WFTW Body: 

இந்த புதிய உடன்படிக்கையின் காலத்தில், நம் கர்த்தர் விரும்புவதெல்லாம் "எங்கும் நிறைந்த தூய சாட்சி" - ஒவ்வொரு தேசத்திலும், கிழக்கிலிருந்து மேற்கு வரை காணப்பட வேண்டும்! இதுவே மல்கியா உரைத்த தீர்க்கதரிசனம் (மல்கியா 1:11). நாங்கள் பெங்களூரில் 1975-ம் ஆண்டு சபை துவங்கியப்போது, இந்த வசனத்தையே நாங்கள் பின்தொடரும்படியான இலக்காய் தந்தார்! ஆனால் சாத்தானுடைய பிரதான நோக்கமோ, ஜனங்கள் கூடும் சபைகளின் எண்ணிக்கை பெருக்கத்தை தடை செய்வதைவிட "ஒரு ஆவிக்குரிய - மனதுடைய சபையை" கறைப்படுத்துவதே நோக்கமாகும். மெய்யாகவே சொல்லவேண்டுமானால், அநேக நபர்கள் நம் போன்ற சபையில் வந்திட அனுமதிப்பது, சாத்தானுடைய நோக்கம் இலகுவாய் நிறைவேற்றப்படுவதற்கு ஒரு வழியாகும். ஏனென்றால், மாம்சீகமான விசுவாசிகள் மூலமாய் எளிதில் உள்ளே பிரவேசித்து “சபையின் சாட்சியை” கெடுத்து விடமுடியும்!

எந்த சபையானாலும் அதை கர்த்தருக்கென்று தூய்மையாய் வைத்திருப்பது, ஓர் யுத்தமேயாகும்! ஒரு நல்ல ஆரம்பத்தை துவங்குவது எளிதாயிருந்தாலும், சில காலத்துக்குப் பிறகு, அதன் தரம் படிப்படியாய் குறைந்து ‘ஒரு செத்த சபையாய் முடிவடைகிறது’. இங்குதான் நாம் ஆவிக்குரிய விழிப்புடையவர்களாய், சாத்தானுடைய தந்திரங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருக்க வேண்டும். இதுபோன்ற ஜாக்கிரதையும் விழிப்பும், நாம் முதலாவதாக “நம் சொந்த ஜீவியத்தில் கவனம் செலுத்தினால் மாத்திரமே” ‘கூர்மை மழுங்காமல்’ காத்துக்கொள்ள முடியும். மாம்சீகமான ஜனங்கள், நம் சபைக்கூட்டங்களில் கலந்து கொள்வதை தடை செய்ய முடியாது. இயேசுவும்கூட, 12 பேர்கள் கூடிய அவருடைய "சபையில்" யூதாஸ்காரியோத்து அமர்ந்திருந்தான். பவுல் ஸ்தாபித்த கொரிந்திய சபையில் அநேக மாம்சீக ஜனங்கள் இருந்தார்கள். அதுபோலவே, நம்முடைய சபைகளிலும் மாம்சீக ஜனங்கள் இருந்திட முடியும். அவர்களை தவிர்த்திட முடியாது! இதுபோன்ற சமயங்களில், அந்த சபையின் தலைமைத்துவம், எப்போதுமே ‘ஆவிக்குரிய மனிதர்களின் கரங்களில்’ இருக்கவேண்டும் என்பதை, நாம் உறுதிசெய்ய வேண்டும். மேலும் சபையில் பிரசங்கிக்கப்படும் செய்திகள் எப்போதுமே தூய்மையும், புதிய உடன்படிக்கை செய்தியுமாயிருப்பதற்கு உறுதி செய்து கொள்ள வேண்டும்!

பவுல் தீமோத்தேயுவிடம் கூறும்போது “உன்னைக் குறித்தே முதலாவதாக எச்சரிக்கையாயிரு!” என்றார் (1 தீமோத்தேயு 4:15,16). யாரெல்லாம் தங்கள் மாம்சத்திலுள்ள எல்லா அசுசியையும், ஆவியிலுள்ள எல்லா அசுசிகளையும் கழுவிக்கொள்ள உண்மையுள்ளவர்களாயிருக்கிறார்களோ (2 கொரிந்தியர் 7:1), அவர்களே ‘பிசாசின் தந்திரங்களைக் குறித்து ஒரு ஆவிக்குரிய விழிப்பு’ பெற்றவர்களாயிருப்பார்கள். இது ஒன்றேதான் வழி, வேறில்லை! உபதேச அறிவு, பிரசங்க திறமை, ஆவிக்குரிய வரங்கள் கூட இங்கு பயன்படாது! ஏனெனில், நம்முடைய யுத்தமோ மாம்சத்தோடும் இரத்தத்தோடும் அல்ல, ஞான-வல்லவர்களிடத்திலும் அல்ல! ஆவிக்குரிய பொல்லாத சேனைகளோடு போராட்டம் உண்டு! அவைகளே வஞ்சிக்கப்பட ஆயத்தமாயுள்ளவர்களை வஞ்சித்திட காத்திருக்கும் எதிரிகள்!

