WFTW Body: 

ஒரு விசுவாசி தேவபக்தியின் மேல் வாஞ்சை இல்லாமலோ அல்லது வேத வாக்கியங்களில் காணப்படும் சத்தியங்களுக்காக நிற்கும் போது, மற்றவர்களிடமிருந்து வரும் பரியாசங்களுக்கு அஞ்சும் ஒரு கோழையாயிருந்தாலோ, அவனிடமிருந்து இந்த சத்தியத்தை மறைத்து விடுவார்! இதனிமித்தமே இந்த சத்தியத்திற்கு “தேவ பக்தியின் இரகசியம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது (1தீமோத்தேயு 3:16). தனக்கு பயந்தவர்களுக்கு மாத்திரமே, தம்முடைய இரகசியத்தை தேவன் வெளிப்படுத்துவார் (சங்கீதம் 25:14). தேவனுடைய விஷயங்களில் நாம் ஒரு கோழையாயிருப்பது அபாயம் நிறைந்ததாகும். ஏனென்றால், பயப்படுகிறவர்கள் அல்லது 'கோழைகள்' வெளி 21:8-ம் வசனத்தில் அக்கினி கடலில் தள்ளப்படுபவர்களின் பட்டியலில் 'அந்த கோழைகளே' முதல் நபராய் வருகிறார்கள். அதற்கு பின்புதான் கொலை செய்பவர்கள், காமவிகாரம் கொண்டவர்கள், மந்திரவாதிகள், விக்கிரகாராதனைக்காரர்கள்' வருகிறார்கள்.

மார்டின் லுத்தர் கூறும்போது: “தேவனுடைய சத்தியத்தின் ஒவ்வொரு பகுதியையும் உரத்த சத்தமாய் நான் அறிவித்துவிட்டு, பிசாசானவன் இந்நாட்களில் தாக்கும் சில குறிப்பிட்ட சத்தியங்களைக் குறித்து நான் மௌனமாயிருந்து விட்டால், நான் கிறிஸ்துவை உத்தமமான அறிக்கைச் செய்கிறவனாயிருந்திட இயலாது! இக்காலத்தில் காணப்படும் 'கொடூரமான போர் முனையில்தான்' ஒரு போர் வீரனின் உத்தமம் சோதிக்கப்படுகிறது. போர்களத்தின் எல்லா பகுதியிலும் நான் உண்மையுள்ளவனாயிருந்தேன் என கூறிக்கொண்டு, இப்போது போர்முனையில் விளைந்த நெருக்கத்திற்கு எதிராக போர் செய்யவில்லையென்றால், அது தகுதியிழந்த! கிருபைக்கு பாத்திரமற்ற நிலையாகும்”.

இந்த சத்தியமாகிய “கிறிஸ்து நம்மைப்போலவே எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டும் பாவம் செய்யாதிருந்தார்” என்ற வசனத்தை சூழ்ந்தே கடந்த 43 ஆண்டுகளாய், இந்தியாவிலுள்ள எங்கள் எல்லா சபைகளுக்கும் கடும்போர் நிலை ஏற்பட்டது. ஆனால் நாங்களோ “இந்த சத்தியத்திற்கு தூணும் ஆதாரமுமாய்” இருந்தோம் (1தீமோத்தேயு 3:15). மேலும் இந்த சத்தியத்தை தைரியமாகவும், வெட்கப்படாமலும் பிரசங்கித்தோம். இதன் விளைவாய், அநேகருடைய ஜீவியத்தில் மறுரூபமான மாற்றம் நிகழ்ந்தது.

'தேவ பக்தியின் இரகசியம்' எனக்கூறும் இடத்தில் “கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார் என்ற உபதேசம்” என எழுதப்படாமல் “மாம்சத்தில் வந்த கிறிஸ்துவாகிய நபரை" குறிப்பிட்டே “தேவ பக்தியின் இரகசியம்" என 1தீமோத்தேயு 3:16 கூறுகிறது. இன்று அநேகர் இதை ஒரு உபதேசமாகக் கண்டு 'பரிசேயர்களாய்' முடிவடைந்து விட்டார்கள்! ஆம் 'கிறிஸ்துவாகிய நபரை' காணத் தவறிவிட்டார்கள். “சரியான உபதேசமாகிய - எழுத்து கொல்லும்! ஆவி மாத்திரமே ஜீவன் தரும்” (2கொரிந்தியர் 3:6). ஆகவே, நாம் எப்போதும் ஜனங்களுக்கு கிறிஸ்துவையே காண்பிக்க வேண்டும், எந்த உபதேசத்தையும் அல்ல!

