ஆராதனை கூடுகை ஜன சங்கம் ஸ்தல சபை

எழுதியவர் :   சந்தோஷ் பூணன்
    Download Formats:

அதிகாரம் 1
புதுரசத்திற்கு புது துருத்தி தேவை

“புதுரசம் புது துருத்திகளில் வார்த்து வைக்கவேண்டும்” (லூக்கா.5:38) என்றார் இயேசு! பல வருடங்களாய் ஆண்டவர் செய்த கிரியைகளை தனிப்பட்ட விதத்தில் அனுபவித்தே இந்த புத்தகம் எழுதப்படுகிறது. “ஜீவ பாதையே” மிக விலையேறப்பெற்றது என்றும், அதன் மூலமாய் ஒவ்வொன்றும் ‘நித்திய மதிப்போடு' தியாகத்தின் வழியில் அனுபவிக்கப்படவேண்டும்! என்பதே அதன் சாரமாயிருக்கிறது.

 

கிறிஸ்துவின் ஜீவியத்தையும் அவருடைய போதனைகளையும் மெய்யாகவே நாம் விளங்கி கொள்ள வேண்டுமென்றால் 'ஓர் சிலுவைக்கு' ம் நடத்தப்படுவோம்! அந்த சிலுவையில் தாம் மதிப்பீடு வைத்திருந்த சிலவற்றை இழக்க வேண்டிவரும்! ஜீவியத்தின் அநேக பகுதிகளில் தியாகம் செய்திடவும் வேண்டும்! 'அப்போது' ஆண்டவர் நமக்குப் போதித்திட விரும்புகிறவைகள், நம் ஜீவியத்தில் நிஜமாய் மாறும்! நம் ஜீவியத்திற்குரிய தேவையான முழு திட்டத்தையும் நாம் நிறைவேற்றுவோம்!!

 

ஒரு புது உடன்படிக்கை சபையைக் கட்டுவதென்பது, தேவன் ஒருவனுக்கு அளித்த விலையேறப்பெற்ற பாக்கியம்! ஆகிலும், அந்த பணியை நிறைவேற்றும் பாதை மிகமிக குறுகலானது.

 

ஒன்றே ஒன்றுதான் தேவையானது

 

புதுரசம், புது துருத்திகளில் வார்த்து வைக்கப்பட இயேசு கட்டளையிட்டார். ‘புதுரசம்' பரிசுத்தாவியின் மூலமாக இயேசு நமக்கு வழங்க விரும்பும், அவருடைய ஜீவியமேயாகும். புது துருத்தியாகிய ‘புதிய உடன்படிக்கை சபையையே' அவர் நம் மூலமாய் கட்ட விரும்புகிறார்! இங்குதான், அவருடைய ஜீவன் வெளிப்பட வேண்டும்.

 

புதிய உடன்படிக்கை ஜீவியத்தை வாழ்ந்திட, உண்மையுள்ளவர்களாய் நாடுவோமென்றால், ஒரு வெங்காயத்திலுள்ள படிவத்தைப் போல், தேவன் அவ்வப்போது காட்டுகிறபடி 'நம் சுய நலத்தின்' பெரும்பகுதி 'வெங்காயத்தின் தோல் உரிக்கப்படுவதுபோல்' கொஞ்சம் கொஞ்சமாய் உரிக்கப்படுவது அவசியம்! என்பதை நாம் யாவரும் கண்டுகொள்வோம். இதுபோலவே, ஒரு புதிய உடன்படிக்கை சபையை நாம் கட்டுவதற்கு நாடும் போதும் சம்பவிக்கிறது.

 

‘பழைய துருத்தி' என்பது தேவனுடைய வார்த்தையில் அல்லாமல், மனுஷீக பாரம்பரியத்தினால் கட்டப்படும் ஓர் சபையாகும். இந்த பாரம்பரியத்திற்கும், வெங்காயத்தைப்போல் பல படிவங்கள் இருக்கின்றன. அந்த ஒவ்வொரு படிவங்களாகிய 'தோல்களை' ஆண்டவர் காண்பிக்கும் போதெல்லாம், அதை நாம் உரித்து விட வேண்டும்.

 

துரதிருஷ்டவசமாக, புதிய உடன்படிக்கை சபைகளைக் கட்டுவதற்கு நாடிய அநேக கிறிஸ்தவர்கள், பழைய துருத்தியின் ஏராளமான படிவங்கள் இன்னமும் இருக்கையில், சில குறிப்பிட்ட பகுதியில் நின்று விடுகிறார்கள். இவர்கள், வெளிப்படையாய் தோன்றும் மனுஷீக, ஸ்தாபன பாரம்பரியங்களை மாத்திரமே உரித்துப் போட்டார்கள். ஆனால் ஆண்டவருடைய விருப்பமோ, பழைய துருத்தி முழுவதும் உரிக்கப்பட்டு ஒழியவேண்டும் என்பதுதான்! அவருடைய புதுரசம், முற்றிலும் புதிய துருத்தியில்தான் வார்க்கப்பட தேவன் விரும்புகிறார்.

 

பல வருடங்களுக்கு முன்பாக, புதுரசம் என்றால் என்ன? புது துருத்தி என்றால் என்ன? சபை, கிறிஸ்துவின் சரீரமாய் கட்டப்படுவதின் உண்மையான பொருள் என்ன? ஆகிய அனைத்தையும் 'உபதேச ரீதியாய்' நான் விளங்கிக் கொண்டேன். ஆனால், இவ்வாறு பல பிரசங்கங்களைக் கேட்டு, என் 'தலையில் குவித்துக்கொண்ட அறிவாகவே' நான் கண்டேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், என் தந்தை வழங்கிய புதிய உடன்படிக்கை பிரசங்கங்களைக் கேட்டு நான் வளர்ந்தேன். திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை, அவர் கூறுவதை நான் கேட்டேன். ஆகிலும், அவை அனைத்தும் என் தலையில்தான் தங்கியிருந்தது. அநேக வருடங்களுக்குப் பிறகே, இந்த சத்தியங்கள் என் தலையிலிருந்து, என் இருதயத்திற்குள் வரத்துவங்கியது. இப்போது “இந்த வழி ஒன்றே” நான் கர்த்தருக்கு ஊழியம் செய்திட நியமணம் செய்யப்பட்டதென்பதை அறிந்து கொண்டேன்.

 

இப்போது என் ஜீவியத்தில், 'ஒரே நபராய் இருப்பவர்' இயேசு மாத்திரமேயாகும். மற்ற அனைத்து உறவுகளும், நான் அவரோடு வைத்திருக்கும் உறவிலிருந்து தோன்றியதேயாகும். ஆகவே, நான் இப்போது கர்த்தருக்குச் செய்திடும் ஊழியம் “சபையை, கிறிஸ்துவின் சரீரமாய்” கட்டுவது ஒன்றேயாகும்.



ஆண்டவர் இயேசு, இந்த பூமிக்குரிய வாழ்க்கையில் “ஒவ்வொரு

நாளும் சிலுவை எடுத்து வரும் ஜீவியத்தை” எதற்காக தெரிந்து

கொண்டார்? அதை வேதாகமம் கூறும்போது “தனக்கு முன்

வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு” என கூறுகிறது (எபி.12:2).

 

அவர் தனக்கு முன் வைத்திருந்த அந்த சந்தோஷம்' என்ன? :

 

இயேசு சிலுவைக்குப் போவதற்கு முன்பாக, தன் சீஷர்களை விட்டுப் பிரியும் கடைசி வாசகங்களாய் யோவான் 14-ம் அதிகாரம் இருக்கிறது. யோவான் அப்போஸ்தலன், இயேசு தன் கடைசி இராப்போஜனத்தில் கூறிய அவர்களைவிட்டு பிரியும்' வார்த்தைகளாக இயேசு பேசியதை ஐந்து அதிகாரங்களில் எடுத்து வைத்திருப்பது சிறந்ததாயிருக்கிறது. அங்கு இயேசு “இவ்விடம் விட்டு போவோம் வாருங்கள்” என்றார். (யோவான். 14:31). அவரோ, தன்னுடைய சிலுவை மரணத்திற்குப் போய் கொண்டிருக்கிறார் ... ஆகிலும் அதற்கு முன்பாக அவர் கூறியது என்னவென்றால் “நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்கு கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், இந்த உலகம் அறியவேண்டும்” (யோவான்.14:31) என கூறினார். இதுவே அவருடைய சந்தோஷமாயிருந்தது! தன் பிதாவோடு நித்திய காலமாய் அவருக்கிருந்த “தன்னுடைய பிதாவுக்கு கீழ்ப்படிந்திருந்ததும், அதன் மூலம் அவரோடு ஐக்கியம் கொண்டிருந்ததுமாயிருந்த" நிறைவான சந்தோஷம்! ஆகவே இயேசு சிலுவை சென்றது, எல்லாவற்றுக்கும் முதலாய் “தன் பிதாவின் மீது கொண்ட அன்பினாலும், அவரது கட்டளைக்கு கீழ்ப்படிந்திருந்ததினாலுமே!” என அறியக்கடவோம்!

 

.... அதன்பின்' நம்மீது கொண்ட அன்புமேயாகும்!

 

இந்த பகுதியை நான் வலியுறுத்தி கூறியதற்கு காரணம், “இந்த வழி ஒன்றே” நாம் அவருடைய சபையைக் கட்டுவதற்கு முக்கியமாயிருக்கிறது. நாம் பாவத்தை மேற்கொள்வதற்குரிய விருப்பமோ அல்லது கர்த்தருடைய ஊழியத்தை செய்வதற்குரிய விருப்பமோ, முதலாவதாக பிதாவை நேசிக்கும் அன்பிலிருந்தே உண்டாக வேண்டும். அதனிமித்தமே, அவருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிய நாம் நடத்தப்படுகிறோம். இரண்டாவதாகவே, நாம் ஜனங்களை நேசிக்கிறோம். நாம் சபையை கட்டவேண்டுமென்றால், ஜனங்கள் மீது மனதுருக்கமாயிருக்கவேண்டியது அவசியமாகும். ஆனால் இந்த

மனதுருக்கத்திற்கு முன்பாக, நம் பரமபிதாவின் மீது முதலாவதாய் அன்பு பாராட்டியிருக்கவேண்டும்! அந்த ஆர்வமான அன்பே, அவருடைய கற்பனைகளுக்கு நம்மை வாஞ்சையுடன் கீழ்ப்படியச் செய்கிறது!

 

ஓர் புதிய உடன்படிக்கையின் சபையைக் கட்டுவதற்கு, இரண்டு முக்கியமான தேவைகள் உண்டு: பிதாவின் மீது கொண்ட அன்பு! பிறர்மீது கொண்ட அன்பு! இந்த இரண்டு அன்பும் சிலுவையின் இரண்டு பகுதிகளாய் நமக்கு வைக்கப்பட்டிருக்கிறது! ஒன்று, சிலுவையின் செங்குத்தான மரம்! இரண்டாவதாக, சிலுவையின் குறுக்கே உள்ள மரம். செங்குத்தான மரம் மாத்திரமோ அல்லது குறுக்கே உள்ள மரம் மாத்திரமோ, ஒரு சிலுவையாயிருக்க முடியாது.

 

அந்த சிலுவை இரண்டு திசையிலான உறவை காண்பித்திடும் அழகு நிறைந்த சித்திரமாயிருக்கிறது. இதுவே, நம் ஒவ்வொரு நாள் ஜீவியத்திலும், நாம் எவ்வாறு சிலுவையை சுமந்து வரவேண்டும் என்பதை நேர்த்தியாய் விவரிக்கிறது!

 

அடுத்து வரும் அதிகாரங்களில், சிலுவையின் இந்த இரண்டு மரங்கள் நம் ஜீவியத்திற்கு எவ்வாறு பொருந்துமென்பதையும். இந்த இரண்டும் இணைந்து “புதிய உடன்படிக்கை சபைகளைக் கட்டுவதற்கு" எவ்வாறு உதவுகிறது என்பதையும் நாம் காணலாம்!

அதிகாரம் 2
சிலுவையின் ‘செங்குத்து' மரம்!

சிலுவையின் செங்குத்து' (Vertical) மரம் தேவனாகிய நம் பிதாவின் மீது கொண்ட அன்பையே 'முதலாவதாக' நமக்கு காண்பிக்கிறது. இயேசு மரித்த சிலுவையை அவர்கள் கட்டத் துவங்கிய போது, முதலாவதாக இந்த செங்குத்து மரத்திலிருந்தே ஆரம்பித்திருப்பார்கள். அந்த மரம் 'குறுக்கு' (Horizontal) மரத்தின் அளவைவிட இரண்டு மடங்காயிருந்தது!

 

இதன் முக்கியமான அர்த்தம் என்னவென்றால், பரமண்டலத்தில் வீற்றிருக்கும் தேவனோடு வைத்திருக்கும் உறவே மிக முக்கியமானதாகும்! இந்த உறவே முதலாவதாய் நிலைநிறுத்தப்பட வேண்டும். அதற்கு பிறகுதான் ‘பிறரோடு கொண்ட' 'குறுக்கு திசையிலான' உறவு தோன்ற வேண்டும்!

 

இயேசுவின் மாதிரியை பின்பற்றி நடப்போம்

 

கல்வாரி மலைமீது இயேசு சிலுவை எடுத்துப்போவதற்கு முன்பாக, தன் ஜீவ காலமெல்லாம் 'ஓர் அந்தரங்க சிலுவை' சுமந்து வாழ்ந்தார். அந்த அந்தரங்க சிலுவையை, ஒவ்வொரு நாளும், தன் பூமிக்குரிய ஜீவகாலம் முழுவதும், சுமார் 12,000 நாட்களுக்கும் மேலாக சுமந்து வாழ்ந்தார். இப்போது அவர் நம்மைப் பார்த்து “நீங்கள் என்னுடைய சீஷனாயிருக்க விரும்பினால் நான் செய்தது போலவே, நீங்களும் 'ஒவ்வொரு நாளும்' உங்கள் சிலுவையை எடுத்து வர வேண்டும்” (லூக்கா.9:23- விரிவாக்கம்) என கூறினார். இந்த பூமியில் இயேசு வாழ்ந்த 12,000 நாட்களின் ஒவ்வொரு நாட்களும் இயேசு கொண்டிருந்த வாழ்க்கையின் அடிப்படை: “எல்லாவற்றுக்கும் முதலாவதாக, என் ஜீவியம் என் பிதாவின் மீது கொண்ட அன்பை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. அந்த அன்பினிமித்தம் அவருடைய கற்பனைகள் அனைத்திற்கும் கீழ்ப்படிகிறேன்! அதன்பின்பு, பிறர்மீது கொண்ட அன்பினால் ஜீவிக்கிறேன்” என்பதேயாகும்.

 

இந்த அடிப்படையிலேயே, இயேசு தன்னுடைய வீட்டில் 30 ஆண்டுகள், தன்னுடைய பூமிக்குரிய பெற்றோர்களுக்கு கீழ்ப்படிந்து வாழ முடிந்தது. அந்த 30 ஆண்டு காலத்தின் 'ஒவ்வொரு நாளும்' தன் பூரணமற்ற யோசேப்பிற்கும், மரியாளுக்கும் துல்லியமாய் கீழ்ப்படிவதற்கு.... எத்தனை சோதனைகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது! எத்தனை 'எரிச்சலூட்டும்' சூழ்நிலையை அவர் ஜெயம் பெற வேண்டியிருந்தது! ஆனால், இது அனைத்தையும் “தனக்கு முன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு" மகிழ்வுடன் செய்தார். பிதாவோடு கொண்டிருந்த சந்தோஷ ஐக்கியத்தின் மூலமாய், பிதாவின் கட்டளையாகிய “உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக” என்ற கற்பனையை நிறைவேற்றினார்.

 

தன் சிலுவையை எடுத்து, வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் தன் பிதாவிற்கு கீழ்ப்படியும் மனநிலையை, இந்த பூமிக்குரிய ஜீவியத்தின் கடைசி மட்டும் தொடர்ச்சியாய் காத்துக்கொண்டார்.

 

முதல் கிறிஸ்துவின் சரீரமாயிருந்த ‘இயேசுதாமே' ஒவ்வொரு நாளும் 33/2 வருடங்கள் சிலுவை சுமந்தார். இன்று, அவருடைய ஆவிக்குரிய சரீரமாய் விளங்கும் அவருடைய அவயவமாகிய நாமும், அவர் செய்ததைப் போலவே செய்திட வேண்டும்!

 

இயேசு கிறிஸ்துவின் ஒரு சபை, “சீஷர்களின் சபையாய்” இருக்க வேண்டுமேயல்லாமல், வெறும் மனம் மாறியவர்களாய் இருந்து விடக்கூடாது. ஒரு சீஷனாயிருக்க விரும்புகிறவன் 'தன் சுய - ஜீவியத்தை வெறுத்து' அனுதினமும் தன் சிலுவை சுமந்து வரவேண்டும் (லூக்கா.9:23). ஆகவே, இயேசுவின் ஜீவியமாகிய புதுரசத்தை விரும்பி, அதை ஒரு புதிய உடன்படிக்கை சபையாகிய ‘புது துருத்தியில்' வைத்து வாழ வேண்டுமென்றால், நம்மை நாமே வெறுத்து, நம் சிலுவையை எடுத்து, ஒவ்வொரு நாளும் இயேசுவை பின்பற்றி வரவேண்டும்! அப்போது மாத்திரமே, நாம் சபையை “கிறிஸ்துவின் சரீரமாய்” கட்ட முடியும்!

