மேலறை வீட்டிலே பரிசுத்தாவியினால் நிரப்பப்பட காத்துக்கொண்டிருந்த சீஷர்களைக் குறித்து ஒரு வரைபட திரைக்காட்சியைப் (CARTOON) பார்த்தேன் (அப்போ. 2:12-14). (ஏறக்குறைய பத்து நாட்கள் அவர்கள் அதற்காக காத்துக் கொண்டிருந்தார்கள் என்பதை இப்போது நாம் அறிவோம்). அவர்களில் ஒருவருக்கு கூட எத்தனை நாட்கள் அப்படிக்காத்திருக்க வேண்டும் என்பதை அந்நேரத்தில் அறியாதிருந்தார்கள். அவர்களில் ஒருவன் ஒன்பதாம் நாளிலே காத்திருந்து களைத்துப்போய், "நீங்கள் காத்திருந்தால் காத்திருங்கள் நான் வீட்டிற்குப் போகிறேன்" என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்குப் போய்விட்டான். மறு நாளிலே, மேலறை வீட்டிலே காத்துக்கொண்டிருந்தவர்கள் யாவர்மீதும், பரிசுத்தாவி அக்கினிமயமாய் இறங்கி, உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்பட்டார்கள் என்று கேள்விப்பட்டு, அவன் எவ்வளவாய் ஏமாற்றம் அடைந்திருப்பான் பாருங்கள்! ஒரே ஒரு நாள் மாத்திரம் அவன் காத்திருந்திருந்தால், அவனுக்கு வேண்டிய பதில் கிடைத்திருக்குமே என்று நினைத்திருப்பான்.
இயேசு தாகமாயிருக்கிறவன் மாத்திரம் தன்னிடத்தில் வரவேண்டும் என்றும் (யோவான் 7:37-39) முழு இருதயத்தோடு தன்னை தேடுபவர்கள் மாத்திரம் கண்டடைவார்கள் என்றும் (எரேமி 29:13) தன்னை உற்சாகமாய் தேடுகிறவர்களுக்கும் பலனளிக்கிறவராயும் இருக்கிறார். இது ஏன் இப்படி இருக்கிறது? ஏனென்றால், நாம் தேவனை முழு இருதயமாய் தேடும்போது மாத்திரமே நாம் அவரோடு கொண்டிருக்கிற உறவு, நாம் இந்த உலகத்தில் கொண்டிருக்கிற எல்லாவற்றைக் காட்டிலும் அவரே மிகவும் முக்கியமானவர் என்பது நிருபனமாகும்.
நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டாலொழிய, வாழ வேண்டிய கிறிஸ்துவ வாழ்க்கை சாத்தியமாகாது.
அதே போல், பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்டாலொழிய நாம் ஆண்டவரை சேவிப்பதும் சாத்தியமாகாது.
தன்னுடைய ஊழியத்தைத் துவங்குவதற்கு முன்பாகவே, இயேசுவுக்கும் கூட பரிசுத்தாவியினுடைய அபிஷேகம் தேவையாயிருந்தது (லூக்கா 3:21-23).
உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரை அவர்கள் காத்திருக்க வேண்டும் என்று இயேசு தன்னுடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார் (லூக்கா 24:49). சுவிஷேசத்தைக் கேட்காமல் மரித்துக் கொண்டிருக்கும் உலகத்தின் மத்தியிலும், அப்போஸ்தலர்கள், தாங்கள் ஆண்டவரை சேவிக்கப் போவதை விட்டு முன்னதாக பரிசுத்தாவியினால் நிரப்பப்பட காத்திருக்க வேண்டியதாய் இருந்தது (அப்போ 1:8).
நம்மை பற்றிய காரியம் என்ன?
நமக்கெல்லாம் பரிசுத்தாவி அவசியமில்லை என்று நினைத்து வாழுவது எவ்வளவு மதியீனம்.
