யார், பின்பற்ற உகந்த பிரசங்கி?

எழுதியவர் :   சகரியா பூணன்
    Download Formats:

அதிகாரம் 1
கிறிஸ்துவின் அடிச்சுவடு கண்ட பிரசங்கி!

யார், பின்பற்ற உகந்த பிரசங்கி?“என்னை பின்பற்றுங்கள்!" என்றே இயேசு கூறினார் (லூக்கா.9:23). *நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னை பின்பற்றுங்கள்!'' என்றார் பவுல். (1கொரி.11:1; பிலி.3:17), ஒவ்வொரு பக்தியுள்ள பிரசங்கிகளும், யாருக்கெல்லாம் பிரசங்கிக்கிறார்களோ அவர்களிடம் என்னகூற வேண்டுமென பரிசுத்தாவியானவர் எதிர்பார்க்கும் 'திராணியை' பவுலின் வார்த்தைகளில் காண்கிறோம்.

 

அனேக பிரசங்கிகள், “என்னை பின்பற்றாதீர்கள், கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்” என்றே கூறுகிறார்கள். இது கேட்பதற்கு மிக தாழ்மையாய் தோன்றினாலும், அது அவர்களின் தோற்றுப்போன ஜீவியத்தை மூடி மறைக்கும் செயலாகவே உள்ளது. இவர்களின் கூற்று, மேலே கூறப்பட்ட பரிசுத்தாவியின் போதகத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாகும்!

 

எந்த பிரசங்கிகள் “நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறதைப் போல நீங்களும் என்னைப் பின்பற்றுங்கள்!'' என கூற முடிகின்றதோ, அவர்களை மாத்திரமே நான் மதித்து பின்பற்றுகிறேன்! துயரம் என்னவென்றால், அதுபோன்ற பிரசங்கிகள் நம் நாட்களில் அபூர்வமாகவே இருக்கிறார்கள்.

 

பவுல் மனம் மாறுவதற்கு முன்பாக, முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவராய் இருந்தார். இருப்பினும் தேவன் அவரை மாற்றி, அவர் பூரணராய் இல்லா விட்டாலும், மற்றவர்கள் பின்பற்றக் கூடிய ஓர் மிகப்பெரிய மாதிரியாய் உருவாக்கினார் (பிலி.3:12-14). இந்த உலகத்தில் உள்ள தலைசிறந்த கிறிஸ்தவன்

கூட, பூரணத்தை நோக்கி இன்னமும் முன் செல்கிறவரே அல்லாமல், பூரணர் அல்ல!

 

ஆகவே, கடந்த காலத்தில் நீங்கள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டவராய் இருந்தாலும், தேவன் உங்களையும், மற்றவர்கள் பின்பற்ற உகந்த ஓர் மாதிரியாய் மாற்றிட முடியும்.

 

ஒரு பிரசங்கியை நான் மதித்து, அவரைப் நேரத்திலும் மன ஜனங்கள் பின்பற்றக்கூடிய மாதிரியாய் நான் பார்ப்பதற்கு விரும்பும் ஏழு குணாதிசயங்கள் உண்டு:

 

1.அவர், எளிதில் மற்றவர்கள் அவரிடத்தில் வரும்படியான

தாழ்மையுள்ளவராய் இருக்க வேண்டும்!

 

இயேசு, மற்றவர்கள் எளிதில் அவரை நெருங்கக் கூடிய தாழ்மையுள்ளவராய் இருந்தார் (மத்தேயு 11:29), எந்த இடத்திலும், எந்த அவரிடத்தில் எளிதாய் போக முடந்தது. நிக்கொதேமு, இயேசுவின் வீட்டில் அவரை நடு இராத்திரியில் எளிதாய் சந்திக்க முடிந்தது! பொது இடங்களில், இயேசுவிடம் எந்த நேரத்திலும் யார் வேண்டுமானாலும் பேச முடிந்தது! ‘இயேசுவின் தாழ்மையே' தரித்திரருக்கு சுவிசேஷத்தை ஆர்வமுடன் பிரசங்கித்திட தகுதிப்படுத்தியது லூக்கா.4:18). தன் தவறை துரிதமாய் அறிந்து, அதற்காக உடனே மன்னிப்பு கேட்க கூடி தாழ்மையுள்ளவராய் இருந்தார் பவுல் (அப். 23:1-5). இவ்வாறு, பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் பாராமல், தங்களைக்குறித்து யாதொரு 'மேன்மையான எண்ணமும்' இல்லாமல், தங்கள் தவறுகளுக்கு உடனே மன்னிப்பு கேட்டு எப்போதும் சாதாரண சகோதரர்களாய் நிலைத்திருக்கும் பிரசங்கியை மாத்திரமே நான் பின்பற்ற விரும்புகிறேன்!