 

ஒரு விசுவாசியின் அந்தரங்க ஜீவியம்

 

சபையைக் கட்டுவதற்கு, நம் ஆண்டவரோடு கொண்ட ‘செங்குத்தான' உறவு மிக முக்கியமாகும். ஆண்டவரோடு கொண்ட உறவு, நம் தனிப்பட்ட ஜீவியத்தில் காணப்படும் ஓர் அந்தரங்கமாகும்! ஆனால் இன்று பிசாசு அநேக கிறிஸ்தவர்களை வஞ்சித்திருக்கும் பகுதி என்னவென்றால் “வெளிப்புற தோற்றத்தில் கொண்டிருக்கும் தேவ பக்தி” என எண்ண வைத்துவிட்டான். ஆனால், தேவனோடு கொண்ட மெய்யான அன்பின் தியானம் 100% % உள்ளான, நமது அந்தரங்கமேயாகும்! ஆம், அது நம் மறைவான ஜீவியம்!

 

புதிய உடன்படிக்கையின் பிரதானமே, நம் உள்ளான மனநிலை! சிந்தனைகள்! நோக்கங்கள்! ஆகியவையாகும். மலைப்பிரசங்கத்தில்,

அந்தரங்க ஜீவியத்தையே இயேசு பேசினார். புதிய உடன்படிக்கையில் அன்று பழைய உடன்படிக்கையைப்போல் 'விபச்சாரத்தை தவிர்ப்பது' இப்போது காரியமல்ல! இப்போதோ, பாலியத்திற்குரிய 'பாவ சிந்தையையும் நாம் வெறுக்க வேண்டும். பழைய உடன்படிக்கையில் நாம் எவ்வளவு கொடுத்தோம்? எவ்வளவு ஜெபித்தோம்? எவ்வளவு உபவாசித்தோம்? என்பதே காரியமாயிருந்தது. ஆனால் இயேசு வந்தவுடன், இதுபோன்ற பக்திக்குரிய செயல்களை, மற்ற ஒருவரும் அறியாதபடி 'அந்தரங்கத்தில்' கொடுத்து, ஜெபித்து, உபவாசித்திட கூறினார். இதுவே, புதிய உடன்படிக்கையின் புது துருத்தியாகும்! நாம் கிறிஸ்துவின் மீது கொண்ட அந்தரங்க தியானத்தின் 'மறைந்திருக்கும்' முக்கியத்துவத்தை அறியவில்லையென்றால், புதிய உடன்படிக்கையின் அஸ்திபார கோட்பாட்டையே நாம் இன்னமும் அறியவில்லை என்பதேயாகும். அவர்மீது கொண்ட அன்பின் தியானம், எப்போதுமே அந்தரங்கத்தில் இருக்க வேண்டும்!

 

நம்முடைய ஜீவியம் “கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்க வேண்டும்” (கொலோ.3:3), நாம் ஜீவித்திட இதுவே ஓர் ஆச்சரியமான வழி! நாம் கிறிஸ்துவின் மீது கொண்ட அன்பின் தியானத்தை, பிறரிடமிருந்து எவ்வளவு மறைத்து வாழ்கிறோமோ, அவ்வளவு அதிகமாய் நாம் ‘கர்த்தருடைய இரகசியத்தை' கற்றுக்கொள்ள முடியும்! நம்முடைய மணவாளனோடு அந்தரங்கத்தில் ஐக்கியப்படும் நேரங்கள் வைத்திருக்க வேண்டும்! அது யாருக்கும் தெரிந்திருக்கக் கூடாது. ஒரு சிறந்த திருமண வாழ்வு என்னவென்றால், கணவன் மனைவி கொண்டிருக்கும் மகிழ்ச்சியான ஐக்கியத்தில், அங்கு வேறு யாரும் இருந்திடக்கூடாது! அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடி செலவழிக்கும் நேரமும், யாரும் அறிந்திருக்கக் கூடாது! இவ்வித முழு அர்ப்பணத்தின் ஆவி கொண்ட மணவாட்டியாகிய ஜனங்களைக் கொண்டே, இன்று இயேசு தன் சபையைக் கட்டுகிறார்!

 

முதலாவதாக பிதாவின் மீது கொண்ட அன்பும், கிறிஸ்துவின் மீதுகொண்ட ஊக்கமான தியானமும் கொண்ட செங்குத்து நிலையான' உறவு நிலைநிறுத்தப்பட்ட பிறகுதான்..... நாம் ஒருவரையொருவர் நேசிக்கும் ‘குறுக்கு நிலையிலான' உறவு ஸ்தாபிக்கப்பட முடியும்! இப்போது ‘ஒரு முழு சிலுவை' பூரண வடிவம் பெற்று விட்டது! இனி இந்த சிலுவையில், நம்மை முழுவதும் அறையப்பட ‘சந்தோஷத்துடன்' ஒப்புக்கொடுத்திட முடியும்!

அதிகாரம் 3
சிலுவையின் குறுக்கு மரம்

நீங்கள் ஒரு குறுக்கு மரப்பலகையை நிறுத்தி வைக்க முயற்சித்தால், அது கீழே விழுந்து விடும். ஆனால், அதை செங்குத்து மரப்பலகையில் அறைந்து விட்டால், அது உறுதியாக நிற்கும்! ‘சிலுவையாய்' மாறும்! ஆகவே, எப்போதும் செங்குத்து' மரமே முதலாவதாக இருக்க வேண்டும்.

 

நாம் கட்டுகிற சபைகள் ‘புதிய உடன்படிக்கை சபைகளாய்' இருக்க வேண்டும். யாரெல்லாம் கீழ்காணும் கோட்பாட்டை ஜீவித்திட தீர்மானித்திருக்கிறார்களோ, அவர்கள் மாத்திரமே இந்த தரமுள்ள சபைகளைக் கட்ட முடியும்: “நான் செய்ய விரும்பியதை செய்திட விரும்பவில்லை. என் பரமபிதா நான் செய்யும்படி எதை விரும்புகிறாரோ அதை மாத்திரமே செய்திட விரும்புகிறேன்” என்பதேயாகும்.

 

அதிகமான வருத்தம் என்னவென்றால், திரளான கிறிஸ்தவர்களிடம் இந்த மனப்பான்மை காணப்படவில்லை! என் சொந்த வாழ்க்கையும் ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்தது. என்னை ஒரு விசுவாசியாய் அழைத்துக்கொண்டு, நான் செய்ய விரும்பியதைச் செய்து, எனக்கானதையே தேடினேன்!

 

'ஒரு நல்ல சபை இப்படித்தான் இருக்க வேண்டும்' என நான் விரும்பிய ஒரு சபையில் அங்கம் வகித்திட விரும்பினேன்! அங்கு, என்னைப்போலவே எல்லாவிதத்திலும் இருக்கும் ஜனங்களிடம் ஐக்கியத்தைக் கட்டவிரும்பினேன். நான் விரும்பிய ஜனங்களிடம், என் நேரத்தை செலவழித்தேன். ஆனால் யாரேனும் சில சகோதரர்கள், தவறான விதமாய் என்னோடு உரசல் ஏற்படுத்திய போது, நான் அவரை தவிர்த்து விடுவேன்! இப்படி ஒரு ஜீவியம், சிலுவையின் வழி நடப்பதல்ல. ‘இந்த மனநிலை இருக்கும் வரைக்கும் நாம் ஒருபோதும் கிறிஸ்துவின் சரீரத்தை கட்ட இயலாது.

 

இவ்வாறு சிலுவையின் பாதையில் நடவாமலே, நாம் சபையில் சிறந்த போதகங்களைப் பெற்று கொண்டே இருக்கமுடியும்!

 

12

யார் இயேசுவின் உண்மை சீஷன்?

 

நான் பல வருடங்களாய், நான் இயேசுவின் சீஷன் என்பதற்குரிய நிரூபணம் “ஒருவரையொருவர் நேசிப்பதே” என எண்ணினேன்! ஏனென்றால், இயேசு கூறும்போது “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லோரும் அறிந்து கொள்வார்கள்” என கூறியுள்ளார் (யோவான்.13:35). நான் போகும் சபையிலுள்ள சகோதர சகோதரிகளை அன்புகூர்ந்து விட்டால் ‘நான் ஒரு சீஷன் என நிரூபித்ததாக' எண்ணிக்கொண்டேன். ஆனால் நீங்கள் இந்த வசனத்தை கவனித்து வாசிக்கும்

போது “கிறிஸ்தவரல்லாதவர்களின் கண்ணோக்கின்படி" நம்மை இயேசுவின் சீஷர்களாக அறிந்து கொள்ளும் ‘சாட்சியே' இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது! அதுவே, சிலுவையின் குறுக்குமரம்!

 

ஆனால், ஆரம்ப நிலையில் இயேசுவின் சீஷனாய் இருப்பதற்கு “நம்முடைய சுயத்தை வெறுத்து, மற்றும் நம் சுய-சித்தத்தை சிலுவையில் அறைவதை” முக்கிய நிபந்தனையாக இயேசு கூறினார் (லூக்கா.9:23). இந்த பகுதியில் நீங்கள் “இயேசுவின் சீஷர்களாயிருக்கிறீர்களா?” என ஒருவரும் காணமுடியாத “உங்கள் இருதயத்திலும், உங்கள் அந்தரங்க ஜீவியத்திலும்” தேவன், உங்களை முதலாவதாக காண வேண்டியதாயிருக்கிறது! நீங்கள் மெய்யாகவே, அனுதினமும் உங்களை வெறுத்து வாழ்வதை தேவன் காணும் போது நீங்கள் "லூக்கா.9:23 கிறிஸ்தவன்” என தேவன் உங்களுக்கு அங்கீகார முத்திரைத் தருவார்! இது ஒன்றே ஒரு கிறிஸ்தவனின் மெய்யான தரமாகும். அவ்வாறாகவே

வேதமும் “சீஷர்கள், கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டார்கள்” (அப்.11:26) என கூறுகிறது!

 

இதற்குப் பிறகே, நீங்கள் இயேசுவின் சீஷனாய் இருப்பதை உங்களைச் சுற்றியுள்ள உலகம் சாட்சியாய் காணும் பகுதியாய் “சீஷர்களாகிய நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கும்” பகுதி வருகிறது!

 

'செங்குத்துமரமே' எப்போதும் முதலாவதாய் இருக்கிறது என்பதை கவனியுங்கள். தேவன் மீதுகொண்ட உங்கள் அன்பை, அவர் அங்கீகரித்து முத்திரையிட வேண்டும். ஆகவே, உங்கள் ஸ்தலசபையில் உள்ளவர்களை நீங்கள் அன்புகூருகிறபடியால் “உங்களை இயேசுவின் சீஷனாய்” ஒருபோதும் எண்ணி வஞ்சிக்கப்படாதிருங்கள்! இவ்வாறாக, பிறரிடம் கொண்ட “மனுஷ்க அன்பு” உங்களை ஒரு சீஷனாக எண்ணும்படி வஞ்சித்து விடமுடியும். ஞாயிற்றுக் கிழமைகளில் “மற்ற விசுவாசிகளை சந்திக்கும் அன்பு” நீங்கள் ஒரு சீஷன் என்பதற்கு நிரூபணம் அல்ல! 'விசுவாசிகளை சந்திக்கும் ஞாயிற்றுகிழமை' என்பதை பிரதானமாகக் கொள்ளாமல்..... திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய எல்லா நாட்களிலும் உங்களை ஒரு சீஷனாய் நிரூபிப்பதே முக்கியமாகும்! அந்த நிரூபணத்திற்கு, இயேசுவின்மீது கொண்ட ஊக்கமான அன்பினிமித்தம் உங்களை வெறுப்பதும், ஒவ்வொரு நாளும் அவருடைய முகத்திற்கு முன்பாக ஜீவிப்பதுமேயாகும்!

 

ஒரு உண்மையான இயேசுவின் சீஷனுக்கு, வாரத்தின் ஒவ்வொரு நாளும் சமஅளவு முக்கியமாகும். ஏனென்றால், அவன் பிரதானமாக தன் மணவாளனுடைய ஐக்கியத்தையே தேடுகிறான். தன் ஆண்டவர் மீது கொண்டிருக்கும் ஐக்கியத்திலிருந்தே, மற்ற சீஷர்களோடு கொண்டிருக்கும் ஐக்கியம் வழிந்தோடமுடியும். இதுபோன்ற ஒரு சீஷனை, சபையில் புதிதாய் யார் சேருகிறார்கள் அல்லது யார் சபையை விட்டுப் போகிறார்கள் என்பதெல்லாம் அவனை பாதிப்பதில்லை! 'தன் ஜீவியத்தில் இயேசுவே எல்லாம்' என வாழும் சீஷர்களைக் கொண்டே உண்மையான சபை கட்டப்படமுடியும்! செங்குத்தான வசம் மட்டுமோ அல்லது குறுக்குவசம் மட்டுமோ ஆகிய ஒரே ஒரு மரம் சிலுவையாகாது! துரதிருஷ்டவசமாக திரளான விசுவாசிகளும், திரளான சபைகளும் “செங்குத்தான மரம் அல்லது குறுக்கு வசமான மரம்” ஆகிய ஏதாவது ஒன்றில் மாத்திரமே வலியுறுத்தி நின்று கொண்டிருக்கிறார்கள்.

 

கிறிஸ்தவர்களின் கூடுகையில் மூன்று ரகம் இருப்பதை நான் காண்கிறேன், அவைகள்:

 

  1. ஆராதனை கூடுகை
  2. ஜனசங்கம்
  3. ஒரு ஸ்தலத்தில் தோன்றிடும் ‘மெய்யான சபை'

 

இவைகளில் கடைசியாய் குறிப்பிடப்பட்டது மாத்திரமே புது ரசத்திற்கு, புது துருத்தியாய் விளங்குகிறது!

அதிகாரம் 4
ஆராதனை கூடுகை

தெய்வ வழிபாட்டிற்கு செங்குத்து மரங்களாய் சேர்ந்து வருவதே ஆராதனை கூடுகையாகும் (Congregation). நான் சென்ற அநேக சபைகள் இதுபோன்ற தரத்தில்தான் இருந்தது. ஒரு நல்ல ஆராதனை கூடுகையில், ஜனங்கள் தேவனோடு இசைந்து நடக்கும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக அக்கறை கொண்டிருந்தார்கள்! வேத ஆராய்ச்சி கூட்டங்களுக்கும், உபதேசதூய்மைக்கும் ஆர்வம் கொண்டிருந்தார்கள். அப்படியிருந்தும், அவர்கள் அனைவரும் 'வெவ்வேறு அளவிலான' (கர்த்தரை ஆராதிக்கும் அளவின்படி) தனித்தனி மரப்பலகைகளாகவே இருந்தார்கள். அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஐக்கியத்தைக் கட்டவில்லை! அவர்களைத் தவறான விதமாய் 'உராய்வு ஏற்படுத்துகிற ஒவ்வொருவரையும்' தவிர்த்து விடுகிறார்கள்! நானும் கூட  பல வருடங்களாய் ‘ஒரு ஆராதனை கூடுகையின்' மனுஷனாகவே

இருந்தேன். அநேக ஆச்சரியமான சத்தியங்களை பல வருடங்களாய் நான் கேட்டிருந்தாலும், நான் தேவனோடு கொண்டிருந்த தனிப்பட்ட உறவில் திருப்தி கண்டவனாயிருந்தேன்.

 

ஆனால், யோவான் அப்போஸ்தலன் கூறுவதைப்போல் “தேவனிடத்தில் அன்புகூருகிறேன் என்று ஒருவன் சொல்லியும், தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமல் இருப்பது எப்படி?” என கூறினார் (1யோவான்.4:20). "இந்த வசனத்திற்கே' ஆராதனை கூடுகையிலுள்ள ஜனங்கள், அதிக கவனம் தருவதில்லை!

 

இங்கு யோவான் கூறமுற்படுவது என்னவென்றால் “உங்களுக்கு ஓர் செங்குத்தான உறவை வைத்திருப்பதினால், அதை ஒரு சிலுவை என்று நீங்கள் சொல்லலாமா?" என்பதேயாகும். நீங்கள் 'வெளிப்புறமான பரிசுத்தத்தில்' ஒரு அளவை எட்டியிருக்கிறீர்கள் என்பது உண்மையாயிருந்தாலும், உங்கள் ஆராதனை கூடுகைக்கு வரும் மற்றவர்களிடத்தில், உங்களுக்கு யாதொரு ஐக்கியமுமில்லை!

