WFTW Body: 

ஜனங்கள் எவ்வாறு தங்கள் வேலைகளிலேயே மும்முரமாகிவிட முடியும் என்பதை குறித்து சமீபத்தில் நான் படித்த சிலவற்றை கூறுகிறேன்.

ஒரு முறை "சாத்தான்" உலகளாவிய மாநாட்டிற்காக அழைப்பு விடுத்தான். அதில் அவன் தன்னுடைய பிசாசுகளுக்குஇப்படியாக ஒரு சொற்பொழிவு ஆற்றினான்: "கிறிஸ்தவர்கள் சபைக்குச் செல்வதை நம்மால் தடுக்க இயலாது. அவர்களைவேதத்தை வாசிக்காமலிருக்கச் செய்யவும் முடியாது. ஆனால் அவர்கள் வேறொன்றைச் செய்யவிடாமல் நம்மால் தடுக்கமுடியும். நாம் அவர்களை கிறிஸ்துவோடு நெருங்கிய உறவு வைத்துக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள முடியும். அவர்கள் இயேசுவின் உறவை ஆதாயமாக்கி கொண்டால், பிறகு நமக்கு அவர்கள் மீதிருக்கும் வல்லமையானது முறிந்துவிடும். ஆகவே அவர்கள் சபைக்குச் செல்லட்டும்; அடிப்படையான உபதேசங்களை வைத்துக் கொள்ளட்டும்; அவர்கள் தங்களுடைய பழமையான வாழ்க்கைமுறையையும் பின்பற்றிக் கொள்ளட்டும். ஆனால் அவர்கள் இயேசுகிறிஸ்துவுடன் ஒரு நெருக்கமான அனுபவத்தை வளர்த்துக் கொள்ள முடியாதபடிக்கு, அவர்களுடைய நேரத்தைத் திருடிவிடுங்கள். பிசாசுகளே, நீங்கள் இதைத்தான் செய்ய வேண்டுமென நான் விரும்புகின்றேன். அவர்கள் தங்கள் இரட்சகரைப்பற்றிக் கொள்ளாதவாறு அவர்களுடைய கவனத்தைச் சிதறடியுங்கள்" என்றான்.

'நாங்கள் இதை எப்படிச் செய்து முடிப்பது?' என பிசாசுகள் கேட்டன.

வாழ்க்கையில் முக்கியமற்ற விஷயங்களில் அவர்கள் மிகவும் பிஸியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய மனங்களை நிரப்பக்கூடிய எண்ணற்ற சூழ்ச்சியான திட்டங்களை உருவாக்குங்கள். அவர்களைச் செலவுபண்ணிக் கொண்டேயிருக்கும்படியும் கடன் வாங்கிக் கொண்டேயிருக்கும்படியும் சோதியுங்கள். உயர்தரமான வாழ்க்கை முறையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, மனைவியை வேலைக்கு அனுப்புவது நல்லது எனவும், கணவன்மார்கள்நா நாளொன்றிற்கு 10-12 மணி நேரம் வீதம், 6 அல்லது 7 நாட்கள் வேலை செய்வது நல்லது எனவும் நம்பச் செய்யுங்கள். பிள்ளைகளோடு நேரத்தைச் செலவு செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதி சீக்கிரத்திலே, வேலையின் அழுத்தங்களிலிருந்து தப்பக்கூடாததினால்; குடும்பங்களில் பிளவுகளை ஏற்ப்படுத்திவிடுங்கள்.

அவர்களால் இயேசு பேசுவதைக் கேட்க முடியாதபடி, அவர்களுடைய மனங்களை அதிகமாய்த் தூண்டிவிடுங்கள். வண்டி ஓட்டும்போது, வானொலியையோ, ஒலி நாடாவையோ கேட்கச் செய்யுங்கள். வீடுகளிலே எந்நேரமும் TV-யோ, CD-யோ ஓடிக் கொண்டே இருக்கும்படி செய்யுங்கள். உலகிலுள்ள ஒவ்வொரு கடையும், உணவு விடுதியும் தொடர்ச்சியாக இசையை ஒலித்துக் கொண்டே இருப்பதை உறுதி செய்யுங்கள்.

