WFTW Body: 

பரிசுத்தாவியின் மூலமாய் உண்டான பழைய உடன்படிக்கை ஊழியத்திற்கும், பரிசுத்தாவியின் மூலமாய் உண்டான புதிய உடன்படிக்கை ஊழியத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை, என் தந்தை சகரியா பூணன் அவர்கள் சித்தரித்துக் கூறியதை நான் கேட்டிருக்கிறேன்: பழைய உடன்படிக்கையில், மனுஷனுடைய இருதயம் ஒரு மூடி போட்ட பாத்திரம் போல் இருக்கிறது (அது, யூத ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தை மூடியிருந்த திரைக்கு ஒப்பாகும்). பரிசுத்தாவியானவர் இந்த மூடியிட்ட பாத்திரத்தில் ஊற்றப்பட்ட போது, அவர் வழிந்து ஆசீர்வாத நதிகளாய் திரளான மக்களுக்குப் பாய்ந்தோடினார்! அந்த ஊழியத்தை, மோசே, யோவான்ஸ்நானன் மற்றும் பல தாசர்கள் மூலமாய் தேவன் செய்தார்!

ஆனால் புதிய உடன்படிக்கையில், அந்த மூடி இப்போது திறக்கப்பட்டு விட்டது (2கொரிந்தியர் 3:12-18). (இயேசு மரித்தபோது தேவாலயத்தின் திரைச்சீலை கிழிக்கப்பட்டது இதற்கு அடையாளமாயிருக்கிறது). இப்போது, மகா பரிசுத்தஸ்தலத்தின் வழி திறக்கப்பட்டு விட்டது. இப்போது, பரிசுத்தாவியானவர் ஊற்றப்பட்டவுடன், முதலாவது நம்முடைய பாத்திரத்தை நிரப்புகிறார் - ஒரு விசுவாசியின் இருதயத்தை முதலாவதாக சுத்திகரிக்கிறார். அதன் பிறகு, "அவன் உள்ளத்திலிருந்து” திரளான ஜனங்களுக்கு ஆசீர்வாதம் புரண்டோடுகிறது! இதை இயேசு யோவான் 7:37-39 வசனங்களில் விளக்கியுள்ளார். இவ்வாறாகவே, புதிய உடன்படிக்கை சபை கட்டப்படுகிறது.

நாம் இன்னமும் மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதற்காகவே பரிசுத்தாவியானவரைப் பயன்படுத்த முயற்சித்தால், ஒரு ஆராதனைக் கூடுகையை அல்லது ஒரு ஜனசங்கத்தை மாத்திரமே நாம் கட்டுவோம். ஆனால் அவருடைய அன்பு முதலாவதாக நம் இருதயங்களில் ஊற்றப்பட தேவனுக்கு ஒப்புவித்திருந்தால், நம்முடைய உள்ளத்திலிருந்து பரிசுத்தாவியானவர் மற்றவர்களுக்குப் பாய்ந்தோடுவார்! அப்போது, அதே ஐக்கியத்தின் ஆவியைக் கொண்ட மற்றவர்களோடு சேர்ந்து நாம் சபையைக் கட்ட முடியும்! தேவன்மீது கொண்ட அன்பும், பிறர்மீது கொண்ட அன்பும் நம் இருதயங்களிலிருந்து பாய்ந்தோடி, நாம் ஒவ்வொருவரும் சிலுவை எடுப்பதினால் உண்டாகும் 'உண்மையான ஆவியின் ஒற்றுமை’ கட்டப்படும்!