இயேசு மாம்சத்தில் வந்தார் என்பதை மனதிலே மாத்திரமல்ல ஆவியிலேயும் அறிக்கை செய்வதின் (1யோவான் 4:2) பொருள் என்னவென்றால், நம்மைப்போலவே அவர் சோதிக்கப்பட்டார் என்பதையும், நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய ஆவியின் வல்லமையைத் தவிர அதிகமான ஆவியின் வல்லமையை இயேசு பெற்றிருக்கவில்லை என்பதையும், முழு இருதயத்தோடு இருந்தால் அவர் நடந்தபடியே நாமும் நடக்க முடியும் (1யோவான் 2:6) என்பதையும் முதலாவதாக நம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிப்பதாகும்.

மேலும் நம்முடைய ஆவி அவருடைய அடிச்சுவடகளைப் பின்பற்ற வாஞ்சிக்கும் நேரத்தில் “நமக்கு சொந்தமானவைகளை நாடுவதோ அல்லது நம் சுய சித்தத்தை நாடுவதோ முடியாது” என்பதையும் நம் ஆவியில் அறிந்திருக்கிறோம்! “இயேசு தன் பிதாவுக்கு கீழ்ப்படிந்திருந்த” கல்வித்திட்டத்தை நாமும் கற்றுக்கொள்ள ஆவியின் வெளிப்பாடு அவசியமாயிருக்கிறது. இயேசுவும், தான் வாழ்ந்த பூமியின் நாட்களில் இவ்வாறாகவே தனக்கு நேர்ந்த சோதனைகளின் நடுவே கற்றுக்கொண்டார்! எபிரெயர் 5:8 இவ்வாறாகவே கூறுகிறது: “அவர் குமாரனாயிருந்தும், பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்” என காண்கிறோம். தன் யுத்தகளத்தில் சந்தித்த ‘ஒவ்வொரு சோதனைகளிலும்' அவர் முற்றிலும் உண்மையுள்ளவராயிருந்தார். மேலும் அவர் “தன் ஆத்தும வாழ்க்கையை மரணத்தில் ஊற்றுவதற்கும்” உண்மையுள்ளவராயிருந்தார் (ஏசாயா 53:12). இவ்விதமாய் அவருடைய சரீரத்தின் மூலமாய் ‘தேவனுடைய ஜீவியம்' முழுமையாக வெளிப்பட்டது! வெகு கொஞ்சமான பேர்களே, தங்கள் ஆத்தும ஜீவியத்தை மரணத்திற்கு ஊற்றும் நிலைக்கு வருகிறார்கள்! அவர்களின் 'பரிசுத்தமாகும் ஜீவியத்தை' தொடர்ந்து செல்லும் பாதையில், வெகு குறைவானவர்களே “தேவனுடைய பார்வையில்” உண்மையுள்ளவர்களாயிருந்து தங்கள் ஜீவியத்தில் காணப்படும் “எல்லா அறிந்த பாவங்களையும்” எதிர்த்துப் போரிடுகிறார்கள்! இந்தப் பகுதியை குறிப்பிட்டு விவரித்திட அதிக பிரயாசம் எடுத்துக் கொண்டேன்.

அது ஏனென்றால் அநேக விசுவாசிகள், தங்கள் ஜீவியத்தைக் குறித்த தேவனுடைய சித்தத்தை இழந்ததற்குக் காரணம், இந்த சத்தியத்தை அவர்கள் தெளிவாய் அறிந்து கொள்ளாததாலேயே, இயேசு தன் மாம்சத்தில் நமக்காகத் திறந்து வைத்த‘புதிதும் ஜீவனுமான மார்க்கத்தைக்' குறித்த சத்தியமும் அவர்களுக்கு விளங்கவில்லை (எபிரெயர் 10:20). நாமோ முதலாவதாக ‘சத்தியத்தை' நன்றாக அறிந்திருக்க வேண்டும் எனவும், பின்புதான் “சத்தியம் நம்மை விடுதலையாக்கும்” எனவும் இயேசு கூறினார் (யோவான் 8:32).