வேதாகமானது 66 புத்தகங்களை கொண்டதும், தேவ ஆவியினால் ஏவப்பட்டதும், ஒருபோதும் தவறாகி விடமுடியாத தேவனுடைய வார்த்தையாகும்! நம் முழு பூலோக வாழ்விற்கும் அது போதுமானதாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறது!
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவத்துவத்திலும், அவர் கன்னிகையினிடத்தில் பிறந்ததையும், அவருடைய மனிததன்மையையும், பாவமேயில்லாத அவருடைய பூரண வாழ்க்கையையும், நம் பாவத்திற்கு பதிலாளாய், பரிகாரியாகி மரித்ததையும், அவருடைய சரீர உயிர்தெழுதலிலும், பரமேறி பிதாவினிடத்திற்கு சென்றதையும் தம்முடைய பரிசுத்தவான்களுக்காய் மீண்டும் பூலோகத்துக்கு திரும்ப வருவார் என்பதையும் விசுவாசிக்கிறோம்.
எல்லா மனிதர்களும் பாவத்தில் மரித்து, முற்றிலுமாய் தொலைந்து (காணாமல்) போனதால், மனந்திரும்பி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மரணம், மற்றும் உயிர்த்தெழுதலில் வைக்கும் விசுவாசமே அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கான ஒரே வழி என்பதையும்,
பரிசுத்த ஆவியின் புதிதாக்குதலின்படியே (மறுஜென்ம முழுக்கினால்) ஒரு மனிதன் மறுபடியும் பிறந்து தேவனுடைய பிள்ளையாகிடமுடியும் என்பதையும்,
கிறிஸ்துவினிடத்தில் வைக்கும் விசுவாசத்தினாலே மாத்திரம் நீதிமானாக்கப்படுவோம் என்றும், அதற்குரிய நிரூபணம் தேவனை மகிமைப்படுத்துகிற நற்கிரியைகளினாலே விளங்கும் என்பதையும்,