இயேசு கூறும்போது ‘ஆவிக்குரிய மரணத்தின் வல்லமை’ மேற்கொள்ளாத ஒரு சபையை நான் கட்டுவேன் என்றார் (மத்தேயு 16:18). அப்படி ஒரு சபையை, ஆண்டவர் மாத்திரமே கட்டமுடியும்! நம்மால் முடியாது. நம்முடைய முழு பங்காய் இருப்பதோ, “அவர் விரும்புகிறபடி நம்மை ஒரு கருவியாய் பயன்படுத்த எப்போதும் ஆயத்தமாய் ஒப்புக்கொடுப்பதே ஆகும்”. சபையின் ஆளுகை அல்லது அரசாங்கம், அவருடைய தோளின் மீது மாத்திரமே இருக்கவேண்டும் (ஏசாயா 9:6). இதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. கர்த்தர் சபையை கட்டாவிடில், நம்முடைய எல்லா பிரயாசங்களும் விருதா (சங்கீதம் 127:1). எந்த ஸ்தலத்திலாவது, தாங்களே கர்த்தருடைய சபையை கட்டுவதாக எண்ணிக்கொள்பவர்கள், தங்களையும் அறியாமல் ‘நேபுகாத்நேச்சாரோடு’ ஐக்கியம் கொள்கிறார்கள். அந்த அரசன் “நானே கட்டிய மகா பாபிலோன் அல்லவா!” என பெருமிதம் கொண்டான் (தானியேல் 4:30). இதுபோன்ற பெருமை, ஒரு பாபிலோனிய - உலக "சபையை" மாத்திரமே உருவாக்க முடியும் (வெளி. 17:5).

தாழ்மையுள்ள தலைவர்களையே தேவன் எதிர்நோக்குகிறார். மேலும் தேவனுடைய இராஜ்ஜியத்தை முதலாவதாக தேடுகிறவர்கள்களையும், அவர்கள் ஜீவியத்தில் ‘நோவா பேழையை கட்டியதைப்போல’ சபையை கட்டுவதே முதல் பிரதானமாய் கொண்டவர்களையுமே எதிர்நோக்குகிறார். கிறிஸ்து சபையை நேசித்து, தன்னையே அதற்கு முழுவதுமாய் ஒப்புவித்தார் (எபேசியர் 5:25). நாமும் சபையை நேசித்தால், நம்மையும், நம்முடைய யாவையும் முழுவதுமாய் அவருக்கு ஒப்புவித்துவிடுவோம். யாரெல்லாம், தங்கள் உலக வேலைகளை ஸ்தல சபையை கட்டுவதைக் காட்டிலும் அதிக மதிப்பு தருகிறார்களோ, அவர்கள் தேவனுக்கு யாதொன்றும் கட்டஇயலாது. வேண்டுமானால் பாபிலோனைக் கட்டலாம்! அதன்பொருள், நம்முடைய உலக வேலையை விட்டு விட வேண்டும் என்பதல்ல. அப்படி அல்ல! நம் நாட்களில், அப்போஸ்தலனாகிய பவுலைப்போல் நம் தேவைக்கு சுய-ஆதரவு கொண்டிருப்பது நல்லது! ஏனென்றால், இன்றுள்ள கிறிஸ்தவரல்லாத ஜனங்களுக்கு முன்பாக அதுவே ஒரு நல்ல சாட்சியாய் இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கிறிஸ்தவ ஊழியர்கள் எல்லோரையும் ‘பணத்திற்காகவே ஊழியம் செய்கிறார்கள்’ என்ற குற்றத்தை முன் வைக்கிறார்கள். ஆனால் நாமோ உலக அலுவல்களில் இருந்தாலும், நம்முடைய சிந்தையில் தேவனுடைய இராஜ்ஜியமே மேலானதாய் நிலை நிற்கவேண்டும்!

அவர் தம்முடைய சபையைக் கட்ட நம்மைத் தாங்குவதற்கு முன்னமே, நம் எண்ணத்திலும் ஜீவியத்திலும் அவருடைய சபையே நமக்கு முதல் முக்கியமாயிருக்கிறதா? எனத் தேவன் சோதித்தறிவார்!

நாம் ஒருபோதும் எண்ணிக்கை பெருக்கத்தில் ஆர்வம் கொண்டிருத்தல் கூடாது! விசுவாசிகள் பெருக்கமோ, சபைகள் பெருக்கமோகூட, நம் ஆர்வமாய் இருந்து விடக்கூடாது. நாம் கர்த்தருக்கு தூய்மையான சாட்சியில் மாத்திரமே ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அதுவே தேவனுடைய ஆர்வமாயும் இருக்கிறது. நாம் தேவனிடத்தில் ஏறெடுக்கும் முதல் ஜெபமே "உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக" என்றே எப்போதும் இருக்க வேண்டும் என இயேசு போதித்தார். அது அல்லாமல் சபை "எண்ணிக்கையை பெருக்க வேண்டும்” என்பதாய் இருக்கவே கூடாது. ஒரு ஸ்தலத்தில், தூய்மை இழந்த சபையாய் "கிறிஸ்துவுக்கு ஓர் கெட்ட சாட்சியாய்" இருப்பதை விட, அந்த ஸ்தலத்தில் 'சபை இல்லாமல் இருப்பதே' நலம்!