 

"ஆராதனை கூடுகை” பழைய உடன்படிக்கையின் ஓர் மாதிரி

 

‘ஆராதனைக் கூடுகையில்' குழுமிவரும் சகோதரர்களும் சகோதரிகளும் தனித்தனியாய் நின்று, ஒருவருக்கொருவர் ஐக்கியத்தைக் கட்டுவதற்கு நாட்டம் இல்லாதவர்கள்! ஆகிலும், தங்களுக்குள் “நண்பர்களை வைத்துக்கொள்ள” விரும்புவார்கள். மெய்யான தெய்வ அன்பில் இவர்கள் ஒருவருக்கொருவர் கட்டப்படுவதற்கு ‘நேரங்கள் செலவழித்து' தங்கியிருப்பதில்லை. இதுபோன்ற நிலைதான், பழைய உடன்படிக்கையின் இஸ்ரவேல் ஜனங்களிடம் காணப்பட்டது. இதுபோன்ற அமைப்பிலிருக்கும் குழுவினர்களில், கணவன் மனைவியரில் கூட ஒருவருக்கொருவர் ஐக்கியமாயிருக்கமாட்டார்கள். அதற்கு காரணம் என்னவெனில், இவர்களில் ஒருவர் 'தன்னை உயர்ந்த ஆவிக்குரியவன் அல்லது ஆவிக்குரியவள்!' என்ற நிலையில் உயர்ந்திருப்பதே காரணமாகும். உதாரணமாக மனைவியானவள் குடும்ப பாரம் கொண்டு பிள்ளைகளையும் கணவரையும் விசாரித்திடும் வேளையில்.....

 

கணவரோ பாரம் கொண்ட தன் மனைவிக்கு உதவி செய்யாமல் “அமைதியான தியான நேரத்தில்” தேவனுடைய வார்த்தையை தியானிப்பதில் மூழ்கியிருப்பார்! இதுபோன்ற மனிதனே, தன் மனநிலையில் 'ஆராதனை குழுவினரை' சார்ந்தவராயிருக்கிறார்.

 

இதுபோன்ற ஒரு நபரை 'ஒரு கிறிஸ்தவன்' என்று மெய்யாகவே அழைக்கப்பட முடியுமா? என்றே ஆச்சரியப்படுகிறேன். அவர் வேதம் வாசிக்கிறபடியால், ஜெபிக்கிறபடியால், சபைக்கு பணத்தை கொடுக்கிறபடியால், தன்னை அவர் ஆவிக்குரியவர் என்றும், இயேசுவின் சீஷன் எனவும் எண்ணிக்கொள்ளக்கூடும்! ஆனால் அது முற்றிலும், சுய வஞ்சகமேயாகும். என்னுடைய வெளிப்புறமான கிறிஸ்தவ ஊழியங்கள் என்னை “ஒரு கிறிஸ்துவின் சீஷனாய்” மாற்றி விட்டதாக பல வருடங்களாய் பிசாசு என்னை வஞ்சித்தது போலவே, அநேக கிறிஸ்தவர்களை வஞ்சித்திருக்கிறான்.

 

'ஆராதனை கூடுகை' என்ற பதம் மெய்யாகவே பழைய உடன்படிக்கையின் வார்த்தையாகும்.... அது, பழைய உடன்படிக்கை மதம் என்றே கூறலாம்!

 

மோசே நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தபோது, அவர்கள் ஆராதனை கூடுகைக்கு உரியவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் கூடிவரும் போதெல்லாம், எவ்வாறு தேவனை ஆராதிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு துல்லியமாய் விளக்கி கட்டளையிட்டார்! ஆகிலும், கூடிவந்த அவர்கள் அனைவருமே தனித்தனி நபர்கள்! அந்த தனித்திருந்த நபர்களையே, ஓர் பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு தேவன் அழைப்பு கொடுத்திருந்தார்!

 

இஸ்ரவேல் சரித்திரத்தில் 'தனித்துவ தலைவராக' அவர்களுக்கு மோசே விளங்கினார்! அதுபோலவே 'தனித்துவ தீர்க்கதரிசியாக' எலியா விளங்கினார். ஆனால் இரண்டு தலைவர்களோ அல்லது இரண்டு தீர்க்கதரிசிகளோ சேர்ந்து ஊழியம் செய்வதும், அல்லது ஒருவருக்கொருவர் ஐக்கியத்தைக் கட்டுவதும், இவ்வாறு தேவனுடைய ஊழியத்தை இணைந்து செய்வதை, இஸ்ரவேலில் எங்கும் நாம் கண்டதில்லை.அதுபோன்ற ஐக்கியம் புதிய உடன்படிக்கையில் மாத்திரமே உண்டு! இதுவே “புதுரசம் புது துருத்தியில்” வைக்கப்பட வேண்டும் என்ற தாற்பரியமாய் இருக்கிறது.

 

பழைய உடன்படிக்கையில், இஸ்ரவேலர்கள் தங்கள் தங்கள் ஜீவியத்தையும், தங்கள் தங்கள் குடும்பங்களையும் பராமரித்துக் கொள்வதையே பொறுப்பாய் எடுத்துக்கொண்டார்கள். அதாவது, அவர்களில் சிலர் பரிசுத்தமாயிருந்தால், மற்றவர்களோடு ஐக்கியமாயிருப்பதில்லை. “ஐக்கியம்” (Fellowship) என்ற வார்த்தை பழைய உடன்படிக்கையில் காணப்படவில்லை.

 

அவர்கள் ‘தனியாய் அலைந்து திரிகிறவர்களாய்' இருந்தார்கள். அவர்களில் சிலர் ‘தேவனுடைய ஊழியத்தை' செய்வதற்கும் விருப்பமாயிருந்தார்கள். ஆனால் அவர்களோ'ஒரு சரீரமாய்' ஒருவரோடு ஒருவர் ஐக்கியத்தை கட்டுவதற்கோ அல்லது ஒரு சரீரத்திலுள்ள அவயவங்களைப்போல் சேர்ந்து ஊழியம் செய்வதுமில்லை! ஏனென்றால், பழைய உடன்படிக்கையின் கீழ் ஒரு சரீரமாய் அவர்கள் இருந்திட முடியாது! அவர்கள் “ஆராதனை கூடுகைக்கு” உரியவர்கள் மாத்திரமே!

 

புதுரசம்! புதுதுருத்தி!

 

ஆனால் இப்போதோ, நம் கர்த்தரால் ‘புதிய உடன்படிக்கை' ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. நாம் மறுபடியும் பிறந்தவுடன், 'கிறிஸ்துவின் ஜீவனாகிய புதுரசத்தை பெற்றுக் கொள்கிறோம். இந்த ஜீவியம் ‘பழைய துருத்தியில்' ஒவ்வொருவரும் அனுபவித்து வாழ்வதற்கான சிலாக்கியம் தரப்படவில்லை! ஸ்தல சபையிலுள்ள மறுபடியும் பிறந்த விசுவாசிகளோடு ஐக்கியத்தை நாடாமல், நம்மையும் குடும்பத்தையும் மாத்திரமே மனதில் கொண்டு ஒரு சுய நல ஜீவியத்தை வைத்துக் கொண்டே...... கிறிஸ்துவின் ஜீவனோடு தங்களை சேர்த்துக்கொள்ள விரும்பினார்கள். இயேசு எச்சரித்ததைப்போல், நம்முடைய சொந்த ஜீவியம் ‘பழைய துருத்தியை' கிழிந்துபோகச் செய்திடும்!

 

தேவன் நம்மை 'புது ரசமாகிய பரிசுத்தாவியினால் நிறைத்து, அந்த ஜீவியம்* கிறிஸ்துவின் சரீரமாகிய' புது துருத்தியில் வார்த்து வைக்கப்படவே  விரும்புகிறார்!

 

தேவன் எனக்குள் செய்ததை நான் காண்கிறபடியால், நம்மில் ஒவ்வொருவரும் ‘இந்த ஜீவியத்திற்குள்’ பிரவேசிப்பதற்கு நம்பிக்கை உண்டு என நான் நிச்சயத்திருக்கிறேன். நான் ஒரு 'ஆராதனை கூடுகையில் இருந்தபடியால்' என் ஜீவியம் அனைத்தும் சிதறிப்போனது.... ஆகிலும் கர்த்தர் எனக்கு இரங்கினார்! அச்சமயத்தில் தேவன் என்னோடு பேசி “நான் என்னுடைய புதுரசத்தை உன்னுடைய புதிய துருத்தியில் வார்த்து வைத்திட இடம் தருவாயா?” என கேட்டார். அதற்கு என்னை இசைந்து கொடுத்தேன்! பழைய துருத்தி ‘சிதறிப்போனது' எனக்கு நல்லதாயிருந்தது. அதன் மூலமாய், பழைய துருத்தியை என்னைவிட்டு அகற்றினேன். இச்சமயத்தில்தான், என்னுடைய விசுவாசத்தை பூமிக்குரியவைகளின் மேல் வைத்திருந்ததையும், அந்த விசுவாசத்தை பரத்தின்மீது வைத்திருக்கவில்லை என்பதையும் உணர்ந்தேன்! சபையைக் கட்டுவதற்கு, என்னுடைய விசுவாசத்தை மனுஷீக பாரம்பரியங்களின் மீதும் என் சொந்த அபிப்பிராயங்கள் மீதும் வைத்திருந்ததையும் கண்டேன்.

 

அநேக கிறிஸ்தவர்களுக்கு 'வெளித்தோற்றமானவைகளே' தேவனைப் பற்றிய தியானமாயிருக்கிறது. அவர்கள் சபையின் எல்லா கூட்டங்களுக்கும் செல்வார்கள், ஜெபிப்பார்கள், பக்தியுடன் அமர்ந்திருப்பார்கள்! அவர்கள்  அனைவரும் ஆவிக்குரிய மொழிகளையே பேசிக்கொள்வார்கள். அப்படி ஒரு வெளித்தோற்ற கிரியை, அவர்கள் தங்களை ஆவிக்குரியவர்கள் என எண்ணிக்கொள்ள வைத்துவிட்டது. நீங்கள் அவர்களிடம், அன்றாட ஜீவியத்தின் நடைமுறை காரியங்களை பேசிக்கொள்ள முடியாது. ஏனெனில் அதுபோன்ற சம்பாஷணைகள் “ஆவிக்குரியவை அற்றது போலவும் உலகத்திற்குரியது போலவும்”கருதப்படும். அவர்கள் எப்போதும் 'மதபூர்வ ஆவிக்குரிய விஷயங்களையே பேசிக்கொண்டிருக்க முடியும். நம்முடைய அன்றாட சாதாரண விஷயங்களைப் பேசிக்கொள்வதை தடைசெய்யும் கிறிஸ்தவம், ஒரு போலியானதே ஆகும்!

 

இயேசு தன்னுடைய சீஷர்களோடும் ஜனங்களோடும் பேசிய சமயங்களில், எப்போதும் பழைய ஏற்பாட்டு வசனங்களையே கோடிட்டு காண்பித்துப் பேசவில்லை. அவ்வசனங்களை தேவையான நேரங்களில் மாத்திரமே அவர் பேசினார்! உதாரணமாக, அவர் சாத்தானோடு பேசும் போதும்! பரிசேயர்களுக்கு பதில் கூறும்போதும்! பேசினார். ஆனால், அநேக சமயங்களில் தன் சீஷர்களிடம் சாதாரண அன்றாட விஷயங்களையே பேசிக்கொண்டிருந்தார். அவர் ஒருபோதும் இயல்புக்கு மாறாகவோ அல்லது மாயமான ஆவிக்குரிய தன்மையைவைத்தோ பேசவில்லை. இவ்வாறாக 'புதுரசம்' என்ன என்பதை நடைமுறையாய் நமக்கு காண்பித்துள்ளார். நம்மை சுற்றியுள்ளவர்களிடம் ‘ஆவிக்குரிய பாஷைகளைப் பேசிக்கொண்டு, அதே போன்ற பாஷைகளை பேசும் மற்றவர்களோடு சேர்ந்து, நாமும் சபையை கட்டி

கொண்டிருப்பதாக ஒரு பொய்யான தோற்றத்தைக் கொடுத்து முடியும்! ஒருவருக்கொருவர் வசனங்களை நாம் கூறிக்கொள்ளவும், அந்த வசனங்களில் பெற்ற விளக்கங்களை கூட்டங்களில் பகிர்ந்து கொள்வதும் .... ஒரு ஆவிக்குரிய தன்மையாக நாம் எண்ணிக்கொள்ள முடியும். இவ்வித ஈடுபாடு, 'ஆத்தும ஜீவியத்திற்கே' நம்மை கொண்டு செல்லும்!

 

கோதுமை மணி, நிலத்தில் விழுந்து சாகவேண்டும்

 

இந்நாட்களில் ‘மெகா-சபைகள்' என அழைக்கப்படும் ஆயிரம் ஜனங்களாய் கூடும் 'ஆராதனை கூடுகையை' சற்று சீர்தூக்கிப் பாருங்கள். அந்த ஆயிரங்கள் மத்தியில் ‘இரண்டு ஜனங்கள் கூட' ஒருவரோடு ஒருவர் பக்தியான ஐக்கியம் கொண்டிருக்கமாட்டார்கள். அங்குள்ள, கவர்ந்து இழுக்கும் ஆத்துமத்திற்குரிய இன்னிசையாலும், குதூகலமடையச் செய்யும் நல்ல பிரசங்கங்களாலும் மாத்திரமே ஈர்க்கப்பட்டிருப்பார்கள்.

 

இது யாதொன்றும், கிறிஸ்துவின் சரீரத்திற்குரிய வடிவம் அல்ல! இந்த ஆராதனை கூடுகைக்குரியவர்கள் 'செங்குத்து மரங்களாய்' தனிப்பட்டவிதத்தில் 'தேவனோடு மாத்திரமே' வைத்திருக்கும் தங்கள் உறவை சிந்திப்பவர்கள்! இது ஒரு வஞ்சகம்..... ஏனென்றால், இங்கு 'ஒரு குறுக்குமரம்' இல்லாதபடியால், அங்கு சிலுவை இல்லை!!

 

இயேசு கூறும்போது “ஒரு கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்” என்றார் (யோவான்.12:24). நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும் பலன், ஒரு கோதுமை மணி ‘தனக்குத்தானே மரிக்கும்' கிரியையிலிருந்தே உண்டாக முடியும்! இதற்கு மாறாக 10,000 தனித்தனியான கோதுமை மணிகளை ஒரு கவர்ச்சியான தங்க பாத்திரத்தில் வைத்திடமுடியும். உலகிலுள்ள யாவர் கண்களுக்கும், அது கவர்ச்சியாய் தோன்றும்! அதுபோலவே பெரிய ‘மெகா-சபைகளில்' அடுத்தடுத்து நெருக்கமாய் உட்கார்ந்திருக்கும் ஆயிரமான ஜனங்களை நீங்கள் ஒப்பிட்டுக் காணலாம்! இந்த ஆயிரங்களில், இரண்டு கோதுமை மணிகள் தங்களுக்கு தாங்களே மரித்து, ஒருவருக்கொருவர் ஐக்கியமாய் கட்டப்பட்டிருந்தால், எத்தனை நலமாயிருக்கும்! அப்படி இருந்தால், அந்த மீதியானவர்களைக் கொண்டு, தேவன் கிரியை செய்து, அவர்களைச் சுற்றியுள்ள முழு உலகத்திற்கும் 'கிறிஸ்துவின் சரீரத்தை' மெய்யாகவே வெளிப்படுத்தி காண்பித்திருப்பார்.

 

ஒரு திரள் கூட்டமான ஜனங்கள் நம் சபையில் கூடி வராமல், சபையை தேவன் காத்து இரட்சிப்பாராக! இந்த கூட்டத்தார், நிலத்தில் விழுந்து மரிப்பதற்கு விருப்பமில்லாத 'கோதுமை மணிகளாகவே' இருப்பார்கள். நிலத்தில் விழுந்து மரிக்க ஆயத்தமாயிருக்கும் ஒரு கோதுமை மணியை வைத்தே தேவன் எப்போதும் துவங்குகிறார். அதன்பின்பே மற்றொன்றை சேர்க்கிறார். அதன்பின்பு மற்றொன்று, அதன்பின்பு மற்றொன்று.... என சேர்த்துக் கொண்டே போகிறார். இவ்வாறாகவே சபையானது “கிறிஸ்துவின் சரீரமாய் கட்டப்பட்டு” உலகிலிருக்கும் பசியுள்ள ஆத்துமாக்களை போஷித்திட வலிமை பெறுகிறது! ஆனால், நிலத்தில் விழுந்து சாகாத கோதுமை மணிகள், ஒரு மெய்யான அப்பத்திற்கு பதிலாய் 'அப்பத்தின் சித்திரத்தை வைத்து' பாசாங்கு செய்து, பசியினால் வாடும் தேவையுள்ள ஜனங்களை ஏமாந்து போகச் செய்வார்கள்! ஆனால் 'ஒரு கோதுமை மணி' நிலத்தில் விழுந்து மரித்திருந்தால்கூட, அது அதிகமான பலனை நிச்சயமாய் கொடுத்திருக்கும்! என இயேசு கூறினார்.


