"ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்" (மத் 3:9).
"வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத் 5:20).
பரிசேயர்கள் சீஷர்களை நோக்கி: "உங்கள் போதகர் ஆயக்காரரோடும், பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்ன? என்று கேட்டார்கள்" (மத் 9:11).
"பரிசேயர்களாகிய நாங்கள் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர்கள் உபவாசியாமல் இருக்கிறதென்ன?" (மத் 9:14).
பரிசேயர்கள் இயேசுவை நோக்கி: "இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே" என்றார்கள் (மத் 12:2).
"அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள் (மத் 12:10).
"பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணினார்கள்" (மத் 12:14).
"பரிசேயர்கள் அதைக்கேட்டு, இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல! என்றார்கள்" (மத் 12:24).
பரிசேயர்கள் அதைக்கேட்டு, "இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல" என்றார்கள் (மத் 12:24).
"நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்.... நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம் பண்ணாமல் போகிறீர்கள்" என்றார் (மத் 15:1-9).
அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: "பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா" என்றார்கள். அவர் பிரதியுத்தரமாக..... "அவர்களை விட்டுவிடுங்கள்" என்றார்" (மத் 15:12-14).
இயேசு பிரதியுத்தரமாக.... "அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே" என்றார் (மத் 15:14).
"நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" (லூக்கா 12:1).
பரிசேயர்கள் அவரைச் சோதிக்க வேண்டுமென்று அவரிடத்தில் வந்து: "புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா" என்று கேட்டார்கள்" (மத் 19:3).
"இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது" என்றார் (மத் 15:8).
"தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று…. ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிராதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு கோபமடைந்தார்கள்" (மத் 21:15).
"வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்" (மத் 23:2,3).
"அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்" (மத் 23:3).
"சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்" (மத் 23:4).
"பரிசேயர்கள் தங்கள் கிரியைகளெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்" (மத் 23:5).
"தங்கள் காப்புநாடாக்களை (வேத வாக்கியங்கள் பொறித்த சிறிய பை போன்ற சதுரங்களை நெற்றியில் அணிந்திருப்பார்கள்)அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி இருப்பார்கள்" (மத் 23:5).
"விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்: நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார்; நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்" (மத் 23:6-8).
"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்" (மத் 23:13).
"பரிசேயரே!.... விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்;" (மத் 23:14).
"மாயக்காரராகிய பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணுகிறபடியால்…. அதிக ஆக்கினையை அடைவீர்கள்" (மத் 23:14).
"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்" (மத் 23:15).
"குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். மதிகேடரே, குருடரே…. தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான்" (மத் 23:16-22).
"பரிசேயர்களே, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளை விட்டுவிட்டீர்கள்" (மத் 23:23).
"பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் நீங்கள் செய்திருக்க வேண்டும்...." (மத் 23:23).
"குருடரான வழிகாட்டிகளே, கொசுகில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள்" (மத் 23:24).
"பரிசேயரே!… போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது" (மத் 23:25,26).
"பரிசேயரே!.... நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து, எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்" (மத் 23:29,30).
"இதோ, தீர்க்கதரிசிகளையும்... உங்களிடத்திலே அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்" (மத் 23:34,35).
"யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்றோ?.... அதற்கு அவர்கள் தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி "மனுஷரால் உண்டாயிற்று" என்று சொல்வோமானால், "ஜனங்களுக்குப் பயப்படுகிறோம்", எல்லாரும் யோவானைத் தீர்க்கத்தரிசி என்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: "எங்களுக்குத் தெரியாது!" என்றார்கள் (மத் 21:25-27).
"பரிசேயர்கள் பொருளாசைக்காரர்கள்!" (லூக்கா 16:14).
"மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, இயேசு ஒரு உவமையைச் சொன்னார். இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன்.... அவன் நின்று; தேவனே! நான் மற்ற மனுஷரைப்போலவும், இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் என்றான்" (லூக்கா 18:9-11).
"அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்" (லூக்கா 18:9).
"மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, இயேசு ஒரு உவமையைச் சொன்னார்" (லூக்கா 18:9).
"அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்" (லூக்கா 18:14).
"தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன்...." (லூக்கா 18:11,12).
"அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை பரிசேயர்கள் அவரிடத்தில் கொண்டுவந்து... போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்... இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள்" (யோவான் 8:3-6).
இயேசு அவர்களை நோக்கி, "தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள்.... நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்: உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்" என்றார் (யோவான் 8:42,44).
இயேசு பரிசேர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்" என்றார் (யோவான் 8:44).
குருடனாய் இருந்து பார்வை அடைந்தவனிடத்தில் "முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ?" என்று சொல்லி அவனைத் தேவாலயத்திற்குப் புறம்பே பரிசேயர்கள் தள்ளிவிட்டார்கள் (யோவான் 9:34).
பரிசேயர்கள் "நாம் என்ன செய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே..." என்றார்கள். அந்நாள் முதல் அவரைக் கொலைச் செய்யும்படிக்கு ஆலோசனை பண்ணினார்கள் (யோவான் 11:47,53).
பரிசேயரில் சிலர்: "அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல" என்றார்கள் (யோவான் 9:16).
பரிசேயர்கள் இயேசுவை நோக்கி, "போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம்" என்றார்கள் (மத் 12:38).
பரிசேயர்கள், "வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள்" (யோவான் 7:49).
இயேசு பரிசேயர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினீர்கள்!" என்றார் (மாற்கு 7:9).
இயேசு பரிசேயர்களை நோக்கி, "நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது" என்றார் (லூக்கா 16:15).