அவர்களுடைய காப்பி மேசைகளை பத்திரிக்கைகளினாலும், செய்திதாள்களினாலும் நிரப்புங்கள். ஒருநாளின் இருபத்துநான்கு மணிநேரமும் செய்திகளால் அவர்கள் மனங்கள் வன்மையாக தாக்கப்படட்டும். வாகனத்தில் பயணிக்கும் நேரமெல்லாம், விளம்பரபலகைகளால் அவர்கள் ஜெயிக்கப்படட்டும். அவர்களது அஞ்சல் பெட்டிகளை (mail boxes), குதிரைப்பந்தயம், விலைப்பட்டியல்கள், இலவச தயாரிப்புகள், இலவச சேவைகள் அடங்கிய விளம்பரங்கள் தவறான நம்பிக்கைகள் போன்ற குப்பைகளால் நிரப்புங்கள்.

அவர்களின் இன்பமான பொழுதுபோக்குகள் கூட மிதமிஞ்சியதாகவே இருக்கட்டும். அவர்கள் விடுமுறையைக் குடும்பமாகக் கழித்த பிறகு அது மிகவும் களைப்படைய செய்வதாகவும், அடுத்த வாரத்தைச் சந்திக்க எவ்வித ஆயத்தமும் இல்லாத நிலையும் இருக்கட்டும். இயற்கையை கண்டு உலாவ அவர்களை அனுமதிக்காமல், பதிலாக அவர்களைமனமகிழ் மன்றங்களுக்கும், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும், இசைக் கச்சேரிகளுக்கும், திரைப்படங்களுக்கும் அனுப்புங்கள். அவர்கள் ஆவிக்குரிய ஐக்கியங்களை எதிர் கொள்ளும்போது, வீண் பேச்சுகளுக்கும், அற்பசம்பாஷனைகளுக்கும் ஆட்படுத்துங்கள். அதன் மூலமாக அவர்கள் கலைந்து செல்கிறபோது, கலங்கியமனச்சாட்சியையும், தீர்வு காணாத உணர்வுகளையும் சுமந்து செல்லட்டும்.

கிறிஸ்துவுக்காக சாட்சி சொல்லவும் அவர்களை அனுமதியுங்கள். ஆனால், கிறிஸ்துவின் வல்லமையைத் தேட நேரமில்லாத அளவிற்கு தங்கள் ஜீவியமுழுவதும், நன்மைவிளைவிக்கக் கூடிய அநேக காரியங்களினால் நிரப்பப்பட்டிருக்கிறோம் என்று நினைத்து, விரைவிலேயே தங்கள் சுயபெலத்தால் அதை நிறைவேற்ற தங்கள் ஆரோக்கியத்தையும், குடும்ப ஒற்றுமையையும் தியாகம் செய்வார்கள். இதெல்லாம், தங்களின் நன்மையின் நிமித்தமே நடந்தது என்று எண்ணிக்கொள்ளட்டும் என்று சாத்தான் கூறினான்."

அனைத்து பிசாசுகளும், தங்களுக்கு இட்டப்பணியை செய்யும் பொருட்டு ஆர்வமுடன் கடந்து சென்று எல்லா கிறிஸ்துவர்களையும், தங்கள் வேலையில் மும்முரமாக (பிஸி, பிஸி, பிஸி) ஈடுபடவும் அங்கும் இங்கும் அலைந்து திரியவும் செய்தன.

தன்னுடைய இத்தகைய பொல்லாதசதித்திட்டத்திலே, சாத்தான் ஜெயம் கண்டுவிட்டானோ? "நீங்களே அதற்குரிய நியாயதிபதியாக இருங்கள்!"