ஒரு கோதுமை மணியை உங்கள் இரண்டு விரல்களுக்கு நடுவே வைத்துப் பார்த்தால், மிகச்சிறியதாயிருக்கும்! அதுபோலவே, சில இடங்களில் கூடிவரும், மற்றவர்களால் அறியப்படாத ‘சிறுகுழுவினர்' மற்ற கிறிஸ்தவ குழுக்களாலும், சபைகளாலும் அசட்டை செய்யப்பட்டு புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கலாம்! அதனிமித்தம் சோர்ந்து போகாதிருங்கள்! உங்களைச் சுற்றியுள்ள பெரிய ‘மெகா சபைகளில்' பிரபல்யமான பாஸ்டர்கள் தங்கள் ஊழியத்தின் கவர்ச்சி அறிக்கைகளை வெளியிட்டு, ஆடம்பரசம்பாத்தியங்களை சேர்த்து வைத்து, பகட்டான கார்களில் பவனி வரக்கூடும்! அதை எல்லாம் அவர்கள் வைத்துக் கொள்ளட்டும், அவர்களில் ஒருபோதும் பொறாமை கொள்ளாதீர்கள்! நம்முடைய அழைப்போ ‘நிலத்தில் விழுந்து மரிப்பது' மாத்திரமேயாகும். கர்த்தர் நம்மிடமிருந்து பெறும் பலனே, நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்! நமக்கு அவர் தரும் வாக்குதத்தம் இதுவே! ஒரு மெய்யான சபையைக் கட்டுவதற்குரிய இரகசியமும், இதுவேயாகும்!

அதிகாரம் 5
ஜன சங்கம் ....

ஜனசங்கம், ஆராதனை கூடுகைக்கு நேர்மாறாயிருக்கிறது. ஆராதனை கூடுகையில் வெவ்வேறு அளவிலான செங்குத்து மரங்கள், அதாவது “சிலர் அதிகமாகவோ, சிலர் குறைவாகவோ” தேவனோடு தியானம் வைத்திருப்பவர்கள் ஒரே இடத்தில் கூடி வருகிறார்கள். ஆகிலும் அவர்களில் ஒருவருக்கொருவர் ஐக்கியம் இருப்பதில்லை!

 

'ஜன சங்கத்தில்' இருப்பவர்கள், ஒருவருக்கொருவர் அக்கறைக் கொண்ட ஜனங்களால் உண்டாக்கப்பட்டிருக்கும். இதுவே, ஒரு மிகப்பெரிய அபாயமாய் மாறுகிறது! இவர்கள், தங்களைச் சுற்றியுள்ள ஆராதனை கூடுகையாளர்களை தங்களோடு ஒப்பிட்டு “நாம் இப்போது ஒருவர்மீது ஒருவர் அக்கறை கொள்ளக்கடவோம்” என தங்களுக்குள் கூறிக்கொள்கிறார்கள்.

 

ஆகவே, ஒருவருக்கொருவர் இதமாய் பேசிக் கொண்டு, தங்களுக்குள் ஒரு நல்ல ஐக்கியம் இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். இவ்வாறு இருந்து கொண்டு, நம்மை ஆவிக்குரியவர்களாக எளிதில் எண்ணிக்கொள்ள முடியும்.

 

ஏனெனில், உபதேச ரீதியாய் எல்லோரும் ஒன்றையே சிந்திப்பதும், ஒரே விதமாய் உடை உடுத்துவதும் இன்னும் இதுபோன்ற பல வெளிப்புற காரியங்களை 'ஒரே விதத்தில்' வைத்திருப்பதை ஆவிக்குரிய ஐக்கியம் என எண்ணி வஞ்சிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இன்னமும் குறுக்கு வசமான ‘மரத்துண்டுகளாகவே' இருக்கிறார்கள். எல்லா மரத்துண்டும் ஒரே தனித்தனி அளவின்படியான வார்ப்பில் வெட்டப்பட்டு அடுக்கி வைக்கப்படுகிறார்கள்!

 

ஜனசங்கம் ‘எந்த உடன்படிக்கை இல்லாத' ஓர் மதமாயிருக்கும்

 

நாம் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் குறுக்குவச உறவின் முக்கியத்துவத்தை, தவறாய் புரிந்து கொள்ளும்போது, நாம் அடைந்திடும் மிகப்பெரிய அபாயமே, இந்த 'ஜனசங்கம்' (Club) ஆகும்.



நம்மோடு சேரும்படி மற்றவர்களை அழைத்து, நம்மைப் போல் இருக்கவும்; நம்மைப்போல் பேசவும்; நம்மைப்போல் கிரியை செய்யவும் அவர்களிடம் எதிர்பார்க்கத் தொடங்குவோம். இவ்வாறாக, நாம் “ஓர் ஜன சங்கமாய்” உருவெடுத்து, எல்லோரும் ஒரே விதத்தில் “பிஸ்கட் கட்டிங்- கிறிஸ்தவர்களாய்” ஒரே உருவத்திலும், அளவிலும் சேர்த்து வைக்கப்பட்டிருப்போம்! இப்போது நம்முடைய ஐக்கியத்தின் உறவு, எல்லோரும் ஒரே வித ‘மார்க்க சம்பந்த பாஷைகளை' பேசிக்கொள்கிறோமா என்ற அடிப்படையில் மாறிவிடும்!

 

பல்வேறு சமுதாயம், பல்வேறு பாஷை கொண்ட ஜனங்களோடு இவர்களால் ஐக்கியம் பெற்றிருக்க முடியும்..... ஏனெனில், அவர்களும் 'தங்களைப்போல் அறிவுத்திறனை' ஒரேவிதமாய் பெற்றிருக்கிறார்கள் என்பதே காரணம். ஆனால், கல்வித்திறனோ அல்லது உபதேசதிறனோ இல்லாத ஒரு சகோதரன் அவர்களின் சபையில் சேர்ந்தால்...... அவனோடு இசைந்து ஐக்கியப்பட இவர்களுக்கு கடினமாயிருக்கும். ஆகவே, அதுபோன்ற ஒருவனை தள்ளி வைத்தே ஜீவிக்கிறபடியால்.... முடிவில் அவன் அந்த 'ஜன சங்கத்தை' விட்டு விலகிப்போகிறான். ஏனெனில், அவர்களுடைய வார்ப்பிற்குள் அவன் பொருந்தவில்லை என்பதே காரணமாகும். இதுபோன்ற ஜன சங்கமாயிருக்கும் 'ஒரு ரசத்துருத்தி' பழைய உடன்படிக்கையாகவும் இருப்பதில்லை! அல்லது புதிய உடன்படிக்கையாகவும் இருப்பதில்லை! சுருக்கமாய் அவர்களிடம் 'எந்த உடன்படிக்கையும்' காணப்படுவதில்லை!

 

‘ஆராதனைகூடுகை' பழைய உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டதாகும். அவர்களிடம் தேவனைப் பற்றியிருக்கும் தியானம் கொஞ்சமிருக்கும்.... ஆகிலும், ஒருவரோடொருவர் ஐக்கியம் இருப்பதில்லை. இவர்களுக்கு எதிர்ப்பாகவே, ஒரு குறைவான பக்தியை வைத்துக்கொண்டு, 'எந்த உடன்படிக்கையும் இல்லாத' ஜீவியத்தில் முடிவடைகிறவர்களே'ஜன சங்க' (CLUB) கிறிஸ்தவர்கள்! இன்று அநேக கிறிஸ்தவர்கள் இவ்வாறாகவே இருக்கிறார்கள்: “தேவன் தங்களை பழைய உடன்படிக்கையிலிருந்தும் பிரமாணங்களிலிருந்தும் விடுதலை செய்தார்” என கூறிக்கொண்டு 'எந்த உடன்படிக்கையும் இல்லாத' கதியை அடைகிறார்கள்.

 

இதுபோன்ற ஜனங்கள், பவுல் கலாத்தியருக்கு எழுதிய நிருபத்தை அதிகம் விரும்புவார்கள். அதிலுள்ள போதகத்தை தவறாய் புரிந்து கொண்டு “பிரமாணங்களிலிருந்து தாங்கள் விடுதலை பெற்றதாக கூறி” எந்த பிரமாணத்தையும் விரும்பாத மக்களாய் போய் விடுகிறார்கள்!

 

ஆனால், உடன்படிக்கை ஏதுமில்லாமல் “கிறிஸ்துவோடு திருமணம் இல்லை!" எனவே, ஒரு உடன்படிக்கையில் பிரவேசித்த பின்பே, நானும் என் மனைவியும் திருமணம் செய்து கொண்டோம்!

 

திருமணத்திற்கென்று ஒரு சட்ட திட்ட புத்தகம் இல்லை! ஆகிலும், அன்பின் அடிப்படையில் சில பிரமாணங்கள் உண்டு. உதாரணமாக: தேவனுடைய கிருபையை கொண்டு, என்னுடைய மனைவியை நான் ஒருபோதும் வஞ்சிப்பதில்லை! இது எந்த ஒரு திருமண சட்ட புத்தகத்திலிருந்தும் “நீங்கள் திருமணமானவுடன் இதை செய்யகூடாது அல்லது அதை செய்ய வேண்டும்” என கூறப்படவில்லை. நான் என் மனைவியை நேசிக்கிறபடியால், என் மனைவிக்கு உண்மையாயிருக்கிறேன்! அவளை நேசிக்கிறபடியால், யாதொரு தீங்கும் அவளுக்கு நான் ஒருபோதும் செய்ய விரும்புவதில்லை. நாம் கிறிஸ்துவை மணந்து கொள்வதும், இந்த அன்பின் அடிப்படையிலேயே சில பிரமாணங்களை நாம் பெற்றுக் கொள்கிறோம். “அவர் என்னை முந்தி அன்புகூர்ந்தபடியால்” என்பதும் “நான் அவரை முழு இருதயமாய் நேசிக்கிறபடியால்” என்பதுமே அந்த அடிப்படையாயிருக்கிறது!

 

ஜன சங்கத்திலோ, அநேக சட்டங்கள் உண்டு! ஒரு ஜன சங்கத்தில் (Club) ஒரு அங்கமாய் நீங்கள் மாறவேண்டுமென்றால், அநேக விதிகளை நிறைவேற்ற வேண்டும். அந்த விதிகள் தேவனுடைய பிரமாணங்களுக்கு அப்பாற்பட்ட “வெறும் மனுஷீகப் பிரமாணங்களே” ஆகும்!

 

நீங்கள் தேவனோடு ‘எந்த பிரமாணமும்' இல்லாதவர்களாயிருந்தால், மற்றவர்களோடு கொண்ட ஐக்கியத்தில் 'உங்கள் சொந்த உடன்படிக்கையை' நீங்கள் ஏற்படுத்த வேண்டியிருக்கும். அதன்படி “என் முதுகை நீ சொறிந்தால், உன் முதுகையும் நான் சொறிந்து விடுவேன்! நீ என்னிடம் நயமாய் நடந்து கொண்டால் நானும் உன்னை நயமாய் நடத்துவேன். ஆனால், நீ என்னிடம் நயமாய் நடப்பதை நிறுத்திக் கொண்ட அதே நேரத்தில், உன்னோடு கொண்ட ஐக்கியத்தை நிறுத்திக் கொள்வேன்” என்பதாகவே இருக்கும். அநேக விசுவாசிகள் பிறர்மீது கொண்டிருக்கிற ஐக்கியம் 'இந்த நிலையில்தான்' இருக்கிறது.

 

ஜன சங்கம் (CLUB), இன்னும் அதிகமான பூமிக்குரிய சிலாக்கியங்ளையும் உங்களுக்குத் தந்திடும். நீங்கள் “சபை கான்ப்ரன்ஸ்” பங்கு பெறலாம்! உங்கள் பிள்ளைகள் அங்கு கூடிவரும் பிள்ளைகளோடு உறவாடி ஆனந்திக்கலாம்! அங்கிருந்தே பெண் கொண்டும், பெண் கொடுத்தும் திருமணங்கள் செய்யலாம்! உங்கள் காலத்தின் முடிவில், ஒரு சிறந்த அடக்க ஆராதனையும் பெற்றுக்கொள்ளலாம்.... போன்ற சிலாக்கியங்களேயாகும்!

 

ஜனசங்க ஜீவியத்தின் முடிவு பேரழிவு

 

விசுவாசிகள், இதுபோன்ற நட்பை வைத்து கட்டப்படுவார்கள் என்றால், அவர்கள் குறுக்கு பலகைகளின் குவியல்களாய் இருப்பார்கள். அவர்களில் சிலர் கிறிஸ்துவோடு கொஞ்சம் தியானம் கொண்டிருப்பார்கள், ஆகிலும் அந்த செங்குத்து மரம் (தேவனோடு கொண்ட - உறவு) அதிகபட்சத்தில் சிறிய அளவாயிருக்கும்! காலாவட்டத்தில், செங்குத்து மரமே அங்கு காணப்படுவதில்லை.

 

நீங்கள் வெறும் 'ஒரு நல்ல கிறிஸ்தவ ஜன சங்கத்தில்' ஒரு பங்காயிருக்கிறீர்கள் என்பதை கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பின் நியாயஸ்தலத்தின் நாளில் ‘கண்டுணர்ந்து' அதிர்ச்சி அடையாதிருக்க கவனமாயிருங்கள்!

 

உங்கள் கணவனோ அல்லது மனைவியோ அல்லது வேறு யாரோ ‘உங்களை இழுத்து கொண்டு வந்ததினிமித்தம்' நீங்கள் ஒரு சபையில் சேர்ந்தீர்களா? அந்த சபையில் “ஜனசங்க-சூழல்” (CLUB) இருப்பதைக் கண்டும், அங்கு நீங்கள் நல்ல பிரசங்கங்களைக் கேட்கலாம் என்றும், நீங்கள் தேவையில் இருக்கும்போது மற்றவர்களின் உதவியை பெறலாம் என எண்ணியும் சேர்ந்தீர்களா?

 

ஒரு நல்ல போதகத்தை நீங்கள் கேட்கும்போது, அதை நீங்கள் நன்கு புரிந்து கொண்டதினிமித்தம், உங்களை ஆவிக்குரியவர்களாக எண்ணி எளிதில் வஞ்சிக்கப்படமுடியும். அதனிமித்தம் உங்கள் சபையின் போதகங்கள் மற்ற சபைகளின் போதகங்களை விட மிக உயர்ந்தது என! உங்களையே பாராட்டி மெச்சிக் கொள்ளமுடியும்.

 

அதே சமயத்தில் ஓர் செங்குத்து பலகையான “கிறிஸ்துவின் மீது கொண்ட தியானம்” உங்கள் ஜீவியத்தில், முற்றிலும் இல்லாததாயிருக்கும்! அப்படி இருந்தால் நீங்கள் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக “தேவனுடைய ராஜ்ஜியத்திற்கே புறம்பாய் வெளியே நிற்பதை” காணும் துயரத்திற்கு ஆளாவீர்கள்.

 

விமான நிலையத்தில் பாதுகாப்பு-தளம் உண்டு, அங்குள்ள பயணிகளின் பெட்டிகளை எடுத்துச் செல்லும் 'தானியங்கி-பெல்ட்டில்' (Conveyor Belt) பயணிகள் தங்கள் பெட்டிகளை வைப்பார்கள். அந்த பெட்டிகள் இழுத்து செல்லப்பட்டு, ஒரு பாதுகாப்பு- ஸ்கேன் வழியாய் சென்று அடுத்த பக்கத்திற்கு வரும். கிறிஸ்துவின் - நியாயாசனமும் இதுபோலவே இருக்கும் என நான் கற்பனை செய்து பார்த்தேன். ஆனால், இந்த ஸ்கேன் மிஷினைப் போல் இல்லாமல், அது ஒரு மிகப்பெரிய உலையாயிருக்கும். அதற்குள் தேவன் நம் முழு ஜீவியத்தின் கிரியைகளையும் ஒன்றன் பின் ஒன்றாய் அந்த உலைக்குள் அனுப்புவார். அதற்குள் சென்று அடுத்த பக்கத்திற்குள் வருவது, இந்த பூமியில் நம்முடைய ஜீவியத்தில் நாம் எவ்வாறு ஜீவித்தோம்? என்பதை பொறுத்தே உள்ளது. 1கொரி.3:13-15 வசனங்கள் கூறுகிறபடி “அநேக விசுவாசிகள் செய்த ஒவ்வொன்றும் எரிந்து போய்விடும்!” ஏனென்றால், அவைகள் அனைத்தும் மரம்,

வைக்கோல், புல்லினால் இருந்த கிரியைகளாயிருந்தது. இதுபோன்ற நிலையில், ஒன்றும் நலமுள்ளதாய் அடுத்த பக்கம் வருவதில்லை. நல்ல “சபைகளில்” பல வருடங்களாய் உட்கார்ந்து கேட்டவர்கள், பூமியில் வாழ்ந்த முழு ஜீவியமும் வீணாகிப் போனதே! என கண்டு கலங்குவார்கள்!

