்ற சிலாக்கியம் என்றே சொல்லவேண்டும். தம்முடைய பிள்ளையாய் அவர் நம்மைத் தெரிந்துகொண்ட அடுத்த கணமே, நம்மைக் காக்கும்படி ஒரு கயிற்றை நம்மைச் சுற்றி தேவன் வைக்கிறார். அந்தக் கயிறு ஏராளமான தளர்வுகள் கொண்ட ஓர் நீண்ட கயிறு ஆகும். ஆகவே, நீங்கள் பல ஆயிரம் தடவைகள் கூட வீழ்ச்சியடையவும்....... ஆண்டவரின் கையிலிருந்து வெகுதூரமாயும் சென்றுவிட முடியும்! அவ்வித வீழ்ச்சியின் அனுபவங்களில், ஒரு நாள்..... கயிற்றின் தளர்ச்சி முடியும் கடைசி முனையை நீங்கள் அடைந்துவிடுவீர்கள்! ஆம், அப்போதுதான் தேவன் தன் ஆதிக்கத்திலுள்ள கயிற்றை இழுத்து மீண்டும் உங்களைத் தன்னண்டை வரும்படிச் செய்துவிடுவார்!! அவ்வாறு கயிற்றின் கடைசி முனையை நீங்கள் அடையும் சமயத்தில், கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடிவிட உங்களால் முடியும் என்பது உண்மைதான்! அதேசமயம், நீங்கள் தேவனுடைய காருண்யத்தை நினைவுகூர்ந்து ... நொறுங்குண்டு .... மனதுயரத்துடன் அவரிடம் திரும்ப வருவதற்கும் நீங்களே தெரிந்துகொள்ள முடியும்!! அதைத்தான் பேதுரு செய்தார். அவர் மனங்கசந்து அழுது ஆண்டவரிடம் திரும்பி வந்தார். ஆனால், இதே செயலை யூதாஸ்காரியோத்து செய்யவில்லை. அவனோ, தன் ஜீவியத்தின்மீது தேவன் கொண்டிருந்த ஆளுகைக்கு எதிராக முரட்டாட்டம் செய்து, கயிற்றை அறுத்துக்கொண்டு நித்தியமாய் தொலைந்து போனான்! ஆனால், இச்செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களோ,பேதுரு செய்ததுபோலவே செய்வீர்கள் என்றே நிச்சயமாய் நம்புகிறேன்!

அடுத்த கட்டமாக இயேசு பேதுருவைப் பார்த்து கூறியது யாதெனில், “நீ குணப்பட்ட பின்பு (நீ திரும்பிவந்து பெலனடைந்த பின்பு) உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” (லூக்கா 22:32) என்றார். நாம் இவ்வாறு நொறுங்குண்டு பெலனடைந்த பிறகே, பிறரை பெலப்படுத்தி அவர்களை ஸ்திரப்படுத்திட முடியும்! ஆம், ஆவியில் நிறைந்து கர்த்தருக்குச் செய்திடும் ஊழியத்தின் ஆயத்தம் இந்த தோல்வியின் அனுபவத்தின் மூலமாகவே பேதுருவுக்கு உண்டானது என நாம் கூறலாம். இந்தத் தோல்வியின் அனுபவம் இல்லாமல், இந்தப் பேதுரு பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தால், அந்த பெந்தெகொஸ்தே நாளில் இந்தப் பேதுரு ஒரு பெருமையான மனிதனாகவே நின்றிருப்பான்! தோல்வியே அடையாத அந்தப் பெருமையான பேதுரு, பிறரை அற்பமாய் பார்த்து, தன் முன்னிருக்கும் பாவியான ஜனங்களை உதாசீனமும் செய்திருப்பான்!! பெருமையுள்ளவர்களைத் தேவன் எதிர்த்து நிற்கிறபடியால், இப்போது தேவன் பேதுருவுக்கு சத்துருவாயும் மாறியிருப்பார்!?

பேதுரு தேவன் விரும்பியபடி இருப்பதற்கு முன்பு, அத்தகைய பூஜ்ஜிய நிலைக்கு வர வேண்டியிருந்தது. நாமே பாதாளத்தின் வீழ்ச்சியில் கிடக்கும்போதுதான், அங்கே ஏற்கனவே வீழ்ச்சியில் இருக்கும் மற்றவர்களை நாம் ஒருபோதும் அசட்டை செய்திட மாட்டோம்! பாதாள வீழ்ச்சி அடைந்த பிறகு, இனியும் நாம் ஒரு போதும் எந்தப் பாவியையும் அல்லது எந்தப் பின்மாற்ற விசுவாசிகளையும் அல்லது வீழ்ச்சியடைந்த எந்தக் கிறிஸ்தவத் தலைவர்களையுமேகூட..... நாம் ஒருபோதும் இளப்பமாய் பார்த்திடவே மாட்டோம்! இப்போது நாம் பெற்றுவிட்ட “பாவத்தின் மேல் ஜெயத்திற்காக ஒருபோதும் பெருமை அடைந்திடவும் மாட்டோம். ஏனென்றால், ஒரு காலத்தில் நாமேயடைந்த வீழ்ச்சிகளை நாம் அறிந்திருப்பதே அதற்குக் காரணமாகும். இதை மனதில் கொண்டுதான், பேதுரு மற்ற கிறிஸ்தவர்களை எச்சரித்தபோது, “முன்செய்த பாவங்களற நாம் சுத்திகரிக்கப்பட்டதை மறவாதிருக்கக்கடவோம்” (2பேதுரு 1:9) எனக் கூறினார். இதற்கு மாறாகத் தன் முந்திய நிலையை மறக்கிறவன் எவனோ அவன் 1) கண் சொருகிப் போனவன்! (SHORT-SIGHTED கிட்டப்பார்வை கொண்டவன்), 2) குருடன்! என கடிந்து எச்சரித்தார். இவ்வாறு நான் ஒருபோதும் கண் சொருகிப்போன “கிட்டப்பார்வை" கொண்டவனாயும், குருடனாயும் இருக்க ஒரு துளியும் விரும்பவேயில்லை. நான் எக்காலத்தும், பரலோக பொக்கிஷங்களையும், நித்திய மதிப்புகளையும் காணக் கூடிய “ஓர் நீண்ட தூரப்பார்வை” கொண்டவனாகவே இருக்க விரும்புகிறேன்.