WFTW Body: 

தாவீது தன்னுடைய சங்கீதம் 27:4-ம் வசனத்தில் "கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்! நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்!!" என கூறினார்.

தாவீது ஓர் பேரரசன்! எண்ணற்ற யுத்தங்கனை வென்றவன்! ஆகிலும், "ஆண்டவரே, இவைகளில் நான் திருப்தி அடையவேயில்லை. உம்மிடத்தில் நான் விரும்பிக் கேட்பது ஒன்றே ஒன்றுதான்! அந்த விருப்பம், இந்த முழு உலகத்திற்கும் நான் ராஜனாய் வரவேண்டும் என்றோ அல்லது நான் புகழ் ஏணி ஏறவேண்டும் என்றோ இல்லை! மாறாக, என் ஜீவிய காலமெல்லாம் நான் உம்முடைய மகிமையின் அழகை தரிசித்திருக்க வேண்டும்!!" என கெஞ்சி நின்றான். தாவீதின் இந்த "ஒரே விருப்பமே" நம் ஜீவியத்தின் விருப்பமாயும் இருக்கிறதா?

யோவான் 20-ம் அதிகாரத்தில், இந்த ஒரே விருப்பத்தையுடைய மற்றோரு நபரை நாம் வாசிக்கிறோம். அது மகதலேனா மரியாள். அந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் அதிக இருட்டோடே அவள் கல்லறையினிடத்திற்கு போனாள். அந்த நேரத்தில் ஏன் அவள் தூங்கிக்கொண்டு இருக்கவில்லை? இன்னும் இருட்டாகவே இருந்தபோதிலும், ஏன் அவள் அவ்வளவு சீக்கிரம் விழித்துக்கொண்டு கல்லறைக்கு போனாள்? ஏனென்றால் அவளுடைய வாழ்க்கையில் அவளுக்கு இருந்தது ஒரே விருப்பம், அது அவளுடடைய ஆண்டவரை காணவேண்டும் என்பதே. அவள் கல்லறைக்கு வந்த பொது அது காலியாக இருப்பதைக் கண்டாள் என்று நாம் வாசிக்கிறோம். ஆகையால் அவள் ஓடிபோய் மற்ற சில சீஷரிடத்தில் கூறினாள். அவர்களும் கூட வந்து, கல்லறைக்குள் பார்த்து, பிறகு அவர்களுடைய வீட்டிற்கு திரும்பிவிட்டார்கள், ஒருவேளை தூங்க போயிருப்பார்கள்.

ஆனால் மகதலேனா மரியாளோ கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டடிருந்தாள். மரியாளை போன்று சீஷர்கள் ஆண்டவரை நேசிக்கவில்லை என்பதை பார்த்தீர்களா? ஆனால் மரியாளோ அப்படி செய்ய முடியவில்லை, ஏனென்றால் அவளுக்கு எல்லாமே இயேசுதான். அப்படிப்பட்ட ஜனங்கள் தான் இன்று சபையிலே தேவனுக்குத் தேவை. ஆண்டவராகிய இயேசு மகதலேனா மரியாளினிடத்தில் வந்தபோது, அவளோ அவரை தோட்டக்காரனென்று எண்ணி, “ஐயா, நீர் அவரை எடுத்துகொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்கு சொல்லும். நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன்” என்றாள். சரீரத்தை எடுத்துக்கொண்டு போவதற்கும் அவள் ஆயத்தமாயிருந்தாள். உங்களுக்கு தெரியும், ஒரு மரித்த உடலை ஒரு பெண் சுமந்த சொல்வதென்பது கூடாதகாரியம். ஆனால் ஆண்டவரிடத்தில் அவள் வைத்த அன்பு அத்தனை பெரிதாக இருந்தபடியினால், அவருக்காக யாதொரு கஷ்டத்தின் வழியாய் போவதற்கும் அவள் விருப்பமாக இருந்தால். இதுவே “தேவனின் முகத்தை தேடுவது” என்பதின் அர்த்தமாகும். அதின் பொருள் ஒரே ஒரு விருப்பம் கொண்டிருப்பது - ஆண்டவரின் அழகை காணவேண்டும் - வேறொன்றும் இல்லை. இவ்வுலகில் நான் செல்வந்தனாகவோ, பெரியவனாகவோ இருப்பதற்கு அல்ல, நாளுக்கு நாள் என் ஆண்டவரின் அழகை மேலும் மேலும் தரிசிக்கவே வேண்டும்.

ஆண்டவரை அதிகமாய் நேசித்த ஒரு ஏழை விதவையைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சிறிய குடிசையில் தன் ஐந்து பிள்ளைகளுடன் அந்த ஏழை விதவை வசித்து வந்தாள். அந்த அம்மாளின் வீட்டிற்கு வந்த ஒருவர் மிகுந்த ஆச்சரியத்துடன், "நீங்கள் நிறைந்த மகிழ்ச்சியோடும், சமாதானத்தோடும் எப்போதும் காணப்படுகிறீர்களே! அது எப்படி? உங்களுக்கு அதிக பணமும் இல்லை! ஏராளமான உபத்திரவங்கள்தான் உண்டு! உங்கள் பிள்ளைகள் அடிக்கடி நோய்வாய்படுகிறார்கள்! ஆகிலும், அவர்கள் எப்போதுமே சிரித்த முகமாய் இருக்கிறார்கள்! இந்த இனிமையான உங்கள் வாழ்க்கையின் ரகசியம் என்ன?" என்று கேட்டார் இந்த கேள்விக்கு அந்த ஏழை விதவை "ஐயா, இயேசுகிறிஸ்துவே எனக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமுமாயிருக்கிறார்! இந்த உலகத்தில் அவரைத்தவிர எனக்கு வேறு எதுவுமே தேவையில்லை!!" என்றே முகமலர்ச்சியுடன் பதில் கூறினார்கள்.

ஆண்டவர் இயேசுவே நமக்கும் 'எல்லாமுமாய்' மாறிவிட்டால், நாமும் அந்த விதவையின் மகிழ்ச்சியில் பிரவேசித்துவிடலாமே!