 

நல்ல சபைகளில் அமர்ந்து, பல வருடங்களாய் ஆச்சரியமான செய்திகளை‘சபையிலும், ஆன்-லைனிலும்' கேட்டவர்களைப் பார்த்து ஆண்டவர் கூறும்போது “உங்களுக்கு என்மீது தனிப்பட்ட அன்பின் தியான வாழ்க்கை இல்லாதபடியால் உங்கள் பூமிக்குரிய வாழ்க்கை வீணாகி போய் விட்டது. நான் உங்களை அறியேன்! நீங்களும் என்னை அறியவில்லை! நீங்கள் என்னோடு இசைந்து நடந்ததுமில்லை, உங்கள் சிலுவையை நீங்கள் ஒருபோதும் எடுத்ததுமில்லை!” என்றே கூறுவார். (மத்.7:22,23), அது, மிகப்பெரிய வருத்தத்திற்குரியதாயிருக்கும்.

 

பூரண பாதுகாப்பு, கர்த்தரிடத்தில் உண்டா அல்லது சபையில் உண்டா?

 

இந்த பூமியில், இயேசு கிறிஸ்துவின் சபையே அதிக மகிழ்ச்சி நிறைந்த ஸ்தலமாய் எனக்கு இருக்கிறது. இதை போலியாய் அல்ல, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து கூறுகிறேன். அது போலவே, பரிசுத்தவான்களின் ஐக்கியமும் அப்படி ஒரு மதுரம் என்றே கூறுவேன். ஆகிலும், நான் பரமபிதாவோடும் ஆண்டவராகிய இயேசுவோடும் கொண்டிருக்கும் ஐக்கியத்தைக் காட்டிலும், அவை யாதொன்றும் எனக்கு மேலானதல்ல! நான் இயேசுவோடும், பிதாவோடும் அனுபவித்து வாழும் ஐக்கியம், இந்த பூமிக்குரிய ஜீவிய காலம் முழுவதும் ஒருபோதும் துண்டிக்கப்படாது .... அது தொடர்ந்து நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும். இந்த ஐக்கியத்தின் அடிப்படையிலேயே நான் தேவ ஜனங்களோடு இன்றுவரை ஐக்கியம் வைத்திருக்கிறேன்!

 

ஜன சங்கத்தில் (Club) இருப்பவர்களோ, தங்கள் பாதுகாப்பை கர்த்தரிடத்தில் அல்ல! தங்கள் 'ஜனசங்கத்தில்' வைத்திருக்கிறார்கள். இவர்கள் 'தேவமனிதர்களின்' செய்திகளை கவனிப்பதில் தங்கள் பாதுகாப்பை கண்டுள்ளார்கள். இந்த ஆண்டு, நீங்கள் நூற்றுக்கணக்கான பிரசங்கங்களை கேட்டிருக்கலாம். ஆனால், அது ஒன்றும் உங்களை இயேசுவின் ஒரு உண்மை சீஷனாய் உருவாக்கிட இயலாது!

 

ஜனசங்கத்தில் குழுமியிருக்கும் விசுவாசிகள், தாங்கள் தொடர்ந்து சொகுசாயிருந்து, தங்கள் சொந்த வழியை பாதுகாத்துச் செல்ல எதிர்பார்க்கிறார்கள். ஆகவேதான், அவர்கள் தொடர்ந்து ‘விசேஷித்தவர்களாய்' நடத்தப்படாதிருந்தால், உடனே மனத்தாங்கல் அடைந்து விடுகிறார்கள். அவர்கள் மனுஷர்களிடமிருந்து கனத்தையும் அங்கீகாரத்தையும் நாடுகிறார்கள்! பொது இடங்களில், தங்களை 'எல்லோரும் காணும்படியாகவும்' மற்றவர்களால் 'இதமாய்' நடத்தப்படவுமே விரும்புகிறார்கள்.

 

அவர்களுக்கு ஓர் மூத்த சகோதரன் ஏதாவது ஒரு சமயங்களில் 'ஓர் திருத்துதலை கூறினால்', அவர்கள் உடனே மனம் புண்படுவார்கள்...... அதைத் தொடர்ந்து 'ஜன சங்கத்தை விட்டு வெளியே போய்விடுவார்கள்!

 

ஒரு தேவபக்தியான, வயது சென்ற சகோதரன் என்னை திருத்தும் போது, எப்போதாவது நான் மனம் புண்பட்டால் நான் ஒரு ‘ஜன சங்க கிறிஸ்தவன்' என்றே நிரூபிப்பதாக, ஆண்டவர் எனக்கு காண்பித்திருக்கிறார். என்னைச் சுற்றியுள்ள மற்றவர்கள், கிறிஸ்துவின் மெய்யான ஜீவியத்தை அனுபவித்து வாழ்பவர்களாயிருக்கலாம். ஆனால், அவர்கள் நடுவில் பல ஆண்டுகளாய் உட்கார்ந்திருந்த நான், கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கும்போது ‘நான் ஒரு நல்ல ஜனசங்கத்தின் அங்கத்தினராகவே இருந்ததை' வெளிப்படுத்துவார். ஆகவே எந்த திருத்துதல் அல்லது கடிந்து கொள்ளுதல் நிமித்தம் நான் மனம் புண்படாதிருக்க தேவன் உதவி செய்வாராக!

 

நம்மை நேசித்து, தேவனுடைய வார்த்தையை நமக்கு அன்போடு எடுத்துப் போதிக்கும் ‘தேவபக்தியான, வயது முதிர்ந்த சகோதரர்களை' மூப்பர்களாக தேவன் நமக்குத் தந்திருக்கிறார். தான் நேசிக்கும் பிள்ளைகளைத் திருத்த, தகப்பன்மார்கள் பிரம்பை கையாளுவதை, அவர்கள் அறிந்திருக்கிறபடியால், கண்டித்து திருத்த ஒரு போதும் தயங்கமாட்டார்கள். அதுபோன்ற சமயங்களில், அவ்வித பக்தியான வயது சென்ற சகோதரர்கள் கூறிய புத்தியினிமித்தம் “நீங்கள் முரட்டாட்டம் செய்தோ அல்லது மனம் புண்பட்டோ இருந்தால்” அதுவே நீங்கள் “ஒரு ஜனசங்க (CLUB) மனநிலை கொண்டவர்கள்” என்பதைக் காட்டும் அடையாளமாயிருக்கிறது!

 

இதில் தோன்றும் முடிவான விளைவு என்னவென்றால்: 'உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சி குன்றிப்போகும்' என்பதுதான்! உங்கள் ஜீவியத்தில் ஆவிக்குரிய வளர்ச்சி இல்லையென்றால், நீங்கள் பின்மாற்றம் அடைவீர்கள்! ஏனென்றால், கிறிஸ்தவ ஜீவியத்தில் 'தேங்கியிருக்கும் நிலை' என ஏதுமில்லை. ஒரு தேவபக்தியான மூத்த சகோதரன் கடிந்துகொள்ளும் வார்த்தைக்கு நாம் மனம் புண்படுவோமென்றால், நாம் நிச்சயமாய் பின்மாற்ற நிலைக்கு சென்று விட்டோம்!.... ஒருவேளை, அதுவே நம்மை நரகத்திற்கு கொண்டு செல்லும் பாதையாகவும் மாறிவிடும்!

 

நம் பரமபிதாவின் சிட்சையை நேசிக்கும்படி எபிரெயர்.12:5-8 நம்மை ஊக்குவிக்கிறது. ஏனென்றால், நம்மை நேசித்தே அவர் சிட்சிக்கிறார். அதுபோலவே, பவுலைப்போல தகப்பனின் இருதயம் கொண்ட சபையிலுள்ள மூப்பர்கள், “நாம் பின்மாற்றம் அடைந்து வீழ்ச்சி அடையாதிருக்க” அன்பினிமித்தம் நம்மை திருத்துகிறார்கள்! (1கொரி.4:15). அவர்களுடைய திருத்துதலினிமித்தம், நம் உள்ளத்தில் கோபம் கொண்டிருந்தால், நாம் ‘ஒரு ஜன சங்க மனதுடையவர்கள்' என்பதையே நிரூபிக்கிறோம்! இதன் விளைவாய், நமக்கே பேரிழப்பு ஏற்படும்!

அதிகாரம் 6
மெய்யான சபை. . .

புதிய உடன்படிக்கையில் ‘புதிது' என குறிப்பிட்ட அநேக வார்த்தைகள் உள்ளன. அவைகளில் யாதொன்றும் பழைய உடன்படிக்கையில் இல்லை. அதில் ஒரு வார்த்தைதான் “ஐக்கியம்”.

 

பெந்தெகொஸ்தே நாளில் 3000 ஜனங்கள் மறுபடியும் பிறந்து, ஓர் வல்லமையான எழுப்புதல் ஏற்பட்டபோது, அவர்கள் உடனே அடுத்த 10 நாட்கள் “எழுப்புதல்-கூடார கூட்டங்கள்” நடத்துவதற்கு தீர்மானிக்கவில்லை! ஆனால், இன்று ஜனங்கள் அதைத்தான் செய்கிறார்கள்! அதற்குப் பதிலாக “எழுப்புதல் கூட்டங்களை” மூடி விட்டு, சபையைக் கட்டும்படியே சீஷர்களுக்கு தேவன் கூறினார்! அப்போஸ்தலர். 2:42 - ல் “அவர்கள் அந்நியோந்நியத்தில் (Fellowship) உறுதியாய் தரித்திருந்தார்கள்” என்றே வாசிக்கிறோம். வேதாகமத்தில் 'ஐக்கியம்' என்ற வார்த்தை வருவது, இதுவே முதல் இடமாகும்! சங்கீதம். 55:14-ம் வசனத்தில் 'ஒருமித்து' அல்லது ஐக்கியம் என நாம் வாசிப்பது ‘ஒருமித்த ஆலோசனை' என்றே எபிரெய மொழி பெயர்ப்பு கூறுகிறது. கிரேக்க வார்த்தையாகிய கொயினானியோ மொழிபெயர்ப்பே ஐக்கியம் ஆகும். அதற்கு “ஒருவருக்கொருவர் பங்கிட்டு கொள்ளுதல்” என அர்த்தமாகும்.

 

சிலுவையில் பொங்கிடும் அன்பு

 

இந்த ஐக்கியமானது, சீஷர்கள் பரிசுத்தாவியில் நிறைந்ததினால்  ஏற்பட்ட ஐக்கியமாகும்! இன்று கிறிஸ்தவர்கள் பரிசுத்தாவியினால் தாங்கள் நிறைந்தோம் என்பதற்கு 'நான் அந்நிய பாஷைகளைப் பேசினேன்' என்றோ, அல்லது ஒரு வியாதியஸ்தருக்காக ஜெபம் செய்தேன், அவர் சுகமானார் என்றோ.... குறைந்தபட்சம் நான் ஜெபித்து ஒருவர் சுகமானார் என்றோ, அல்லது முன்பை விட இப்போது சரளமாய் பிரசங்கிக்கிறேன்”.... என்றெல்லாம் பலர் கூறுகிறார்கள்!




ஆனால் பெந்தெகொஸ்தே நாளில், அவர்கள் பரிசுத்தாவியினால் நிரப்பப்பட்டபோது, அந்த எழுப்புதல் கூட்டங்களிலிருந்து சென்ற விசுவாசிகள் "ஒருவருக்கொருவர் அந்நியோந்நியத்தில் கட்டப்பட்டார்கள்” என வாசிக்கிறோம் (அப்.2:42). நாம் பரிசுத்தாவியினால் நிறைந்ததற்கு இதுவே பிரதானமாய்' சம்பவித்திருக்க வேண்டும்.

 

1கொரிந்தியர்.12:13-ல் “எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்" வாசிக்கிறோம். இங்கு, சபையானது ஆராதனை கூடுகை! அல்லது ஒரு ஜன சங்கம்! என கூறப்படாமல் “ஒரு சரீரம்!" என்றே கூறப்பட்டுள்ளது. “நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயும் இருக்கிறீர்கள்” (1கொரி.12:27) என வாசிக்கிறோம்.

 

இந்த சரீரமே ‘சிலுவையின் அடிப்படையில்' கட்டப்படுகிறது. இந்த புதிய துருத்தியே “புதிய உடன்படிக்கை சபையாகும்”. ஆராதனை கூடுகை, பழைய உடன்படிக்கையின் கருப்பொருள்! ஆகிலும், ஜன சங்கமோ 'எந்த உடன்படிக்கையும் இல்லாதவர்கள்!' ஆனால் மெய்யான சபையோ, புதிய உடன்படிக்கையின் அடிப்படையில் கட்டப்படுவதாகும்!

 

இந்நாட்களிலோ 'உடன்படிக்கை' என்ற வார்த்தையை நாம் அதிகமாய் பயன்படுத்துவதில்லை! அதன் பொருள் என்னவெனில் “இயேசு கிறிஸ்துவின் சபையைக் கட்டும் மற்றவர்களோடு உடன்பாடு கொள்வதும், அதற்கு ஒப்புக்கொடுப்பதுமாகும்”. இந்த ஒப்புக்கொடுத்தல் முதலாவதாக ஆண்டவராகிய நம்முடைய மணவாளனோடும், அதன்பிறகு ‘ஒருவருக்கொருவர்' ஒப்புக்கொடுத்தலுமாகும்! இங்குதான், சிலுவையின் இரண்டு மரங்களை காண்பீர்கள் - ஒன்று செங்குத்துமரம்! இரண்டு, குறுக்கு மரம்! இவர்களே, முதலாவதாக ஆண்டவரையும், அதன்பிறகு 'ஒருவரையொருவரையும்' ஊக்கமாய் அன்புகூருவார்கள்!

 

இந்த சத்தியமே ஒரு ஸ்தலசபையின் “அப்பம் பிட்குதலில்” ஒரு அடையாளமாய் நிலைப்படுத்தப்படுகிறது. அதன் மூலமாய் நாம் கர்த்தரோடு கொண்டிருக்கும் ஐக்கியத்தை அறிவித்து, இயேசு செய்ததைப்போலவே, நம்முடைய சுயத்திற்காக நாமும் மரிக்க விரும்புகிறோம் (1கொரி.11:26-28), இதை ஆதாரமாய் கொண்டே அவருடைய சரீரத்திலுள்ள அவயவங்களாயிருக்கும் ஒருவரோ டொருவரும் நாம் ஐக்கியமாயிருக்கிறோம் (1கொரி.10:16,17). அதனிமித்தமே நாம் ‘ஒரே அப்பமாய்' இருந்தும், அதில் அநேகர் பங்கு பெறுகிறார்கள்!

 

நாம் ஒருவரோடொருவர் கொண்டிருக்கும் அன்பு, ‘ஒரு மனுஷீக அன்பு' அல்ல! அப்படி இருப்பவர்கள் “நான் உன்னை விரும்புகிறேன்! நீ என்னை விரும்புகிறாய்! நாம் இப்போது மகிழ்ச்சியான குடும்பம்” என்றெல்லாம் கூறிக்கொள்வது, அல்லவே அல்ல! அந்த அன்பு, ஆண்டவரிடமிருந்து பொங்கி வருவதாயிருக்க வேண்டும்!

 

இதே வழியில்தான், நம்முடைய மானிட அன்பு நம்மை உந்தி தள்ளி இழந்து போன மானிடருக்கு சுவிசேஷம் சொல்ல ஒரு மிஷனெரியாக புறப்படும்படி வைத்துவிடக் கூடாது! மாறாக, நாம் ஆண்டவர்மீது வைத்திருக்கும் பொங்கி வழியும் அன்பை வைத்தே, நாம் பிறருக்கு சுவிசேஷம் சொல்ல உந்தப்பட வேண்டும்!

 

“ஆண்டவர் மீது கொண்ட அன்பும், பிறர் மீது கொண்ட அன்பும்” இணைந்த அன்பையே பரிசுத்தாவியானவர் நம் இருதயங்களில் ஊற்றி இருக்கிறார் (ரோமர்.5:5).

 

மெய்யான சபையைக் கட்டுதல்

 

பரிசுத்தாவியின் மூலமாய் உண்டான பழைய உடன்படிக்கை ஊழியத்திற்கும், பரிசுத்தாவியின் மூலமாய் உண்டான புதிய உடன்படிக்கை ஊழியத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை, என் தந்தை சகரியா பூணன் அவர்கள் சித்தரித்து கூறியதை நான் கேட்டிருக்கிறேன்: பழைய உடன்படிக்கையில், மனுஷனுடைய இருதயம் ஒரு மூடி போட்ட பாத்திரம் போல் இருக்கிறது (அது, யூத ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்திலுள்ள திரைக்கு ஒப்பாகும்). பரிசுத்தாவியானவர் இந்த மூடியிட்ட பாத்திரத்தில் ஊற்றப்படும் போது, அது வழிந்து ஆசீர்வாத நதிகளாய் திரளான மக்களுக்கு பாய்ந்து ஓடுகிறது! அந்த ஊழியத்தை, மோசே, யோவான்ஸ்நானகன் மற்றும் பல தாசர்கள் மூலமாய் தேவன் செய்தார்!

