சபையில் தோன்றும் இணக்கமற்ற தன்மை!!

எழுதியவர் :   சகரியா பூணன் வகைகள் :   திருச்சபை தலைவர்
Article Body: 

ஆதி அப்போஸ்தலர் காலங்களில் கூட தேவஜனத்தின் மத்தியில் "இணக்கமற்ற தன்மை" (Disagreement) நிலவியிருந்தது. இதற்கு ஒரே காரணம், நம் மனது பூரணமற்றதும், பாவத்தால் மழுங்கியும் இருப்பதேயாகும். எனவேதான், நாம் தேவனையும் அவரது வழிகளையும் அறிந்துகொள்வதில் குறைவுள்ளவர்களாய் இருக்கிறோம். பவுல் கூறுவதுபோல "மங்கலாய், நிழல்போலவே நாம் காண்கிறோம்" (1கொரி 13:12). இதனிமித்தமே, நாம் அதை விளங்கிக் கொள்வதில் வித்தியாசங்கள் காணப்படுகிறது. ‘இந்த உண்மையை’ நாம் அனைவரும் எப்போதும் ஏற்றுக்கொள்ள தாழ்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும். இதனிமித்தம் ‘நாம் எப்போதுமே’ தேவனுடைய சித்தத்தை அறிந்து வாழ அறியாதவர்களாய் இருந்திடுவோம் என எண்ணத் தேவையில்லை.

நாம் முழு இருதயம் கொண்டு தேவனுக்கு கீழ்ப்படிய வாஞ்சித்து, வளர்ச்சியடையும்போது, "நாம் தேவசித்தத்தை அறிந்து கொள்வதும்" கொஞ்சம் கொஞ்சமாய் நிறைவான நிலைக்கு வந்திடமுடியும்.

மேற்கண்ட அடிப்படையிலான முதிர்ச்சியற்ற நிலையே முன்னின்று நடத்துபவர்களிடம் ஏற்படும் இணக்கமற்ற தன்மைக்கும், பிரிவினைகளுக்கும் காரணமாய் இருக்கிறது. இளம் அப்போஸ்தலர்களாய் ‘தேவனால் இணைக்கப்பட்ட குழுவாய்’ ஊழியம் செய்த பவுலும் பர்னபாவும், ‘ஒரு வாலிப உடன் ஊழியனை’ ஏற்றுக்கொள்ள ஏற்பட்ட வித்தியாசத்தில், ஒருவரையொருவர் பிரிந்தனர் (அப் 15:36-40). இவ்வாறு தங்களுக்குள் ஏற்பட்ட பிணக்கை தீர்த்துக்கொள்ள முடியாத அளவிற்கு, முதிர்ச்சியற்ற நிலையில் இருந்தார்கள். ஆகிலும், தேவன் அவர்களிடம் கிருபையாயிருந்து, அவர்களைத் தொடர்ச்சியாய் பயன்படுத்தினார்!

இவ்வாறு இருப்பினும், தேவஜனத்தின் மத்தியில் சிலசமயம் பிரிவினையும் ஏற்பட்டு விடுகிறது. "சபையில் தனக்கானதைத் தேடி, ஆளுகையை விரும்பும் சகோதரர்கள்" தங்கள் சொந்த இராஜ்ஜியத்தைக் கட்ட விரும்பும்போது, இவ்வித பிரிவினை ஏற்படுகிறது. பவுல் போனபிறகு, எபேசு சபை பல குழுக்களாய் சிதறிப்போனது. அது ஏனென்றால், தனக்கானதைத் தேடிய மூப்பர்கள் "சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி" நாடிய செயலே அதற்கு காரணம் என பவுல் குறிப்பிட்டார் (அப் 20:30). பவுலின் உடன் ஊழியனான தேமா இந்த பிரபஞ்சத்தின் மேல் ஆசைவைத்து, பவுலைவிட்டு விலகினார் எனவும் காண்கிறோம். அது, ஒருவேளை, பணமோ அல்லது மனுஷீக கனமோ அல்லது தன் இச்சைப்படி நடந்த வழியாகவோ இருந்திருக்கலாம்!! (2தீமோ 4:10). இன்றும், இதே கதிதான் சம்பவிக்கிறது.

