என்னிடத்தில் பொறுமையாயிருங்கள்

எழுதியவர் :   Dr. ஆனி பூணன் வகைகள் :   மகளிர்
Article Body: 

ஒரு வேலைக்காரன், தன் உடன் வேலைக்காரனின் காலில் விழுந்து கெஞ்சியதே, "என்னிடத்தில் பொறுமையாயிரும்" என்ற வார்த்தையாகும் (மத்18:29).

ஒரு மனைவியாய், ஒருதாயாய் இருக்கும் நாம் ஒவ்வொருநாளும் இடைபடும் நமக்குரியவர்களிடமிருந்து எழும்பும் குரலே இந்த "மெளனமான கெஞ்சலாகும்". இந்த வார்த்தைகளால் கேட்கமுடியாத முறையீட்டை நாம் கேட்க வேண்டுமென்றால் நம்முடைய ஆவியில் மிகுந்த உணர்வுள்ளவர்களாய் இருக்க வேண்டியது அவசியமாகும்.

அது ஒருவேளை, நம் பிள்ளைகள் பாடங்களை மந்த நிலையில் கற்றுக்கொள்வதாயிருக்கலாம் நாமோ, அவர்கள் பாடங்களை திரும்பத்திரும்ப கற்றுக்கொடுக்க முயற்சித்து, அவர்களிடம் பொறுமையற்றிருக்க சோதிக்கப்படும் மனபாரத்திற்குள் தள்ளப்படக்கூடும். இவ்வேளையில் நம் பிள்ளைகளின், "என்னால் இயன்றவரை சரியாய் செய்வதற்கு முயற்சிக்கிறேன், தயவு செய்து என்னிடம் பொறுமையாயிருங்கள்" என்ற 'வார்த்தைகளில்' தொனிக்காத அவர்களின் கெஞ்சலை நாம் கேட்கமுடியுமென்றால், அவர்களிடம் நாம் எரிச்சலடையும் சோதனையை மிக எளிதில் மேற்கொண்டுவிடலாம்.

அல்லது, நம் வீட்டில் நமக்கு உதவி செய்யும் வேலைக்காரர் ஏந்த வேலையையும் ஒழுங்கின்படி செய்யாதவராகவும், நாம் விரும்புகிற அளவு சுத்தமில்லாமலும் இருந்தால் அதனிமித்தம் அந்த வேலைக்கார பிள்ளையிடம் கடினமாய் நடந்து கொள்ளுவதற்குநாம் சோதிக்கப்படலாம் ஆனால், அவளுடைய 'வார்த்தைகளில் தொனிக்காத' முறையீடோ , "என்னிடத்தில் பொறுமையாயிருங்கள், தயவுசெய்து இன்னொரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள் நான் எப்படியும் சரியாகிவிடுவேன்!" என்பதாகவேயிருக்கும். இந்த மௌன முறையீட்டை நம் செவி கேட்டு விட்டால் அடுத்த சந்தர்ப்பத்தில் அந்த வேலைக்காரப் பெண்ணிடம் மென்மையாய் நடந்து கொள்வதற்குரிய வாய்ப்பை நாம் பெற்றிட முடியும்

அல்லது, நம்முடைய வயதான பெற்றோர்கள் நம்மைச் சார்ந்து கொள்ளும் நிலையில் இருக்கலாம். இவர்களுடைய பெலவீனமான மௌனகூக்குரலும் "என்னிடத்தில் பொறுமையாயிருங்கள்... உனக்குத் தொந்தரவுதர எனக்கு விருப்பமில்லை இருப்பினும், உன்னுடைய உதவி எனக்கு இப்போது தேவையாயிருக்கிறதே!" என்பதாகவே இருக்கும். அவர்களுடைய உணர்வுகளுக்கு அக்கறை காட்டும் விழிப்புடையவர்களாய் இருந்தால் அந்தக் கூக்குரலை நாம் கேட்டு 'அவர்களுடைய கௌரவத்தைப்' பாதிக்காமல் அல்லது நம்மைச் சார்ந்து வாழும் வாழ்க்கையை சுட்டிக்காட்டாமல் நாம் அவர்களுக்கு உதவி செய்திடமுடியும்!

அல்லது, சபையில் உள்ள நம் சக-சகோதரிகள் நமக்குத் தொந்தரவாய் இருப்பது போலிருக்கலாம் அவர்களுடைய மௌனமான கூக்குரலும், "என் மீது இரக்கமாயிருங்கள்.... நான் எவ்வளவோ ஞானத்தில் குறைவுபட்டிருக்கிறேன்" எனக் கூறுவதாகவே இருக்கும் இதுபோன்ற சமயங்களில்தான், அவர்களும் நம்மைப் போலவே நிறைவானதைச் செய்திட போராடுகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

ஆனால், இதுபோன்ற சூழ்நிலைகளில் நாமும் அந்த இரக்கமற்ற வேலைக்காரனைப் போலவே நடந்து கொள்ள, நம் மாம்சம் தூண்டப்படுவதையே காண்கிறோம் இவ்வேளையில்தான், "நாம் எவ்வளவாய் தேவனால் மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும், நம் மதியீனத்தில் மற்றவர்கள் நம்மிடம் எவ்வளவு பொறுமையாய் இருந்திருக்கிறார்கள்" என்பதையும் பசுமையான உணர்வுடன் நாம் நினைவுகூற வேண்டும.

ஆகவே, நம் ஆவிக்குரிய செவிகள் "பொறுமையாய் இருக்கும்படி" முறையிடும் நம்மைச் சூழ்ந்துள்ளோரின் முறையீட்டை எப்போதும் கேட்கும்படியாய் விழிப்புடனிருக்க வேண்டும்!

"நீங்கள் ஒன்றிலும் குறையுள்ளவர்களாயிராமல், பூரணராயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது" (யாக்கோபு 1:4)