 

ஆனால் புதிய உடன்படிக்கையில், அந்த மூடி இப்போது திறக்கப்பட்டு விட்டது (2 கொரி.3:12-18). (இது, இயேசு மரித்தபோது ஆலயத்தின் திரைச்சீலை கிழிக்கப்பட்டதற்கு ஒப்பாயிருக்கிறது). இப்போது, மகா பரிசுத்தஸ்தலத்தின் வழி திறக்கப்பட்டு விட்டது. இப்போது, பரிசுத்தாவியானவர் ஊற்றப்பட்ட உடன், முதலாவது நம்முடைய பாத்திரத்தை நிரப்புகிறார் - ஒரு விசுவாசியின் இருதயத்தையே முதலாவதாக சுத்திகரிக்கிறார். அதன் பிறகு, "அவன் உள்ளத்திலிருந்து” திரளான ஜனங்களுக்கு ஆசீர்வாதம் புரண்டோடுகிறது! இதை இயேசு யோவான். 7:37-39 வசனங்களில் விளக்கியுள்ளார். இவ்வாறாகவே, புதிய உடன்படிக்கை சபை கட்டப்படுகிறது. நாம் இன்னமும் ‘பரிசுத்தாவியை' மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதற்காகவே பயன்படுத்த முயற்சித்தால்..... ஒரு ஆராதனை கூடுகையை! அல்லது ஒரு ஜன சங்கத்தை! மாத்திரமே நாம் கட்டுவோம். ஆனால் அவருடைய அன்பு' முதலாவதாக நம் இருதயங்களில் ஊற்றப்பட தேவனுக்கு ஒப்புவித்திருந்தால், நம்முடைய உள்ளத்திலிருந்து பரிசுத்தாவியானவர் மற்றவர்களுக்குப் பாய்ந்தோடுவார்! அப்போது, இதே ஐக்கியத்தின் ஆவியைக் கொண்ட மற்றவர்களோடு சேர்ந்து, நாம் சபையை கட்ட முடியும்! தேவன்மீது கொண்ட அன்பும், பிறர்மீது கொண்ட அன்பும் நம் இருதயங்களில் பாய்ந்தோடி..... நாம் ஒவ்வொருவரும் சிலுவை எடுப்பதினால் உண்டாகும் 'உண்மையான ஆவியின் ஒற்றுமை கட்டப்படும்!

 

உண்மையாய் கூற வேண்டுமென்றால், ஒரு மெய்யான சபை பிரதானமாய் ஒருவரைவிட்டு ஒருவர் விலகி நிற்கும் வேளையில்தான் ஏற்படுகிறது! அதாவது நாம் ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களில் ஒன்றாய் கூடிவரும் நேரத்தில் கட்டப்படுவது அல்ல. நாம் பரிசுத்தாவியின் வரங்களின் மூலமாய் கட்டப்படுவது உண்மைதான் என்றாலும்... நாம் வலிமையாய் கட்டப்படுவதெல்லாம் ஒருவருக்கொருவர் விலகி நிற்கும் வேளையில்தான்! ஏதாவது ஒரு வகையில் நாம் நேர்மையில்லாமல் இருப்பதற்கோ, கோபப்படுவதற்கோ அல்லது கண்களினால் இச்சிக்கப்படுவதற்கோ போன்றவைகளால் நாம் சோதிக்கப்படும் நேரங்களில்தான், நாம் இயேசுவின் சபையில் பங்காய் இருக்கிறோமா? என்பதை நிரூபித்திட முடியும். இதுபோன்ற சோதனைகளில், நம்முடைய சிலுவையை எடுத்து, நம் சுயத்திற்கு மரித்து, ஆண்டவர் மீது கொண்ட தியானத்தை பாதுகாத்து கொண்டு.... பாவத்தை எதிர்த்து, ஒளியில் நடந்தால், ஆண்டவரோடு ஐக்கியம் கொண்டிருக்க முடியும்! அதன் பிறகே நாம் ஒருவரையொருவர் சந்திக்கும் வேளையில் “ஒருவரோ டொருவர் மெய்யான ஐக்கியத்தை வைத்திருக்க முடியும்” (1யோ.1:7).

 

நம்முடைய இருதயங்கள் “அன்பினால் பின்னப்பட்டு (இணைக்கப்பட்டு)” என கொலோ.2:2 கூறுகிறது. என்னை நானே பிறரோடு அன்பில் பின்னப்பட இயலாது. பரிசுத்தாவி மாத்திரமே "இருதயங்களை இணைத்து பின்னப்படும் செயலை" செய்திட முடியும்! ஆகிலும், மனுஷீக வழியில் என் இருதயத்தை உங்களோடு பின்னுவதற்கு முயற்சித்து, அன்பளிப்புகள் கொடுத்து அல்லது உங்களோடு கூடி பேசி.... போன்ற காரியங்களை நான் செய்வேன் என்றால், நான் ஒரு 'ஜன சங்கத்தை மாத்திரமே' கட்ட முடியும். ஆனால் தேவனோ “உன் சுயத்திற்கு மரித்துவிடு” என்றே கூறுகிறார்.

 

தேவன் கூறியபடி நான் செய்தால், என்னைப்போலவே தங்கள் சுயத்திற்கு மரிப்பவர்களைக் கொண்டு..... யாரும் காணாத விதத்தில், அதிசயமான வழியில், ஸ்தல சபையில் அவர் வைத்திருக்கிற மற்றவர்களோடு என் இருதயத்தை பின்னும் வேலையை பரிசுத்தாவியானவர் செய்திடுவார்!

 

இவ்வித நிலையில் நம்முடைய ஐக்கியம் ருசிகரமாய் மாறிக்கொண்ட இருக்கும்! நாம் ஒரே உபதேசங்களை விசுவாசிப்பதாலோ அல்லது ஒரே பாடல்களைப் பாடுகிறதாலோ அல்ல! மாறாக, நம்முடைய சுய-ஜீவியத்திற்கு நிலத்தில் விழுந்து மரிப்பதினாலேயே இந்த ஐக்கியம் ஏற்படுகிறது! பரிசுத்தாவியின் மூலமாய், நாம் ஒருவரோடொருவர் ஐக்கியமாய் இணைகிறோம்!

 

நாம் சுயத்திற்கு மரிக்காமல், நமக்குள் வைத்துக்கொள்ளும் ஐக்கியம், வெறும் நட்பாக மாத்திரமே இருக்கும்! மெய்யான கிறிஸ்தவ ஐக்கியமாய் இருக்காது! ஐக்கியம் ஆவிக்குரியது! நட்போ பூமிக்குரியது!

 

இந்த உலகத்திலுள்ள ஜனங்கள் நட்பு வைத்திருக்கிறார்கள்! உலத்தில் காணும் திரளான ஜன சங்கங்களின் (Clubs) அங்கத்தினர்கள் நெருங்கிய நட்பை ஒருவருக்கொருவர் வைத்திருப்பார்கள்! ஒருவருக்கொருவர் ஆழமான அக்கறை கொண்டிருப்பார்கள்! ஆனால் அவர்களிடமோ “மெய்யான ஐக்கியம்” ஒருபோதும் இருப்பதில்லை. அது ஏனென்றால், அது ஒரு ஆவிக்குரிய கிரியை! அதை பரிசுத்தாவியானவர் மாத்திரமே நம்முடைய ஜீவியத்தில் கிரியை செய்திட முடியும். தேவன் தன்னுடைய பிள்ளைகளில் ஒருவன் “இயேசுவின் மரணத்தை தன் சரீரத்தில் சுமந்து வருவதை" காணும் போது, அவனுக்கு மிக அபூர்வமான “இயேசுவின் ஜீவனை” பரிசாக வழங்குகிறார் (2கொரி. 4:10,11). இரண்டு விசுவாசிகளுக்குள் காணப்படும் இந்த “இயேசுவின் ஜீவன்” மெய்யான ஐக்கியத்தை அவர்களுக்குள் கொண்டு வருகிறது! இதுபோன்ற ஜனங்களை வைத்தே, தேவன் தன்னுடைய புதிய உடன்படிக்கை சபையைக் கட்டுகிறார்.

 

இந்த சத்தியங்கனை நான் காண துவங்கியபோது, நான் கர்த்தரை பார்த்து “ஆண்டவரே, உம்முடைய மெய்யான சபையைக் கட்டுவதற்கு விரும்பும் ஜனங்கள் எங்கே?” என கேட்பதை நிறுத்தி விட்டேன். ஏனென்றால், நான் முதலாவது நிலத்தில் விழுந்து சாவதற்கு ஆயத்தமாயிருந்தால் “தேவனே அவர்களைக் கண்டறிந்து கூட்டிச் சேர்ப்பார்” என்பதை உணர்ந்தேன். நான் மரித்திட மறுத்தால், தேவன் அவர்களை என்னோடு சேர்த்திட மாட்டார்!

 

நம்மைச் சுற்றிலும் உள்ள 'முழு இருதயமான விசுவாசிகளை' கண்டுபிடிக்க முயற்சிப்பது, “வைக்கோல் படப்பில் ஊசிகளை” கண்டு பிடிக்க முயற்சிப்பதற்கு ஒப்பாகும். அந்த வைக்கோல் குவியலில் கிடக்கும் 'மெல்லிய ஊசிகளை' எடுப்பதற்கு பல வருடங்களாய் நாம் தேடலாம்.... ஒருவேளை பல வருடங்களுக்குப் பிறகு ஒரு ஊசி கிடைக்கலாம்! ஆனால் ஆண்டவரோ “இந்த ஊசிகளுக்காக உன் நேரத்தை வீணடிக்காதே! அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்! நீ நிலத்தில் விழுந்து உன் சுயத்திற்கு மரித்துவிடு, அது போதும்” என்றே கூறுவார். இச்சமயத்தில் வெளிப்படும் “இயேசுவின் ஜீவன்” ஒரு வல்லமையான காந்தமாய் தோன்றி, அந்த முழு இருதயம் கொண்ட சீஷர்களை (அந்த ஊசிகளை) தம்மண்டை இழுத்துக் கொள்வார்! (யோவான்.1:4; 12:32).

 

ஒரு தேவபக்தியான ஜீவியத்தை நாடி, புதிய உடன்படிக்கை சபையைக் கட்ட விரும்பும் பிற விசுவாசிகள் 'நீங்கள் அறிவிக்கும் சிலுவை உபதேசத்திற்கும், உங்களிடத்திற்கும்' ஈர்க்கப்படுவார்கள். இதுவே தேவனுடைய வழி! முழு இருதயமானவர்களை நம்மோடு சேர்க்கிறார். “பிதாவானவர் எனக்கு கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்” என்றே யோவான். 6:37-ம் வசனத்தில் இயேசு கூறினார். அவருக்குச் செய்ததை, பிதா நமக்கும் செய்வார்!

 

நம் தனிப்பட்ட தியாக அஸ்திபாரத்தின் மேல்

 

எரேமியா.3:14-ம் வசனத்தில் ஆண்டவர் கூறும்போது “நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டு பேருமாக தெரிந்து, உங்களை சீயோனுக்கு அழைத்துக் கொண்டு வந்து, உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன்” என கூறினார். இது எவ்வளவு வசீகரமான ஓர் வாக்குதத்தம்!

 

இவ்வாறு “தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற மேய்ப்பர்களை” நீங்கள் கண்டடைந்து விட்டால், 'ஒரு உண்மையான சபைக்கு' நீங்கள் வந்துவிட்டதை அறிந்து கொள்ளலாம்!

 

அந்த மூப்பர்களை கனம் செய்திட கற்றுக்கொண்டு, அவர்கள் உங்களைத் திருத்தும்போது, ஒருபோதும் மனம் புண்பட்டு விடாதீர்கள்! ஏனென்றால், அவர்கள் உங்களை தேவ பக்திக்கு நேராக நடத்துவதற்கே வாஞ்சிக்கிறார்கள். எபேசியர்.5:25, 27 கூறுகையில் “கிறிஸ்து சபையை அன்புகூர்ந்து .... தம்மைத் தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்” என கூறுகிறது. ஆகவே, சபையைக் கட்டுவதற்கு ‘தனிப்பட்ட தியாகம் இல்லாமல்' வேறொரு வழி இல்லை! இயேசு வானத்திலிருந்து இந்த பூமிக்கு இறங்கி வந்ததே, மிகப்பெரிய தியாகமாயிருக்கிறது. அவர் தன்னுடைய பரம சொகுசுகளை, தியாகம் செய்து 'ஏழ்மையில்' வாழ்ந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக ‘தன்னையே கொடுத்து விட்டார்!

 

கிரயம் ஏதுமில்லாமல், ஒரு புதிய உடன்படிக்கை சபையை நீங்கள் கட்டி விட முடியும் என ஒருபோதும் எண்ணாதீர்கள்! சபையைக் கட்ட விரும்பி, பணத்தையோ அல்லது தனிப்பட்ட சௌகரியத்தையோ தியாகம் செய்திட விரும்பாதவர்கள், ஒரு ஆராதனை கூடுகை அல்லது ஒரு ஜன சங்கத்தை மாத்திரமே கட்டுவார்கள்! ஒரு மெய் சபை, தியாகம் இல்லாமல் கட்டப்பட முடியாது. கிறிஸ்துவோ சபை கட்டப்படுவதற்கு 'தன்னையே' கொடுத்து விட்டார். அவ உய சபையைக் கட்டுவதற்கு, நாமும் அவரோடு உடன் ஊழியனாய் இணைய வேண்டுமென்றால், நம்முடைய முழு - சுயத்தையும் இழந்து விட வேண்டும்!

 

ஒருவன் தன்னை முழுவதும் பரிசுத்தாவியின் நிறைவுக்கு ஒப்புக்கொடுத்து, சிலுவையின் வழியில் நடந்தால்..... ஒரு சாதாரண, ஒன்றுக்கும் பயனில்லாத நபரைக் கூட 'தன் சபையைக் கட்டுவதற்கு' கர்த்தர் பயன்படுத்த முடியும்!

 

உங்கள் கண்களுக்கு, நீங்கள் ஒரு சாதாரண சிறிய நபராயிருந்தால், இன்று தேவன் உங்களோடு பேசுவது என்னவென்றால்: “நீ ஒரு சிறிய பயனற்ற கோதுமை மணி! நீ போய், நிலத்தில் விழுந்து மரிப்பாயாக” என்றே கூறுவார். அப்போது, உங்கள் மூலமாய் தேவன் செய்திடும் அற்புதத்தை நீங்கள் காண்பீர்கள். இன்று உங்கள் கண்க ள் காணாததை! இன்று உங்கள் சிந்தையால் எண்ண முடியாததை! இனி வரும் நாட்களில் தேவன் உங்களுக்காகவும், உங்கள் மூலமாகவும் செய்வதை காண்பீர்கள் (1கொரி.2:9). ஆனால் நீங்கள் அவரை அன்புகூர்ந்து 'அவருடைய அழைப்பை' எப்போதும் கவனித்து கேட்பவர்களாய் இருந்திட வேண்டும். இந்த புத்தகத்திலும் ‘அவருடைய அழைப்பின் தொனி' இருப்பதைக் கேளுங்கள்!

அதிகாரம் 7
கொடுக்கிறவனே' சபையை கட்டுகிறான்.

“மனுஷகுமாரன் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும், தம்முடைய ஜீவனை கொடுக்கவும் வந்தார்” (மத். 20:28),

 

இயேசு இந்த பூமியில் வாழ்ந்த போது, ‘அவருடைய சபை' மிகச் சிறியதாய் இருந்தது! அதிலிருந்த பன்னிரண்டு பேர்களில், ஒருவன் காட்டி கொடுக்கிறவனாய் மாறினான். ஆனால் மீதம் இருந்த 11-பேரும் தங்களுக்குரிய யாவையும் வெறுத்து விட்டு, இயேசுவை பின்பற்றிய உண்மை சீஷர்களாய் இருந்தார்கள்! அதன் விளைவாய், அவர்கள் பரிசுத்தாவியால் நிரப்பப்பட்டவுடன் இந்த உலகத்தையே தலைகீழாய் மாற்றுகிறவர்களாயிருந்தார்கள்.

 

'இதற்கு முன்பாக', அவர்கள் ஒருவருக்கொருவர் தர்க்கம் செய்தார்கள். ஒரு சமயத்தில், தான் சிலுவையில் அறையப்படப் போவதை இயேசு அவர்களிடம் கூறினார். சீஷர்கள் உடனடியாக 'ஒரு பூமிக்குரிய மனது கொண்ட மனுஷன்' செய்கிறதைப்போலவே, தங்கள் தலைவர் போனவுடன், அவருடைய ஸ்தானத்தில் யார் அடுத்த தலைவன்? என தர்க்கம் செய்யத் தொடங்கிவிட்டார்கள்! (மாற்கு. 9:31-34). சிறிது நாட்களுக்குப் பிறகு, தான் சிலுவையில் அறையப்படப்போவதையும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவேன் என்றும் இயேசு அவர்களிடம் மீண்டுமாய் கூறினார் (மத்தேயு.20:18-21). மறுபடியுமாய் சீஷர்கள், யாக்கோபு யோவான் தொடங்கி, அந்த உயர்ந்த ஸ்தானத்திற்கு தங்கள் விருப்பத்தை கூறத் தொடங்கி விட்டார்கள்! இயேசு மகிமைப்பட்டதை கண்ட அவர்கள், அதை தங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பமாக,

'எல்லோருக்கும் முன்பாக' தாங்களும் உயர்த்தப்பட விரும்பினார்கள். இயேசுவோ “தான் ஊழியம் கொள்ளும்படி வராமல், ஊழியம் செய்யவும் தம்முடைய ஜீவனை கொடுக்கவும் வந்தேன்” என பதில் கூறி விட்டார் (வச.28).