உண்மையாய்க் கூற வேண்டுமென்றால், ஒரு மெய்யான சபை, நாம் ஒருவரைவிட்டு ஒருவர் தூரமாய் இருக்கும் வேளையில்தான் பிரதானமாய் கட்டப்படுகிறது! அதாவது நாம் ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களில் ஒன்றாய் கூடிவரும் நேரத்தில் மாத்திரமே கட்டப்படுவது அல்ல. அது அங்கே பரிசுத்தாவியின் வரங்களின் மூலமாய் கட்டப்படுவது உண்மைதான் என்றாலும், நாம் ஒருவரைவிட்டு ஒருவர் தூரமாய் இருக்கும் வேளையில்தான் சபையானது இன்னும் வலிமையாகக் கட்டப்படுகிறது. ஏதாவது ஒரு வகையில் நாம் நேர்மையில்லாமல் இருப்பதற்கோ, கோபப்படுவதற்கோ அல்லது கண்களினால் இச்சிப்பதற்கோ சோதிக்கப்படும் நேரங்களில்தான், ‘நான் இயேசுவின் சபையில் பங்காய் இருக்கிறேனா?’ என்பதை நிரூபித்திட முடியும். இதுபோன்ற சோதனைகளில், நம்முடைய சிலுவையை எடுத்து, நம் சுயத்திற்கு மரித்து, ஆண்டவர் மீது கொண்ட நேசபக்தியைப் பாதுகாத்துக் கொண்டு, பாவத்தை எதிர்த்து நின்றால், நாம் ஒளியில் நடந்து, ஆண்டவரோடு ஐக்கியம் கொண்டிருப்போம்! அந்த நிலைமையில், நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் வேளையில், நாம் ஒருவரோடொருவர் மெய்யான ஐக்கியம் கொண்டிருப்போம் (1யோவான் 1:7).

நம்முடைய இருதயங்கள் “அன்பினால் பின்னப்பட்டு (இணைக்கப்பட்டு)” என கொலோசெயர் 2:2 கூறுகிறது. என்னை நானே பிறரோடு அன்பில் பின்னிவிட இயலாது. பரிசுத்தாவி மாத்திரமே "இருதயங்களை இணைத்துப் பின்னும் செயலை" செய்திட முடியும்! ஆகிலும், மனுஷீக வழியில் என் இருதயத்தை உங்களோடு பின்னுவதற்கு முயற்சித்து, அன்பளிப்புகள் கொடுப்பது அல்லது உங்களோடு கூடி பேசுவது போன்ற காரியங்களை நான் செய்வேன் என்றால், நான் ஒரு ஜனசங்கத்தை மாத்திரமே கட்ட முடியும். ஆனால் தேவனோ “உன் சுயத்திற்கு மரித்துவிடு” என்றே கூறுகிறார். தேவன் கூறியபடி நான் செய்தால், என்னைப்போலவே தங்கள் சுயத்திற்கு மரிப்பவர்களைக் கொண்டு, யாரும் காணாத விதத்தில், அதிசயமான வழியில், ஸ்தல சபையில் அவர் வைத்திருக்கிற மற்றவர்களோடு என் இருதயத்தைப் பின்னும் வேலையை பரிசுத்தாவியானவர் செய்திடுவார்!

இவ்வித நிலையில் நம்முடைய ஐக்கியம் ருசிகரமாய் மாறிக்கொண்டே இருக்கும்! நாம் ஒரே உபதேசங்களை விசுவாசிப்பதாலோ அல்லது ஒரே பாடல்களைப் பாடுவதாலோ அல்ல! மாறாக, நம்முடைய சுய-ஜீவியத்திற்கு நிலத்தில் விழுந்து மரிப்பதினாலேயே இந்த ஐக்கியம் ஏற்படுகிறது! பரிசுத்தாவியின் மூலமாய், நாம் ஒருவரோடொருவர் ஐக்கியமாய் இணைகிறோம்!

நாம் சுயத்திற்கு மரிக்காமல் நமக்குள் வைத்துக்கொள்ளும் ஐக்கியமானது, வெறும் நட்பாக மாத்திரமே இருக்கும்! மெய்யான கிறிஸ்தவ ஐக்கியமாய் இருக்காது! ஐக்கியம் ஆவிக்குரியது! நட்போ பூமிக்குரியது!