 

  1. அவர், தனக்காகவோ அல்லது தனது ஊழியத்திற்காகவோ ஒருவரிடமும் ஒருபோதும் பணத்தை கேட்காதவராய்! எளிய வாழ்க்கை கொண்டவராய் இருக்க வேண்டும்!

 

ஒருவேளை அவர் பணத்தை வாங்கி இருந்தாலும், அதை பவுல் அவ்வப்போது வாங்கியதைப் போல 'மனப்பூர்வமான காணிக்கையாய்' இருந்திருக்க வேண்டும் (பிலிப்பியர்.4:16-18), ஆகிலும், பவுல் தன்னை விட ஏழையாய் இருந்த ஒருவரிடமும் அவ்வாறு பணம் பெறவில்லை! தன்னை விட வசதியானவர்களிடமிருந்தே அவ்வித காணிக்கைகளைப் பெற்றார். இயேசு தனக்காகவோ அல்லது தன் ஊழியத்திற்காகவோ யாரிடத்திலும் ஒருபோதும் பணம் கேட்டதில்லை. அவரைவிட அதிக ஆஸ்தி கொண்டவர்களிடமிருந்து மாத்திரமே காணிக்கைகளைப் பெற்றார் (லூக்கா. 8:3). இயேசுவும், பவுலும் மிக எளிய வாழ்க்கை தரத்தை கொண்டிருந்தார்கள். இவ்வாறு, பணத்தின்மீதும் உலகப்பொருட்களின் மீதும் இயேசுவும் பவுலும் கொண்டிருந்த மனப் பான்மையுடைய பிரசங்கிகளை மாத்திரமே நான் பின்பற்றுவேன்!

 

  1. அவர், ஒரு தேவ மனிதன் என்ற சாட்சி பெற்றவராய் இருக்க

வேண்டும்

 

ஓர் பக்தியுள்ள, பரிசுத்தத்தின் மீது பேராவல் கொண்ட நேர்மையாளனாய் அவர் இருக்க வேண்டும். அவர் தனக்காக யாதொன்றையும் தேடாமல், தன் நாவை அடக்கி வைத்திருப்பவராய் இருக்க வேண்டும் (யாக்கோபு.1:26, எபேசியர்.4:26-31). அவர், தோல்வியடைந்தவர்களுக்கு இரக்கம் செய்கிறவராயும், தன் ஜெபத்தையோ, தன் உபவாசத்தையோ அல்லது தன் ஈகையையோ குறித்து ஒரு போதும் பெருமை பாராட்டாதவராய் இருக்க வேண்டும் (மத். 6:1-18). கொஞ்ச வயதானவர்களோ அல்லது அதிக வயதானவர்களோ ஆகிய எல்லா ஸ்திரீகளிடமும் ‘முழுமையான பரிசுத்தம் கொண்ட' சாட்சியுடையவராய் ப்போதும் இருக்க வேண்டும் (1தீமோ.5:2). இவ்வாறு தங்கள் ஜீவியத்தில் 'தேவ பக்தியின் நறுமணம் கொண்ட' பிரசங்கிகளை மாத்திரமே ன் பின்பற்றுவேன்!

 

  1. அவர், தன் பிள்ளைகளை தேவ பக்தியின் வழியில்

வளர்த்தவராய் இருக்க வேண்டும்!

 

அவர், கிறிஸ்துவை பின்பற்றுகிறதைப் போலவே, அவருடைய பிள்ளைகளும் 'அவரைப் பின்பற்றுகிறவர்களாய் இருக்க வேண்டும். முதலாவது, தன் சொந்த பிள்ளைகளை தேவபக்தியில் நடத்தவில்லையென்றால், ஒரு சபையை முன் நடத்தும் தலைவனாய் இருந்திட முடியாது என பரிசுத்தாவியானவர் கூறுகிறார் (1தீமோ.3:4,5; தீத்து.1:6). வீட்டில் நம்முடைய பிள்ளைகளே நம்மை எப்போதும் காண்கிறபடியால், மற்றவர்களைவிட நம் பிள்ளைகளே நம்மை அதிகமாய் அறிந்திருப்பார்கள். வீட்டில், நாம் பக்தியான வழியில் வாழ்வதைக் காணும் அவர்களும், கர்த்தரை முழு இருதயமாய் பின்பற்றுவார்கள்! இவ்வாறு, பக்தியிலும், தாழ்மையிலும், எல்லா ஜனங்களையும் மதித்து நடப்பதிலும், தங்கள் பிள்ளைகளை வளர்த்த பிரசங்கிகளை மாத்திரமே நான் பின்பற்றுவேன்!

 

  1. அவர், தேவனுடைய முழு ஆலோசனைகளையும் அச்சமின்றி

பிரசங்கிக்கிறவராய் இருக்க வேண்டும்!