கிறிஸ்துவ ஊழியர்களில் ஏற்படும் மாறுபட்ட கருத்துக்களில் பிரதானமாய் விளங்குவது 1. பண விஷயம். 2. சபை-தலைமைத்துவ விஷயம், ஆகிய இரண்டு பகுதிகளேயாகும்.

நாம் தேவனுடைய ஊழியத்திற்கு பணம் சேகரிக்கும்விதம் மிக முக்கியமான பகுதி என்றே கூறவேண்டும். ஏனெனில், இயேசு கூறும்போது, இந்த உலகில் தேவன் அல்லது பணம் ஆகிய இந்த இருவர் மாத்திரமே எஜமான்களாய் இருக்கிறார்கள் எனக் கூறினார் (லூக் 16:13). ஆகவே, தேவனுடைய ஊழியத்திற்கு பணம் திரட்டும் விதம், இயேசுவும் பவுலும் சேகரித்தவிதமாக மாத்திரமே இருந்திட வேண்டும். அது என்னவெனில், "அவர்கள் இருவரும், தங்கள் பரம தகப்பனை விசுவாசத்துடன் நம்பி, அவரிடம் மாத்திரமே தங்கள் பொருளாதாரத் தேவைகளை தெரியப்படுத்தினார்கள்!" அவ்வளவுதான்.

இன்று நாமும்கூட, நம்முடைய யாதொரு பணத்தேவைகளையும் எந்த மனுஷனுக்கும் தெரியப்படுத்தக்கூடாது. ஏனெனில், நமக்கு இருக்கும் பரலோகப்பிதா, மகா ஐசுவரியமுள்ளவர்! ஒரு கோடீஸ்வர பிரபுவின்மகன், யாரிடமாவது பணத்திற்கு கை ஏந்தினால், தன் கோடீஸ்வர தகப்பனுக்கு அவமானத்தையே கொண்டுவருவான். அதுபோலவே, நம் ஊழியத்திற்குரிய தேவையை மனுஷருக்குத் தெரியப்படுத்துவதும், தேவனுக்கு அவமானத்தையே கொண்டு வந்து சேர்க்கும்.

ஆகவேதான், இயேசுவும் அவரது அப்போஸ்தலர்களும் தங்கள் பொருளாதாரத் தேவைகளை "ஒருவருக்குக்கூட" தெரியப்படுத்த துணியவில்லை!

அவர்களோ, தங்கள் தேவைகளை பரலோகத்திலுள்ள தங்கள் பிதாவினிடம் மாத்திரமே தெரியப்படுத்தினார்கள். அவர்களின் பரமபிதா அவர்களின் தேவைகள் அனைத்தையும் ‘அபரிதமாய் தந்து’ பூர்த்தி செய்தார்!!