இந்த உலகத்திலுள்ள ஜனங்கள் நட்பு வைத்திருக்கிறார்கள்! உலத்தில் காணும் திரளான ஜனசங்கங்களின் (Clubs) அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிய நட்பை வைத்திருப்பார்கள்! ஒருவர்மீதொருவர் ஆழமான அக்கறை கொண்டிருப்பார்கள்! ஆனால் அவர்களிடமோ மெய்யான ஐக்கியம் ஒருபோதும் இருக்கமுடியாது. ஏனென்றால் அது, பரிசுத்தாவியானவர் மாத்திரமே நம்முடைய ஜீவியத்தில் செய்திடக்கூடிய ஓர் ஆவிக்குரிய கிரியையாயிருக்கிறது! தேவன் தம்முடைய பிள்ளைகளில் ஒருவன் “இயேசுவின் மரணத்தை தன் சரீரத்தில் சுமந்து வருவதைக்” காணும் போது, அவனுக்கு இன்னும் அதிகமான அளவில் “இயேசுவின் ஜீவனை”ப் பரிசாக வழங்குகிறார் (2கொரிந்தியர் 4:10,11). இரண்டு விசுவாசிகளுக்குள் காணப்படும் இந்த “இயேசுவின் ஜீவனே” மெய்யான ஐக்கியத்தை அவர்களுக்குள் கொண்டு வருகிறது! இதுபோன்ற ஜனங்களை வைத்தே, தேவன் தம்முடைய புதிய உடன்படிக்கை சபையைக் கட்டுகிறார்.

இந்த சத்தியங்களை நான் காணத் துவங்கியபோது, நான் ஆண்டவரைப் பார்த்து, “ஆண்டவரே, உம்முடைய மெய்யான சபையைக் கட்டவிரும்பும் ஜனங்கள் எங்கே?” எனக் கேட்பதை நிறுத்தி விட்டேன். ஏனென்றால், நான் முதலாவது நிலத்தில் விழுந்து சாவதற்கு ஆயத்தமாயிருந்தால் “தேவனே அவர்களைக் கண்டறிந்து, என்னையும் அவர்களையும் கூட்டிச் சேர்ப்பார்” என்பதை உணர்ந்தேன். நான் மரித்திட மறுத்தால், தேவன் அவர்களை என்னோடு சேர்த்திட மாட்டார்!

நம்மைச் சுற்றிலும் உள்ள 'முழு இருதயமான விசுவாசிகளை'க் கண்டுபிடிக்க முயற்சிப்பது, “வைக்கோல் படப்பில் ஊசிகளைக்” கண்டு பிடிக்க முயற்சிப்பதற்கு ஒப்பாகும். அந்த வைக்கோல் குவியலில் கிடக்கும் 'மெல்லிய ஊசிகளை' எடுப்பதற்கு பல வருடங்களாய் நாம் தேடலாம். ஒருவேளை பல வருடங்களுக்குப் பிறகு ஒரு ஊசி கிடைக்கலாம்! ஆனால் ஆண்டவரோ “இந்த ஊசிகளுக்காக உன் நேரத்தை வீணடிக்காதே! அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்! நீ நிலத்தில் விழுந்து உன் சுயத்திற்கு மரித்துவிடு, அது போதும்” என்றே கூறுவார். “இச்சமயத்தில் உனக்குள் வெளிப்படும் “இயேசுவின் ஜீவன்” ஒரு வல்லமையான காந்தமாய் தோன்றி, அந்த முழு இருதயம் கொண்ட சீஷர்களை (அந்த ஊசிகளை) தம்மண்டை இழுத்துக் கொள்வார்!” (யோவான் 1:4; யோவான் 12:32).

ஒரு தேவபக்தியான ஜீவியத்தை நாடி, புதிய உடன்படிக்கை சபையைக் கட்ட விரும்பும் பிற விசுவாசிகள் உங்களிடத்திற்கும், 'நீங்கள் அறிவிக்கும் சிலுவை உபதேசத்திற்கும் ஈர்க்கப்படுவார்கள். இதுவே தேவனுடைய வழி! அவர் முழு இருதயமானவர்களை நம்மோடு சேர்க்கிறார். “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்றே யோவான் 6:37-ம் வசனத்தில் இயேசு கூறினார். அவருக்குச் செய்ததை, பிதா நமக்கும் செய்வார்! இவ்விதமாகத் தான் நாம் புதிய உடன்படிக்கையின் சபையைக் கட்டுகிறோம்.