 

இந்த உலகத்தில், இரண்டு ரகமான ஜனங்கள் இருப்பதை இயேசு நமக்கு காண்பித்திருக்கிறார். தங்களை கிறிஸ்தவர்கள் என கூறிக்கொள்பவர்களிடம், ‘ஒரு ரகத்தினர் வாங்கி கொள்பவர்களாயும்', அடுத்த ரகத்தினர் கொடுப்பவர்களாயும்' காண்பிக்கிறார். இந்த உலகத்தின் ஆவியையுடைய கிறிஸ்தவர்கள், தங்களுடைய கிறிஸ்தவத்திலிருந்து எதை வாங்கிக் கொள்ளலாம்? என எப்போதும் எதிர்பார்க்கிறவர்களாய், இருக்கிறார்கள். இதுபோன்றவர்களே, ஆராதனை கூடுகை கிறிஸ்தவர்கள்! ஜனசங்க கிறிஸ்தவர்கள்! இதற்கு மாறாக, ஒரு மெய்யான சபைக்குரியவர்கள் ‘கொடுக்கிறவர்களாய்' இருக்கிறார்கள்.

 

பிரதானமாய் தாங்கள் தேவனுக்கு எதை கொடுக்கலாம்? அதன்பின்பு, மற்றவர்களுக்கு கொடுக்கலாம்? என்றே எப்போதும் காத்திருக்கிறார்கள். இயேசு இதை குறிப்பிட்டு, ‘கொடுப்பவர்களே' அதிக ஆசீர்வாதத்திற்கு உரியவர்கள்! என குறிப்பிட்டார் (அப்.20:35).

 

இந்த உலகத்தில் நீங்கள் எவ்வளவு அதிகம் 'உயர்ந்திருக்கிறீர்களோ' அவ்வளவு அதிகமாய் நீங்கள் பிறரால் சேவிக்கப்படவிரும்புவீர்கள். இந்த உலக அரசாங்கத்தின் அதிகாரிகள், தங்களை எப்போதும் சேவிக்கும் ஜனங்களை கொண்டிருக்கிறார்கள். அதற்கு மாறாக, நீங்கள் பரலோக ராஜ்ஜியத்தில் எவ்வளவு முன்னேறி செல்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாய் பிறரை சேவிப்பீர்கள்! இதை இயேசு நமக்கு போதித்தது மாத்திரமல்லாமல், தன் ஜீவியகாலம் முழுவதும் வாழ்ந்து காண்பித்தார்!

 

ஒரு சபையில் வாங்கிக்கொள்ள விரும்புகிறவர்கள்' எப்போதுமே தங்கள் தேவைகளை மற்றவர்கள் தரவேண்டும் என எதிர்பார்த்திப்பார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில், ஏதாகிலும் ஒன்றைக் குறித்து மனம் புண்பட்டு சபையை விட்டு வெளியேறுவார்கள்! இதற்கு மாறாக 'கொடுப்பவர்கள்’ ஏதாகிலும் ஒரு குறைவை அல்லது தேவையை காணும்போது, சபையின் குடும்பத்தில் அங்கமாயிருக்கும் அவர்கள், அந்த தேவையை பொறுப்பெடுத்துக் கொள்ளுவார்கள்! மேலும், “உண்மையுள்ள ஊழியராய்” நிலைநின்று, தேவனுடைய கிருபையின் மூலமாய், அந்த தேவைகள் பூர்த்தி செய்யப்பட பாடுபடுவார்கள்!

 

உதாரணமாய், உங்களுக்கும், ஸ்தல சபையிலுள்ள இன்னொருவருக்கும் இடையில் 'அன்பின் தாழ்ச்சி' ஏற்படும் போது, உங்கள் 'அன்பின் பாத்திரம்' வெறுமையாய் இருப்பதை உணருகிறீர்கள். இந்த இக்கட்டான நிலையில், பிரச்சனையை மற்றொரு சகோதரனுடையதாகக் கண்டு, உங்கள் பாத்திரத்தில் அவர் போதுமான அன்பின் உறவை ஊற்றவில்லை என கருத முடியும்! இதுவே'வாங்கி கொள்ளுபவர்களின்' மனநிலையாயிருக்கிறது. இதற்கு மாறாக 'கொடுக்கும் மனநிலை' உங்களிடம் இருந்தால், உங்கள் தாழ்ச்சியை தேவனுக்கு முன்பாக கொடுக்கிறவனே' சபையை கட்டுகிறான் நிறுத்தி, உங்கள் பாத்திரத்தில் நிரப்பும்படி தேவனிடம் ஜெபித்து கேட்பீர்கள்! அப்போது அவர், உங்கள் பாத்திரம் அன்பினால் வழிந்தோட நிறையச்செய்து, அதன்பின், உங்கள் ஜீவியத்தின் மூலமாய் உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அந்த அன்பை கொடுப்பீர்கள்!

 

2கொரிந்தியர். 9:6-8 வசனங்களில், தேவன் தம்முடைய கிருபையை நம்மீது சம்பூரணமாய் கொடுப்பதற்கே விரும்புகிறார் என வாசிக்கிறோம். இவ்வாறு இந்த வசனத்தை வாசிக்கும் போது, சுயநலமாய் நமக்கே அந்த கிருபைகளை சேர்த்து வைத்து கொள்ள எளிதாய் சிந்தித்திட முடியும். ஆனால், இந்த வசனங்களை நீங்கள் கவனமாய் வாசித்தால், தேவன் தம்முடைய அளவில்லாத கிருபையை, பிறருக்கு நன்மை செய்து கொடுப்பவர்களுக்கே தேவன் தருகிறார்! என்பதை நீங்கள் காணமுடியும் (வசனம்.8).

 

எபேசு சபையில் மூன்று வருடங்கள் ஊழியம் செய்த பவுல் கூறுவதைப் பாருங்கள். ஊழியம் செய்த கடைசி நாளில், அவர்களை விட்டுப் பிரியும்போது,

அங்குள்ள மூப்பர்களிடம் “தன் ஜீவியகாலம் முழுவதும், கொடுக்கிறவனாகவே அவர்கள் நடுவில் வாழ்ந்ததை” நினைப்பூட்டி பேசினார். பொருளாதார ரீதியாக சபையின் ஆதரவில் வாழ்வதற்கு முழு தகுதியை அவர் பெற்றிருந்தாலும், அதை அவர் மறுத்து விட்டார்! அவர் தன்னுடைய தேவைகளை மாத்திரமல்லாமல், தன்னோடிருந்த பிறருடைய தேவைகளையும் பூர்த்தி செய்தார். கொடுப்பவராய் இருந்த அவர்' அதை, அதிகபட்சமாய் கொடுக்கும்' மனநிலை கொண்டவராகவே இருந்தார்! ஆகவேதான், தேவன் அவரைக்கொண்டு 'சபையைக் கட்டுவதற்கு' அதிகபட்சமாய் பயன்படுத்தினார்!

 

இன்று அநேக ஜனங்கள் ‘கொடுப்பவர்களாய்' முன்வராததற்கு காரணம், அதற்கு அதிக தியாகம் செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். அதை இயேசு மத்தேயு.20:22,23 வசனங்களில் கூறும்போது “பாடுகளின் பாத்திரம்” என விளக்கியுள்ளார்! ஆகவே, தியாகத்தின் மூலமாக மாத்திரமே சபை கட்டப்பட முடியும்! நம்மைச் சுற்றியுள்ள சபையின் தேவைகளை காண்கிற நாம், தாகமுடன் தேவனிடத்தில் வரக்கடவோம்! நம்முடைய உள்ளத்தின் ஆழத்தில் தம்முடைய வல்லமையைக் கொண்டு நம்மை நிரப்பும்படி தேவனிடத்தில் கேட்கக்கடவோம்! இவ்வாறு, நம் உள்ளத்திலிருந்து பாய்ந்தோடும் ஜீவநதி, நம்மை சூழ இருக்கும் வறண்ட நிலத்தில் பாய்ந்து, சபையை கட்டுவோமாக!

அதிகாரம் 8
குற்றம் சாட்டுகிறவன்' சபையை இடித்துப்போடுகிறான்....

புத்தியில்லாத ஸ்திரீ, தன் கைகளினால் தன் வீட்டை இடித்து போடுகிறாள்” (நீதிமொழிகள்.14:1).

 

ஒரு வீடு 'இரண்டு வழியில்' இடிக்கப்பட முடியும் என வேதாகமம் கூறுகிறது. 1) உறுதியான அஸ்திபாரம் இல்லாமல் கட்டப்பட்ட புத்தியற்றவன் வீடு' புயலின் தாக்குதலில் இடிந்து விழும் (மத்.7:26,27). வீட்டிற்குள் இருக்கும் புத்தியில்லாத ஒருவன்' 'ஒவ்வொரு செங்கலாய் பிடுங்கி' வீடு இடியும் வரை செய்வதினால், விழுகிறது! (நீதி.14:1 - Message). 

 

சபையின் சரித்திரத்தையும், இன்றுள்ள உலகத்தையும் உற்று நோக்கும் போது, வெளியிலிருந்து வரும் தாக்குதலைவிட “சொந்த அங்கத்தினர்களால்” இடித்து அழிக்கப்படும் சபைகளே ஏராளம் உள்ளன. வெளியிலுள்ள சத்துவங்களைக் கொண்டு சபைக்கு சாத்தான் கொண்டு வரும் துன்பங்கள், சபையை இன்னும் பரிசுத்தத்தில் பாதுகாப்பதற்கே உதவி செய்திருக்கிறது. ஆகவேதான், ‘சபைக்குள் இருக்கும் கிறிஸ்தவர்களைக் கொண்டே அழிவின் கிரியை நடப்பதை' மனப்பூர்வமாய் சாத்தான் அனுமதித்து விடுகிறான்! ஆராதனை கூடுகையிலிருந்தும், ஜனசங்கத்திலிருந்தும் ஜனங்களைப் பிரித்தெடுத்து, “அந்த ஸ்தல விசுவாசிகள் மூலமாக 'தம்முடைய சபையை' தேவன் உருவாக்கிய போதும்"

 

சபைக்குள்ளேயேயிருக்கும் அங்கத்தினர்கள் சாத்தானுடைய கிரியைக்கு கைகொடுக்கிறபடியால் 'தேவனுடைய கிரியையை' இடிந்து விழச் செய்கிறான்!

 

ஒரு ஆவிக்குரிய சபையிலும் பிசாசானவன் வீழ்ச்சியைக் கொண்டு வந்து சாதிக்க முடியுமா? நிச்சயமாய் செய்திட முடியும்! தேவனுடைய சமூகம் நிறைந்த‘பரலோகத்திலேயே' அழிவின் கிரியை துவங்கி, அதை வெற்றிகரமாய் மூன்றில் ஒரு பங்கு தூதர்களை முரட்டாட்டத்திற்குள்ளாக ஈர்த்துக்கொண்டு, அவர்களை 'பொல்லாத ஆவிகளாய்' 'குற்றம் சாட்டுகிறவன்' சபையை இடித்துப்போடுகிறான் மாற்றியிருக்கிறான்! (வெளி.12:4). முதலாம் நூற்றாண்டு சபையும் இதுபோன்ற “கொடிய ஓநாய்கள் ரூபத்தில்” வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது (அப்.20:30). மேலும் சபையிலிருந்த கன்னானாகிய அலெக்சந்தர் மூலமாகவும், தியோத்திரேப்பு மூலமாகவும் அவருடைய சபை இடறுபாடுகளை சந்தித்திருக்கிறது! (2தீமோ.4:14,15; 3யோவான்.1:9,10).

 

வீழ்ச்சியை நாம் தவிர்த்திட, இதுபோன்ற பிரிவினைகள் மூலமாய் சபையை இடித்துப்போடும் கிரியைக்கு மூல ஆதாரத்தை நாம் அடையாளம் கண்டிருக்க வேண்டும். அதை, யாக்கோபு.3:13, 4:1 தெளிவாக விவரிக்கிறது. பிரிவினைக்கு மூல ஆதாரமாய் இருப்பது “சுயத்தை பிரியப்படுத்தும் இச்சைகளே” ஆகும் (4:1). இதுவே கசப்பின் பொறாமையாகவும், சுய நல நோக்கமாயும் உருவெடுக்கிறது! (3:14). முடிவில், சபைக்குள் இவைகள் பரவி, விரோதத்தையும் சகலவித துர்ச்செய்கையையும் உண்டாக்குகிறது! (3:16). ஆகவேதான் இருதயத்திலும் சிந்தையிலும் “ஒரு வேராக” தோன்றிடும் கசப்பை அகற்ற வேண்டும் என எபிரெயர்.12:15 எச்சரிக்கிறது. அப்படி இல்லையென்றால், அந்த கசப்பு பரவி அநேகரை தீட்டுப்படுத்தும்! (எபி.12:15).

 

நீதிமொழிகள்.14:1 - ம் வசனத்தின் அடிப்படையில் இரண்டு செயல்களே நமக்கு முன் உள்ளன. ஒன்று, நம் சபையை தீவிரமாய் கட்டப்போகிறோமா? அல்லது, சபையை இடித்து போடுவோமா? என்பதேயாகும். சபையை தீவிரமாய் கட்டும்பணி "அன்பை வைத்தே” செய்திட முடியும் (1கொரி. 8:1). அதன் பொருள், சபையிலுள்ள ஒருவரையொருவர் நாங்கள் நேசிக்கிறோம் என கூறுவதில் அல்ல, அதை நிஜமாகவே வாழ்ந்திட வேண்டும்! (1யோவான்.3:18). அந்த அன்பில் “மாயம்' இருக்கக்கூடாது! (ரோமர்.12:9). நம் அன்பின் தரம் இசைந்து போகாத சூழ்நிலைகளிலும், அல்லது விரோதமான நேரங்களிலும் குறிப்பாக சோதிக்கப்படுகிறது!

 

அச்சமயங்களில், நம் “சுய - ஜீவியத்தை” இயேசு செய்ததைப்போல் சபைக்காக இழந்து நம் உண்மையான அன்பை நிரூபித்திட வேண்டும் (எபே.5:25). மேலும் இயேசு நமக்காக செய்ததைப்போலவே, சபையிலுள்ள மற்றவர்களுக்காக நாம் வேண்டுதல் செய்ய வேண்டும்! (எபி.7:25).

 

வெளிப்படுத்தின விசேஷம்.12:10, பிசாசை “சகோதரர்களை குற்றஞ்சாட்டுகிறவன்" அழைக்கிறது. சபையிலுள்ள அங்கத்தினர்கள், மற்ற விசுவாசிகளை குற்றஞ்சாட்டும்போது ‘சபை இடிக்கப்படும் செயல்' பிசாசோடு சேர்ந்து நடைபெறுகிறது! இதைக்குறித்த சித்தரிப்பை சகரியாவின் ஜீவியத்தில் நாம் காண்கிறோம். ஒரு வாலிப தீர்க்கதரிசியாகிய சகரியா, பாபிலோன் சிறையிருப்பிலிருந்து திரும்பியவுடன், எருசலேமிலுள்ள ஆலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதற்கென, தேவனுடைய ஜனங்களை நடத்துவதற்கு அழைப்பை பெற்றிருந்தான். சகரியா.3:1-5 வசனங்களில் பிரதான

ஆசாரியனாகிய யோசுவா அழுக்கு வஸ்திரம் தரித்திருந்தான். சாத்தான் அவன் அருகில் நின்று, அவனை குற்றஞ்சாட்டினான்! கர்த்தர் யோசுவாவின் அழுக்கு வஸ்திரங்களை நீக்கிப்போடுவதற்கு முன்பாக, முதலாவதாக சாத்தானையே கடிந்து கொண்டார்! அதன் பிறகு யோசுவாவின் அழுக்கு வஸ்திரங்களை நீக்கிப்போட்டு, சிறந்த புது வஸ்திரங்களை அவனுக்குத் தந்தார்!

 

இவ்வித பரிவர்த்தனை நடந்த நேரத்தில் சகரியா எதற்கு அங்கே வருகிறான்? சகரியா குற்றஞ்சாட்டுவோர் பக்கமாய் நிற்கப்போகிறானா? அல்லது வேண்டுதல் செய்பவரின் பக்கம் நிற்கப்போகிறானா? என காண்பதற்கே அவன் பரீட்சிக்கப்பட்டான்!