அந்த பெந்தெகொஸ்தே நாளிலே பேதுரு ஜனங்களிடத்திலே, மனந்திரும்பி விசுவாசித்து ஞானஸ்நானம் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு தேவன் அருளிச்செய்கிற இரண்டு வரங்களை (ஈவுகளை) குறித்துச் சொன்னார். அது, பாவமன்னிப்பும், பரிசுத்தாவியுமே! (அப்போ 2:38).
பாவமன்னிப்பு என்பது பரலோகத்துக்கும், பரிசுத்தாவியின் ஞானஸ்நானம் பூமிக்குரிய வாழ்க்கை வாழ்வதற்கு நம்மை தகுதி படுத்தவும் உதவுகிறது.
நீங்கள் மரித்த பின்பு பரலோகம் போவதற்கு மாத்திரம் நாட்டம் உள்ளவர்களாய் இருந்தால், உங்களுக்கு பரிசுத்தாவியின் ஞானஸ்நானம் தேவையில்லை. உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டாலே போதும். ஆனால், உங்களுடைய பூமிக்குரிய நாட்களைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டுமென்றால், உங்களுக்காக மரித்த ஆண்டவருக்கு நன்றியை அவரை சேவிக்கிறதின் மூலம் செலுத்த வேண்டுமானால், நீங்கள் பரிசுத்தாவியினால் நிரப்பப்பட வேண்டும்.
அநேக விசுவாசிகள் ஏன் பரிசுத்தாவியினால் ஞானஸ்நானம் பெறவில்லை என்பதற்குக் கீழ்காணும் ஐந்து காரியங்கள் முக்கியமானது.
1. அறிவுப் பூர்வமான சில இறையியல் விவாதங்களுக்கு இணங்கி தாங்கள் இரட்சிக்கப்பட்ட போதே பரிசுத்தாவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம் என்று நினைத்ததாலும், தங்கள் வாழ்க்கையில் தோல்வியடைந்தும் வல்லமையிழந்தும், வெறுமையாய், கனியற்றவர்களாய் இருப்பது இப்படிப்பட்ட இறையியல் வஞ்சகத்தை தொடர்ந்து விசுவாசிப்பதினாலேயே;
2. ஒரு சிலர் பரிசுத்தாவியை பெற்றுக்கொள்ள தாங்கள் போதுமான அளவு தகுதியை அடையவில்லை என்று நினைக்கிறார்கள். தங்களை எவ்வளவுக்கெவ்வளவு தகுதி அற்றவர்கள் என்றும், அதே அளவு பாவத்தினால் நிறைந்திருக்கிறோம் என்று நினைக்கிற இத்தகுதியே பரிசுத்தாவியை பெற்றுக்கொள்ள போதுமானது என்ற உண்மையை அறியாமல் இருக்கிறார்கள். ஏனென்றால், தேவனுடைய வரங்களை பெற்றுக்கொள்ள தாங்கள் சற்றேனும் தகுதி இல்லாதவர்கள் என்று நினைக்கிறவர்களுக்கே தேவனுடைய வரங்கள் அளிக்கப்படுகிறது. உங்கள் பாவத்திலிருந்து நீங்கள் மனம் திரும்பியிருக்கிறீர்களா? அதுப்போதும்! மாறாக, எவ்வளவு தகுதி அற்றவர்களாகவும், பிரயோஜனமற்றவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பது காரியம் அல்ல. அல்லேலூயா!
