WFTW Body: 

முதலாவதாக, இயேசு தான் செய்த எல்லாவற்றிலும் தன் பிதாவின் மகிமையைத் தேடினார் (யோவான் 7:18).
அவருடைய மிகப் பெரிய பேரார்வம் மானிட சமுதாயத்தின் நன்மை கூட அல்ல (அது அவ்வளவு நல்ல நோக்கமாக இருந்தாலும் அல்ல). ஆனால், அவருடைய பிதாவின் நாம மகிமையே அவருக்கு பேரார்வமாய் இருந்தது (யோவான் 17:4). அவர் பிதாவின் முகத்திற்கு முன்பாகவே வாழ்ந்தார்! எல்லாவற்றிலும் தன் பிதாவை மாத்திரமே பிரியப்படுத்த விரும்பினார்! அவர் பேசும்போது தன்னை கவனித்து கேட்ட மக்களுக்கு முன்பாக நில்லாமல், தன் பிதாவுக்கு முன்பாக நின்றே தேவனுடைய வார்த்தையைப் பேசினார். ஜனங்களை அல்ல, பிதாவையே பிரதானமாக சேவித்தார். இவ்விதமாகவே, நாமும் தேவனை சேவித்திட வேண்டும். நாம் முதலாவதாக சபையின் ஊழியனாய் அழைக்கப்படவில்லை, ஆனால் “கர்த்தரின் ஊழியனாகவே” அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் முதலாவதாக ஜெபிக்கும்படி ஆண்டவர் கற்றுத் தந்த ஜெபம் “பிதாவே, உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக” என்பதேயாகும். நாம் ஜனங்களுக்கு ஊழியம் செய்திட விரும்பினால், ‘மனுஷரைப் பிரியப்படுத்துகிறவர்களாய்’ கதியடைந்து நமக்காகவே ஓர் கௌரவத்தை கட்டுகிறவர்களாயிருப்போம்.

இரண்டாவதாக, இயேசு தான் பெற்றிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டார்! அதை சபைக்காகவே செய்தார்.
அவர் சபையின் அஸ்திபாரத்தை போட வந்தபோது, எதையும் தனக்காக வைத்துக் கொள்ளவில்லை. “கிறிஸ்து சபையை அன்புகூர்ந்து, தன்னையே சபைக்கு ஒப்புக்கொடுத்தார்” (எபேசியர் 5:25). அவருடைய மரணத்தை விவரிக்கும் ஏசாயா தீர்க்கதரிசனமாவது: “அவர் தன்னுடைய சொந்த நலனுக்காக யாதொரு சிந்தையும் வைக்காமல் மரித்தார்” (ஏசாயா 53:8 Message Bible). இதை சற்று யோசித்துப் பாருங்கள்: அவர் ஜீவித்து மரிக்கும்வரை தன் சொந்த நலனுக்காக ஒரு சிறிய சிந்தை கூட வைத்திருக்கவில்லை! தன்னை முழுவதும் சபைக்கு ஒப்புக்கொடுத்து விட்டார். இந்த வழி நடக்கவே அவர் நம்மையும் அழைக்கிறார்! இவ்வழி நடக்க விரும்புகிறவர்கள் மாத்திரமே, ‘புதிய உடன்படிக்கை சபையை’ கட்ட முடியும்! அப்படி ஒரு சபையை கட்டுவதற்கு, நம் ஜீவியத்தில் ஏராளமான அசௌகரியங்களை சந்திக்க நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்! நம்முடைய அன்றாட நடைமுறை சுமுகமான ஜீவியம் சீர்குலைந்து போகவும் ஆயத்தமாயிருக்க வேண்டும்! நம்மை பிறர் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும், நம்முடைய பூமிக்குரிய ஆஸ்திகள் பிறரால் பயன்படவும், வாழ்வின் எவ்வித அழுத்தத்தையும் யாதொரு குறைசொல்லும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளவும் நாம் ஆயத்தமாயிருக்க வேண்டும்!

மூன்றாவதாக, இயேசு நம்முடைய துக்கங்களில் பிரவேசித்தார்.
அவர் நம்முடைய அனைத்திலும் ஒன்றரக் கலந்தார். அவர் நமக்கு உதவி செய்வதற்கு, அவர் தேவ குமாரனாயிருந்தும் ஒரு கல்வி திட்டத்தை அவரே முதலாவதாகப் பெற்றுக் கொண்டார். பல பாடுகள் மத்தியில் அந்த கல்வித் திட்டத்தைக் கற்றுக்கொண்டார் (எபிரெயர் 2:17; 5:8). இவ்வாறாகவே, அவர் நம்முடைய முன்னோடியாய் மாறினார் (எபிரெயர் 6:20). நாம் பல்வேறு உபத்திரவங்களில் பாடுபட்டு கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாயில்லையென்றால், நாம் பிறருக்கு உதவி செய்ய முடியாது. இவ்வகையில் வெறும் பிரசங்கிகளாய் அல்ல, நம் சபையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கு ‘சிறிய–முன்னோடிகளாய்’ இருப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். இதன் விளைவாய், நாம் பல வேதனையும் கஷ்டமும் நிறைந்த உபத்திரவங்களுக்குள் சென்று, தேவனுடைய ஆறுதலையும், அவர் தரும் பெலனையும், அந்த எல்லா சூழ்நிலைகளிலும் பெற்றுக்கொள்கிறோம். இப்போது நாம் பிறருக்கு ஜீவன்–தரும் பங்கைக் கொடுப்பதற்கு முடியும். அதுவெறும், வேதத்தை படித்து அல்லது புத்தகத்தைப்படித்து அல்லது ஒரு பிரசங்கத்தை கேட்டு பேசுகின்ற ஒரு செய்தி அல்ல (2 கொரி 1:4 காண்க).