தேவனுடைய பரிபூரண சித்தம்தானா? ஓர் தற்பரிசோதனை!

Article Body: 

தேவனுடைய பரிபூரண சித்தம்தானா? ஓர் தற்பரிசோதனை!

நீங்கள் செய்திடப்போகும் காரியம் தேவ சித்தம்தானா? இல்லையா? என நீங்கள் திகைக்கும்போது கீழ்க்காணும் பன்னிரண்டு கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுப்பருங்கள். இக்கேள்விகள் அனைத்திற்கும் நேர்மையாக நீங்கள் கூறிடும் பதில், தேவ சித்தம் என்ன? என்பதை மென்மேலும் தெளிவாக நீங்கள் அறிந்துகொள்ள உதவிடும் என்பது திண்ணம்!

1.நான் செய்வது, எனக்குத் தெரிந்தவரை - இயேசுவின் உபதேசங்களில் அல்லது அப்போஸ்தலர்களின் உபதேசங்களில் ஏதேனும் ஒன்றை மீறியோ அல்லது புதிய ஏற்பாட்டின் ஆவிக்கு முரணாகவோ இருக்கிறதா? (2.தீமோ. 3:16,17).

2.இதை நான், ஓர் சுத்தமனசாட்சியுடன் செய்திட முடியுமா? (1யோ. 3:21)

3.இதை நான், தேவனுடைய மகிமைக்கென்று செய்திட முடியுமா? (1கொரி.10:31)

4.இதை நான், இயேசுவை என் கூட்டாளியாகச்சேர்த்து செய்திட முடியுமா? (கொலோ. 3:17)

5.நான் செய்யப்போவதை தேவன் ஆசீர்வதிக்கும்படி என்னால் ஜெபித்திட முடியுமா? (2கொரி. 9:8)

6.நான் செய்வது, என் ஆவிக்குரிய உத்தமத்தின் கூர்மையை ஏதேனும் ஒருவகையில் மழுங்கிடச் செய்யுமா? (2தீமோ. 2:15).

7.நான் செய்வது, எனக்குத்தெரிந்தவரை - ஆவிக்குரிய வளர்ச்சியையும், பக்திவிருத்தியையும் என்னில் உண்டாக்கிட முடியுமா? (1கொரி. 6:12; 10:23).

8.நான் செய்வது, இயேசு இப்பூமிக்கு திரும்பவரும் அதே பொழுதில் காணப்பட்டால், அதனிமித்தம் நான் மகிழ்ச்சியடைய முடியுமா? (1யோ. 2:28)

9.நான் செய்வதைக் குறித்து ஞானமும், முதிர்ச்சியடந்த சகோதரர்கள் என்ன நினைப்பார்கள்? (நீதிமொழிகள் 11:14, 15:22; 24:6)

10.நான் செய்வதை மற்றவர்கள் ஒருவேளை அறியும்போது அது என் சாட்சியை கெடுக்கவோ அல்லது தேவனுடைய நாமம் கனவீனப்படவோ, செய்யுமா? (ரோ. 2:24; 2கொரி. 8:21)

11.நான் செய்வது, யாராகிலும் ஒருவரை இடறிடச் செய்யுமா? (ரோ.14:13; 1கொரி. 8:9)

12.இதைச்செய்திட, என் ஆவியில் ஓர் விடுதலையை என்னால் உணரமுடிகின்றதா? (1யோ. 2:27)

குறிப்பு: வசனங்களை வாசித்து, அவைகளை ஆழ்ந்து தியானியுங்கள்

அவ்வப்போது வாசித்திட வசதியாய், இப்பிரதியை உங்கள் வேதாகமத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

- சகரியா பூணன்