3. தேவன் மிகவும் நல்ல தேவன் என்றும் தம்மிடத்தில் கேட்கிற யாவருக்கும் இலவசமாய் வரங்களை அளிக்கிறவர் என்றும் அவர்கள் விசுவாசிப்பதில்லை. ஏதாவது விலைக்கிரயம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து பரிசுத்தாவியை பெற்றுக் கொள்வதற்கு முன்பாக உபவாசித்து ஜெபிப்பது, நற்கிரியைகளில் ஈடுப்படுவது போன்றவற்றை செய்கிறார்கள். ஆனால், தேவனுடைய வரங்கள் எல்லாம் இலவசமே! பாவமன்னிப்பானாலும், பரிசுத்தாவியின் ஞானஸ்நானமானாலும் தேவனுடைய மற்றெந்த வரங்களானாலும் விலைக்கு வாங்க முடியாது! அநேக விசுவாசிகள் "விசுவாசிப்பது" கூட மிகவும் கடினம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இயேசுவோ விசுவாசத்தை தாகமாயிருந்து பானம்பண்ணுகிறதோடு தொடர்புபடுத்தினார் (யோவான் 7:37,38). ஆகவே, பரிசுத்தாவியை பெற்றுக்கொள்வது என்பது தண்ணீர் குடிப்பதுபோன்றே எளிதானது. சிறு குழந்தைகள் கூட குடிப்பது எப்படி என்று அறிந்திருக்கின்றனர். அது போலவே, புதியதாய் இரட்சிக்கப்பட்டவர்கள் கூட பரிசுத்தாவியினால் ஞானஸ்நானம் பெறமுடியும். இப்படியாகத்தான் ஆதி சபையின் ஆரம்ப காலங்களில் இருந்தது என அப்போஸ்தலர் நடபடிகளில் நாம் வாசிக்கிறோம்.
4. அவர்களுக்குத் தாகமில்லை, போதுமான ஆதங்கமில்லை. தன்னுடய நண்பனின் வீட்டுக்கதவை நடுராத்திரியிலே தனக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளும் வரை ஒயாமல் தட்டிக்கொண்டிருந்த ஒரு மனிதனை குறித்த உவமையை இயேசு சொல்லும்போது, அந்த மனிதனைப்போலவே, கேட்கிறவர்களுக்கும் தன்னை தேடுகிறவர்களுக்கும், தன்னிடத்தில் தட்டுகிறவர்களுக்கும் நம் பரம தகப்பன் அந்தப்படியே, பரிசுத்தாவியை நிச்சயமாய் தருவார் என்றார் (லூக்கா 11:13).
5. பொதுவாக, அவர்கள் சில அனுபவங்களுக்காகவும் (அந்நியபாஷை அல்லது மனக்கிளர்ச்சி உண்டாக்குகிற உணர்வுகள்) யாரோ ஒருவருடைய சாட்சியை (அனுபவம்) போலவே தங்களுக்கும் நடக்கவேண்டும் என்றும் காத்து கொண்டிருப்பார்கள். ஆனால், பரிசுத்தாவியை எளிய விசுவாசத்தின் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என்று தங்களுக்குத் தேவையான சிறந்த வரத்தையோ அல்லது வெளிப்பாட்டையோ கொடுக்க தேவனே தீர்மானிக்கட்டும் என்று அவரிடம் விட்டுக்கொடுக்க மனமில்லாதவர்கள். கேளுங்கள், அப்போது பெற்றுக்கொள்வீர்கள் (லூக்கா. 11:9-13; கலா. 3:2). வெறும் உணர்வுகளுக்காக மாத்திரம் காத்திருக்காமல், தேவனிடத்தில் அதற்குரிய நிச்சயத்தைக் கேளுங்கள். உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதும், நீங்கள் அவருடைய பிள்ளைகளாகவும் இருக்கிறீர்கள் என்ற நிச்சயத்தை தேவன் உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அதே போல, தம்முடைய ஆவியினால் உங்களை நிறைத்திருக்கிறார் என்கிற நிச்சயத்தையும் அவரிடத்தில் பெற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தேவையானது ஒரு அநுபவம் அல்ல மாறாக, "பெலன்" (வல்லமை) (அப்போ-1:8).
ஆகவே, "தாகமாயிருங்கள், விசுவாசியுங்கள், பெற்றுக்கொள்ளுங்கள்". "இப்போதே, அநுக்கிரக காலம், இன்றே இரட்சண்ய நாள்".
"கர்த்தருடைய ஆவியானவர் உன்மேல் வருவார் அப்போது, நீ வேறுமனுஷனாவாய்" (1 சாமுவேல் 10:6).