அடுத்த விஷயமாகிய சபை தலைமைத்துவ காரியத்திலும், புதிய ஏற்பாடு நமக்கு கற்றுத்தரும் வழிமுறையை நாம் கவனமாய் பின்பற்ற வேண்டும். சபை "ஒரு மனிதனால்" நடத்தப்படும் ஒரு கூட்டமாய் இருந்திடாமல், சபையை முன்னின்று நடத்துபவர்கள், தங்கள் சபை "ஒரு சரீரமாய்" இயங்கும்படியே சபையைக் கட்ட வேண்டும். சபையில் அங்கமாய் இருக்கும் ஒவ்வொருவரும், அவரவர் பணி செய்து இயங்கிவர உற்சாகப்படுத்த வேண்டும். தங்கள் சபை இளைஞர்களை தொடர்ச்சியாய் தேர்ச்சி பெற பயிற்சிவித்து, படிப்படியாக முன்னின்று நடத்தும் பணிக்கு துரிதமாய் வந்திட பிரயாசப்பட வேண்டும். இவ்விதமாகவே, உண்மையுள்ள இளைஞர்களுக்குத் தான் பெற்றவைகளை தீமோத்தேயு ஒப்புவிக்கும்படியும், அவ்வண்ணமாகவே அவர்களும் மற்றவர்களுக்குப் பயிற்சி தர வேண்டுமென்றும், பவுல் புத்தி கூறினார் (2தீமோ 2:2). இதுவே, புதிய உடன்படிக்கையின் ஊழியமாகும்! ஆனால், இன்றோ, தேவனால் அபிஷேகிக்கப்பட்ட தாவீதிற்கு பொறுப்பைத் தர மனதில்லாமல், சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் சவுல் இராஜாக்களே இருப்பது மிகுந்த துயரமாகும்! (1சாமு 18:8). ஆம், இன்றைய கிறிஸ்தவ உலகில், ‘அபிஷேகிக்கப்பட்ட இளைஞர்களுக்கு’ தங்கள் ஆசனத்தை விட்டுதர மனதில்லாத சவுல் இராஜாக்கள் அனேகர் இருக்கிறார்கள்! இதுப்போன்ற மூப்பர்கள் எவ்வளவுதான் தாலந்து பெற்று மற்ற விஷயங்களில் நல்லவர்களாய் இருந்தாலும் தேவனுடைய பணிக்கு இடையூறாகவே இருக்கிறார்கள்!

மேற்கூறப்பட்ட 2 - பகுதிகளுக்கும், இயேசுவும், அவரது அப்போஸ்தலர்களும் நாம் பின்பற்றும்படியான "நல்ல மாதிரியை" வழங்கியிருக்கிறார்கள். இன்று நாம் புதிய உடன்படிக்கை சபையைக் கட்ட வேண்டுமென்றால், நமக்கு முன்வைக்கப்பட்ட ‘அந்த மாதிரியையே’ ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்.

மறுபடியும் பிறந்த விசுவாசியாய் இருக்கும் ஒவ்வொருவரோடும், நாம் ஐக்கியம் கொள்ள முடியும். அவர்கள், மேல்குறிப்பிட்ட 2 - விஷயங்களுக்கு இணங்காதவர்களாய் இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல! ஆகிலும் ‘இணைந்து ஊழியம் செய்திட’ வரும்போது, இந்த முக்கிய விஷயங்களுக்கு ஒருமித்த கருத்துடையவர்களோடு மாத்திரமே நாம் ஊழியம் செய்திட முடியும்! "இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?" என்றே ஆமோஸ் 3:3 கூறுகிறது.

நாம் இசைந்திட முடியாத பல்வேறு விஷயங்களை நாம் அற்பமானதாய் விட்டுவிட்டு, அந்த சகோதரர்களோடு நாம் சேர்ந்து ஊழியம் செய்திட முடியும்! ஆனால், மேல் குறிப்பிடப்பட்ட விஷயங்களே ‘பிரதான காரியங்கள்’ என்பதை நாம் அறியவேண்டும்!

தேவனுடைய வார்த்தையில் போதிக்கப்பட்ட, மேற்கண்டது போன்ற பிரதான அடிப்படை விஷயங்களில் ‘சிறிதேனும்கூட’ நாம் ஒத்துபோகுதல் இயலாது! இவ்வாறு ஒத்துப்போக மறுக்கும் நமது உறுதியான நிலையினிமித்தம், சில சகோதரர்கள் நம்மைவிட்டு விலகிச் சென்றால், அவர்கள் விலகிச்செல்ல நாம் விட்டுவிட வேண்டும். மாறாக, ‘ஒத்துப்போகும் கிரயத்தைக் கொடுத்து’ நாம் அவர்களை வைத்துக் கொள்ளக்கூடாது. நாம் தனித்தனியே ஒவ்வொருவரும், தேவனுடைய வார்த்தைக்கு முழுமையான கீழ்ப்படிதலின் பாதையில் செல்ல விரும்புகிறோமா? அல்லது மேற்கண்டது போன்ற பிரதான விஷயங்களில் ‘சமரசம் செய்திடும்’ வழியை விரும்புகிறோமா? என்பதை இன்று தெரிந்துக் கொள்வோமாக!!