 

“தேவனுடைய வீடு கட்டப்படுவதின் விளக்கத்தை” சகரியா நமக்கு காட்டுகிறார். யோசுவா சிறந்த புது வஸ்திரங்களால் உடுத்தப்பட்டவுடன், அவனை இன்னமும் அதிக மகிமைப்படுத்தும்படி, அவனுடைய தலையில் 'ஒரு பாகை' சூட்டப்பட வேண்டுகிறான்! இன்றும், நாம் சபையை தேவன் வாசம் செய்யும் ஒரு ஸ்தலமாய் கட்டுவதற்கு பிரயாசப்படும் போது, இதுவே நமக்கும் பரீட்சையாய் வருகிறது. இதற்கு மாறாக, பிசாசு நம்மை அவனுடைய “இடித்து தள்ளும் ஊழியத்திற்கு” பங்கு பெற நம்மையும் அழைத்து 'மற்றவர்கள் மீது குற்றம் சாட்டும்' சிந்தைகளை நம் இருதயத்தில் வேரூன்றச் செய்ய முயற்சிக்கிறான்! அப்படி அவன் செய்வதற்கு இடம் கொடுத்துவிட்டால், அது பரவி..... சபையிலுள்ள மற்றவர்களை புறங்கூறும்படிச் செய்து முடிவில் சபையை இடித்துப் பிளக்கிறான்!

 

இதற்கு நேர்மாறாக, “அவருடைய கட்டும் ஊழியத்திற்கே” நம்மை அழைக்கிறார்! இயேசு எப்போதும் செய்வதைப்போலவே, மற்றவர்களுக்காக விண்ணப்பம் செய்து, அவர்களை இன்னமும் அதிக மகிமையுள்ளவர்களாய் மாற்றும் ஊழியத்தை செய்திட அழைக்கிறார்! (எபி.7:25). பாவம் காணப்படும் இடத்தில்கூட, நம்முடைய இலக்கோ “நம் சகோதரனை ஆதாயப்படுத்துவதாகவே” எப்போதும் இருக்க வேண்டும் (எபி.18:15).

 

மெய்யாகவே இந்த ஜீவியம் எந்த சபையில் காணப்படுகிறதோ, அவர்களின் நடுவில் இயேசு இருப்பார்! அதனிமித்தம் அந்த சபை இருளின் சகல வல்லமைகள் மீதும் 'முழு அதிகாரம்' பெற்றிருக்கும்! (மத்.18:18-20).

அதிகாரம் 9
ஒரு மேய்ப்பனாயிருந்து' சபையை பாதுகாத்தல் ...

அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல இருந்தபடியால் அவர்கள் மேல் மனதுருகினார்” (மத்தேயு.9:36).

 

இந்த உலகத்திலுள்ள மிகுதியான அறுவடைக்கு, வெகு கொஞ்சமான வேலைக்காரர்களே இருப்பதாக, இயேசு கூறினார்! (மத்தேயு.9:37,38), ஆகிலும், அறுப்பிற்கு எஜமான் வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள் என இயேசு கூறினார். அநேக ஜனங்கள் இந்த வசனத்தை பயன்படுத்தி, சில சுவிசேஷ ஊழியங்களுக்கு துரிதமாய் செல்லும்படி அவர்களின் மனஎழுச்சியை தூண்டி விடுகிறார்கள். நாம் இந்த 36-38 ம் வசனங்களை கவனமாய் வாசிக்கும் போது, இயேசு யாரை“வேலையாட்கள்” என குறிப்பிட்டார் என்பதை காண்கிறோம்:

 

இயேசு திரளான ஜனங்களை நோக்கிப் பார்த்தபோது, ஜனங்களிடத்தில் குறைவான பிரசங்கிகளையோ அல்லது போதகர்களையோ காணவில்லை..... ஏனெனில், அநேக பரிசேயர்களும் வேதபாரர்களும் அங்கு இருந்தார்கள்! அங்கு கூட்டங்களுக்கு குறைவில்லை.... ஏனெனில், ஓய்வுநாள் அன்றும், மற்றுமுள்ள காலங்களிலும் ஜனங்கள் ஆலயத்தில் கூடிவந்தார்கள்! அற்புதங்களுக்கும் குறைவில்லை.... ஏனெனில், அவர்கள் நடுவே அவர் ஏராளமான அற்புதங்களைச் செய்திருக்கிறார்! “மேய்ப்பர்களே” அவர்களிடம் குறைவாயிருந்தார்கள்!

 

இன்றும் அதே நிலைதான் இருக்கிறது! நாம் வாழும் இந்தக்காலத்தில், வேதாகமோ அல்லது உபதேச போதகங்களோ ‘பிரிண்ட் புத்தக வடிவிலோ', ஆன்-லைன் மற்றும் ஸ்மார்ட்போன் மூலமாக ஆயத்த நிலையில் ஏராளம் தரப்பட்டிருக்கிறது. கிட்டதட்ட எல்லா சபைகளுமே, ஒரு வாரத்தில் பல்வேறு கூட்டங்கள் நடத்துகிறார்கள். ஆகிலும் தேவனோ, சுயத்தை விரும்பும் கடினமான இருதயத்தை உடைத்து, அதை மென்மையான மேய்ப்பனின் இருதயமாய் மாற்றும்படி, தேவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கும் தலைவர்களையே, அவர் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்!

 

அன்று எரேமியாவின் காலத்தில் 3:14,15 வசனங்களின் மூலமாக “சீயோனாகிய” (ZION) அவரது சபையின் இரண்டு முக்கியத்துவத்தை நமக்கு காண்பிக்கிறார்:

  1. அங்கு, வெவ்வேறு விதமான ஜனங்கள் பல்வேறு நகரங்களிலிருந்தும் குடும்பங்களிலிருந்தும் இருப்பார்கள்.

 

  1. அவருடைய சொந்த இருதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை அவர்களுக்குக் கொடுப்பார்!

 

அப்படியானால், “தேவனுடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மேய்ப்பன்” என்பதற்குரிய அர்த்தம் என்ன? ;

 

அதுபோன்ற ஒரு மேய்ப்பன், கிறிஸ்துவின் மனதுருக்கம் கொண்டிருப்பான்! அது, மனுஷீக அனுதாபத்தை விட மேலானது! பிசாசு, ஜனங்களை 'துன்புறுத்தி, வீழ்ச்சி அடையச் செய்ததை காண்பதினால்' தூண்டப்படும் ஒரு ஆவிக்குரிய எழுச்சியே, இந்த மனதுருக்கமாகும்! (மத்தேயு.9:36). இதன் பொருள் என்னவெனில், ஜனங்களின் சரீரத்திற்குரிய அல்லது மன எழுச்சிக்குரிய நன்மைகளை விட, சத்தியத்தை அன்போடு தைரியமாய் பேசி.... அவர்களின் ஆவிக்குரிய நன்மையில் அக்கறை எடுத்துக்கொள்வதேயாகும்!

 

அதுபோன்ற ஒரு மேய்ப்பன், “அசௌகரியப்பட' ஆயத்தமாயிருப்பான். இயேசுவின் முழு ஜீவியத்திலும், அவரை பிதா நடத்திச் சென்ற வழியெல்லாம் அவர் சென்றார். அந்த இடம், 100 மைல் நடந்து செல்ல வேண்டியிருந்தாலும், திறந்த வெளில் தூங்க வேண்டியிருந்தாலும், சாப்பிடுவதற்கு நேரமில்லாது இருந்தாலும்.... பிதா அனுப்பிய இடத்திற்குச் சென்றார். புகழ்பெற்ற ஆலய தலைவனுக்கோ அல்லது பெரும்பாடுள்ள ஒரு ஏழை பெண்ணிற்கோ யாதொரு பட்சபாதமின்றி' இயேசு கரிசனை கொண்டார் (மத். 9:18-22), “தன் சொந்த நலனை சிறிதுகூட எண்ணாமல்” இயேசு ஜீவித்து மரித்தார் என வாசிக்கிறோம் (ஏசாயா.53:8 - Message). உண்மையான மேய்ப்பர்கள், அவருடைய மாதிரியைப் பின்பற்றி அவரைப்போலவே ஜீவிப்பார்கள்.

 

அதுபோன்ற ஒரு மேய்ப்பன், சத்தியத்திற்கு ஒத்தவேஷம் தரியாது உறுதியுடன் நிற்பான். யூதர்கள் பாபிலோனிற்கு சிறைப்பட்டு அடிமையானபோது, தானியேல் என்ற ஒரு வாலிபன் “தேவன் நியமித்த தரத்தை இழந்து ஒத்தவேஷம் தரித்து விடக்கூடாது என்பதை, தன் இருதயத்தில் தீர்மானித்துக்கொண்டான்” (தானி.1:8), அவனுடைய அமைதியான தைரியம், அவனுடைய மூன்று நண்பர்களை வழி நடத்தி, அவர்களும் அவனோடு சேர்ந்து தைரியமாய் நின்றிடச் செய்தது! (தானி.1:11).

 

அதுபோன்ற ஒரு மேய்ப்பன், பரிசுத்தாவியோடு ஒரு பங்காய் இணைந்து, மற்றவர்களின் சந்தோஷத்திற்கும் அவர்களுடைய விசுவாசத்திற்கும் உதவுகிறவனாயிருப்பான்! இதை பவுல் விளக்கி கூறும்போது “நீங்கள் விசுவாசத்தில் எப்படி வாழுகிறீர்கள்? என்பதை அறிந்திட பாரம் சுமந்திடும் உங்கள் தோள்பட்டையை மறைவான சந்தேகத்தோடு ஆய்வு செய்ய உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரியாயிருக்கவில்லை! மாறாக, நாங்கள் உங்களுடைய பங்காளர்களாய், உங்களோடு சேர்ந்து சந்தோஷத்திற்கு சகாயர்களாய், கிரியை செய்கிறோம். நீங்கள் உங்கள் சொந்த விசுவாசத்தில் நிலைத்து நிற்கிறீர்கள்! எங்கள் விசுவாசத்தை கொண்டு அல்ல!” என விளக்கினார் (2கொரி.1:24 - Message).

 

அதுபோன்ற ஒரு மேய்ப்பன், ஆவிக்குரிய அதிகாரம் பெற்றவனாயிருப்பான். இந்த அதிகாரத்தை தேவன் மாத்திரமே முத்திரை செய்திட முடியும்! அப்படி ஒரு முத்திரை “இதோ உலகத்தின் அதிபதி (சாத்தான்)

வருகிறான், அவனுக்கு என்னுடைய ஜீவியத்தில், யாதொரு இடமும் இல்லை” (யோ.14:30) என்ற பின்னணியின் அடிப்படையிலிருக்கிறது!

 

அதுபோன்ற ஒரு மேய்ப்பன், தேவனுடைய இராஜ்ஜியத்திற்குரிய ‘பூரண சுவிசேஷத்தை' பிரசங்கிக்கும்படி எப்போதும் உந்தப்பட்டவனாயிருப்பான். அநேக பிரசங்கிகள், பிரபல்யமான தலைப்புகளைக் கொண்டு, கேட்பவர்களின் செவி பரவசமடைவதற்கே பேச விரும்புகிறார்கள் (2தீமோ.4:3, 4). இது போன்ற மனிதர்கள், மேய்ப்பர்கள் அல்ல! இதற்கு மாறாக பவுலோ, தன் அழைப்பில் மிகுந்த ஜாக்கிரதை கொண்டவராய், அவர்களுக்கு “தேவனுடைய முழு ஆலோசனைகளையும்” அறிவிக்காவிட்டால், அவர்களுடைய இரத்த பழி தன் கைமேல் வரும்!” என்றே கரிசனை கொண்டு கூறினார்.

 

அதுபோன்ற ஒரு மேய்ப்பன், ஆடுகளுக்காக தன் சொந்த ஜீவனை தருவான். அதன் பொருள் என்னவெனில், அவன் தன் ஆடுகளோடு முடிவுபரியந்தம் அச்சம் ஏதுமில்லாமல் தங்கியிருப்பான்! அவ்வாறு செய்வதற்கு தன்னுடைய முன்னுரிமையை இழப்பான்! தன் தேவைகள் தன் வசதிகள் அல்லது தன்னுடைய நிகழ்ச்சிகள் ஆகிய யாவையும் இழப்பதற்கு ஆயத்தமாயிருப்பான். இந்த மேய்ப்பனின் இருதயத்திற்கு நேர்மாறாக ‘ஒரு கூலிக்காரனை' இயேசு ஒப்பிட்டார்! அவனுக்கு ஏதாகிலும் அசௌகரியம் ஏற்பட்டால் அல்லது துன்பங்கள் வந்துவிட்டால் 'தன்னுடைய ஆடுகளைக் குறித்து அக்கறை இல்லாமல்' அவைகளை விட்டு விட்டு ஓடி விடுவான்! என குறிப்பிட்டார் (யோ.10:11-13), தன் உடன் ஊழியர்களின் ஜீவியத்தை பவுல் சோதித்து பார்த்தபோது, அவர்கள் எல்லோரும் “தங்களுக்கான ஆர்வத்தையே'

தேடினார்கள் என்பதை உணர்ந்தார். “தன்னைப் போன்ற மனதுடைய”தீமோத்தேயு மாத்திரமே ஒரு மேய்ப்பனின் இருதயம் கொண்டவன் என்றார்! அதனிமித்தம் “மந்தையின் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறவனாயிருந்தான்!” என கூறினார் (பிலி.2:19-21).

 

நமது காரியமாய் யார் போவான்?

 

பல வருடங்களுக்கு முன்பாக ஆண்டவர் என்னிடம் கேட்டதை நினைவுகூருகிறேன். நான் அடங்கியிருக்கும்படியான மேய்ப்பர்கள் யார்? என் ஆத்துமாவை விழிப்புடன் காத்து, என் ஜீவியத்தைக் குறித்த உத்திரவாதத்தை மகிழ்ச்சியுடன் கணக்கு ஒப்புவித்த அவர்களே என் மேய்ப்பர்கள்! என அறிந்தேன் (எபி.3:17). இந்த நல்ல மாதிரியை இயேசுவின் ஜீவியத்தில் நான் கண்டேன்! அவர் உண்மையுள்ளவராயிருந்து, யாரையெல்லாம் பிதா நியமணம் செய்தாரோ, அந்த ஒவ்வொரு அதிகாரத்திற்கும் அடங்கி இருந்தார்!

 

குறிப்பாய், அவருடைய முதல் 30 ஆண்டுகள் அதிகாரத்திற்கு அடங்கிஉண்மையுள்ளவராயிருந்தார். இதனிமித்தமே, ஒரு மெய்யான ஆவிக்குரிய அதிகாரத்தை இயேசு பெற்றார் (மத்.8:8, 9). இந்த அவருடைய ஆவிக்குரிய அதிகாரமே, அவர் இரத்தம் கசிந்திட அடிக்கப்பட்டபோது, அவரை பிலாத்திற்கு முன்பாக தைரியமாய் நிற்கச் செய்தது! தன்னிடம் உள்ள அதிகமான அதிகாரத்தை வைத்து பிலாத்து இயேசுவை அச்சுறுத்த முயற்சித்தபோது “பரத்திலிருந்து உமக்கு கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமும் இராது!” என சாந்தமுடன் அவரை கெம்பீரிக்கச் செய்தது!(யோவான்.19:10).

 

மேற்கண்ட வேத வாக்கியங்களில் உள்ள சத்தியங்களை நான் காணும்படி, என் இருதயத்தின் கண்கள் திறந்தபடியால், சபையாகிய சீயோனையும், அங்கு தேவன் எனக்குத்தந்த உண்மையான மேய்ப்பர்களையும் காணும்படி என்னிடத்தில் அக்கினி பற்றி எரிந்தது! அதன் பின்பே, இந்த பூமியிலுள்ள என்ன விலைக்கிரயமானாலும்,...அது உறவினர்களோ, என் வேலையோ ஆகிய எதையும் ஒரு பொருட்டாய் எண்ணாமல் கிறிஸ்துவின் சரீரத்தை கட்டுவதற்கு என்னை முழு இருதயத்தோடு ஒப்புக்கொடுத்தேன்!

 

ஏசாயாவிற்கு செய்ததைப்போலவே, என்னுடைய பாவங்களை எல்லாம் தேவன் கழுவி சுத்திகரித்து, என்னை உடைத்து “யாரை நான் அனுப்புவேன்? யார் நமது காரியமாய் போவான்?" என என்னிடம் கேட்டார் (ஏசாயா.6:8), ஊழியத்தில் ஏற்படும் எவ்வித கடின சூழ்நிலை எனக்குத் தோற்றமளித்தாலும், நானோ அதை ஒரு பொருட்டாய் எண்ணாமல், என்னை தேவனிடம் 2007 -ம் ஆண்டு ஒப்புவித்தேன்!

 

இன்று நீங்கள் தேவனுடைய அழைப்பைக் கேட்டு, ஆராதனை கூடுகை, ஜனசங்கமாகிய பாபிலோனிலிருந்து வெளியே வர இணங்கி அவருடைய சபையை' ஆவிக்குரிய ‘சீயோனிலே' கட்டுவதற்கு முன் வந்தால், நீங்களும் “இதோ, அடியேன் இருக்கிறேன்! என்னை அனுப்பும்!" என்றே தேவனுக்கு பதில் கூறுவீர்கள், ஆமென்!