 

புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்ட எல்லாவற்றையும் பிரசித்தம் செய்கிறவராய், எந்த மனிதனையும் பிரியப்படுத்த விரும்பாமல், வாக்குதத்தத்தையும் அறிவிப்பவராயும் இருக்க வேண்டும் (அப்போ.20:27, கலா.1:10). அவர் மெய்யாகவே, பரிசுத்தாவியினால் தொடர்ச்சியாக அபிஷேகம் பண்ணப்பட்டவராய் இருந்தால், இயேசுவைப் போலவும் பவுலைப் போலவும், அவரது செய்திகள் எப்போதும் 'சவால் நிறைந்ததும் உற்சாகம் தருவதாயும்' இருந்திருக்க வேண்டும்! இவ்வாறு, அவர்கள் பேசும் போது தேவனுடைய அபிஷேகத்தை' அவர்களில் இருப்பதை நான் உணர்ந்தால், அதுபோன்ற பிரசங்கிகளை மாத்திரமே நான் பின்பற்றுவேன்!

 

  1. அவர், ஸ்தல சபைகளை கிறிஸ்துவின் சரீரத்தின்

பிரதிபலிப்பாய் இருக்கும்படி கட்டுவதற்கு பேரார்வம்

கொண்டவராய் இருக்க வேண்டும்!

 

ஜனங்களின் எல்லா பாவங்களிலிருந்தும் இரட்சிப்பதற்காக மாத்திரமே இயேசு வராமல், அவருடைய ஜீவனை வெளிப்படுத்தும் ஓர் சரீரமாக அவரது சபையை கட்டுவதற்கும் இயேசு இந்த பூமிக்கு வந்தார்! (மத்தேயு.16:18). அவ்வாறு எல்லா இடங்களிலும் கிறிஸ்துவின் சரீரமாய் செயல்படும் ஸ்தல சபைகளை ஸ்தாபிப்பதற்கே பவுல் பேரார்வம் கொண்டிருந்தார் (எபே. 4:15,16). இந்த இலக்கை அடைவதற்கே, அவர் கடினமாய் பாடுபட்டார் (கொலோ.1:28, 29), இவ்வாறு, கிறிஸ்துவின் சரீரத்தின் பிரதிபலிப்பாய் இயங்கும் ஸ்தல சபைகளை

கட்டுவதற்கு வாஞ்சை நிறைந்த பிரசங்கிகளை மாத்திரமே நான் பின்பற்றுவேன்!!

 

  1. அவர், 'தன்னைப் போன்ற தரிசனமும் ஆவியும் உடைய'

குறைந்தது சில உடன் ஊழியர்களையாவது எழுப்பி இருக்க

வேண்டும்!

 

ஒரு தேவ பக்தியான பிரசங்கி, கர்த்தருடைய தூய்மையான சாட்சி, அடுத்த சந்ததிக்கும் பாதுகாக்கப்பட எப்போதும் கரிசனை கொண்டவராய் இருக்க வேண்டும், இயேசுவால் எழுப்பப்பட்ட 11 சீஷர்களும் அவரது ஆவியை முழுமையாய் பருகி, அவருடைய உயர்ந்த தரத்தின்படி வாழ்ந்து, கர்த்தரின் பணியை சீரும் சிறப்புமாய் மேற்கொண்டார்கள். பவுல் மூலமாய் எழுப்பப்பட்ட தீமோத்தேயும், தீத்துவும், தாழ்மையின் ஆவியில் வாழ்ந்தவர்களாய், பவுலின் ஊழியத்தை சுய நலம் ஏதுமில்லாமல், தொடர்ச்சியாய் செய்தார்கள் (பிலி, 2:19,21; 2கொரி.7:13-15). இவ்விதமான தரம் கொண்ட, குறைந்தது சில உடன் ஊழியர்களையாவது உருவாக்கிய பிரசங்கிகளை மாத்திரமே நான் பின்பற்றுவேன்!

 

நீங்கள் ஒரு பிரசங்கியாய் தேவனால் அழைக்கப்பட்டிருந்தால், அவர் தம்முடைய பரிசுத்தாவியினால் உங்களை தொடர்ச்சியாக அபிஷேகித்திட ஜெபம் செய்திட வேண்டும். அதன் மூலமாய், மேலே குறிப்பிடப்பட்ட எல்லா திவ்விய தரங்களையும் உடையவர்களாய், மற்றவர்கள் பின்பற்ற உகந்த ஓர் மாதிரியாய் மாறிட வேண்டும்!

 

ஒத்த வேஷத்தாலும், உலகத்தாலும் கறைப்பட்ட இன்றைய கிறிஸ்தவத்தில், நாமோ ஜீவியத்திலும் ஊழியத்திலும் உன்னத தரம் கொண்ட சபையை எழுப்புவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம்! அந்த பணி நிறைவேற்றிட ஆண்டவர் நமக்கு உதவுவாராக! ஆமென்.