தேவன் இயேசுவுக்கு செய்ததையே, நமக்கும் செய்வார்
(WHAT GOD DID FOR JESUS)
(1977 இல் எழுதப்பட்டது)
சுருதி: https://www.youtube.com/watch?v=4GhNR8LfqFY
பாரமும் கவலையும் அழுத்தும்போது
உங்கள் ஆத்துமா கலங்கும் வேளையில்
நீங்கள் பயப்படத் தேவையில்லை,
தேவன் உங்கள் அருகில் இருக்கிறார்!
குமாரனை நேசித்ததைப்போலவே உங்களையும் நேசிக்கிறார்
உங்களுக்கும் அவர் உதவி செய்வார்
அவருடைய வாக்குதத்தத்தை நம்புங்கள் போதும்
உங்கள் முழு ஜீவியத்தையும் பார்த்துக்கொள்வார்!
பல்லவி
தேவன் என்ன செய்வார்? இங்கே ஓர் நற்செய்தி!
அவர் இயேசுவுக்கு செய்ததையே, நமக்கும் செய்வார்
தமது சர்வ வல்லமையால் உங்களைப் பெலப்படுத்துவார்
அவர் என்ன செய்வார்? என விவரித்திட முடிவே இல்லை!
பாவமும் தீமையும் இந்த உலகை நிறைத்து
உங்களை மேற்கொண்டாலும்
இதோ தேவனுடைய வாக்குதத்தம் உண்மை....
“பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது”
சோதனையின் ஈர்ப்பு அதிகரிக்க, அதிகரிக்க
‘தேவனுடைய கிருபை’ உங்கள் தாபரம்!
ஆகவே, இயேசுவைப்போல் நடவுங்கள்!
நாள்தோறும் ஜெயித்து நடவுங்கள்!
துன்பம் வியாதியே உனக்கு நேரிட்டாலும்
உன் பிரியமானவர்களுக்கும் வந்து எட்டினாலும்
உன் பரிதபிப்பை தேவன் அறிவார்
சுகமளிக்கும் வல்லமையுடன் வருகைத் தருவார்.
உங்கள் தந்தை உங்கள் தேவையைத் தருவார்
அவர் மகா உண்மையுள்ளவர்
அவர் இயேசுவை காத்ததுப்போலவே
உங்களையும் காப்பார்!
ஓ, அது, ஒரு மகிமையான ஆறுதல்
அதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
“இயேசுவே உங்கள் ஆண்டவராக” அறிந்திடுங்கள்
உங்கள் மூத்த சகோதரனும் அவரே!
தேவனுடையதெல்லாம் இப்போது உங்கள் சொந்தம்
அவர் உங்களை கைவிடார்!
வல்ல தேவனே உங்கள் பட்சமிருந்தால்,
யார் உங்கள் எதிரியாக முடியும்?